பாடசாலை காலங்களில் நமது பாடசாலைகளில் நம்முடன் படிக்கும் சில பெண்கள் பாடசாலைகளில் பிரபல்யமாக இருப்பார்,சிலர் தாம் படிக்கும் பாடசாலையையும் தாண்டி அயற்பாடசாலைகளிலும் பிரபல்யமாக இருப்பர்,
அதற்கு காரணம் அவர்கள் அழகானவர்களாகவோ அல்லது நன்றாக படிக்கக்கூடியவர்களாகவோ அல்லது விளையாட்டு வீராங்கனைகளாகவோ அல்லது நமது பசங்களின் கனவுக்கன்னிகளாகவோ(கவனிக்க நம்ம பசங்கதான் அப்படி சொல்லிக்கொள்வது டேய் இது என் ஆளுடா அது என் ஆளுடா என்று)
அப்படி எனது பாடசாலைகாலங்களில் பிரபல்யமாக இருந்த தோழிகள் சிலரை பற்றி இந்தப்பதிவு.
மன்னிக்கவும் வாசகர்களே தோழிகளின் சொந்தப்பெயரை இங்கு குறிப்பிட முடியாது எனவே அவர்களுக்கு நம்ம பசங்க வைத்த பெயர்களால் குறிப்பிடுகின்றேன்
Note-பதிவுகளின் இடையே உள்ள படங்களுக்கும் பதிவுக்கும் சம்மந்தம் இல்லை அவை நடிகைகளின் படங்கள் அழகுக்காக சேர்க்கப்பட்டுள்ளது.
1)m-80அல்லது பயிற்ரங்காய் (m-80என்பது அவளது தந்தையார் வைத்திருந்த மோட்டார் சைக்கிள் m-80-தந்தையார் வைத்திருக்கும் மோட்டார் சைக்கிள் பெயரைக்கொண்டு எம் தோழிகளை அழைப்பது வழக்கம்
நமது m-80 எமது வகுப்பிலேயே நன்றாக படிப்பாள் எனவே அவள் பாடசாலையில் பிரபல்யம்,மிகவும் அமைதியான பெண் அதனாலே பலருக்கு அவளைப்பிடிக்கும் நான் அவளுடன் படித்த காலங்களில் நான் நினைக்கிறன் அவள்தான் வகுப்பில் முதலாம் பிள்ளை,நம்ம பசங்கள் சிலர் அவளை ஒருதலையாக காதலித்த போதும் அவளிடம் காதலை சொல்லியது இல்லை காரணம், அப்போதெல்லாம் நாம் பெண்களிடம் வகுப்பில் கதைப்பது இல்லை தேவைக்கு மட்டுமே கதைப்பம்.
Note-நம்ம m-80க்கு இந்தப்பெயரை சூட்டியவர் நமது அருமை நண்பர் அங்கயன்.
எமது வகுப்பிள் மிகவும் அமைதியான பெண் இதனால் இவளை பலருக்கும் பிடிக்க காரணம் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவள்,
இவள் எமது பாடசாலைக்கு வந்த புதிதில் நமது நண்பர்கள் இருவர் ஒருதலையாக காதலிக்க தொடங்கி பிறகு நமது நண்பர் L.S(இவர் எங்க வகுப்பு லவ் கீறோ(Love Hero))காதலிக்க தொடங்கியதும் அவர்கள் இருவரும் வாபஸ்வாங்கிவிட்டனர் நான் நினைக்கிறன் எமது வகுப்பில் நண்பன்L.Sதான் காதலை காதலிக்கும் பெண்ணிடம் முதலில் வெளிப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர்.படு சின்சியராக காதலித்தார் ஆனால் அவள் கடைசி வரை அவள் இவரதுகாதலை ஏற்றுக்கொள்ளவே இல்லை இது நடந்தது நாங்கள் 11ம்தரத்தில் படிக்கும் போது பின் உயர்தரக்கல்வியிலும் News mate எங்களுடனே கல்வி கற்றதால் நண்பர் தனது காதலில் உறுதியாக இருந்தார் அனால் நடந்தது? மெல்ல அவளுக்கு இவர்மேல் காதல் வந்த சமயத்தில் இருவருக்கும் தூது சென்ற கண்டிஎன்ற தோழி (இதுவும் நம்ம பயங்க சூட்டிய பெயர்)L.Sசை காதல் வலையில் விழுத்த L.S சும் News mate ஜ மறந்து கண்டியை காதலிக்க தொடங்கி சின்னாப்பின்ன மானது வரலாறு.
Note-News mate க்கு இந்த பெயரை சூட்டியது யார் என்று ஞாபகம் இல்லை அனேகமாக நண்பர் அங்கயனாகத்தான் இருக்க வேணும்.
3)Pvt(P-குறிப்பது பரத நாட்டியத்தை அவள் நன்றாக பரத நாட்டியம் ஆடுவாள்-vt குறிப்பது அவளது தந்தையாரின் பெயரும் அவளது பெயரும்)
இவள் எமது பாடசாலையில் கல்வி கற்கவில்லை அயல் பாடசாலையில் கல்விகற்றாள் நன்றாக பரத நாட்டியம் ஆடுவாள் சொல்லப்போனாள் நான் ,நண்பன் முத்து (கிருபாகரன்) இருவரும் இவளது பரத நாட்டியத்திற்கு தீவிர ரசிகர்கள்.
Note-Pvtக்கு இந்தப் பெயரை சூட்டியது ஹி ஹி ஹி நான் தான்(K.s.s.Rajh)ஆலோசனை நண்பன் முரளி.
நிறைய பேர் இருந்தாலும் அதிகம் பிரபல்ய மானவர்களைத்தான் குறிப்பிட்டு உள்ளேன்.
|
0 comments:
Post a Comment