Friday, August 24, 2012

வெளிநாட்டு மாப்பிளை வேணுமா?

இந்தப்பதிவை நான் எழுதத்தூண்டிய விடயம் நேற்று நம்ம நண்பர் மைந்தன் எழுதிய நிச்சயிர்த்த திருணமனம் பெண்களுக்கு ஆபத்தா?என்ற பதிவாகும் அவரது பதிவை படிக்க இங்கே கிளிக்-நிச்சயித்த திருமணம் பெண்களுக்கு ஆபத்தா? இந்த நிச்சயித்த திருமணங்களில் தற்போது வெளிநாட்டு மாப்பிளை என்ற மோகமே அதிகளவு காணப்படுகின்றது.


ஒரு பெண்ணை பெற்று வளர்த்து ஒருவரது கையில் பிடித்துக்கொடுப்பதற்கு பெற்றோர்கள் படும் கஸ்டம் சொல்லில் வடிக்க இயலாது ஆனால் இப்படி எல்லாம் கஸ்டப்படும் பெற்றோர் திருமணவிடயத்தில் பெரும்பாலும் அவசரப்பட்டுவிடுகின்றனர்.முன் பின் தெரியாத ஒருவரை பார்த்து அவர் பற்றி சரியாக விசாரிக்காமல் தங்கள் பிள்ளைகளை கட்டிக்கொடுத்தால் சரி என்ற நிலையில் அவசர அவசரமாக திருமணத்தை முடித்துவிடுகின்றனர்.


அதுவும் வெளிநாட்டு மாப்பிளை என்றால் கேட்கவே வேணாம் அவர் வயசு என்ன அவர் எப்படி பட்டவர் அவர் பின்புலம் என்ன இது எல்லாம் ஆராய்வது இல்லை(சிலர் விதிவிலக்கு தீவிரமாக ஆராந்து முடிவெடுப்பார்கள்)இந்த வெளிநாட்டு மாப்பிளையில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை வயது வேறுபாடு பையனுக்கு 35,40 வயது பொண்ணுக்கோ 20,23 இருக்கும் ஆனால் இங்கே வயதை பார்பது இல்லை மாப்பிளை எந்த நாடு பிரான்ஸா,கனடாவா,லண்டனா,ஜெர்மனா,சுவிஸ்ஸா

இங்கே அதிக வயதுவித்தியாசத்தில் திருமணம் செய்யப்படுகின்றது சரி சில வருடங்களின் பின் அதாவது ஒரு பத்துவருடங்களின் பின் அந்தபெண்ணுக்கு 30 வயதுதான் இருக்கும் அவள் கணவனுக்கு 50 வயதாகிவிடும் இயந்திரமயமாக இந்த உலகில் 25,30 வயதுக்குள்ளே பீப்பி,சுகர்,சக்கரை என்று ஆயிரத்து எட்டுவியாதிகள் வரும் காலம் இது 50 வயதில் ஒருவரால் 30 வயதுடைய தன் மனைவியின் உடல் ரீதியான தேவைகள் என்றாலும் சரி அவள் உளரீதியான தேவைகள் என்றாலும் சரி சரியாக நிறைவேற்ற முடியுமா? இங்கே பிரச்சனை ஆரம்பிக்கும் திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்கிறார்கள்.aஅதிக வயசு வித்தியாசத்தை கவனத்தில் எடுக்கவேண்டும் அல்லவா.

மேலே நான் சொன்ன கருத்துக்கு இல்லை செக்ஸ்மட்டும் வாழ்க்கையா அதையும் தாண்டி எவ்வளவோ இருக்கு என்று செம்பை தூக்கிகொண்டு வருபவர்களேஉண்மைதான் செக்ஸ் மட்டும் வாழ்க்கையில்லை ஆனால்  அதிகவயது வித்தியாசத்தில் திருமணம் செய்தால் ஏற்படும் குடும்ப பிரச்சனைகளுக்கு முக்கியகாரணம் மேல நான் சுட்டிக்காட்டிய விடயம் தான்.

இப்படித்தான் எனக்கு தெரிந்த பெண் ஒருவர் அவருக்கு வயது 24 வெளிநாட்டு வரன் பார்த்து பெற்றோர்கள் முடித்துவிட்டார்கள். அவருக்கு 37 வயது.இந்தப்பெண்ணும் அவரும் போன்,ஸ்கைப் என்று கதைக்க  தொடங்கி இருவரும் நல்ல நெருக்கமாகிவிட்டனர்.திருமணம் நடக்க நாள் குறிக்கப்பட்டது. இங்கே பிரச்சனை கிளம்பியது இவர்கள் பெண்வீட்டார் இந்து சமயம்,பையன் கிறிஸ்டியன்ஸ் பையனின் சகோதரி மதம் மாறி திருமணம் முடிக்க அனுமதிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.பையனும் தன்னால் குடும்பத்தை மீறமுடியாது என்று சொல்லி திருமணத்தை நிறுத்த சொல்லிவிட்டார்.அவருக்கு என்ன அவருக்கு இந்தப்பெண் இல்லை என்றால் ஆயிரம் பெண்களை பார்த்து கட்டுவார்.ஆனால் அந்த பெண்ணில் நிலையை யாரும் இங்கே யோசிக்கவில்லை.ஏன் அவருக்கு அவளுடன் மாதக்கணக்கில் போன் கதைக்கும் போது தெரியதா அவள் இந்து என்று.

சரி அந்த பெண்ணின் பெற்றோர்கள் ஆவது திருமணம் பேசும் போது மதம் மாறி திருமணம் செய்ய விருப்பமா என்று பையன் வீட்டாரிடம் கேட்டார்களே இல்லை.இந்த திருமணம் திருமணத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தியாகி எல்லோறும் இந்தியா போய் அங்கே ரிஜிஸ்டேசன் செய்யவேண்டிய கடைசி நொடியில் நிறுத்தப்பட்டது.



பிறகு அந்தப்பெண் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி ரிஜிஸ்டேசன் நடந்தது வேறு கதை.

இன்னும் ஒரு சம்பவம் எனக்கு படிப்பித்த ஒரு ஆசிரியை பொற்றோர்களால் பார்த்து செய்துவைத்த திருமணம்.நல்ல பையன் என்று சொல்லி திருமணம் செய்து வைத்தார்கள்.பிறகு ஆசிரியை வெளிநாட்டுக்கு போனதும்தான் அவனது சுயரூபம் தெரிய வந்தது.அவர் ஏற்கனவே திருமணம் ஆன நபர் என்று.இவர் கொஞ்சம் படித்த பெண் என்பதால் அங்க இங்க போய் பிரச்சனைகளை எதிர்கொண்டு திரும்பவும் நாட்டுக்கு வந்துவிட்டார்.ஆனால் அதே கொஞ்சம் படிப்பறிவு குறைந்த அபலைப்பெண்ணாக இருந்தால் சற்று சிந்தித்துப்பாருங்கள் என்ன நடந்திருக்கும் என்று.


இப்படி ஏராளமான சம்பவங்கள் உதாரணப் படுத்தலாம்.ஆனால் அதற்காக வெளிநாட்டு மாப்பிளையே வேணாம் என்று சொல்வது இந்த பதிவின் நோக்கம் இல்லை வெளிநாடோ,உள்நாடோ உங்கள் பெண்ணை கட்டிக்கொடுக்கின்ற போது நன்கு தீர விசாரித்து ஒரு முடிவுக்கு வாங்க யாரோ ஒருவனுடைய கையில் பெண்ணை பிடித்துக்கொடுத்தால் சரி என்று நினைக்காதீர்கள்.

இங்கே மைந்தன் தன் பதிவில் குறிப்பிட்ட விடயத்தை சொல்வது பொருத்தமானதாக இருக்கும்
நிச்சயம் செய்யப்பட்ட ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள பழகும் அந்த சில நாட்கள்-சில மாதங்களில் ஒருவரை பற்றி மற்றையவர் முழுமையாக அறிந்துகொள்ள முடியுமா?ஒருவன் எத்தகைய கெட்ட பழக்கவழக்கங்களை கொண்டிருந்தாலும்(வெளியே தெரியாமல் தனக்குள்ளே) அவற்றை வெளியில் வெளிக்காட்டிக்க கூடாது என்று நினைத்தால் எவராலும் அந்த குறிப்பிட்ட "பழகும் காலத்தில்" அவற்றை கண்டுபிடிக்க முடியாது.இந்த பழகும் காலம் இரண்டு மாதங்கள் என்று எடுத்துக்கொள்ளுங்களேன்.அந்த இரண்டு மாதங்களும் நல்லவனாக யாரால் நடிக்க முடியாது?
இதுதான் யதார்த்தம் 

அதற்காக காதல் திருமணம் சிறந்தது என்றும் சொல்லவில்லை எந்த திருமணம் என்றாலும் நன்கு விசாரித்து முடிவெடுங்கள்

இளமை போன பின்பும் இங்கே இருப்பது வெரும் அன்பு மட்டுமே இப்படி ஒரு அன்பு சாம்ராஜ்ஜியத்தில் திருமணம் கட்டிஎழுப்ப படவேண்டும்

அப்பறம் ஆண் நல்லவனாக இருந்து பெண் சரியில்லாமல் திருமண வாழ்வு முறிந்த பல சம்பவங்களும் உண்டு. எனவே ஆணோ,பெண்ணோ தங்களுக்கு வரப்போகும் துணைபற்றி நன்கு விசாரித்து அவர் குணங்களை முழுமையாக புரிந்து கொண்டு அதன் பின் நல்ல தீர்மாணத்துக்கு வாருங்கள்.

காபி கொடுத்து காலையில நானே உன்னை எழுப்பி விடுவேன்..
சமைக்க தெரியலனா நானே சமையல் செஞ்சு உனக்கு ஊட்டி விடுவேன்..
உன்னை நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன்...
என்னை நீ சந்தேக படு மாதிரி நடக்க மாட்டேன்...
உன் உயிரா நான் இருப்பேன்.. என் உயிரா உன்னை நினைப்பேன்...
என் நெஞ்சில உன்னை சுமப்பேன்...
உன்னை DAILY நான் ரசிப்பேன்..
உன் நிழல போல நான் இருப்பேன்...

ஏ...ஏ... வாடி வாடி CUTE பொண்டாட்டி... 

இப்படி யார் வேனும் என்றாலும் பாடலாம் ஆனால் உண்மையிலே உங்கள் துணையின் கேரக்கடர் இப்படி இருக்குமா என்று நன்கு அறிந்து முடிவெடுங்கள்.






Post Comment

26 comments:

Unknown said...

நம்மளோட பதிவுகள பார்த்திட்டு துஷி கடுப்பாகி அடிக்க வாறானோ தெரியாது :P
பத்து பதினஞ்சு வயசு வித்தியாசத்தில எல்லாம் கட்டி குடுக்கிரதுகள என்ன சொல்றது?

K.s.s.Rajh said...

@மைந்தன் சிவா

ஆமா பாஸ் ஆமா எதுக்கும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பம்

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!தொடர் பதிவு போல் மைந்தன் பதிவுக்கு சம்பந்தப்படுவது போல்,யதார்த்தம் உணர்த்தும் பகிர்வு!பெற்றோர்களுக்கு அருமையான ஆலோசனை.சிறு வயதுப் பசங்க எப்பவுமே.................................வாழ்த்துக்கள்!

காட்டான் said...

முன்னர் அதிகமா விசாரிக்கமாட்டார்கள் இப்போ வீட்டுக்கு ஒருவராவது வெளிநாட்டில் இருப்பதால் நல்ல மாற்றம் வருகின்றது.. ஆனால் சிலர் விசாரிக்காமல் நல்ல "தண்ணி"ச்சாமிகளிடம் மாட்டிக்கொள்வார்கள் ஊரிலும் கல்யாணம் செய்யும் முன்னர் எவ்வளவு விசாரித்தாலும் சில பேருக்கு கணவர்களின் மறுபக்கம் திருமணத்துக்கு பின்னர்தானே தெரியும் பெற்ற தாய்க்கு கூட தெரியாததுகூட.?

K.s.s.Rajh said...

@Yoga.S.
////
வணக்கம் ராஜ்!தொடர் பதிவு போல் மைந்தன் பதிவுக்கு சம்பந்தப்படுவது போல்,யதார்த்தம் உணர்த்தும் பகிர்வு!பெற்றோர்களுக்கு அருமையான ஆலோசனை.சிறு வயதுப் பசங்க எப்பவுமே.................................வாழ்த்துக்கள்////

நன்றி ஜயா
ஆமா அந்த புள்ளிக்கோட்டில் என்ன சொல்லவாறீங்க என்று சொன்னால் தனியாக சொன்னாலும் சரி...ஹி.ஹி.ஹி.ஹி.....

K.s.s.Rajh said...

@காட்டான்
சரியாகச்சொன்னீங்க மாம்ஸ் ஒருவரின் மறுபக்கம் அவருக்கு மட்டுமே சரியாக தெரியும்

நன்றி மாம்ஸ்

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த நவீன உலகில்... எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்பது நல்லது...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... (4)

Yoga.S. said...

K.s.s.Rajh said...

நன்றி ஜயா
ஆமா அந்த புள்ளிக்கோட்டில் என்ன சொல்லவாறீங்க என்று சொன்னால் தனியாக சொன்னாலும் சரி...ஹி.ஹி.ஹி.ஹி.....அட்வான்ஸாகத் தான் சிந்திக்கிறார்கள் என்று முடியும்!ஏதோ சிதம்பர ரகசியம் போல்,தனியா சொல்லணுமோ,ஹ!ஹ!ஹா!!!(ஏமாந்திட்டார்!)

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@Yoga.S.

அவ்வ்வ்வ்வ்வ்வ்

சுதா SJ said...

வணக்கம் மச்சி..
நல்ல விடயந்தான் சொல்ல வந்திருக்கிறாய் ஆனால்  நியாயமாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன்..

வெளி நாட்டு மாப்பிள்ளைகள் மேல் மட்டுமே இந்த குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறாய்... ஆனால் இதை விட இலங்கையில்தான் அதிகம் என்று நினைக்கிறேன்.. 

ஆனால் ஒரு காலத்தில் வேண்டுமானால்  வெளி நாட்டு மாப்பிள்ளைகள் ஏமாற்றினார்கள் எனலாம் ஆனால் இப்போது எங்காளும் ஒன்றே.. இதற்க்கு காரணம் வெளி நாடு-உள் நாடு இரெண்டுக்கும் உள்ள இடைவெளி தொடர்புகள் குறைந்ததே.. இப்போ எல்லாம் இங்கே இருந்து யாரையும் ஏமாற்றுவது அவ்வளவு எளிது அல்ல.. அதையும் மீறி ஏமாறுபவர்களும் இருக்கார்கள்தான் ஆனால் அவர்கள் வீதம் உள்ளூர் மாப்பிள்ளைகளிடம் ஏமாறுவதை விட மிக மிக குறைவே... ஆகவே நல்லவர்கள் கெட்டவர்கள் உள்ளூர் வெளியூர் ரெண்டு பக்கமும் இருக்க ஒரு பக்கத்தினரை மட்டும் இழுத்து விட்ட நம்மட அசிங்கத்தை மறைப்பது தப்பு.

அடுத்து வயசு குறைந்த பெண்களை வெளி நாட்டு ஆண்கள் கட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு...

நண்பா மனசை தொட்டு சொல்லு ஊரில் இருப்பவன் இப்படி கட்டவில்லையா.. பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான் மச்சி என்று நக்கல் பண்ணாமல் விளக்கத்து வாறேன்...

நீ சொல்வது உண்மையாகவே இருக்கட்டும்  என்னை போன்று ஒரு சிலரே வெளி நாட்டுக்கு சிறு வயதில் வருகிறார்கள் ஆகவே அவர்களுக்கு  இங்கேயே பார்த்து அல்லது ஊரில் பார்த்து சரியான கல்யாண வயசுக்குள் கட்டிவிடுகிறார்கள் 
ஆனால்...........
99 வீதமானோர் 25 வயசுக்கு பின்னரெ வெளி நாடு வருகிறார்கள்.. அதன் பின் அவர்களுக்கு விசா கிடைத்து கடன் கட்டி பொறுப்பு முடிக்க வயது முப்பதை தாண்டி விடும் இதன் பின் ஊரில் பெண் பார்க்கும் போது தன் வயதொட்ட 30 வயது பெண்ணையா கட்ட முடியும்..? அப்படி கட்டினாலும் ஊரில் ஒரு பொண்ணு 30 வயது மட்டும் கட்டாமலா இருப்பாள்..?
இதனால்தான் அதிகம் வயசு வித்தியாசம் தலை தூக்குது.. -:) ஆனால் எங்காளும் ஒன்றாய் நீ சொல்வது போல் அதுகமான வயசு வித்தியாசத்தில் திருமணம் நடக்கத்தான் செய்யுது அது எங்காளும் ஒன்று அதை நானும் கண்டிக்கிறேன் இதை வெளி நாட்டு மாப்பிள்ளை "மட்டுமே" செய்யவில்லை "உள்ளூரிலும்" இதே இதே தான் தோழா -))

அப்புறம்.. வயசு வித்தியாசத்தில் திருமணம் செய்தால் ஆனால் ஒரு பெண்ணை பின் உடல் உள ரீதியாக திருப்தி படுத்த முடியாது என்பதும் அசட்டு வாதமே..

மருத்துவ ரீதியாக ஒரு பொண்ணுக்கு 40 வயதுக்கு பின் படிப்படியாக உடல் உறவில் நாட்டம் நின்று விடுகிறதாம் ஆனால் ஆணுக்கு..!  90 இம்மியளவும் குறையாதாம்.. குழந்தை பிறக்கும் நிலையும் இதே... ஆகாவே திருமணத்தின் போது சின்ன வயது வித்தியாசம் மிக அவசியமே..

இன்னும் நிறைய சொல்லலாம் ஆதாரத்துடன் எனக்கு நேரம் இல்லை..  முடிந்தால் பின் ஒரு  பதிவின் மூலம் சொல்கிறேன்.. ^_^

சுதா SJ said...

 மைந்தன் சிவா said...
நம்மளோட பதிவுகள பார்த்திட்டு துஷி கடுப்பாகி அடிக்க வாறானோ தெரியாது :P////////

ஏன் மைந்தா... நான் மட்டும்தான் இங்கே வெளி நாட்டு மாப்பிள்ளையா.....!!!! ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ராஜி said...

திருமண சந்தைன்னு எப்போ பேர் சூட்டப்பட்டதோ அப்போதே எல்லா அவலங்களும் வர ஆரம்பிச்சுடுச்சு சகோ

சுதா SJ said...

மச்சி ராஜ்.. 
என் கருத்து ஒன்றேதான் 
மாப்பிள்ளைகளில் 
வெ நாடு - உள் நாடு
ரெண்டு பக்கமும் 
நல்லவர்கள் - கெட்டவர்கள் 
இருக்கார்கள் ஆகவே எதுக்கு எடுத்தாலும் வெளி நாட்டு தமிழனை பலி கடா ஆக்குவதை நிறுத்துங்கள்.
ரெண்டு பக்கமும் உள்ள குறைகளையும் சொல்லுவோம் என்று சும்மா சப்பு கட்டு கட்டாதீங்க..  உள்ளூர் மாப்பிள்ளைகளில் திருட்டுக்களை யாராவது எழுதி இருக்கிறீர்களா....?? இல்லையே... அது சரி எதை யாரை பற்றி எழுதினால் படிப்பார்கள் என்று பதிவுலகில் இருக்கும் நமக்கு தெரியாதா என்ன.... ஹீ ஹீ...

Athisaya said...

வணக்கம் சொந்தமே!
மற்றொரு பதிவின் தொடராக சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.
ஏமாற்றுபவர்கள்,திருமணத்தின் மூலம் சம்பாதிப்பவர்கள்,இப்படி பல வகை மனிதர்கள் இருக்கிறார்கள்.இங்கும் தான் இருக்கிறார்கள்.பெரும்பாலும் "வெளிநாட்டு மாப்பிள்ளை" என்ற அடைமொழி தான் சில பின்புலங்களை மறைத்து இலகுவில் பெற்றோரயும் அவர் பிள்ளைகளையும் ஏமாறச்செய்கிறது.
வாழ்வது ஒரு முறையே!அதை சரியாக ஆராய்ந்து செய்வது நேர விரயம் அல்ல.இதுவும் எதிகார்கால முதலீடே...!
வெளிநாட்டு வரனோ,உள்ளுர் வரனோ தீர்க்க விசாரிப்து நமது உரிமையும் கடமையும் கூட.
சல்லதொரு பகிர்வு நண்பா!வாழ்த்துக்கள்.

Athisaya said...
This comment has been removed by the author.
Athisaya said...

கடைசில இருக்கிற படம் மனச இதமாக்குது.

K.s.s.Rajh said...

@துஷ்யந்தன்

வணக்கம் மச்சி முதலில் நன்றிகள் நீண்ட ஒரு பின்னூட்டத்திற்கு

ஒரு தலைபட்சமாக வெளிநாட்டு மாப்பிளைகளை குற்றம் சொல்வது இந்தபதிவின் நோக்கம் இல்லை இது நிச்சயதார்த்த திருமணத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளை சொல்வதுதான்.மைந்தன் தன் பதிவில் பலதை சொல்லியதால் என் மனதில் நான் கண்ட விடயங்களை பதிவு செய்ய எண்ணினேன் இங்கே நிச்சயதார்த்த திருமணங்களில் முதலிடம் வகுப்பது வெளிநாட்டும் மாப்பிளைகளை எனவே அதில் சமூகத்தில் நான் கண்ட குறைகளை சுட்டிக்காட்டினேன்.அதுக்காக உள்நாட்டு மாப்பிளைகள் எல்லோரும் ஒழுங்கானவர்கள் என்று சொல்லவரவில்லை வெளிநாட்டு மாப்பிளைகளைவிட மோசமாக ஆட்கள் நிச்சயம் இங்கே உண்டு.எனவே அது பற்றியும் பதிவு இருக்கு வெயிட் பாஸ் வரும் திங்கள் வருகின்றது அது பற்றிய பதிவு

K.s.s.Rajh said...

@ராஜி

நன்றி அக்கா

K.s.s.Rajh said...

@Athisaya

நன்றி அதிசயா

தனிமரம் said...

99 வீதமானோர் 25 வயசுக்கு பின்னரெ வெளி நாடு வருகிறார்கள்.. அதன் பின் அவர்களுக்கு விசா கிடைத்து கடன் கட்டி பொறுப்பு முடிக்க வயது முப்பதை தாண்டி விடும் இதன் பின் ஊரில் பெண் பார்க்கும் போது தன் வயதொட்ட 30 வயது பெண்ணையா கட்ட முடியும்..? அப்படி கட்டினாலும் ஊரில் ஒரு பொண்ணு 30 வயது மட்டும் கட்டாமலா இருப்பாள்..?
இதனால்தான் அதிகம் வயசு வித்தியாசம் தலை தூக்குது.. -:) ஆனால் எங்காளும் ஒன்றாய் நீ சொல்வது போல் அதுகமான வயசு வித்தியாசத்தில் திருமணம் நடக்கத்தான் செய்யுது அது எங்காளும் ஒன்று அதை நானும் கண்டிக்கிறேன் இதை வெளி நாட்டு மாப்பிள்ளை "மட்டுமே" செய்யவில்லை "உள்ளூரிலும்" இதே இதே தான் தோழா -))

அப்புறம்.. வயசு வித்தியாசத்தில் திருமணம் செய்தால் ஆனால் ஒரு பெண்ணை பின் உடல் உள ரீதியாக திருப்தி படுத்த முடியாது என்பதும் அசட்டு வாதமே..//துசியின் கருத்தோடு நானும் உடன் படுகின்றேன் இங்கே அதிகம் விவாதிக்க நேரம் இன்மை ஆனால் இதுக்கான பதிலை நிச்சயம் பதிவு செய்வேன் நிலமைகள் நேரில் சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை!ம்ம்

தனிமரம் said...

முன்ன்ர் போல செம்பு நெளிக்க எனக்கு நேரம் கிடைக்காமல் போய்விட்டது ஆனால் இது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் அங்கிருந்து உன் பார்வையில் சொல்லியிருக்கின்றாய் வாழ்த்துக்கள்.மன்னிக்கவும் தாமதமான வருகைக்கு !

தனிமரம் said...

இறுதிப்படம் சூப்பர் நிஜம் அதுதான்!ம்ம்

K.s.s.Rajh said...

@தனிமரம்

நன்றி பாஸ்

ஹேமா said...

நல்லதொரு பதிவு ராஜ்.ஆனால் இப்போ முன்னெச்சரிக்கைகள் அதிகம்.பயமில்லை.ஆனாலும் அதிஷ்டம் சில நேரம் சறுக்கிவிடும்.துஷியின் பல கருத்துக்களை நானும் ஆதரிக்கிறேன் !

K.s.s.Rajh said...

@ஹேமா
நன்றி அக்கா

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails