Wednesday, August 15, 2012

வரலாற்றை மாற்றிய தாதா-6

தாதா தலைமையில் பல்வேறு வெற்றிகளை பெற்றும் ஒரு தன்னம்பிக்கை மிக்க அணியாக இந்திய அணி உருவாகிக்கொண்டு இருந்த போது 2003 உலகக்கோப்பை தொடர் ஆரம்பமாகியது.தாதா மீது அதிகமான எதிர்பார்பு கிளம்பியது தாதா ரசிகர்கள் அனைவரும் தாதா என்ன செய்யப்போகின்றார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.


2003 உலகக்கோப்பையின் ஆரம்ப போட்டிகளில் இந்திய அணி சொதப்பியதால் இந்திய வீரரகளின் கொடும்பாவிகள் எரிப்பு என்று ரசிகர்கள் கொந்தளித்தனர்.
தாதா ரசிகர்களை அமைதிகாக்கும் படி கேட்டுக்கொண்டார்.


அடுத்த அடுத்தபோட்டிகளில் இந்தியா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பாக சச்சின் வெளுத்துவாக்கினார்.

கங்குலி இந்திய அணியை கட்டுக்கோப்புடன் வழிநடத்த இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது அவுஸ்ரேலியா,இலங்கை,ஆச்சரியம் அளிக்கும் விதமாக ஆரையிறுதிக்கு தகுதி பெற்ற இன்னும் ஒரு அணி கென்யா.

இலங்கையை வென்ற அவுஸ்ரேலியா இறுதிப்போட்டிக்குள் தகுதி பெற மறுபுறம் இந்திய அணி நிச்சயம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் என்று அனைவருக் எதிர்ப்பாத்தனர்.கென்ய அணியை வீழ்த்துவது இந்தியாவுக்கு ஒன்றும் பெரியவிடயம் இல்லை ஆனால் கிரிக்கெட்டில் எதையும் எதிர்வு கூறமுடியாது.

ஆனால் இந்தியா கென்யாவை வீழ்த்தி 20வருடங்களுக்கு பிறகு அதாவது கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983இல் உலகக்கோப்பையை கைப்பற்றிய பின் கங்குலி தமைமையிலான இந்திய அணி 2003 இல் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.

இப்போது கங்குலி மேல் இன்னும் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.கம்பீரமாக தெரிந்தார் தாதா.

அவுஸ்ரேலியாவுடன் இறுதிப்போட்டி


இந்த உலகக்கோப்பை தொடரில் அவுஸ்ரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வோன் ஊக்க மருத்து பாவித்த குற்றச்சாட்டில் ஒரு வருட்ம தடை விதிக்கப்பட்டாதால் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தாதா தலமையிலான் இந்திய அணி ரிக்கிபொண்டிங் தலைமையிலான அவுஸ்ரேலிய அணி இருவருக்கும் இது முக்கியமான போட்டி.தாதா தலைமையிலான முதல் உலகக்கோப்பை போட்டி தொடரில் இறுதிப்போட்டிக்கு அணியை அழைத்து வந்திருந்தார்.அதே போல பொண்டிங்கும் ஒரு நாள் போட்டிகளின் கேப்டன் பொறுப்பை ஏற்ற பின் முதல் உலகக்கோப்பை போட்டி தொடரிலே அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்திருந்தார்.(அப்போது அவுஸ்ரேலிய ஒரு நாள் அணிக்கு மாத்திரமே பொண்டிங் கேப்டனாக இருந்தார் டெஸ்ட் போட்டிகளுக்கு ஸ்ரிவோக்கே கேப்டனாக தொடர்ந்தார்)

நாணைய சுழற்சியில் வெற்றி பெற்ற கங்குலி என்ன நினைத்து அவுஸ்ரேலியாவை முதலில் துடுப்பெடுத்து ஆட சொன்னாரோ தெரியாது முதலில் துடுப்பெடுத்து ஆட ஆரம்பித்த அவுஸ்ரேலிய அணியின் இனிங்சை
மத்யூ கெய்டனும்,அடம் கில்கிறிஸ்ட்டும் தொடங்கினர்.ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கில்கிறிஸ்ட் 57 ஓட்டங்களை பெற்று ஆட்டம் இழந்தார். மற்றும் ஒரு தொடக்க வீரர் கெய்டன் 37 ஓட்டங்களை பெற்று ஆட்டம் இழந்தார்.

ஆனால் அடுத்து வந்த அவுஸ்ரேலிய கேப்டன் ரிக்கி பொண்டிங்கும்,டேமியன் மார்ட்டினும் மரண அடி அடித்தனர்.அடினா என்ன ஒரு அடி ரிக்கி பொண்டிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு இனிங்ஸ் அது.என்ன அடி அடித்தார் பொண்டிங் அதிரடி என்றால் அது அதிரடி.கங்குலியும் சரி ஏனைய இந்திய வீரர்களும் சரி தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் அந்த அடியை என்று மறக்கமுடியாது.

இந்திய பந்துவீச்சாளர்களுக்கு மரண அடி அடித்த போது பொண்டிங்

தாதாவும் இந்திய அணி சார்பாக எட்டு பேரை பந்துவீச்சாளராக மாற்றி மாறிய பயன் படுத்திய போதும் இந்த ஜோடியை பிரிக்கமுடியவில்லை
சகிர்கான் 7 ஓவர் பந்துவீசி 67 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்
சிறிநாத் 10 ஓவர்கள் 87 ஓட்டங்கள்
ஆசிஸ் நெய்ரா 10 ஓவர்கள் 57 ஓட்டங்கள்
ஹர்பஜன் சிங் 8 ஓவர்கள் 49 ஓட்டங்கள்
சேவாக் 3 ஓவர்கள் 13 ஓட்டங்கள் 
சச்சின் 3 ஓவர்கள் 20 ஓட்டங்கள்
மொங்கியா 7 ஓவர்கள் 39 ஓட்டங்கள்
யுவராஜ் சிங் 2 ஓவர்கள் 12 ஓட்டங்களை வாரி வழங்கினர்
ஆனால் தாதா பந்துவீசவில்லை

(கும்ளேயை தாதா இந்த போட்டியில் களம் இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)

இறுதியில் பொண்டிங் 121 பந்தில் 4 பவுண்ரிகள் 8 சிகசர் அடங்களாக 140 ஓட்டங்களை ஆட்டம் இழக்காது விளாசினார்.டேமியன் மார்ட்டின் 84 பந்தில் 7 பவுண்ரிகள் 1 சிக்சர் அடங்களாக ஆட்டம் இழக்காது 88 ஓட்டங்களை விளாச அவுஸ்ரேலியா இரண்டு விக்கெட்டுக்களை மட்டும்மே இழந்து 359 ஓட்டங்களை குவித்தது இந்தியா கைப்பற்றிய அவுஸ்ரேலியாவின் ஆரம்ப துடுப்பாட வீரர்களின் விக்கெட்டுக்கள் இரண்டையும் ஹர்பஜன் சிங்க்கே கைப்பற்றினார்.

360 மெகா வெற்றி இலக்கு இந்தியா வெல்லுமா? என்ற சந்தேகம் பலமாக எல்லோறுக்கும் இருந்தது இந்திய இனிங்ஸ்சை சேவாக்,சச்சின் இருவரும் தொடங்கினர்.பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட சச்சின் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க ஆரம்பமே இந்திய அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

2003 இறுதிப்போட்டியில் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்து செல்லும் சச்சின்

அடுத்து கங்குலி ஆட வந்தார் மறுமுனையில் சேவாக் வெளுத்து வாங்கிக்கொண்டு இருந்தார்.
81 பந்தில் 10 பவுண்ரி 3 சிக்சர் அடங்களாக 82 ஓட்டங்களை பெற்று சேவாக் ரண் அவுட்டாக இந்தியாவின் நம்பிக்கை தகர்கின்றது.

பின் கங்குலி-24
மொகமட் கைப்-0
ராவிட்-47
யுவராஜ் சிங்-24
மொங்கியா-12
ஹர்பஜன் சிங்-7
சகிர்கான் -4
சிறிநாத்-1
நெய்ரா-8 ஆட்டம் இழக்கவில்லை



இந்தியா 39.2 ஓவரில் அனைத்துவிக்கெட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 125 ஓட்டங்களாள் தோல்வி அடைந்தது.

உலகக்கோப்பையை வென்ற பின் ரிக்கிபொண்டிங்
பொண்டிங் தலைமையிலான் அவுஸ்ரேலியா அணி உலகக்கோப்பையை வென்றது.இந்த போட்டியின் ஆட்டநாயகனான ரிக்கி பொண்டிங்கும்.2003 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகனான சச்சினும் தெரிவாகினர்.

இதில் 11 போட்டியில் ஆடிய சச்சின் 1 சதம் 6 அரைச்சதம் அடங்கலாக 673 ஓட்டங்களை இந்த தொடரில் குவித்திருந்தார்

தாதா 11 போட்டிகளில் ஆடி 465 ஓட்டங்களை குவித்திருந்தார் இதில் சிறப்பு அம்சம் என்ன வென்றாக்ல் 3 சதங்களையும் தாதா விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(தாதா இன்னும் வருவார்)
*********************************************************************************
இந்த தொடரின் முந்திய பகுதிகளை படிக்க
*********************************************************************************
அனைத்து இந்திய நண்பர்களுக்கு சுகந்திர தின நல்வாழ்த்துக்கள்


Post Comment

12 comments:

Unknown said...

நல்ல பதிவு... நம்ம பதிவுக்கும் வாங்க...
http://varikudhirai.blogspot.com

http://varikudhirai.blogspot.com/2012/08/up-country-tamils-3.html

திண்டுக்கல் தனபாலன் said...

இவ்வளவு தகவல்களை எப்படி சேமித்து வைத்தீர்களோ... பாராட்டுக்கள்... நன்றி... (TM 2)

K.s.s.Rajh said...

@Arunprasath Varikudirai

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

எல்லாம் தாதா மேல் உள்ள அபிமானம் தான் ஆனால் எல்லாம் ஞாபகத்தில் நிற்பது இல்லை குறிப்பாக எதிர்கொண்ட பந்துகள் போன்ற விடயங்களை சரியாக குறிப்பிட இனையத்தின் உதவியையும் நாடுவேன்

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

நன்றி பாஸ்

தனிமரம் said...

தாதாமீது இருக்கும் அதிக ஆர்வத்தை தொடரில் காண்கின்றேன்!ம்ம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புடையீர்,

வணக்கம்.

தங்களின் இந்தப் பதிவு அருமையாக உள்ளது.

வாழ்த்துகள் பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஓர் விருது காத்துள்ளது. தயவுசெய்து வருகைதந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html


அன்புடன்
vgk

பாலா said...

இந்த உலகக்கோப்பை நடைபெறும்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். ஆகவே இது எனக்கு மறக்கவே முடியாத ஒரு தொடர். அதிலும் அந்த இறுதிப்போட்டியை எப்படி மறக்க முடியும்? இறுதிப்போட்டியை தவிர்த்து பார்த்தால் இந்திய அணியின் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக இருந்தது உண்மைதான்.

”தளிர் சுரேஷ்” said...

என்னை அழ வைத்த போட்டி இது! தாதாவின் கணிப்பை தவறாக்கிய போட்டி! சிறப்பான பகிர்வு!

இன்று என் தளத்தில்
பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
http://thalirssb.blogspot.in/2012/08/17.html

இராஜராஜேஸ்வரி said...

வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

ஆத்மா said...

நினைவுகளை மீட்ட பதிவு அந்த போட்டி கண்ணுள் இருந்தது போன்ற உணர்வு......

ஆத்மா said...

த. மண...4

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails