Thursday, February 28, 2013

தங்கத் தலைவி த்ரிஷாவுக்கு பெண் சாதனையாளர் விருது

நம்ம தங்க தலைவி,நடன தாரகை,நடிப்பு புயல் த்ரிஷா மேடத்துக்கு பெண் சாதனையாளருக்கான விருது வழங்கப்பட இருக்கின்றதாம்

தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகைகள் நடிக்க வந்தாலும் எல்லோறும் முன்னனி நடிகையாக வருவதில்லை சிலர் வந்த வேகத்திலே காணாமல் போய்விடுவார்கள் சிலர் சில வெற்றிப்படங்களில் நடித்தாலும் பிறகு காணாமல் போய்விடுவார்கள்.ஒவ்வொறு காலத்திலும் ஒவ்வொறு நடிகைகள் பல ஆண்டுகள் தமிழ் சினிமாவை கலக்குவார்கள்.

பிறகு திருமணம் முடித்து நடிப்பில் இருந்து ஒதுங்கிவிடுவார்கள் இல்லை அதன் பின் அவர்களுக்கு ஹீரோயினாக வாய்ப்புக்கள் கிடைப்பது குறைந்துவிடும்
சிம்ரன்,ஜோதிகாவுக்கு பிறகு வெற்றிடமாகிவிட்ட அவர்களின் இடத்தை ஒரளவு நிரப்பகூடிய நடிகை என்றால் த்ரிஷாதான்.

த்ரிஷா திரையுலகிற்கு அறிமுகமாகி 10ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. 1999ல் வெளியான ஜோடி திரைப்படத்தின் மூலம்(சிம்ரனின் தோழிகளில் ஒருவராக நடித்திருப்பார்)தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் பல்வேறு மெகா ஹிட் படங்களில் நடித்துள்ளார்.தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு  முத்திரையை பதித்துள்ளார்


10 ஆண்டுகள் கடந்தும் இன்றும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷாவுக்கு, பெண் சாதனையாளர் விருது வழங்கி பேஷன் பத்திரிக்கை ஒன்று கௌரவிக்க உள்ளதாம் திரிஷாவின் திரையுலக சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு இந்த விருதினை ஜேஎப்டபிள்யூ பத்திரிகை வழங்குகிறது.


மார்ச் 1ஆம் தேதி சென்னையில் நடக்கும் பிரமாண்ட விழாவில் திரிஷாவுக்கு பெண் சாதனையாளருக்கான விருது வழங்கப்பட இருக்கிறது.
இது பற்றி திரிஷா கூறியதாவது, "எனக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது." என்றார். திரிஷாவுடன் நடிகை சரோஜா தேவி, விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா, பாடகி சுஜாதா உள்ளிட்டோரும் கௌரவிக்கப்படுகிறார்களாம்.

ஒரு ரசிகனாக மனமார்ந்த வாழ்த்துக்கள் மேடம் மேலும் நீங்கள் திரையுலகில் பல சாதனைகள் புரியவேண்டும்
படங்கள்,தகவல்கள்-கூகுள் தேடலில் பெறப்பட்டவை
முஸ்கி-நீண்டகாலம் என் தளத்திற்கும் பாலோவர் விட்ஜெட்டிற்கும் வாய்யா தகறாரு இதனால் 200 மேற்பட்ட பாலோவர்ஸை இழந்துவிட்டேன் மீண்டும் பாலோவர் விட்ஜெட் இணைத்துள்ளேன் சிரமம் பார்க்காது மீண்டும் பாலோ செய்யவும் நண்பர்களே

Post Comment

11 comments:

Yoga.S. said...

வணக்கம்,ராஜ்!///எனக்கு இந்த விருது .................................................... ,மேலும் "ஏதாவது" செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.////இனிமேலா?????

குட்டன்ஜி said...

கொடுக்க வேண்டியதுதான்!
செங்கோவி கவனிக்கவும்!

K said...

த்ரிஷா செல்லத்துக்கு வாழ்த்துக்கள்!!!

அதே போல விரைவில் டும் டும் நடக்கவும் வாழ்த்துக்கள் மச்சான் சார்!

ஹா ஹா உங்களுக்கில்லை! த்ரிஷாவுக்கு!!

( நீங்க இப்பதானே சின்னப் பையன் மச்சான் சார் )

செங்கோவி said...

எல்லாம் சரி, உங்க தலைவி பண்ண சாதனை என்னன்னு ஏன்யா யாரும் சொல்ல மாட்டேங்கிறீங்க? தயவு செஞ்சு சொல்லுங்க, நாங்களும் தெரிஞ்சுக்கறோம்!

செங்கோவி said...

அந்த நாலாவது ஸ்டில்லையே நாலு செகண்ட்டுக்கு மேல பார்க்க முடியலை..இதுக்கு விருதுன்னு வேற சொல்றாங்க

செங்கோவி said...

//ஹன்சி மன்றச் செய்தி :
நம்ம தங்கத்தலைவி ஹன்சிகா இந்த வருசமும் தன்னோட பிறந்த நாள் அன்னிக்கு இரண்டு குழந்தைகளை தத்து எடுத்திருக்காங்க..இந்தக் காலத்துல இப்படி ஒரு பொண்ணான்னு எல்லாருக்குமே ஆச்சரியமா இருக்கு. இதையே மத்த நடிகைகளும் ஃபாலோ பண்ணா எவ்ளோ நல்லா இருக்கும்?

http://sengovi.blogspot.com/2012/08/blog-post.html//

இப்படி நாங்க ஆதாரப்பூர்வமாக எங்கள் தலைவிக்கு ஏன் சாதனையாளர் விருது வழங்கப்படுதுன்னு சொல்றோம். கமலா காமேஷ்க்கு ஏன் விருது? டெல் மீ!

செங்கோவி said...

//Yoga.S. said...
வணக்கம்,ராஜ்!///எனக்கு இந்த விருது .................................................... ,மேலும் "ஏதாவது" செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.////இனிமேலா?????

//

இனிமேலாவது உருப்படியாக ஏதாவது செய்ய......என்று வாசிக்கவும்.
.

செங்கோவி said...

//மாத்தியோசி மணி மணி said...
த்ரிஷா செல்லத்துக்கு வாழ்த்துக்கள்!!!

அதே போல விரைவில் டும் டும் நடக்கவும் வாழ்த்துக்கள்//

அது ரொம்பக் கஷ்டம்யா..வேணும்னா மொட்டையடிச்சு காது குத்திக்கறேன்னு வேண்டிக்கோங்க மணி.

செங்கோவி said...

என்ன இருந்தாலும் கிஸ்ராஜா நம்ம ஆளு..அவர் மனசை நோகடிக்கக்கூடாது.அதனால நான் கிளம்பறேன்!

indrayavanam.blogspot.com said...

சூப்பர் பதிவு

திண்டுக்கல் தனபாலன் said...

Google Friend Connect (Followers Widget) எப்போதோ நிறுத்து விட்டது... இருந்தாலும் இணைந்து விட்டேன்...

Google Friend Connect சேவை கிடையாது... கவனிக்கவும்....


உங்களது Profile, Blogger Profile-ல் இருந்து Google + Profile-க்கு மாறுங்கள்... கூகிள்+ Followers Gadget-யையும் தங்கள் தளத்தில் இணையுங்கள்... உதவிக்கு :

i) http://www.bloggernanban.com/2012/11/google-plus-followers-gadget.html

ii) http://ponmalars.blogspot.com/2013/01/add-google-followers-gadget-to-blogger.html

பதிவு வெளியிட்டவுடன் கூகிள்+ பக்கம் சென்று, அங்கும் பதிவை குறிப்பிட்டு, லிங்க் கொடுத்து பகிருங்கள்... (share)

வருகை தரும் புது நண்பர்கள் கூகிள்+ல் இணைவார்கள்... இணையும் / இணைந்த நண்பர்களுக்கு புதிய பதிவுகள் நீங்கள் share செய்வதன் மூலம் பதிவு சென்றடையும்...

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails