Wednesday, September 05, 2012

வரலாற்றை மாற்றிய தாதா-8

2005ம் ஆண்டு கங்குலி ரசிகர்களுக்கும் கங்குலிக்கும் ஒரு மோசமான ஆண்டு ஆம் பல சர்சைகளில் தாதா சிக்கிய ஆண்டும் அதைவிட தாதாவின் துடுப்பாட்டம் மோசமாக இருந்தது.பந்துவீச இந்திய அணி அதிக நேரம் எடுத்தது என தாதாவுக்கு இரண்டு போட்டிகளில் தடைவிதிக்கப்பட ராவிட் தலைமையில் இலங்கைக்கு சென்றது இந்திய அணி.

தடை நீங்கிய கங்குலிக்கு அங்கே போட்டிகளில் ஆட வாய்பு வழங்கப்பட்டது ஆனால் ராவிட்தான் கேப்டன்.ஒரு உலகசாதனையை தாதா இலங்கையில் படைத்தார் ஆம் தாதா ஒரு போட்டியில் அரைச்சதம் அடித்த போது ஒரு நாள் போட்டிகளில் 10000 ஓட்டங்களை கடந்து சாதனை படத்தார்.அதாவது குறைந்த ஒருநாள் போட்டிகளில் 10000ம் ஓட்டங்களை குவித்தவர் என்ற உலகசாதனைதான் அது.வெரும் 272 போட்டிகளில் தாதா இந்த இலக்கை அடைந்தார் இது ஒரு உலகசாதனையாகும் இன்றுவரை முறியடிக்கப்படவில்லை.



கிரேக் சப்பல் இந்திய கிரிக்கெட்டில் ஆடிய கபடியில் தாதாவின் சரிவு ஆரம்பம் ஆகியது.பல சர்ச்சைகளுக்கு பின் ஸிம்மாவேயுடனான டெஸ்ட் போட்டியில் தாதா சதம் அடித்தாலும்.தாதாவை கேப்டன் பதவியில் இருந்து தூக்கி எறியவேண்டும் என சப்பல் கங்கனம் கட்டிக்கொண்டு இருந்தார்.

ஆனால் ரசிகர்கள் கங்குலிக்கு என்றும் ஆதரவாக இருந்தார்கள் ஒருவர் சறுக்கும் போதும் சரி சிறப்பாக விளையாடும் போதும் சரி ரசிகர்கள் ஆதரவாக இருக்கும் ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் எனக்கு தெரிய தாதா மட்டும் தான்.

கடைசியில் தாதா தூக்கி எறியப்பட்டார் கேப்டன் பதவியில் இருந்து மட்டும் இல்லை அணியில் இருந்தே ஓரம் கட்டப்பட்டார்.இதில் கொடுமை என்ன என்றால் தாதா கேப்டன் பதவியில் இருந்தும் அணியில் இருந்தும் நீக்கப்பட்ட போது. அவரால் வளர்த்து எடுக்கப்பட்ட ராவிட்,யுவராஜ்,சகிர்கான்,சேவாக் கூட கங்குலியிடம் எதுவும் பேசவில்லையாம்.


தான் உருவாக்கிய தன் கனவு அணியில் தன்னால் உருவாக்கப்பட்டவர்கள் ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றால் ஒருவரின் மனநிலை எப்படி இருக்கும்.

புதிய கேப்டனாக ராவிட் அறிவிக்கப்பட்டார்.எல்லோறும் கங்குலி சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்துவிட்டது கங்குலி அவ்வளவுதான் ஓய்வை அறிவித்துவிடுவார் என்றே எண்ணினார்கள்.அந்தக்காலப்பகுதியில் கங்குலிக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் வீரர் அணியில் இருந்து நீக்கப்படும் ஒரு நிலை இருந்ததை மறுக்கமுடியாது இதற்கு சிறந்த உதாரணமாக சேவாக் கங்குலிக்கு ஆதரவாக கருத்து தெரிவுத்து நன்றாக வாங்கிகட்டிக்கொண்டதை கூறலாம்.

2006ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு ராவிட் தலைமையில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்தது.இதில் பலத்த சர்சைகள் மற்றும் ரசிகர்களின் ஆர்பாட்டத்தின் பின் கங்குலி அணியில் சேர்க்கப்பட்டார்.ஒருவீரரை அணியில் சேர்க்க சொல்லி ரசிகர்கள் ஆர்பாட்டம் செய்ததும் எனக்கு தெரிய கங்குலிக்குத்தான் என நினைக்கின்றேன்.


பாகிஸ்தானில் வைத்து ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவும் சூழ்நிலையில் யுவராஜ் சிங் சிறப்பாக ஆடி 122 ஓட்டங்களை விழாசி அணியை கெளரவமான தோல்விக்கு இட்டுச்சென்றார் யுவராஜ் சிங்கிற்கு சிறந்த ஒத்துழைப்பு கொடுத்து கங்குலி விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார்.ஆனால் அவரால் சிறப்பான துடுப்பாட்டத்தை வழங்க முடியவில்லை.

இதில் கங்குலி ஒரு அபாரமாக கேட்சை பிடிப்பார் ஆனால் யாரும் அவரை பாராட்டமுன்வரவில்லை ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தனர்.ஆனால் லக்ஸ்மன் ஓடிச்சென்று தாதாவை கட்டித்தழுவியதை கங்குலி ரசிகர்கள் என்றும் மறக்கமாட்டார்கள். பின் ஹர்பஜன் சிங் என ஓவ்வொறுவராக சென்று கங்குலியை பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.


தாதா அவ்வளவுதான் என்று எல்லோறும் நினைத்தனர்.நூல்டிஸ் தயாரிக்கும் நேரம்தான் அதாவது 5 நிமிடம் கங்குலி களத்தில் நிற்பார்.என்று கங்குலியை கேலிசெய்து பல விமர்சனங்கள் வந்தன.

ஒருவர் செய்த சேவைகளை மறந்துவிட்டு அவரை எவ்வளவு கேவலம் செய்யமுடியுமோ அவ்வளவு கேவலமாக விமர்சிக்கப்பட்டார் கங்குலி.
பல கங்குலி ரசிகளுக்கு கிரிக்கெட் மீதே வெருப்பு வந்து தாதா இல்லாத இந்திய அணி ஆடும் போட்டிகளை பார்பதையே நிறுத்திவிட்டனர்.அதில் நானும் ஒருவன் 2005ம் ஆண்டுக்கு பின்  கங்குலி மீளவும் வந்து ஆடும் வரையில் நான் கிரிக்கெட் போட்டிகளை பார்பதை நிறுத்தியவன்.


உச்சத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட பின் எவ்வளவு அவமாணங்கள்,வலிகளை எல்லாம் தாங்கி மீண்டும் தனது அதிக்கத்தை இந்திய கிரிக்கெட்டில் செலுத்து ஓவ்வு பெற்ற தாதாவின் தன்னம்பிக்கைதான்.
எனக்கு கங்குலி மீது அதிக மரியாதை வந்துக்கு காரணம்.

அதற்காக கங்குலி செய்த செயல்கள் எல்லாம் சரி என்று நான் கூறமாட்டேன் காரணம் கங்குலி தான் செய்வது சரி என்ற அவரது பிடிவாத குணம் யாருக்கும் தலைவணங்காதது இது எல்லாம் பலருக்கு கங்குலியை பிடிக்காததுக்கு காரணமாக இருக்கலாம்.ஆனால் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் என்றும் கங்குலி என்ற நாமம் மறையாது இப்போதைய இந்திய அணியின் வளர்சிக்கு கங்குலியின் காலத்தில் போடப்பட்ட அடித்தளமே காரணம் இதை யாரும் மறுக்க முடியாது.

உலக கிரிக்கெட்டில் எத்தனையோ திறமையான கேப்டன்கள் தோன்றியிருக்கின்றார்கள்,ஆனால் உலகின் சிறந்த கிரிக்கெட் கேப்டன்களை வரிசைப்படுத்தினால் அதில் கங்குலியின் பெயர் நிச்சயம் இருக்கும் கங்குலி ஒருவீரராக  பேசப்பட்டதைவிட கேப்டனாக அதிகம் பேசப்பட்டவர்.

எதிரணிகளுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கிய கேப்டன் தாதா என்றால் அது மிகையாகாது.

அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட பின் மீண்டும் வந்து கலக்கிய தாதா அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்
(தாதா இன்னும் வருவார்)

இந்த தொடரின் முன்னைய பகுதிகள் அனைத்தையும் படிக்க இங்கே கிளிக்-வரலாற்றை மாற்றிய தாதா தொடர்

Post Comment

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அப்பாடா... ரொம்ப நாள் கழித்து தொடர் ஆரம்பம் ஆகி விட்டது... நன்றி...

உண்மையிலே சிம்ம சொப்பனம் தான்... (இப்போதும்)

முற்றும் அறிந்த அதிரா said...

நான் இதுக்கு வரேல்லை...

”தளிர் சுரேஷ்” said...

இந்திய கிரிக்கெட்டை வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் தாதா! நீங்கள் சொல்வது போல பிடிவாதம் ஒன்றே அவரிடம் இருந்த கெட்ட குணம்! சிறப்பான பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில்!
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
http://thalirssb.blogspot.in/2012/09/8.html


இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails