Wednesday, February 20, 2013

இதயம் பேசுகின்றது-2

வாழ்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கனும் போர்களம் மாறலாம் ஆனால் வாழ்க்கை போராட்டம் மாறுமா?

மனித வாழ்வே விசித்திரமான விந்தையான ஒன்று கடவுள் எல்லோறுக்கும் சரிசமனாக எதையும் கொடுப்பதில்லை.தேவைகளை பொறுத்தே எல்லாம் அமைகின்றது ஒருவனுக்கு தேவையான ஒன்று அவனிடம் இருக்காது தேவையில்லாதது சிலவேளை அளவுக்கு அதிகமாக இருக்கலா உதாரணமாக கொஞ்சம் உடம்பாக இருப்பவனுக்கு உடம்பை குறைக்கனும் என்று கவலை ஒல்லியானவனுக்கு உடம்பு வைக்கனும் என்று கவலை இதுதான் யதார்த்த வாழ்வு.


ஒரு பையன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் அவள் பெற்றோர் பார்த்த வெளிநாட்டு மாப்பிளையை திருமணம் செய்வதற்காக தன் காதலை மறந்துவிடுக்கின்றாள்.காரணம் என்ன என்றால் வசதியான வாழ்க்கைக்கு அவள் ஆசைப்பட்டு இருக்கலாம் உள்நாட்டில் இருக்கும் பையனைவிட வெளிநாட்டில் இருப்பவன் அவளைக் கவர்ந்து இருக்கலாம்.

அதே சமயம் எனக்கு தெரிந்த ஒரு நண்பன் இருக்கான் வெளிநாட்டில் இருக்கின்றான் நல்ல அழகான பையன் தான் கை நிறைய சம்பாதிக்கிறான் நல்ல குணமான பையன் அவன் வெளிநாட்டில் ஒரு பெண்ணை காதலிக்கின்றான்.அவளும் அவனை காதலிக்கின்றாள் பிறகு காரணமே இன்று அவனைவிட்டு பிரிந்துவிடுக்கின்றாள்.

இந்த இரண்டையும் ஒப்பிட்டு பாருங்கள் நான் சொல்ல வந்தவிடயம் புரியும் மனிதனுக்கு மனிதன் எண்ணங்களும் ஆசைகளும் வேறுபடும் ஒன்றைவிட இன்னும் ஒன்று சிறப்பாகவே தெரியும் இது மனித மனம்.ஆனால் அந்த மனதை கட்டுப்படுத்த நாம் கற்றுக்கொள்ளவேண்டும் 

பிரச்சனைகளைக்கண்டு ஓடாமல் அதை தைரியமாக எதிர்கொள்ள பழகவேண்டும் அப்போதுதான் பிரச்சனை நம்மை கண்டு ஒடும்.எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்வு நிச்சயம் இருக்கும் ஆறுதலாக சிந்தித்தால் அதற்கான வழி பிறக்கும்.

படிக்கிற காலத்தில் இருந்தே எனக்கு பொண்ணுங்களுக்கும் ஆகுறது இல்லை நம்ம ராசி அப்படி என் நட்பு வட்டத்தில் பெரிதாக நண்பிகள் இல்லை

என் கூட படித்த ஒன்று இரண்டு பேர் பேஸ்புக்கில் சாட் பண்ணூவாங்க,சிலர் போனில் பேசுவாங்க அதுவும் குறிப்பிட்ட சிலர்தான்.
ஆனாலும் உரிமையுடன் சில விடயங்களை சொல்வார்கள் உதாரணமாக என் பிறந்தநாள் அன்று என் கூட படித்த ஒரு நண்பி கேட்டார்.என்ன ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் எப்படி ஊருக்கு போனீரா என்று? நான் இல்லை இன்று போகவில்லை நாளைக்கு தான் போகவேண்டும் என்றேன்.அதற்கு அவர்  இல்லை நீர் இன்று போயிருக்கவேண்டும் என்று சொன்னார்.

நானும் பல காரணம் சொல்லிப்பார்த்தேன் ஆனால் அவர் கேட்பதாக இல்லை என்ன சொன்னாலும் நீர் இன்று போயிருக்கனும் என்றார்.அப்பறம் நான் யோசித்து பார்த்தேன் அந்த நண்பி சொன்னது சரிதானே நான் பிறந்தநாள் அன்று ஊருக்கு போயிருக்கனும்.இது ஒரு சப்ப மேட்டர் என்றாலும் அந்த நண்பி உரிமையுடன் சுட்டிக்காட்டியது எனக்கு பிடித்திருந்தது.

இவர்களைவிட  முக தெரியாத பல சகோதரிகள் பேஸ்புக்கில் ஒரு சகோதரனாக நினைத்து என்னிடம் அன்பு காட்டுகின்றார்கள்.

முகம் தெரியாமல் என்று நான் சொல்வது பெண்கள் பெயரில் உலாவும் போலி ஜடிக்களை இல்லை.நான் சொல்ல வந்தது உண்மையாகவே சகோதரிகள் ஆனால் அவர்கள் முகம் நான் பார்தது இல்லை ஆனாலும் தம்பி என்று உரிமையுடன் அழைக்கு ஹேமா அக்கா,அதிரா அக்கா,ராஜி அக்கா(இவர் முகம் தெரியும்)பூங்கோதை அக்கா,ரித்து அக்கா போன்ற பாசக்கார அக்காக்களை சொன்னேன்.இவ்வளவுதான் பெண்களுக்கும் எனக்குமான நட்பு வட்டம்.

என் கூட ஒரு பொண்ணு படித்தாள் அவர் பெயர் தர்சினி என் முன்னைய பதிவு ஒன்றிலும் இவள் பற்றி குறிப்பிட்டு இருக்கேன் 8 வகுப்பில் இருந்து உயர்தரம் வரை ஒன்றாக படித்தவள்.இவளுக்கும் எனக்கு ஆகுறது இல்லை எப்பவும் எதாவது பஞ்சாயத்து வந்துகொண்டேயிருக்கும்.

உயர்தரம் படிக்கின்ற போது மாணவர் தலைவர்களுக்கான தலைவர் தெரிவில்.நீண்டகாலம் அந்த பாடசாலையில் படித்தால் பெண்கள் சார்பாக அவளுக்குத்தான் அந்த பதவி வந்து இருக்கவேண்டும் ஆனால் கலைப்பிரிவில் கல்விகற்ற இன்னும் ஒரு மாணவிக்கு அது போனது போது.நாங்கள் இல்லை தர்சினிக்குத்தான் கொடுத்து இருக்கவேண்டும் அவள் தான் சீனியர் என்று அவளுக்கு சார்பாக பேசி பாடசாலை அதிபரும் எங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டு.தர்சினியையே பெண்களுக்கான மாணவர் தலைவர்களின் தலைவர் ஆக்கினார்.

அப்போது என்னிடம் வந்து பேசிய தர்சினி சொரி(sorry) ராஜ் உன்னுடன் நான் எவ்வளவு சண்டை பிடித்து இருக்கின்றேன் எத்தனை முறை அதிபர்,ஆசிரியர்களிடன் உன்னை பற்றி மாட்டிக்கொடுத்து பேச்சு வாங்கி கொடுத்திருக்கேன் ஆனால் அதை எல்லாம் மனசில் வைத்துக்கொள்ளாது எனக்காக பேசியதுக்கு நன்றி என்றாள்.அதுக்கு பிறகு பாடசாலைக்காலம் முடியும் வரை அவள் என்னுடன் சண்டைபோட்டது இல்லை.

கால ஓட்டத்தில் எங்கள் மண்ணுக்காக மரணித்தவர்களில் அவளும் கலந்துவிட்டாள்.

தர்சினி என் காலம் உள்ள வரையில் நினைவுகளில் என்றும் இருப்பாள்.
மனித வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கின்றோம் ஆனால் நண்பர்கள் தான் அழியாத நினைவுகளை தந்துவிடுக்கின்றனர்.

(இதயம் இன்னும் பேசும்)

இந்த தொடரின் முன்னய பகுதியை படிக்க இங்கே க்ளிக்-இதயம் பேசுக்கின்றது

Post Comment

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனதில் சில அன்புகளின் நினைவுகள் வடுக்களாக மாறித்தான் போகிறது...

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

நன்றி பாஸ்

ராஜி said...

நட்பென்ற புள்ளியை மையமாக கொண்டுதான் உலகே இயங்குகின்றது சகோ!

K.s.s.Rajh said...

@ராஜி

நன்றி அக்கா

jgmlanka said...

அன்பு என்பது உரிமையோடு நல்வழி நடத்துவதாக இருந்தால் தான் இன்னும் அழகு பெறுகிறது.. அருமையான கருத்தைப் பதிவு செய்திருக்கிறீங்க... பாராட்டுக்கள்..

jgmlanka said...

ஆவ்வ்வ்வ் ... இந்த அக்காவையும் சேர்த்திருக்கிறீங்க.. ரொம்ப நன்றி ராஜ் ... :))

K.s.s.Rajh said...

@பூங்கோதை

நன்றி அக்கா

தனிமரம் said...

நட்புக்கு முகம் ஏது தொடருங்கள் இதயம் பேசட்டும் இணையத்தில்!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails