Saturday, September 29, 2012

சேவாக் நீக்கம் சரியானதா?

இலங்கையில் நடைபெற்றுவரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-8 போட்டிகள் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளன,நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் தென்னாபிரிக்காவை பாகிஸ்தான் அணி வென்றது அதுவும் இக்கட்டான நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் உமர் குல் அதிரடி பேட்ஸ்மேனாக மாறி பாகிஸ்தான் வெற்றியை இலகுவாக்கினார்.மறுமுனையில் சிறப்பாக ஆடிய உமர் அக்மலும் அணிக்கு சிறந்த அடித்தளம் அமைத்துக்கொடுத்தார்.

அடுத்த போட்டி இந்தியா,அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்றது இதில் தோனி 5 பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கினார் 



இதனால் சேவாக் நீக்கப்பட்டார். இந்தியாவின் பாரம்பரியமான 7 பேட்ஸ்மேன் ஸ்டைலை மாற்றி. சேவாக்கை களம் இறக்காமல் விட்ட தோனிக்கு இதுவும் தேவை இன்னும் தேவை என்பது போல அவுஸ்ரேலியா மரண அடிகொடுத்தது.

அதுக்காக சேவாக் விளையாடாமல் விட்டதால் தான் இந்திய அணி தோற்றது என்று சொல்லவரவில்லை.நேற்று அவுஸ்ரேலிய அணி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வெற்றி பெற்றது ஆனால் சேவாக் விளையாடியிருந்தால் இந்திய அணிக்கு அது மிகப்பெரிய பலம் சேவாக் போன்ற துடுப்பாட்ட வீரர்கள்,10 ஓவருக்கு களத்தில் நின்றுவிட்டாலே போட்டியின் போக்கை மாற்றக்கூடியவர்கள்.

கிரேக் சப்பல் பயிற்சியாளராக இருந்தபோது இந்த முறையில் முயற்சி செய்துதான்(சில வெற்றிகள் கிடைத்தாலும்)பின் எல்லாம் தோல்வியே.இந்தைய அணியை பொருத்த மட்டில் கூடுதலான பந்துவீச்சாளர் தேவையே இல்லை கூடுதல் துடுப்பாட்ட வீரரை சேர்த்தால் துடுப்பாட்ட வரிசை இன்னும் பலம் பெரும் இதுதான் இந்தியாவின் பலமே.


அதைவிட சேவாக்,யுவராஜ் சிங்,ரெய்னா,கோலி,என சிறந்த பாட் டைம் பந்துவீச்சாளர்கள் இருக்கின்றார்கள் அதுவும் சேவாக் இலங்கை மைதானங்களில் சிறப்பாக பந்துவீசக்கூடியவர்.பிறகு ஏன் சேவாக்கை நிப்பாட்டி கூடுதல் பந்துவீச்சாளரை தோனி சேர்த்தார் என்பது ஆச்சரியமே.

அதுவும் யுவராஜ்,ரெய்னா என சிறந்த பகுதி நேர சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கும் போது மேலதிகமாக பீயூ சவ்லாவை சேர்த்து அஸ்வின்,ஹர்பஜன் சிங்,என மூன்று சுழல் பந்துவீச்சாளருடன் களம் இறங்கினார்.அதுக்கு பதில் ஒரு சுழல் பந்துவீச்சாளரை நீக்கிவிட்டு பாலாஜியை ஆவது சேர்த்திருக்கலாம்.

நேற்று அவுஸ்ரேலியாவின் வீழ்த்தப்பட்ட ஒருவிக்கெட்டையும் வீழ்த்தியது யுவராஜ் சிங்தான். இந்திய பந்துவீச்சாளர்களை வெளுத்துவாங்கிவிட்டனர் ஷேன் வாட்சனும் டேவிட் வார்னரும்.

சில போட்டியில் சரியாக ஆடவில்லை என்பதற்காக சேவாக் போன்ற அதிரடி ஆரம்பத்துடுப்பாட்டவீரர்களை நீக்குவது நல்லவிடயம் இல்லை காரணம் சேவாக் எந்த நேரத்திலும் எதிரணிவீரர்களுக்கு அச்சுருத்தும் ஒரு துடுப்பாட்டவீரர்.


ரோகித்தசர்மாவுக்கு தோனி எத்தனை வாய்ப்புக்கள் கொடுத்தார்.இப்போது ரோகித் ஓரளவு போர்முக்கு திரும்பிவிட்டார்.ஆனால் சேவாக்கை மட்டும் நீக்குவது ஏன் என்று புரியவில்லை

என்ன காரணம் சொன்னாலும் சேவாக்கை நீக்கியது நிச்சயம் இந்திய அணியின் பலம் குறைந்ததை போல ஆகும்.

அடுத்துவரும் போட்டிகளில் தோனி என்ன செய்யப்போகின்றார் என்று பொருத்திருந்து பார்போம் அதுவும் பாகிஸ்தானுடன் அடுத்த போட்டி.துடுப்பாட்டம் பந்துவீச்சு என சிறப்பாக செயல்படும் பாகிஸ்தான் அணியை வெல்ல தோனி என்ன செய்யப்போகின்றார்.இதிலாவது சேவாக் சேர்த்துக்கொள்ளப் படுவாரா இல்லை மீண்டும்5பந்துவீச்சாளர் என்று சேவாக்கை நீக்குவாரா பொருத்திருந்து பார்போம்.

சேவாக்,தோனி பனிப்போர் இன்னும் ஓயவில்லை போல உங்க பஞ்சாயத்தை விட்டு விட்டு அணியின் வெற்றியை யோசிங்க தோனி சார்.

Post Comment

13 comments:

Yoga.S. said...

பகல் வணக்கம்,ராஜ்!என்னென்னவோ சொல்லுறியள்.ஒண்டுùம விளங்கையில்ல.சேவாக் கை சேர்த்தா வெல்லலாம் எண்ட மாதிரி ஏதோ கொஞ்சம் விளங்குது!அதோட,முந்தி அமேரிக்கா vs ரஷியா பனிப் போர் மாதிரி இவையளுக்குள்ளையும் பனிப்போர் எண்ட மாதிரியும் விளங்குது,ஹி!ஹி!ஹி!!!

ராஜ் said...

சேவாக் IT20-ல 10 ஓவர் ஆடுறது, ரொம்ப கஷ்டம் பாஸ் !!! இது வரைக்கும் அவர் இந்த சாதனையை IT20-ல பண்ணியதா ஞாபகம் இல்ல எனக்கு !!!! ரொம்ப பேராசை உங்களுக்கு :):)

Unknown said...

T20 இல் ஐந்து பந்துவீச்சாளர் பயன்படுத்துவது கொடுமை. அதுவும் 180 என்பது சாதாரண இலக்காக இருக்கும் போது..

திண்டுக்கல் தனபாலன் said...

தோனியின் அவசர முடிவால் தான் நேற்று தோற்றோம்...

Riyas said...

ராஜ் நீங்க சொன்ன விட்யம் சரிதான்,, அதேயேதான் என் பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன்.. பார்ப்போம் மிகுதி போட்டிகளை.

ANBUTHIL said...

வாட்சனும் வார்னரும் 20/20க்காகவே தயாரிக்க பட்டவர்களா என்ன அடி என்ன அடி!!!!!!!!!!!!

K.s.s.Rajh said...

//// Yoga.S. said...
பகல் வணக்கம்,ராஜ்!என்னென்னவோ சொல்லுறியள்.ஒண்டுùம விளங்கையில்ல.சேவாக் கை சேர்த்தா வெல்லலாம் எண்ட மாதிரி ஏதோ கொஞ்சம் விளங்குது!அதோட,முந்தி அமேரிக்கா vs ரஷியா பனிப் போர் மாதிரி இவையளுக்குள்ளையும் பனிப்போர் எண்ட மாதிரியும் விளங்குது,ஹி!ஹி!ஹி!!////

அந்தளவுக்கு இல்லாட்டியும் இவர்களுக்கு இடையில் ஒரு பனிப்போர் நிலவுகின்றதுதான்
நன்றி ஜயா

K.s.s.Rajh said...

////
ராஜ் said...
சேவாக் IT20-ல 10 ஓவர் ஆடுறது, ரொம்ப கஷ்டம் பாஸ் !!! இது வரைக்கும் அவர் இந்த சாதனையை IT20-ல பண்ணியதா ஞாபகம் இல்ல எனக்கு !!!! ரொம்ப பேராசை உங்களுக்கு :):////

எனக்கு பேராசை எல்லாம் இல்லை பாஸ் நான் இந்திய அணியின் ரசிகனும் இல்லை ஆனால் சேவாக் போன்ற வீரரகள் எப்போதும் எதிரணியை அச்சிருத்தும் துடுப்பாட்டவீரர்கள் அவர்கள் அணியில் இருப்பது கூடுதல் பலம்

K.s.s.Rajh said...

@மைந்தன் சிவா said...
T20 இல் ஐந்து பந்துவீச்சாளர் பயன்படுத்துவது கொடுமை. அதுவும் 180 என்பது சாதாரண இலக்காக இருக்கும் போது.////

நிச்சயமாக பாஸ்

K.s.s.Rajh said...

@
திண்டுக்கல் தனபாலன் said...
தோனியின் அவசர முடிவால் தான் நேற்று தோற்றோம்.////

அப்படி முழுப்பழியையும் தோனி மேல் போடமுடியாது பாஸ்
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@19:00 PM
Riyas said...
ராஜ் நீங்க சொன்ன விட்யம் சரிதான்,, அதேயேதான் என் பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன்.. பார்ப்போம் மிகுதி போட்டிகளை////

பார்போம் என்ன நடக்குது என்று

K.s.s.Rajh said...

@
அன்பை தேடி,,அன்பு said...
வாட்சனும் வார்னரும் 20/20க்காகவே தயாரிக்க பட்டவர்களா என்ன அடி என்ன அடி!!!!!!!!!!!////

ஹா.ஹா.ஹா.ஹா.....

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான்! சேவாக் தோனி சண்டையில் நாம் நல்ல அதிரடி வீரரை இழந்து வருகிறோம்!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails