பதிவுக்கும் படத்திற்கும் சம்மந்தம் இல்லைங்க இது எனது அபிமான நடிகை கஜோல் அகர்வால் |
எனக்கு முதல் காதல் என் பாடசாலைக்காலத்தில் வந்தது.அதற்கு பிறகு காதல் என்பதை பற்றி நான் சிந்திப்பது இல்லை சொல்லப்போனால் காதல் என்ற சொல்லே எனக்கு மறந்து விட்டது எனலாம்.இந்த காலப்பகுதியில் என்னை ஒரு பெண்காதலித்தால் (அவளுக்கு அது முதல் காதலாக இருந்திருக்களாம்). அவளைப்பற்றிய பதிவு இது.அவளது பெயர் தனுஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)இவளது காதலை நான் ஏற்றுக்கொள்ளவில்லை காரணம் பதிவை வாசியுங்கள் இடையில் சொல்லியுள்ளேன்.நான் எனது சித்தப்பாவின் வீட்டில் தங்கியிருந்த காலப்பகுதி அழகான கிராமத்து மண் வாசனையுடன் கூடிய வாழ்க்கை.நகரத்து வாழ்க்கையில் நாம் எத்தனை சந்தோசங்களை தொலைத்து வாழ்கின்றோம் குறிப்பாக கிணற்றில் குளிப்பது என்ற ஒன்று நம்மிடையே மறந்து போகின்ற விடயமாக மாறியுள்ளது .என்னதான் குளியல் அறைகளில் குளித்தாலும் கிணற்றில் தண்ணீர் அள்ளிக்குளிக்கும் அந்த மகிழ்ச்சிக்கு ஈடாகுமா.நீச்சல் தாடாகத்தில் நீந்துகின்ற போது ஊரில்ஆற்றில் நீந்துவதற்கு ஈடாகாது.மாலை வேளைகளில் அயலவர்களுடன் மரநிழலில் அமர்ந்து கதைத்துக்கொண்டிருப்பது.இப்படி எத்தனை சின்னச்சின்ன சந்தோசங்களை நாம் நகரவாழ்க்கையில் இழந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனது சித்தப்பாவின் வீட்டிற்கு போன முதல் நாள் தனுஜா எனக்கு அறிமுகமானாள்.எனது அண்ணாவின்(சித்தப்பாவின் மகன்)நண்பருடைய மனைவியின் தங்கைதான் தனுஜா அவர்கள் குடும்பத்துடன் எனது சித்தப்பாவின் காணியில் இருந்த இன்னும் ஒரு வீட்டில் வசித்து வந்தார்கள்.பெருப்பாலும் தனுஜாவின் குடுப்பம் சித்தப்பாவீட்டில் தான் இருப்பார்கள் சிலவேளை எல்லோறும் ஒன்றாகவே சமைத்து உண்பார்கள்.அவள் அப்போது உயர்தரம் படித்துக்கொண்டிருந்தாள் என நினைக்கிறேன். அவள் என்னையே பார்த்துக்கொண்டிருப்பாள் நான் பார்த்தாள் வேறுபக்கம் பார்ப்பது போல பாவனை செய்வாள்.எனக்கு ஒரு சந்தேகம் இவள் ஏன் நம்மலை பார்க்கின்றாள். இதுவரை நாமதான் பொண்ணுங்களை லுக் விட்டு இருக்கம் நம்மலை ஒரு பொண்ணு லுக்கு விடுகின்றாளே மனதுக்குள் சின்ன சந்தோசம்.தனுஜா பேரழகி என்று சொல்ல முடியாவிடாலும் ஒருமுறை பார்த்தாள் மறுமுறை பார்க்கத்து தூண்டும் அழகு.ஒரு நாள் என்னிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்டாள் .நான் ராஜ் என்றேன் அதற்கு அவள் முழுப்பெயர் என்னவென்றாள் நான் ராஜ்தான் என்று சொன்னேன்(ராஜ் என்றே எல்லோறும் அழைப்பதாள் எனது முழுப்பெயர் நிறைய பேருக்கு தெரியாது)அடுத்த நாள் ஒரு பேப்பரை என்னிடம் தந்து(சுடர் ஒளி வார இதழ்என நினைக்கின்றேன்)வாசியுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.நான் அதை வாங்கிப்பார்த்த போது அதில் I Love you என்று எழுதப்பட்டிருந்தது.எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை பேப்பரை தூக்கி போடுவிட்டு நான் பேசாமல் போய்விட்டேன்.அடுத்தநாள் என்னிடம் தயங்கி தயங்கி வந்தாள் ராஜ் நான் நேத்து தந்ததுக்கு என்ன பதில் என்றாள்.உடனே நான் என்ன சொல்லுறது என்னை உங்களுக்கு ஒரு கிழமையாகத்தான் தெரியும். அதற்குள் காதல் என்றாள் என்னால் நம்பமுடியவில்லை என்னால் உங்களை காதலிக்க முடியாது சாரி என்று அவள் முகத்திலடித்தால் போல் கூறிவிட்டேன்(எனக்கு மனதில் எது சரி என்று படுகிறதோ அதை அப்படியே கூறிவிடுவது என் பழக்கம்)அவள் ஒன்றுமே சொல்லவில்லை பேசாமல் போய்விட்டாள்.அதற்கு பிறகு சித்தப்பாவீட்டிற்கு வருவாள்.நான் அவள் வந்தாள் வெளியில் போய்விடுவேன். பிறகு சித்தியை மாமி(அத்தை)என்றும் அண்ணியை அக்கா என்றும் அழைக்கத்தொடங்கிவிட்டாள்.இது பற்றி ஒரு நாள் அண்ணி என்னிடம் ராஜ் என்ன தனுஜா இப்படி கூப்பிடுறாள் என்றார் (அண்ணி என்னிடம் அப்படி கேட்டதற்கு காரணம் உள்ளது எனது சித்தப்பாவின் பிள்ளைகள் எல்லோறும் வேறு இடத்தில் இருக்கிறார்கள்(தொழிழ்/திருமணம் செய்து)ஒரு அண்ணா மட்டுமே சித்தப்பாவுடன் இருக்கிறார் அவரும் திருமணம் முடித்துவிட்டார்.)அண்ணி அப்படி கேட்டதும் நான் சொன்னேன் கண்ணன் அண்ணாவை(சித்தப்பாவின் மகன்) இரண்டாவது திருமணம் செய்யப்போறாள் போல என்றேன்.அதற்கு அண்ணி ராஜ் ஜோக் அடிக்காமல் சொல்லு என்றார்.பிறகு நான் அண்ணியிடம் சொன்னேன் என்னை லவ் பன்னுவதாக தனுஜா சொல்கிறாள். எனக்கு விருப்பமில்லை என்று சொல்லி பேசி(திட்டி)அனுப்பிவிட்டேன் .அதுதான் அவள் சித்தியை மாமி என்றும் உங்களை அக்கா என்றும் கூப்பிடுறாள் போல என்றேன்.அண்ணி சிரித்துக்கொண்டே போய்விடார்.அதற்கு பிறகு அண்ணா,சித்தி ,சித்தப்பா எல்லோறும் எனக்கு ஒரே நக்கல்தான்.இதற்கு இடையில் வெளிஊரில் படித்துக்கொண்டிருந்த தனுஜாவின் அண்ணன் வந்து இருந்தான்.அவன் என்னுடன் நல்ல நண்பனாகிவிட்டான். ஆனால் தனுஜா என்னை விடுவதாக இல்லை கவிதைகள் எழுதுவதும் என்னால் உங்களை மறக்க முடியாது ராஜ் அப்படி இப்படினு என்னிடம் சொல்லுவாள் அவளை பார்க்க பாவமாக இருக்கும் இதற்கு இடையில் இன்னொரு சுவாரஸ்யமும் உண்டு சித்தப்பாவீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு நண்பன் (நான் சித்தப்பாவீட்டிற்கு போயிருந்த போது நல்ல நண்பனாகி விட்டான்).தனுஜா குடும்பம் சித்தப்பாவின் காணியில் இருக்க வந்ததில் இருந்து தனுஜாவை ஒருதலையாக காதலித்து வருகின்றானாம். அவனுக்கு தனுஜா என்னை லவ் பன்னுவது தெரிந்ததும் என்னிடம் கேட்டான் ராஜ் தனுஜாவை இப்படி நான் லவ் பன்னுறன் அவள் உங்களை லவ் பன்னுகின்றாள் என்றான் அதற்கு நான் சொன்னேன் டேய் அவள்தாண்டா என்னை லவ் பன்னுறாள் நான் லவ் பன்னலை அத்துடன் நான் சித்தப்பாவீட்ட வந்து இருக்கிறன் பிறகு எனது ஊருக்கு போய்விடுவன்.நீதான் இங்க இருக்கிற எனவே நீ தாராளமாக லவ் பன்னு என்றேன். அனால் தனுஜா அவனது காதலை ஏற்றுக்கொள்வதாக இல்லை.சொல்லப்போனால் தனுஜா என்னை விடுகிறமாதிரி இல்லை. அப்போது நான் நினைத்துக்கொண்டேன் பொண்ணுங்க நாமலாதேடிப்போய் காதலித்தாள் பந்தா பன்னுவார்கள் ஆனால் அவர்களுக்கு ஒருவனை பிடித்து விட்டாள் எவ்வளவு சின்சியராக(தீவிரமாக)லவ் பன்னுகிறாங்களே.தனுஜா ஒரு நாள் என்னிடம் கேட்டாள் ஏன் ராஜ் என்னை லவ் பன்ன மாட்டேன் என்கிறீங்க சொல்லுங்க என்றாள்.நான் உடனே பெரிய ஹீரோ கணக்கா அப்படி இல்லை தனுஜா எனக்கு காதல் பிடிக்காது அப்படி இப்படினு அவுத்து விட்டேன்.அதற்கு அவள் என்றைக்காவது நீங்கள் என்னை லவ் பன்னுவீங்க என்றாள்.நான் சொன்னேன் உங்களை ஒருத்தன் லவ் பன்னுறான் தானே(பக்கத்து வீட்டு நண்பன்) ஏன் அவனை நீங்க லவ் பன்னலாம்தானே என்றேன்.அதற்கு அவள் காதல் எப்ப யார்மேல வரும் என்று சொலிட்டு வருவதில்லை உங்களை என்னால் மறக்க முடியாதுனு சொன்னாள்(நிறைய சினிமாப்படம் பார்ப்பாள் போல).அதற்கு பிறகு அவளை பார்க்கும் போது பாவமாக இருக்கும்.பிறகு நான் சித்தப்பா வீட்டில் இருந்து வரும் போது அவளிடம் போய்ட்டு வாறன் என்று சொன்ன போது அவள் அழுது விட்டாள்.எப்பவும் உங்களை என்னால் மறக்க முடியாது ராஜ் என்றாள்.கடைசிவரை அவளது காதலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.அதற்கு பிறகு நான் சித்தப்பாவின் வீட்டில் இருந்து வந்து விட்டேன்.இப்போது அண்ணா(சித்தப்பாவின் மகன்) வெளிநாட்டிற்கு போய்விட்டாரார். சித்தி ,சித்தப்பா, அண்ணி எல்லோறும் வேற ஊரில் வசிக்கின்றார்கள். இப்ப தனுஜாவின் குடுப்பம் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாது.இப்போது சித்தியும்,அண்ணியும் கதைக்கும் போது சிலவேளை தனுஜாவை பற்றி கதைப்பார்கள்..நான் ஒன்றும் கேட்பது இல்லை.
தனுஜா காதலை நான் ஏற்றுக்கொள்ளாதது பிரதானகாரணங்கள்
- எனக்கு பாடசாலையில் ஏற்பட்ட காதலின் வலி மனதில் இருந்ததால்
- மற்றது அவள் தனது காதலை சொன்ன போது அவளது அண்ணனை எனக்கு தெரிந்திருக்காவிட்டாலும் பிறகு நல்ல நண்பன் ஆகிவிட்டான் இந்த உலகில் எனக்கு பிடிக்காத விடயம் என்று சொன்னால் முதலில் நான் கூறுவது நண்பர்களின் தங்கச்சியை(சகோதரி) காதலிப்பது இப்படி பட்டவர்களை எனக்கு பிடிக்காது.எனவே தனுஜாவின் காதலை ஏற்றுக்கொள்ளாதற்கு இதுவும் ஒருகாரணம்.
- மற்றது தனுஜாவை ஒருதலையாக காதலித்த நண்பனின் காதல் ஏன் என்றாள் ஒரு தலைக்காதலின் வலி எனக்கு நன்றாக தெரியும்
ஆனால் தனுஜாவை இப்போது பார்கவேண்டும் அவளிடம் Sorry கேட்கவேண்டும் என மனம் சொல்கின்றது.
என்ன நண்பர்களே அப்படியே பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து விட்டு போங்க.
|
4 comments:
அழகான காதல் கதை
நீங்க தான் எனக்கு ஏத்த நண்பர்னு நினைக்கிறேன்,, காதல் கதை சூப்பர்,,,
அந்த பொண்ண லவ் பன்னாததுக்கு நீங்க சொன்ன காரணங்களுக்கு வலிமை இல்லை நண்பா,,,
நாம தேடி போற பொண்ணு எப்படி பிகவ் பண்ணுதோ அத போல நீங்களும் பிகவ் பண்ணி இருக்கீங்க,,,,
அந்த பொண்ண பாத்து சாரி கேட்க நினைகதிங்க,,
அந்த பொண்ண இனிமே நினைக்க கூடாதுன்னு வேண்டிகொங்க,
ஏன் சாரி கேட்கணும்னு நினைகிரிங்க? அந்த பொண்ணோட காதல எத்துகாததுக்கா?
இப்ப சாரி கேட்க நினைகிரத பாத்தா அந்த பொண்ணுமேல இப்ப என்ன அக்கறை வந்துச்சு உங்களுக்கு, லவ்வா,,,,?
Post a Comment