Wednesday, September 12, 2012

மெகா சீரியல்கள் சொல்லும் தத்துவம் என்ன?

இந்த மெகா சீரியல் என்று சொல்லப்படுகின்ற சின்னத்திரை நாடகங்கள் இன்று பல குடும்பங்களை ஆட்டிப்படைக்கும் ஒரு விடயமாக மாறிவிட்டது.அது ஒரு போதை என்ற நிலைக்கு வந்துவிட்டது ஆம் 6.00 ஆகிடுச்சா அந்த நாடகத்தை போடு, 7.00 மணிக்கு இந்த நாடகத்தை போடு என்று குடும்ப அங்கத்தவர்களிடையே பெரும் விவாதமே நடக்கும்.
உண்மையில் இந்த மெகா சீரியல்கள் ரசிக்கும்படியுள்ளனவா என்று ஆராய்ந்தால் ஒரு சில தொடர்களை தவிர ஏனையவை ரசிகர்களின் மனதை ஏமாற்றும் ஒரு செயலாகத்தான் இருக்கின்றது.


சொல்ல வரும் கதையை சுவாரஸ்யமாக சொல்லவேண்டும் அதே நேரம் பார்பவர்களுக்கு அலுப்பு தட்டவும் கூடாது.ஆனால் பெரும்பாலான மெகா சீரியல்கள் அலுப்பு தட்டுபவையாகவே உள்ளன.


உதாரணமாக ஒரு மரணச்சடங்கு நிகழ்ச்சி சீரியலில் வருகின்றது என்றால் அதை வைத்தே பல வாரம் ஓட்டுவார்கள்.ஒரு திருமணம் காட்சி வருகின்றது என்றால் ஏதோ நிஜத்தில் கல்யாணம் நடப்பது போல பத்திரிகை அடித்து அதை பல வாரம் ஓட்டுவார்கள்.இதில் என்ன கொடுமை என்றால் இன்று மாபெரும் கல்யாணம் வைபோகம் அனைவரும் வருக என்று பார்க்கும் பார்வையாளர்களுக்கும் அழைப்பு வேற என்ன கொடுமை சாமீ...

பத்தாததுக்கு மறு ஒளிபரப்பு என்று வேறு கொல்லுவாய்ங்க.

உலகத்தில் அதிக பொறுமைசாலி யார் என்றால். மெகா சீரியல் பார்கும் வீடுகளில் இருக்கும் மெகா சீரியலை விரும்பாதவர்கள்தான்.அதுவும் கல்யாணம் ஆனவங்க என்றால் மனைவி மெகா சீரியல் ரசிகை என்றால் அந்த புருசன் பாடும் அம்புட்டுதான்.


சரி இந்த சீரியல்களில் உருப்படியான ஏதாவது இருக்கா இல்லை. கதையிருக்கா என்றால் அதுவும் இல்லை.தம்பி மனைவியை காதலிப்பது, அன்னைக்கு சமனான அண்ணியை கலியாணம் முடிப்பது,இன்னும் ஒரு பெண்ணின் கணவணை காதலிப்பது,இரண்டு பொண்டாட்டியை கட்டுவது,கள்ளக்காதல்,ஒரு பெண்ணை கொடுமைப்படுத்துது இப்படித்தான் பெரும்பான்மையான மெகா சீரியல்களின் மையக் கதை.

இரண்டும் மூன்று சீரியல்களை ஓப்பிட்டு பாருங்கள். அவை அனைத்திலும் கதை ஒன்றாகத்தான் இருக்கும் ஆனால் கொஞ்சம் மாற்றம்செய்து இருப்பர்கள்

உதாரணமாக-ஒரு சீரியலில் தம்பி மனைவியை காதலிப்பதாக கதையிருக்கு என்றால். இன்னும் ஒரு சீரியலில் மனைவியின் தங்கையை காதலிப்பதாக இருக்கும். இது இரண்டிலும் என்ன வித்தியாசம் இருக்கு? அங்கே தம்பி மனைவி இங்கே மனைவியின் தங்கை.எல்லாம் கள்ளக்காதல் வெவகாரம் தான். இதைத்தான் மாறி மாறி பார்பார்கள் அதுவும் இரவு பார்த்து.காலையில் மறு ஒளிபரப்பு போட்டாலும் பார்த்து. பிறகு ஞாயிற்றுக்கிழமைகளில் தொகுப்பு என்று போடுவார்கள் அதையும் அசராமல் பார்கும் ரசிக கண்மணிகளை என்ன செய்வது.


இதில் உச்சகட்ட காமடி என்ன என்றால் சீரியலை நிஜமாக நடக்கும் நிகழ்வு போல  நினைத்து அவள் அப்படி செய்யமாட்டாள் அவள் நல்லவள்,அவன் மனம் மாறுவான் என்ற நம்பிக்கை இருக்கு. என்று தங்களுக்கு இடையில் சண்டை வேறு போட்டுக்கொள்வார்கள்.அடுத்த பகுதி எப்படி இருக்கும் என்று மெகா சீரியல் இயக்குனருக்கே தெரியாதுய்யா ஏதாவது குத்துமதிப்பா ஒரு காட்சியை பிடிச்சி அதை வைத்து வாரக்கணக்கில் ஓட்டுவது அவர்கள் சாமர்த்தியம்.இது புரியாமல் நம்ம ரசிக கண்மணிகள் குமார் மாறிடுவான்,வசந்தி அப்படி செய்திருக்க மாட்டாள் என்று லூசுத்தணமாக தங்களுக்குள் விவாதித்துக்கொள்வார்கள்.


அதுக்காக எல்லா மெகாசீரியல்களையும் குறை சொல்லவில்லை சில ரசிக்கும் படியான சீரியல்கள் இருக்கத்தான் செய்கின்றன.ஆனால் பார்பவர்களை முட்டாளாக்க்கும் சீரியல்கள் மற்றும் ஒரு காட்சியை வைத்து பல வாரங்கள் ஓட்டுவது போன்றவை கடுப்பேத்துபவை எனவே ஒரு சீரியல் பல ஆண்டுகள் ஓடுவது பெரியவிடயம் இல்லை ஆனால் அத்தனை ஆண்டுகளும் உண்மையில் ரசிக்கும் படி இருக்கின்றதா என்று பார்க வேண்டும்.

மெகா சீரியலுக்கு கதை எழுதுவது, மெகா சீரியல் இயக்குவது ஒன்றும் கடினமான வேலை இல்லை மிக மிக இலகு. ஒரு குடும்பம் அதில் வரும் பிரச்சனைகளை விரிவாக ஆராய்ந்து இடைக்கிடையில் சம்மந்தம் இல்லாத வேறு கதைகளையும் உள்ளே புகுத்தி பின் அது இரண்டையும் சம்மந்தப் படுத்த்தி பிறகு அதில் ஒரு பிரச்சனையை உருவாக்கி இப்படியே பல வாரம் கதையை இழுத்தடிக்கும் டெக்னிக் தெரிந்தால் நீயும் மெகா சீரியல் இயக்குனரே.

கொஞ்சம் சிந்தியுங்கள் மெகா சீரியல் இயக்குனர்களே சீரியல்களை இழுத்தடித்து பல ஆண்டுகள் ஓட்ட நினைக்காமல் குறுகிய காலம் ஓடினாலும் அதை அனைவரும் ரசிக்கும் படி தாருங்கள்.

நான் எல்லாம் கலியாணம் கட்டும் போது சத்தியமாக மெகா சீரியலை ரசிக்கும் பெண்ணை கட்டவே மாட்டேன்.

கடுப்பேத்துறாங்க மைலாட் 

இந்த பீலிங் உனக்கும் இருந்தால் நீயும் என்  நண்பனே

Post Comment

7 comments:

Athisaya said...

நண்பேண்டா....பயபுள்ள ரொம்ப நொந்திரிச்சு போல.உண்மைதான் சொந்தமே இந்த ஆதங்கமும் கோவமும்.
இவ்வாருமே ஒரே ரும்ல இருந்து யோசிச்ச போல அதே புளிச்சமாவைத்தான் அரைக்கறாங்க..திருந்தமாட்டங்ன நம்ம ஆக்களும்.

Yoga.S. said...

காலை வணக்கம்,ராஜ்!!!!!////நான் எல்லாம் கலியாணம் கட்டும் போது...................////அத அப்புறம் பாத்துக்கலாம்,ராஜா,ஹ!ஹ!ஹா!!!ஹி!ஹி!ஹீ!!!!ஹோ!ஹோ!ஹூ!!!!!

தனிமரம் said...

நானும் இந்த சின்னத்திரையில் எந்த நாட்கமும் பார்ப்பது இல்லை  .அந்தளவுக்கு பொறுமையில்லை தம்பி!

தனிமரம் said...

நான் எல்லாம் கலியாணம் கட்டும் போது சத்தியமாக மெகா சீரியலை ரசிக்கும் பெண்ணை கட்டவே மாட்டேன்.//
:ஹீ நீ என் நண்பேண்டா!:)))))))

Anonymous said...

நான் எல்லாம் கலியாணம் கட்டும் போது சத்தியமாக மெகா சீரியலை ரசிக்கும் பெண்ணை கட்டவே மாட்டேன்.//// இந்த மாதிரி கொல்கை எல்லாம் வச்சுருக்கரது ரொம்ப தப்பு:((

குட்டன்ஜி said...

சரியாச் சொன்னீங்க!

”தளிர் சுரேஷ்” said...

நான் சீரியல் பார்ப்பதை விட்டு ரொம்ப நாளாச்சு! நல்ல பகிர்வு!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails