Thursday, September 13, 2012

செல்போன் -சிறுகதை

மேசையில் இருந்த செல்போன் ஒலித்தது.எடுத்து யார் என்று பார்பதற்கு இடையில் கோல் கட்டாகிவிட்டது.இப்படித்தான் சமீபகாலமாக அவனது செல்போன் மக்கர் பண்ணுகின்றது கோல் வந்தால் ஆன்சர் பண்ணி கதைக்கும் போது கோல் கட்டாகிவிடும்.நோக்கியா கம்பனியே இப்படி ஒரு மொடலை தயார் செய்தோம் என்று மறந்துவிட்ட பழய மொடல் செல்போன் அவனுடையது.

எப்படியும் ஒரு புதிய செல்போன் வாங்கிவிடவேண்டும் என்பது சுதனின் நீண்டநாள் ஆசை.அதுவும் ஒரு தரமான டச் மொடல் போன் வாங்கவேண்டும் அதில் அவனது மனதுக்கு பிடித்த பாடல்களை இரவுப்பொழுதில் கேட்டவேண்டும்.அவனுக்கு பிடித்த இளையராஜா பாடல்களை ரிங் டோனாக செட் செய்யவேண்டும் இதுதான் சுதனின் தற்போதயை இலட்சியம் கனவு எல்லாம்.


ஆனால்  சுதனால் பதினையாயிரம்,இருபதாயிரம் ரூபாவிற்கு செல்போன் வாங்குவது ஒரு கனவே காரணம் அவனது இரண்டு மாத உழைப்பை முழுமையாக செலவிடவேண்டும். அவனது உழைப்பை இதில் செலவிட்டால் இவனை நம்பியிருக்கும் குடும்பத்தின் நிலை அவ்வளவுதான்.எனவே கனவாகவே இருந்தது அவனது செல்போன் ஆசை.

வீதிகளில் போகும் போது அவனது வயதை ஒத்த இளையர்களின் கைகளில் தவழும் செல்போன்களை பார்கும் போது அவனது மனதிலும் அட எண்ணிடமும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று பல நாள் எண்ணியதுண்டு.அவனுக்கு தெரிந்தவர்கள் யாராவது புதிதாக செல்போன் வாங்கினால் அவர்களிடம் அதன் பெட்டியை வேண்டி வந்து விடுவான் சுதன்.


புதிய மொடல் செல்போன்களின் பெட்டியை வீட்டில் கொண்டு வந்து ஏதோ தான் அந்த போனை வாங்கியதாக நினைத்துக்கொள்வான்.இப்படி இன்னும் ஒரு வருடம் சேகரித்தாலே அந்த அட்டைபெட்டிகளை எடைக்கு போட்டாலே செல்போன் வாங்க பாதிக்காசு வந்துவிடும் போல அவ்வளவு செல்போன் பெட்டிகள் அவன் வீட்டில் உண்டு.

சாதாரனமாக தற்போது பலரின் கைகளில் தவழும் நவீன மொடல் செல்போன்கள் சுதனை போல பலருக்கு கனவுதான்.

ஒரு நாள் வீதியால் சுதன் போய்கொண்டு இருக்கும் போது அவன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை வீதியில் ஒரு டச்மொடல் சம்சங் போன் மின்னிக்கொண்டு இருந்தது.பசியால் அழுகின்ற குழந்தையில்டம் பாலைக் காட்டினால் எப்படி சந்தோசப் படுமோ அதைவிட பல மடங்கு சந்தோசம் அவனுக்கு.சுற்றும் முற்றும் பார்த்தான் யாரும் பார்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு அதை கையில் எடுத்தான்.

வீட்டிற்கு வந்ததும் சுதனின் மனதில் இதை தொலைத்தவரிடம் ஒப்படைக்கலாமா இல்லை நானே வைத்திருக்கலாமா என்று பல சிந்தனைகள்.ஒருவேளை இதை தொலைத்தவர் தன்னைப்போல செல்போன் வாங்க ஆசைப்பட்டு சிறிது சிறிதாக பணத்தை சேர்த்து வாங்கியிருந்தால் அவர் மனம் எவ்வளவு பாடுபடும் எனவே இதை உரியவரிடம் ஒப்டைப்பது என்ற முடிவுக்கு வந்தான்.அப்போது அந்த செல்போன் ஒலித்தது எதிர் முனையில் ஒரு பெண் குரல் 


கலோ சார் என் போனை நான் மிஸ்பண்ணிவிட்டேன் இது என் போன் என்னிடம் தரமுடியுமா? என்று அந்தப்பெண் கேட்டாள்

ரோட்டில் கிடந்தது மேடம் இந்த இடத்துக்கு வாங்க தருகின்றேன் என்று சுதன் சொல்ல 

தாங்ஸ் சார் என்று அந்தப்பெண் தொடர்பை துண்டித்தாள்

சுதன் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சிறிது நேரம் காத்திருக்க ஒரு இருபது இருபத்து ஜந்து வயது மதிக்க தக்க ஒரு பெண் அவனிடம் வந்து ஹலோ சார் நான் தான் உங்களுக்கு கோல் பண்ணியது போனை மிஸ் பண்ணியது நான் தான் என்றாள்,சுதனும் அவளுடைய போன் தானா என உறுதிப்படுத்த போனில் உள்ள சிலரின் நம்பர்களை சொல்ல சொல்லி கேட்டான் அவளும் சரியாக சொல்லவே அவளிடம் போனை கொடுத்துவிட்டு வீட்டு நோக்கி நடந்தான்.

வீட்டிற்கு வந்ததும் அவனுக்கு நம்ப முடியாத ஆச்சரியம் ஆம் அவன் முன்பு ஒரு முறை வீட்டிற்கு தேவையான பொருற்கள் வாங்கும் போது ஒரு பரிசுக்கூப்பன் அறிவித்து இருந்தார்கள் அதில் சுதனுக்கு ஒரு செல்போன் பரிசாக விழுந்திருப்பதை தெரியப்படுத்தி ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்கள் உடனே வந்து செல்போனை பெற்றுக்கொள்ளவும் என்று.

வந்ததும் வராததுமாக சுதன் உடனே அந்தக் கடையை நோக்கி கிளம்பினான் கிளம்பும் போது அவனது பழய செல்போன் அடித்தது அட இதுவேற என்று எரிச்சல் அடைந்தவன் அதை மேசை மீது வைத்துவிட்டு சென்றான்.

கடையில் போய் பரிசுக்கூப்பனைக்காட்டி அவனுக்கு பரிசாக விழுந்த இருபத்து ஜந்தாயிரம் மதிப்புள்ள ஒரு நவீன மொடல் செல்போனை பெற்றுக்கொண்ட போது சுதனுக்கு தன் கனவு ஆசை எல்லாம் நிறைவேறியதை எண்ணி மகிழ்ந்தான்.இனி இதில் இஸ்டம் போல பாட்டுகேட்கலாம் ஏனைய இளைஞர்களை போல ஸ்டைலாக செல்போனில் கதைக்கலாம் என்றுநினைத்துக்கொண்டான். 

கையில் செல்போனுடன் அவன் திரும்பிய போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று அவனை மோதியது நிலைதடுமாறி கீழே விழுந்த சுதனுக்கு நல்ல காலம் அடி ஒன்றும் படவில்லை. ஆனால் அவன் கையில் இருந்த செல்போன் சுக்குநூறாக உடைந்துவிட்டது.இங்கே உடைந்தது செல்போன் மட்டும் இல்லை அவனது ஆசை கனவு இலட்சியம் எல்லாம்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கவலையில் வீட்டிற்கு வந்த போது மேசையில் இருந்த அவனது பழய செல்போன் ஒலித்தது.






Post Comment

15 comments:

தனிமரம் said...

ஆசையில் போன சுதனின் நிலைபோல பலரும் சில நேரங்களில் பழையதை விடுத்து புதிய மொடலுக்குப் போவது உடைந்துவிடும் கண்ணாடி அழகிய சம்சுங் போன்!

தனிமரம் said...

ஆசையின் அவதி சொல்லும் கதை அருமை தம்பி!

தனிமரம் said...

சுதனும் என்னைபோல ராஜாவின் ரசிகன் போல காலம் மாறினாலும் அவர்கூட தோழில் கைபோட்டு பயணிப்பதில்!ஒரு சுகம் எப்போதும்!

தனிமரம் said...

சுதனும் என்னைபோல ராஜாவின் ரசிகன் போல காலம் மாறினாலும் அவர்கூட தோழில் கைபோட்டு பயணிப்பதில்!ஒரு சுகம் எப்போதும்!

K.s.s.Rajh said...

@தனிமரம்

வாங்க பாஸ் நன்றி பாஸ்

Unknown said...

முடிவு மிகவும் அருமை!

Yoga.S. said...

வணக்கம்,ராஜ்!!!சிறுகதை(ஒரு பக்கக் கதை)அருமை!///கடவுள் நாம் வேண்டுவது எல்லாவற்றையும் கொடுப்பதில்லை.நமக்கு வேண்டியதை மட்டும் கொடுக்கிறார்!///ஒரு ப்ளாக் தலைப்பில் படித்தது.

Yoga.S. said...

அந்த "ப்ளாக்" கின் சொந்தக்காரர்;பாலாவின் பக்கங்கள்::::விவேகானந்தரின் நறுக்::::::::::::
கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு கதை! சுதனின் ஆசையை நிறைவேற்றியிருக்கலாமே!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கதை... முடிவு இப்படித் தான்...

நன்றி நண்பரே...

முற்றும் அறிந்த அதிரா said...

நல்ல கதை... ஆசை ஆரைத்தான் விடுகிறது...

சுதா SJ said...

ஹாய் நண்பா...
எப்புடி இருக்கீங்க ;))

சுதா SJ said...

நண்பா ஆனாலும் உங்களுக்கு இந்த கல்லு மனசு ஆகாது :((

உங்க மேலே கடுப்பு வருது...
பாவம் அவனுக்கு போனை கொடுத்து இருக்கலாம் :(( கடைசியில் இப்படி போட்டு உடைத்து விட்டீர்களே போனோடு அவன் மனசையும் ;(

சுதா SJ said...

நல்ல தரமான சிறுகதை
வாழ்த்துக்கள் நண்பா

Manimaran said...

வழியில் கிடந்ததும்,இனாமாய் வந்ததும் கைகளில் தங்காது...நம் சொந்த காசைப்போட்டு வாங்கும் பொருளே நிரந்தரமானது...அருமையான கதை...(5)

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails