Sunday, August 19, 2012

இந்திய கிரிக்கெட் அணியின் படைத் தளபதி லக்ஸ்மன்

வி.வி.எஸ் லக்ஸ்மண் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.நியூஸ்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட போதும் அது முடிய ஓவ்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னதாகவே அவர் ஓய்வை அறிவித்தது.அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி.

இந்திய கிரிக்கெட் அணியை தாங்கிய வீரர்களில் லக்ஸ்மண் முக்கியமானவர்.
ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு பெரிதாக வாய்ப்புக்கள் கிடைக்காத போதும் டெஸ்ட் போட்டிகளில் கலக்கு கலக்கு என கலக்கியவர் லக்ஸ்மண்
அதுவும் அவுஸ்ரேலிய அணிக்கு எப்பவும் லக்ஸ்மன் வில்லன் தான்.


முன்னால் இந்திய கேப்டன் கங்குலி மேல லக்ஸ்மனுக்கு எப்பவும் ஒரு நன்மதிப்பு.அவரது படைகளில் லக்ஸ்மன் தளபதி அதுவும் அவுஸ்ரேலியாவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் என்றும் மறக்கப்பட முடியாத ஒரு போட்டியாகும்.

என் வயது கிரிக்கெட் ரசிகர்களின்  கிரிக்கெட் ஹீரோக்கள் எல்லாம் ஓருவர் பின் ஒருவராக ஓய்வுபெருவது மனதை வெகுவாக பாதித்தாலும் என்றோ ஒருநாள் ஓவ்வு பெற்றுத்தானே ஆகவேண்டும் இந்திய அணியில் கங்குலி,கும்ளே ராவிட்,இப்போது லக்ஸ்மன்.


இன்னும் எனக்கு பிடித்த வீரரகளாக எஞ்சியிருப்பவர்கள் சேவாக்,யுவராஜ் சிங்,ஹர்பஜன் சிங் மாத்திரமே இவர்களும் ஓய்வு பெற்றதும் இந்திய அணிவிளையாடும் போட்டிகளை நான் பார்க்கமாட்டேன்.

தற்போது இந்திய அணியில் எந்த இளம் வீரரும் என்னை கவர்ந்தது இல்லை.

தனது ஓய்வு குறித்து லக்ஸ்மன் வெளியிட்ட அறிக்கை

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுகிறேன். அதற்கு இதுதான் சரியான தருணம் என நினைக்கிறேன். ஓய்வு முடிவு கடினமானதுதான். எப்போதுமே நான் எனது மனசாட்சியை கேட்பவன். மனசாட்சி என்பது முன்னறிந்து சொல்லக்கூடியது.
எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் அதைக் கேட்டே செயல்பட்டிருக்கிறேன். 


கடந்த 4 நாள்களாக எனக்குள் நிறைய சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. இருப்பினும் ஓய்வுபெற இதுதான் சரியான தருணம் என்பதை உணர்ந்துவிட்டேன். இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க இதுதான் சரியான தருணம் என்று கருதுகிறேன்.

வெள்ளிக்கிழமை இரவு என் மனதை கட்டுக்குள் வைக்க முடியவில்லை. இறுதியில் எனது உள் மனதை கேட்டு ஓய்வுபெறும் முடிவுக்கு வந்தேன். இதையடுத்து சனிக்கிழமை காலையில் இந்தத் தகவலை அணியின் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்திடம் தெரிவித்தேன். இதேபோல் சகவீரர்களிடமும் இந்த விஷயத்தை தெரிவித்தேன். நியூஸிலாந்து தொடருக்கு முன்னதாகவே ஓய்வு பெறுவது குறித்து அவர்கள் அனைவருமே ஆச்சர்யம் தெரிவித்தனர்.

பிசிசிஐ தலைவர் சீனிவாசனிடம் தெரிவித்தபோது, அவர் தயக்கத்தோடே எனது முடிவை ஏற்றுக் கொண்டார். இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது எனது சிறு வயது கனவு. அந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்திய அணி, சொந்த மண்ணிலும், அன்னிய மண்ணிலும் வெற்றிகளைக் குவித்த காலத்தில் விளையாடியது என்னுடைய அதிர்ஷ்டம். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் என்னை வழிநடத்திய மற்றும் ஊக்கப்படுத்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

2001-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி "பாலோ ஆன்' ஆனது. அப்போது 281 ரன்கள் குவித்து அணியை சரிவிலிருந்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தந்ததை நினைவுகூர்ந்த அவர், "வரலாற்றுச் சாதனை மிக்க வெற்றியைப் பெற்ற அணியில் நாமும் இடம்பெற்றிருந்தது எவ்வளவு அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொள்வேன். அந்தப் போட்டியின் முடிவை எப்படி மாற்றினோம் என்று நினைத்துப் பார்ப்பது உணர்ச்சிமயமானது.


முன்னணி வீரர்களின் மனதில் ஓய்வு எண்ணம் தோன்றும்போது, ஓய்வு பெறும் தருணம் வந்துவிட்டது என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். கடந்த 4 அல்லது 5 ஆண்டுகளாகவே நானும் அதை உணர ஆரம்பித்துவிட்டேன். எப்போதுமே உள் மனசாட்சியைக் கேட்டே முடிவெடுப்பேன். அதனாலேயே என்னுடைய 17-வது வயதில் மருத்துவப் படிப்புக்கு போகாமல் கிரிக்கெட்டை தேர்வு செய்தேன்.

எப்போதுமே என்னுடைய கண்ணியத்தை காப்பாற்றுவதோடு, அணிக்கும் சிறந்த பங்களிப்பை கொடுக்கவே முயற்சித்தேன். சில நேரங்களில் நான் சரியாக விளையாடவில்லை என்றால், பெரும் ஏமாற்றமடைவேன். இந்த கிரிக்கெட் வாழ்க்கை உணர்ச்சிபூர்வமான, மறக்க முடியாத பயணம். என் வாழ்நாள் முழுவதும் இந்த நினைவுகளில் திளைத்திருப்பேன் என்றார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியத் தொடர்களில் ரன் குவிக்கத் தவறியது குறித்துப் பேசிய லட்சுமண், "அப்போது சிலர் என்னை விமர்சித்தார்கள். ஆனால் அதைவிட அதிக அளவில் நலம் விரும்பிகள் இருந்தார்கள். ஆனால் எல்லா மனிதர்களையும் திருப்திப்படுத்த முடியாது. வெற்றியும், தோல்வியும் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் ஒரு பகுதி.

என்னுடைய காலத்தில் விளையாடிய வீரர்களில் பெரும்பாலானோர் ஜாம்பவான்கள். அவர்களுடன் நட்போடு இருந்த நினைவுகள் வாழ்க்கை முழுவதும் என்னோடு இருக்கும். ஓய்வுக்குப் பிறகு என்ன செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லை. இருப்பினும் ஹைதராபாத் அணி வீரர்களுடன் என்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்வதே இப்போதைய இலக்கு. நான் ஹைதராபாத் அணிக்காக விளையாடியபோது மூத்த வீரர்கள் என்னுடன் அவர்களுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். அதேபோல் நானும் செயல்படுவேன்.


லக்ஸ்மன் இதுவரை  134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 17 சதம் உள்பட 8,781 ரன்கள் குவித்துள்ளார்.
ஒருநாள் போட்டியில் 83 போட்டிகளில் விளையாடி 2,338 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதங்களும் அடங்கும்.

17 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய போதும் இந்தக்காலப் பகுதியில் நடைபெற்ற 1999,2003,2007,2011, என்று எந்த உலகக்கோப்பை தொடரிலும் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்பு கிடைக்காத பிரபலமான கிரிக்கெட் வீரர் லக்ஸ்மன் மட்டும்தான் இது ஒரு துரதிஸ்டவசமான சம்பவம்.
17 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட் அணியை தன் தோள்களில் சுமந்த லக்ஸ்மனின் ஓய்வு கவலை அளித்தாலும் இளஞர்களுக்கு வழிவிட்டு ஓதுங்கிய அவரை பாராட்டுவதோடு.இந்திய அணியில் விரைவில் ராவிட்,லக்ஸ்மன் ஆகியோரது இடங்கள் நிரப்பபடவேண்டும் இல்லை என்றால் இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலம் சிறப்பாக இருக்காது.

லக்ஸ்மனுக்கு நிகரான மாற்றுவீரர் உடனடியாக கண்டு அறிய முடியாவிட்டாலும் இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன் படுத்தி எதிர்கால இந்திய அணியை சிறப்பாக கட்டி எழுப்பவேண்டும்

லக்ஸ்மன் ஓய்வு குறித்து எனது கருத்து-இந்திய கிரிக்கெட் அணியின் படைத்தளபதி லக்ஸ்மன் என்றால் மிகையாகாது.

Post Comment

6 comments:

Unknown said...

லக்ஷ்மன் முக்கிய வீரராக இருந்தாலும், தவிர்க்கபடமுடியாத முன்னணி வீரராக என்னால் கொண்டாட முடியாது, தன் மீது விமர்சனங்கள் வரும் காலங்களில் 2வது இன்னிங்ஸ்ல் சோபித்து அதை போக்கி கொள்வார்,மற்றும்படி முதல் இன்னிங்ஸ் தரவுகளை எடுத்து பார்த்தால் உண்மை புரியும்.

திண்டுக்கல் தனபாலன் said...

மற்றுமொரு இந்திய சுவர்... இல்லை இப்போது... (ஓய்வு பெறுகிறது)

நன்றி... (TM 2)

K.s.s.Rajh said...

@Shanmugan Murugavel


நிச்சயமாக பாஸ் ஆனால் இரண்டாவது இனிங்சில் சிறப்பாக ஆடுவது அதுதான் அவரது ஸ்பெசாலிட்டி இந்தியா தத்தளித்த பல போட்டிகளில் இந்திய அணியை கரைசேர்த்துள்ளார்

லக்ஸ்மன் அறிமுகமான காலம் தொடக்கம் அவரால் பல போட்டிகளில் இந்திய அணி காப்பாற்றப்பட்டு இருக்கின்றது என்பதை மறுக்கமுடியாது

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

நன்றி பாஸ்

”தளிர் சுரேஷ்” said...

உண்மையிலேயே மிகச்சிறப்பான வீரர்! இவருக்கு தகுந்த கௌரவம் கிடைக்காமல் போனது வருத்தமே! இப்போதைய வீரர்களில் விராத் கோஹ்லி கூட உங்களை கவராதது ஆச்சர்யமே!

இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
http://thalirssb.blogspot.in/2012/08/5.html

K.s.s.Rajh said...

@s suresh

விராட் கோலி என்னை கவரவில்லைதான் ஆனால் எங்க தல தாதா சொல்லியிருக்கார் எதிர்கால இந்திய அணியின் ஸ்டார் விராட் கோலி என்று பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று நன்றி பாஸ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails