Monday, August 13, 2012

விதியா,காதலா கடவுளின் சதியா?(சிறுகதை)

அவளை பலநாட்களாக பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.நான் பார்பதை அவளும் அறிவாள் பல தடவை அவளும் என்னைப்பார்ப்பாள்.அவள் பெயர் எதுவும் எனக்கு தெரியாது அதே போல என் பெயரும் அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை எங்கள் தெருவில் தான் அவளும் வசிக்கின்றாள்.

நான் வீட்டைவிட்டு கிளம்பு முன் அவளுக்கு சொல்லுவதும் இல்லை அவள் வீட்டைவிட்டு கிளம்பு முன் எனக்கு சொல்லுவதும் இல்லை ஆனால் நான் கேட்டை திறந்துகொண்டு வெளியால் போக கிளம்பும் போது அவளும் எதிர்ப்படுவாள்.


என்னை பார்க்கும்  போதெல்லாம் சில நேரங்களில் நேருக்கு நேர் ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்வாள் சில நேரங்களில் தனக்கு தானே சிரிபாள் சில நேரங்களில் பார்காதது போல சென்றுவிடுவாள்.

மாலைவேளைகளில் நான் என் வீட்டுக்கு முன் நின்றுகொண்டு வீதியை பார்த்துக்கொண்டு நின்றால் அவளும் அவள் வீட்டுக்கு முன் நின்று பார்த்துக்கொண்டு இருப்பாள் நான் உள்ளே போனதும் அவளும் போய்விடுவாள்.இது எல்லாம் எதேர்ச்சையாக நடக்கின்றது.

ஒருவேளை அவளுக்கு என் மேல் காதலோ இல்லை அப்படியிருக்க சந்தர்ப்பம் இல்லை என்னை பற்றி எதுவுமே அவளுக்கு தெரியாது அவளை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது பிறகு எப்படி?

ஆனாலும் என்மனதில் அவள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதை நான் உணராமல் இல்லை ஒரு பதினேழு,பதினெட்டு வயசு இருக்கலாம் அவளுக்கு பாடசாலையில் படித்துக்கொண்டு இருக்கின்றாள் அதைவைத்து சொல்கின்றேன்.

எனக்கென பிறந்தவள் இவள்தானோ பலவாறு குழம்பிய என் மனது ஒரு தீர்கமான முடிவை எடுத்தது எப்படியும் அவளிடம் கேட்டுவிட வேண்டும் என்று.வேலைநிமித்தம் சில மாதங்கள் வீட்டில் நிற்கமுடியவில்லை ஆனாலும் நான் திரும்பி வரும் போது அவள் பாடசாலைவிட்டு வந்துகொண்டு இருந்தாள்.நான் திரும்பி வரும் வழியிலே அவளை பார்க்கமுடிந்தது.

எங்கள் இருவரையும் எதேர்ச்சையாக சந்திக்கவைப்பது எது?
விதியா,இல்லை காதலா,இல்லை கடவுளின் சதியா?


ஒரு நாள் அவளிடம் எப்படியும் பேசுவது என்ற முடிவில் அவளுக்காக என் வீட்டின் முன் காத்திருந்தேன் அவளும் சொல்லிவைத்தது போல வந்தாள்

ஹலோ ஒரு நிமிசம் உங்களுடன் பேசவேண்டும்

என்ன என்பது போல என்னைப்பார்த்தாள்

அது வந்து ஏன் எப்பவும் நான் வரும் நேரங்களில் நீங்களும் வருகின்றீர்கள் நாம் ஏன் எதேர்ரையாக சந்தித்துக்கொள்கின்றோம். இது எல்லாம் எதனால் என்று பட பட என்று பேசி முடித்தேன்

பதிலுக்கு அவள் நான் கேட்க நினைத்ததை நீங்கள் கேட்கிறீங்க அதுதான் ஏன் என்று எனக்கும் தெரியவில்லை 

ஒரு வேளை அதுதாக இருக்குமோ

எதுவாக இருக்கும்

நம்ம இரண்டு பேருக்கும் இடையில் நம்மையும் அறியாமல் நம் மனசுக்குள் ஒருவரை ஒருவர்

பதிலுக்கு அவள் ஒருவரை ஒருவர்

இல்லை நேசிக்கின்றோமோ

அப்படி இருக்க சந்தர்ப்பம் இல்லை நீங்களாக எதையும் கற்பனை பண்ணாதீர்கள் என்று சொல்லிவிட்டு என்னைப்பார்த்து அதே சிரிப்புடன் சென்றுவிட்டாள்.


மறுநாள் வெளியில் போவதற்காக கேட்டை திறந்துகொண்டு வெளியால் வரும் போது அவள் ரோட்டில் எதிர்பட்டாள் அதே புன்னகையுடன்
(யாவும் கற்பனை)


Post Comment

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கற்பனை ஆரம்பம் ஆவது இப்படித்தான்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 2)

அப்படிச் சொல்லுங்க...! (இது என் தளத்தில் !)

Athisaya said...

மறுபடியும் ஒரு ஆரம்ம்.வாழ்த்துக்கள் நண்பா....வழக்கத்தை விட மேலும் மென்மேலும் சிறப்படைய சிறிய தோழியின் நல்வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

என்னங்க இப்படி சப்புன்னு முடிச்சிட்டீங்க!

இன்று என் தளத்தில்
பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
http://thalirssb.blogspot.in/2012/08/17.html

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails