Wednesday, May 11, 2011

நீண்ட நாட்களுக்குப் பிறகு கங்குலியின் ஆட்டத்தைப் பார்த்த உற்சாகத்தில் மைதானத்தில் நுழைந்து அவரது காலில் விழுந்து வணங்கிய ரசிகர்(By-K.s.s.Rajh)

ரசிகர்களின் நாயகன்



கங்குலியின் காலில் விழுந்து வணங்கும் ரசிகர்


4-வது ஐபிஎல் தொடருக்காக எந்த அணியாலும் கங்குலி ஏலத்தில் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் புணே அணிக்காக கங்குலி தேர்வானார். ஆனால் தேர்வு செய்யப்பட்ட பின்னர் கடந்த 2 ஆட்டங்களில் அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இந்த நிலையில் டெக்கான் அணிக்கெதிராக நேற்றய போட்டியில் அவர் களமிறங்கினார். அவர் மைதானத்துக்குள் நுழையும்போதே ரசிகர்கள் உற்சாககமாக அவரை வரவேற்றனர். கங்குலி பெளண்டரி, சிக்ஸர் விளாசியபோது ரசிகர்கள் எழுப்பிய கோஷம் விண்ணைத் தொட்டது.
 இந்த நிலையில் அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்துக்குள் ஒரு ரசிகர் நுழைந்து கங்குலியின் காலில் விழுந்து வணங்கினார். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ரசிகரை மைதானத்திலிருந்து வெளியேற்றினர்.

கங்குலி மீது ரசிகர்கள் எவ்வளவு அன்புவைத்துள்ளார்கள் என்பதற்கு இதைவிட வேற உதாரணம் தேவையில்லை.கங்குலியின் ஆக்ரோசமான குணத்தை பலர் விரும்புவதில்லை இதனால் தான் கங்குலியை பலருக்கு பிடிப்பதில்லை,ஆனால் இன்று உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் வளர்சிக்கு கங்குலியின் ஆக்கிரோசமான தலைமைத்துவம் தான் இந்திய அணியை உயர்தியது என்பது கிறிக்கெட்டை அறிந்த அனைவரும் அறிவார்கள்.சச்சினை விட கங்குலியின் தலைமைத்துவத்தை கண்டுதான் எதிர் அணிகள் அஞ்சின.கங்குலி இந்திய கிறிக்கெட்டில் நிகழ்திய சாதனைகள் ஏராளமானவை.இந்திய கிறிக்கெட் வரலாற்றில் என்றுமே மறக்கப்பட முடியாத அருமையான வீரர் எங்கள் கொல்கத்தா தாதா/இளவரசன்/சவ்ரவ் கங்குலி அவர் தொடர்ந்து ஜ.பி.ல்.போட்டிகளில் கலக்க கங்குலி ரசிகன் என்ற முறையில் வாழ்த்துக்கள்.
தனது அறிமுக டெஸ்ட்போட்டியிலேயே கங்குலி சதமடித்தபோது அவரை வாழ்த்தும் சாதனை நாயகன் சச்சின்.(தனது முதல் இரண்டு டெஸ்போட்டிகளிலும் கங்குலி தொடர்சியாக சதமடித்தார் என்பது குறிப்பிடதக்கது.

Post Comment

2 comments:

pozhuthupoku said...

kalakkal thalaiva..naanum oru ganguly rasigan...

K.s.s.Rajh said...

நன்றி நண்பரே.எனக்கு கிறிக்கெட் பிடிப்பதற்கு கங்குலி யும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகது.கங்குலியின் ஆட்டத்தைவிட அவரது போராட்டகுணம்,தன்நம்பிக்கை,முடிவெடுக்கும் திறன் இப்படி நிறைய விடயங்கள் எனக்கு அவரிடம் பிடிக்கும்.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails