Tuesday, February 12, 2013

காதலர் தினமும் காவிய காதல்களும்

காதலர் தினம் அவசியமா? அது வேண்டாத வேலை என்று காலம் காலமாக பலர் சொன்னாலும் என் பார்வையில் நான் எப்பொழுதும் காதலர் தினத்தை எதிர்பவன் இல்லை.அதுக்காக நான் காதலர் தினத்தை கொண்டாடுபவன் இல்லை. இப்ப என்ன சொல்லவார சட்டுனு சொல்லிட்டு போனுதானே சொல்லுறீங்க சொல்லுறேன்.பெப்ரவரி மாதம் பொறந்தாலே காதலர் மாதம் என்று சொல்லி பலர் பண்ணுற அலப்பறை பேஸ்புக்கில் தாங்கமுடியல சாமீ.
காதல்னா என்னானு தெரியுமா? அதன் வலுதெரியுமா? அதன் சக்தி தெரியுமா?

யோவ் என்ன விளக்கெண்ணைக்கு அதை எல்லாம் எங்ககிட்ட கேட்குறீங்க அது தெரியாத நாங்க பேசாம எங்க வழியில் போய்கிட்டு இருக்கோம் தெரிஞ்ச நீங்க கொண்டாடுங்கையா.

பெப்ரவரி மாதம் மட்டும்தேன் காதல் இருக்குமா அதுவும் பெப்ரவரி 14 மட்டும் தான் இருக்குமா?மற்றநாளில் காதல் ஒடியா போய்விடும்.அடங்குங்கலே முடியல

அப்பறம் நீ காதலி இல்லைனு கடுப்புல பேசுற 
காதலித்து பார்
உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்,
உலகம் அர்த்தப்படும்
இராத்திரியின் நீளம் விளங்கும்,
உனக்கும் கவிதை வரும்,
கையெழுத்து அழகாகும்,
தபால்காரன் தெய்வம் ஆவான்,
உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்
கண்ணிரண்டும் ஒலி கொள்ளும்
காதலித்து பார்



என்று யாராவது வைரமுத்து கவிதை எல்லாம் சொன்னால் சுறா டீவீடி அனுப்பி வைக்கபடும்.ஜாக்கிரதை.

நாங்க சின்ன வயசில் படிக்கிற காலத்தில் நண்பன் ஒருத்தன் சொன்னான் இன்னைக்கு பொண்ணுங்க கூட கதைக்ககூடாது?

ஏண்டா என்று கேட்டபோது இன்று காதலர் தினம் மச்சி இன்னைக்கு பொண்ணுங்க கூட கதைச்சால் தப்பு என்றான்.
காதல் ஏதோ தப்பான விடயமாகவே தோன்றியது 10 வயதில் 


அதன் பின் கொஞ்சம் வளர்ந்த பின் காதலர் தினம் அன்று டாவடிக்கும் பிகருகளை கண்டால் வெட்கத்தால் அவர்கள் முகம் பார்க்க மனசு வராது இது 15 வயதுகளில்

டீன் ஏஜ் முடியும் காலங்களில் இரண்டு மூன்று வருடங்கள் எதைபற்றியும் சிந்திக்க நேரம் இல்லாமல் 24 மணிநேரமும் இயந்திரமாக இயங்கிக்கொண்டு இருக்கும் படி வாழ்க்கை மாறியபின்.காதலர் தினம் வருவதும் தெரியாது போவதும் தெரியாது.

இப்ப இருபதுகளில் பேஸ்புக் வலைத்தளம் என்று இயங்க ஆரம்பித்த பிறகு காதலர் தினம் அன்று ஏதாவது பதிவு போடுவதும் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவதோடும் சரி.

இப்படி இருக்கும் எங்களிடம் காதல் பற்றி என்ன நினைக்கிற அதன் சக்தி தெரியுமா என்றால்? கடுப்பாகாம பூச்செண்டு கொடுத்து பாராட்டவாமுடியும்?

நான் காதலுக்கு எதிரியும் இல்லை காதலர் தினத்துக்கு எதிரியும் இல்லை ஆனால் சிலர் கடுப்பேத்துறாங்க மைலாட்

சினேகன் எழுதிய இந்த வரிகள் தான் இன்றைய பல காதல்களின் யதார்த்தம்

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்

இன்னிக்கு காதல் எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடுச்சு
கண்ணு பாக்குது கைய கோர்க்குது ரூமு கேட்குது
எல்லாம் முடிஞ்சு பின்னும் ஃபிரண்டுனு சொல்லிக்கிட்டு
வாழுறவங்க ரொம்ப பேருடா கேட்டு பாருடா
இப்ப காதல் தோத்துட்டா யாரும் சாவதே இல்ல
அட ஒன்னு தோத்துட்ட ரெண்டு இருக்குது உள்ள
இப்பெல்லாம் தேவதாஸ் எவனும் இல்ல

அவன் பொழுதுபோக்குக்கு ஒரு பிகர பாக்குறான்
அவ செலவு பண்ண தான் ஒரு லூச தேடுறா
ரெண்டு பேருமே இங்கே பொய்யா பழகுறா
ரொம்ப புளிச்சி போச்சுனா கை குலுக்கி பிரியுறான்



எனக்கு தெரிய பத்து பேரை லவ்விய......................எல்லாம் பேஸ்புக்கில் காதலின் புனிதம் பற்றி பேசுது ஸ்சப்பா................கொண்டாடுறதுனா நீங்க கொண்டாடுங்கய்யா காதல் பற்றி கவிதை போடுங்க உங்க காதலி பற்றி போடுங்க,காதலர் தினம் பற்றி போடுங்க யாருவேணாம்னா  அதுக்காக உனக்கு காதல் பற்றி தெரியுமா?புடலங்கா பற்றி தெரியுமா? என்று மற்றவனை ஏன் கடுப்பேத்துறீங்க.

முஸ்கி-உண்மையான காதலர்கள் யார் மனதையாவது இந்த பதிவு புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவேண்டும்

முஸ்கி-வரும் காதலர் தினம் அன்று  ஒரு அழகான காதல் கதை உங்கள் நண்பர்கள் தளத்தில் எதிர்பாருங்க ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட மனதை வரும் ஒரு சிறுகதை.

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails