Thursday, August 09, 2012

வரலாற்றை மாற்றிய தாதா-5

இந்திய அணியால் செய்யமுடியாது என்று சோர்ந்து போயிருந்த வீரர்களுக்கு தாதா உட்சாகம் ஊட்டி பலவிடயங்களை சாதித்துக்காட்டினார்.

கங்குலி என்ற சொல் பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு தாரக மந்திரம் ஆனது.
தாதா எந்தளவுக்கு சாதித்தாரோ அந்தளவுக்கு சர்சைகளிலும் சிக்கினார்
ஆனால் அதை எல்லாம் அவர்கண்டு கொள்ளாமல் இந்திய அணியின் வெற்றி, உலக அரங்கில் இந்திய அணியை தலைநிமிரவைத்தல் இதுதான் தாதாவின் குறிக்கோளாக இருந்தது.


இந்தியாவில் வைத்து இங்கிலாந்து ஒரு போட்டியை வென்ற பின் அன்ரு பிளிண்டொப் என்ன நினைத்தாரோ தெரியாது தன் சட்டையை கழற்றி மைதானத்தை சுற்றி ஓடினார்.

இந்தியாவில் ப்ளிண்டொப் சட்டையை கழற்றி மைந்தானத்தில் ஓடிய போது

இது நடந்தது 2002ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வந்து தொடரை சமன் செய்த உற்சாகத்தில் தனது மேல் சட்டையை கழற்றி, எல்லோரையும் பிளிண்ட்டொப் கடுப்பேற்றிய சம்பவம் தாதா மனதில் ஆழமாக பதிந்துவிட்டது போல அதுக்கு தக்க பதிலடி கொடுத்தார் தாதா.


சில மாதங்களின் பின் இங்கிலாந்தில் நடைபெற்ற இலங்கை,இங்கிலாந்து,இந்திய அணிகளுக்கு இடையிலான முக்கோணத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தகுதி பெற்றன

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 326 ஓட்டங்களைக்குவித்தது இதில் ஆரம்பதுடுப்பாட்டவீரர் மார்க் ரெஸ்கோதிக் மர்றும் இங்கிலாந்து கேப்டன் நஸார் உசைன் சதம் அடித்தனர் அதுவும் சதம் அடித்த பின் நஸார் உசைன்  இந்திய வீரர்களை சோக்கி ஆவேசமாக தனது மகிழ்சியை பகிந்துகொண்டார்.

326 ஓட்டங்கள் என்பது அப்போது மிகவும் கடினமான ஓட்ட இலக்கு

கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தாதா மற்றும் சேவாக் சிறந்த ஆரம்பத்தை வழங்கினர் 15வது ஓவரின் 106 ஓட்டங்களாக இருந்த போது கங்குலி ஆட்டம் இழந்தார் 43 பந்துகளில் 10 பவுண்ரிவும் 1 சிக்சரும் அடங்கலாக கங்குலி 60 ஓட்டங்களை விளாசினார்.

பின் சேவக்கும் 49 பந்துகளில் 7 பவுண்ரிகளுடன் 45 ஓட்டங்களை பெற்று போல்டாக இந்தியாவின் சரிவு தொடங்கியது.

அடுத்து அவ்ந்த மொங்கியா-9,சச்சின்-14,ராவிட்-5,என்று நடையை கட்ட 
24 ஓவரில் 146க்கு 5 விக்கெட்டுகள்.என்ற நிலையில் இந்தியா தத்தளித்த போது அபோதைய இளம் வீரர்களாக இருந்த யுவராஜ் சிங் மற்றும் மொகமட் கைப் சிறப்பாக ஆடி யாருமே எதிர்பார்காத வகையில் இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர்

வெற்றிக் களிப்பில் இந்தியவீரர்கள்

இதில் 42வது ஓவரில் யுவராஜ் சிங் 63 பந்துகளில் 9பவுண்ரி 1 சிக்சருடன் 69 ஓட்டங்களை பெற்று ஆட்டம் இழந்தாலும் தூணாக ஒரு முனையில் நின்ற மொகமட் கைப் ஹர்பஜன் சிங்,சகிர்கான் ஆகியோரின் உதவியுடன் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். ஹர்பஜன் சிங் 15 ஓட்டங்களைப்பெற்று ஆட்டம் இழந்தாலும் சகிர்கான் 4 ஓட்டங்களை பெற்று ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

மறுமுனையில் மொகமட் கைப் 75 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் ஆட்டம் இழக்காமல் 87 ஓட்டங்களைவிளாசி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார் இந்தியா நாட்வெஸ்ட் கோப்பையை வென்றது.

வெற்றியின் பின் மொகமட் கைப் மற்றும் சகிர்கான்

மொகமட் கைப் இந்திய அணியின் ஒரு நட்சத்திரமாக ஜொளித்திருக்கவேண்டியவர் அவரின் கிரிக்கெட் வாழ்கை பிரகாசிக்கவில்லை என்பது வருத்தமானவிடயமே.

லோட்ஸ் மைதானத்தில் ப்ளின் டொப்புக்கு தாதாவின் பதிலடி

இந்தியா வெற்றி பெற்ற உடன் பெவிலியனில் இருந்த கங்குலி தன் மேல் சட்டையை கழற்றி சுற்றினார்.இது பெரும் சர்சையை கிளப்பிறது இது நடந்தது 2002 ஜுலை 13ம் திகதி.பலரும் கங்குலியின் செயலை கண்டித்தார்கள் ஆனால் தாதாவோ பிளிண்டொப் இந்தியாவில் சட்டையை கழற்றி சுற்றினால் தவறு இல்லை நான் லோட்ஸ் மைந்தானத்தில் கழற்றி சுற்றினார் தவறா என அந்த சம்பவத்தை அசால்டாக எடுத்துக்கொண்டார்.

நாட்வெஸ்ட் சீரிஸ் இறுதிப்போட்டியின் வெற்றியின் பின் தாதா

பின்னர் ப்ளிண்டொப்,தாதா இருவரும் தங்களின் செயல்களுக்கு மன்னிப்பு கோரினாலும்.இந்த தில் எந்தக் கேப்டனுக்கு வரும் கங்குலி பிற கேப்டன்களை போல இருக்க விரும்பியது இல்லை தனக்கு என ஒரு ஸ்டைலை உருவாக்கி அதில் பயணித்த தன்னிகர் இல்லாத கிரிக்கெட் வீரர்.


கங்குலியை பலர் தூற்றினாலும் அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பை யாரும் மறுத்துவிட முடியாது,சேவாக்,யுவராஜ் சிங்,ஹர்பஜன் சிங்,சகிர்கான்,நெய்ரா,இர்பான் பதான்,தோனி என்று அவர் பல வீரர்களை இந்திய கிரிக்கெட்டில் உருவாக்கிவிட்டவர்,இதில் சேவாக்,யுவராஜ் சிங்,ஹர்பஜன் சிங்,சகிர்கான் போறோர் கங்குலியின் அற்புதமான கண்டுபிடிப்புக்கள் இவர்களை சர்வதேச கிரிக்கெட்டில் கைதூக்கிவிட்டவர் தாதா இதை இவர்களே பலமுறை சொலியுள்ளார்கள்.

ஓவ்வொறு கிரிக்கெட் அணியின் கேப்டனும் தாதாவிடம் இருந்து நிறைய பாடம் கற்றுக்கொள்ளாம்.ஒரு கேப்டன் என்பவர் வெருமனே வெற்றிகளை பெற்றுக்கொடுப்பது மட்டும் அவர் பணி இல்லை அதை மட்டும் வைத்து அவரை சிறந்த கேப்டன் என்று சொல்லமுடியாது.தனக்கு பிறகு அணிக்கு பல சிறந்த வீரகளை இனம் கண்டு அவர்களை ஊக்குவித்து அவர்களை வளர்ந்துவிடவேண்டியது ஒவ்வொறு கிரிக்கெட் அணிகளினதும் கேப்டன்களின் முக்கிய பணி.அதை சிறப்பாக செய்தவர் தாதா.

(தாதா இன்னும் வருவார்)
*********************************************************************************
இந்திய அணி வெற்றி பெற்ற தருணமும் சட்டையை கழற்றி சுற்றிய தாதாவும்
********************************************************************************

இந்த தொடரின் முன்னைய பகுதிகளை படிக்க-
தொடர் அறிமுகம்
பகுதி-1
பகுதி-2
பகுதி-3
பகுதி-4

Post Comment

5 comments:

கோவி said...

தாதாவை பற்றிய தொடர் அருமை..

திண்டுக்கல் தனபாலன் said...

மறைக்க முடியாத மேட்ச்...

நன்றி… (TM 2)

K.s.s.Rajh said...

அனைவருக்கும் நன்றி நண்பர்களே

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான நினைவுகள்! அருமை!

இன்று என் தளத்தில்
பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
http://thalirssb.blogspot.in/2012/08/17.html

கலியபெருமாள் புதுச்சேரி said...

Ungal pathivugal arumai.melum valara vaazhthukkal nanbare.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails