Thursday, June 02, 2011

பிகரை மடக்குவது எப்படி(இது 100% மொக்கைப்பதிவுங்கோ/By-K.s.s.Rajh)

இது ஒரு 100% மொக்கைப்பதிவு எனவே நகைச்சுவைக்காக எழுதப்பட்டது யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.சரி தலைப்புக்கு வருவம் பிகரை மடக்குவது எப்படி.ஏன் பசங்களை மடக்குவது எப்படினு எழுதலாம் தானே என்று கேட்களாம்.
காரணம் உண்டு இப்பவெல்லாம் பொண்ணுங்க பசங்களுக்கு ரூட்டு விட்டு திரிவது குறைவு. ஆனால் நம்ம பசங்க ஒரு பெண்னைக்காதலிச்சு அவள்கிட்ட லவ்வ சொல்லுறதுல இருந்து அவ இவனை லல்பன்னும் வரைக்கும் நம்ம பசங்க படுகிற பாடு அப்பாடா. எனவே நம்ம ரோமியோக்களுக்கு ஒரு ஜடியா கொடுக்களாம் என்று சிந்தித்ததன் விளைவே இந்தப்பதிவு.

இந்த காதல்ல நமக்கு பெரிதா அனுபவம் இல்லைங்கண்ணா எனவே எனது நண்பர்கள் சிலரின் அனுபவங்களில் இருந்து பிகரை மடக்குவது எப்படி என்று பார்ப்போம்.


மிஸ்டர் லவ்மேன்


இவர் எங்கள் நண்பர்களில் காதலில் பழுத்த அனுபவம் உடையவர்.இவர் சொல்லும் ஜடியாக்கள்(ஆலோசனைகள்) பிரயோசனமானதாக இருக்களாம்.
முதலில் இவரைப்பற்றி பார்ப்போம்
  • இவர் எனக்குத்தெரிய ஒரு நாலு அஞ்சு பேரை காதலிச்சு இருப்பார் அதில் சில ஒருதலைக்காதல்களும் உண்டு
  • அதில் இவரைவிட 5வயது கூடிய ஒரு பிகரை மடக்கிய அனுபவமும் இவருக்கு உண்டு.
  • இதில் என்ன விசேடம் என்றான் இவரது காதல்கள் ஏதோ ஒருகாரணத்தால் எப்படியாவது ஊத்திக்கும் ஆனால் இவர் மனம் சலிக்காமல் அடுத்த பிகருக்கு ரூட்டு விட கிளம்பிடுவார்(இதல்லாம் ஒரு பொழப்பு)
  • இவரது திறமையில் இன்னொன்று உள்ளது அதாவது இவரை ஒரு ஒரு பிகர் காதலித்து உள்ளாள் வழமை போல் அதுவும் ஊத்திக்கிச்சு அதற்கு பிறகு இவர் வேற பிகர்களுக்கு ரூட்டு விட்டு நொந்து நூலாகி கடைசியில் இவரை காதலித்த பிகரையே திருப்பவும் இப்ப காதலிக்கிறார். இதில் என்ன கொடுமைனா இவர் பேசும் வசனங்கள்தாங்க முடியாதுடா சாமி- இவள்தாண்டா என்ற காதலி. என்னுடையகாதல் உண்மையானகாதல் ,இவளைமட்டும்தான்டா நான் காதலிக்கிறன். என்று தான் ஏதோ உத்தம புத்திரன் மாதிரி வசனம் பேசித்திரியுரார்(இதனால் இவரை எங்கள் நண்பர் குழாமில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளோம்.பிறகு என்னங்க எங்களுக்கு தெரியவே பல பேரை காதலித்துவிட்டு நான் ஒருத்தியத்தான் லவ் பன்னுறன் என்ற உண்மையான காதல் என்று வசனம் பேசினால் என்ன செய்யுறது)
சரி இவர் என்ன ஆலோசனைத்தருகிறார் என்று பார்போம்
  1. முதலில் உன் பிகரின் வீட்டுப்பாதையால் அடிக்கடி போய்வா.போகும் போது அவளைக்கண்டாள் ஒரு லைட்டா ஒரு லுக் விட்டுட்டு போ இப்படி தினமும் போய்வரும் போது அவள் யோசிப்பாள் இவன் ஏன் நம்ம வீட்டு ரோட்டால தினமும் போறான் என்று. அதுவே அவளுக்கு உன்னிடம் கேட்கவேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கும்.எனவே உன் பிகர் உன்னிடம் வந்து கதைக்க சந்தர்ப்பங்கள் உண்டு.(இதல்லாம் ஒரு பொழப்பு)
  2. மற்றது அவளிடம் செண்டிமெண்டாக கதைக்கனும் உதாரணத்திற்கு எனக்கு யாருமே இல்லை உங்களைப்பார்கிறப்போது எனக்கு ஒருத்தி இருக்கிறாள் என்று என்னத்தோனுகிறது அப்படி இப்படினு அள்ளிவிடுங்க.
  3. அவளின் தோழிகளை பிரண்ஸ் ஆக்கி கொள்ளுங்கள்.
  4. உங்கள் பிகரின் அழகை வர்ணித்து கவிதை எழுதி அவள் பார்க்க கூடியவாரு வைக்கவும்/கவிதை எழுத தெரியாவிட்டால் என்ன செய்வது என்று நினைக்கிறீங்களா அதற்கும் இந்த நண்பர் ஆலோசனைத்தருகிறார்.வைரமுத்து போன்ற கவிஞர்களில் கவிதைகளை கொப்பி பன்னலாம்.
இவரின் மொக்கை ஆலோசனைகளைப்பார்த்தீங்களா ஏன் நீங்கள் லப்பன்னும் பிகருக்கு உங்கள் சொந்தக்கற்பனையில் எழுதிக்கொடுங்கள் ஏன் இன்னும் ஒருவரின் கவிதைகளை எழுதிக்கொடுக்கிறீர்கள் இந்த நண்பர் இப்படி பல வைரமுத்து கவிதைகளை கொப்பிஅடித்து தனது காதலியிடம் தான் எழுதிய கவிதை என்று பீலா விடுவார்(இதல்லாம் ஒரு பொழப்பா)

சரி இன்னும் ஒரு நண்பரின் ஆலோசனையைப்பார்ப்போம்
இவர் மேலே சொன்ன நண்பரின் ஆலோசனையைப்பின்பற்றலாம் என்கிறார் ஆனால் பிகரின் பிரண்ஸ்சை பிரண்டாக்கிக்கொள்கிற ஆலோசனையை மட்டும் இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன் என்றாள்-இவர் படிக்கிற காலத்தில் ஒரு பிகரை காதலிச்சார் அப்போது இருவருக்கும் தூது சென்ற ஒருத்தி இவரைகாதலிக்க இவரும் தான் காதலிச்ச பிகரை விட்டு தூது சென்ற பிகரை காதலிச்சு நொந்து நூலாகியதனாள் அந்த ஆலோசனையை வேண்டாம் என்கிறார்.

எப்படி இந்த ஆலோசனைகள் போதுமா பிகரை மடக்குவது எப்படி என்ற தலைப்புக்கு.(நான் முதல்லேயே சொன்னேன் இது100% மொக்கை பதிவுனு)

இது மொக்கை அல்ல-உண்மையாக ஒரு பெண்ணிடம் அன்புகாட்டு அவள் உலக அழகி என்றாலும் உன்னைக்காதலிப்பாள்.(By-K.S.S.Rajh)


Note -  பதிவில் பிகர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதற்கு காரணம்.பசங்க பெருப்பாலும் பொண்ணுங்களை பிகர் என்று சொல்லுவதனால்தான்.
 யார் மனதையும் புண்படுத்துவது நோக்கம்அல்ல.

என்ன நண்பர்களே அப்படியே பதிவுபற்றிய உங்கள் கருத்துக்களை பதிந்து விட்டு போங்க.

Post Comment

8 comments:

koodal bala said...

அடி வாங்காமல் தப்பிப்பது எப்படி என்பது பற்றியும் தெரிவித்திருக்கலாம் .

Kss.Rajh said...

நன்றி நண்பரே அதற்கு தனிப்பதிவு போடுறன்.

பிரியதர்சினி.மாணிக்கவாசகம் said...

நல்ல பதிவு./இப்படி நிறைய பேர் எனக்கும் ரூட்டு விட்டு இருக்காங்க/உங்கள் பதிவை பார்த்தபிறகுதான் விளங்குது.வாழ்த்துக்கள்

Kss.Rajh said...

நன்றி சகோதரி

மதுரை சரவணன் said...

காதலிக்க கற்று தருவதா இல்லை மாட்டி விடுவதா? நல்ல நடை வாழ்த்துக்கள்

Kss.Rajh said...

நன்றி நண்பரே.எப்படி என்றாலும் யாரும் அடிவாங்காவிட்டால் சரி.

ந‌ண்ப‌ன் said...

கலக்கல் பதிவு நண்பரே !!!

Kss.Rajh said...

நன்றி நண்பரே...

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails