Wednesday, June 22, 2011

இன்று கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டுகொண்டிருக்கும் காதல் கடிதத்தின் உருக்கமான கடிதம்.(By-Kss.Rajh)


அன்புள்ள காதலர்களுக்கு வணக்கம்



நான் தான் காதல் கடிதம் இன்று உங்களால் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நான். ஒரு காலத்தில் காதலர்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்துள்ளேன். எத்தனை காதலர்களின் காதல்கள் என்னால் வாழ்து இருக்கின்றது, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.ஆனால் இன்று என்னை காதலர்கள் பயன்படுத்துவது இல்லை இப்பவெல்லாம் நான் உங்களுக்கு வேண்டாதவனாகிவிட்டேன்.இப்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் என்னை யாரும் கண்டு கொள்வது இல்லை.இப்போது நீங்கள் குறும்செய்திவாயிலாகவும்(sms),மின் அஞ்சல்(E-mail) வாயிலாகவும் தொலைபேசி மூலமாகவும் இப்படி பலமுறைகளில் உங்கள் காதல்களை பகிர்ந்து கொள்கின்றீர்கள்.என்னை திருப்பியும் பார்பது இல்லை ஆனால் என்னை போல் உங்கள் காதல்களை அவைகளால் பகிர்ந்து கொள்ள முடியுமா?நிச்சயமாக இல்லை.என்னுள் உங்கள் காதலை எழுதி அதை உங்கள் காதலர்களிடம் சேர்ப்பதற்கு உங்கள் நண்பர்களிடமோ அல்லது உங்கள் காதலர்களின் நண்பர்களிடமோ.கொடுத்து அதற்கு பதில் வரும் வரை உங்கள் மனதின் தவிப்பை அதில் உள்ள சந்தோசத்தை.உங்களால் தொலை பேசியில் குறும் செய்திகளில்(sms),காதலை வெளிப்படுத்துவதில் இருக்கின்றதா?.ஆனாலும் மாற்றம் ஒன்றுதான் இவ் உலகில் மாறாத ஒன்று. எனவே மாறிவரும் தொழில்நுட்ப உலகில் நீங்கள் என்னை மறந்து ஆச்சிரியம் இல்லை.  சில காதலர்கள் என்னை இப்போதும் பயன்படுத்துகின்றனர் இதனால் எனக்குள் கொஞ்சம் சந்தோசம் இருக்கின்றது .ஆனால் வரும் காலத்தில் நான் முழுமையாக மறக்கப்பட்டுவிடுவேன்.நீங்கள் என்னை முழுமையாக மறந்தாலும்,பயன்படுத்தாவிட்டாலும் உங்கள் காதல்கள் வாழ எப்போதும் வாழ்த்திக்கொண்டே இருப்பேன்.

நன்றி.

இப்படிக்கு

கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டுக்கொண்டிருக்கும்.
  காதல் கடிதம்

Post Comment

2 comments:

பாலா said...

முன்பெல்லாம் காதல் கடிதத்தை பார்த்து காதலர்கள் உருகுவார்கள்.(பார்க்க முரளி படங்கள்). இப்போதோ காதல் கடிதமே பீல் பண்ண ஆரம்பிச்சுடுச்சு. காலக்கொடுமை.

K.s.s.Rajh said...

நன்றி நண்பரே. இனி வரும் காலத்தில் காதல் கடிதமா அப்படினா என்ன? என்று கேட்கும் நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails