Thursday, September 27, 2012

நாகேஷ் தமிழ்திரையுலகின் முடிசூடா மன்னன்

நாகேஷ் இந்தப்பெயரை அறியாத தமிழ் சினிமா ரசிகர்கள் யாரும் இருக்கமுடியாது. அந்தக்கால ரசிகர்கள் முதல் இந்தக்கால ரசிகர்கள் வரை எல்லோறும் அவரை ரசித்ததுதான் அவரின் தனித்தன்மை.

என் வயதே 23 தான் இதில் நான் படம் பார்க தொடங்கி ஒரு 15 ஆண்டுகள் இருக்கும் ஆனால் நகேஷ் 1959ம் ஆண்டு நடிக்கத்தொடங்கிவிட்டார்.நான் பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே நடிக்கத்தொடங்கிய கலைஞனை நான் இன்றும் ரசிக்கின்றேன். இதுதான் நாகேஷ் என்ற நடிகரின் தனித்தன்மை காலத்தால் அழியாத கலைஞன்.



1933ம் ஆண்டு செப்ரம்பர் 27 இல் பிறந்த நாகேஷ்  அவரது முதல் திரைப்படம் 1959ல் தாமரைக்குளம் என்ற படம். தொடர்ந்து திரையுலகில் தனக்கு என்று ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற நாகேஷை வெரும் நகைச்சுவை நடிகர் என்று குறுகிய வட்டத்துக்குள் அடக்க முடியாது. நாகேஷ் கதாநாயகனாகவும்,வில்லனாகவும் மாறு பட்ட குணச்சித்திரவேண்டங்களிலும் பல படங்கள் நடித்துள்ளார் சுமார் 1000ம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர்,சிவாஜி முதல் ரஜனி,கமல்,விஜய்,தனுஸ் என்று பல தலைமுறை நடிகர்களுடன் நடித்த பெருமைக்குறியவர்.


கமலுடன் இவர் நடித்த பல படங்கள் பலராலும் ரசிக்கப்பட்டவை. நாகேஷ் நடித்த கடைசிப்படம் தசவதாரம்.

பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராக பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ஹாரம்தான் நாகேஷ் வீட்டுச் வளர்ந்த தொட்டில்.

பெற்றோர் கிருஷ்ணராவ்- ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன் 



இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ்பாபு, ராஜேஷ்பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்.

நாகேஷ் மகன் நடிகர்ஆனந்த பாபு  நாகேஷ் அளவுக்கு புகழ்பெறாவிட்டாலும் அவரும் ஒரு சிறந்த நடிகர்தான்.

முதன் முதலில் நாகேஷ் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார் அன்று அவரது நடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான் அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா

டைரக்‌ஷன் துறையையும் விட்டுவைக்கவில்லை இவர். `பார்த்த ஞாபகம் இல்லையோ’ இவரது டைரக்‌ஷனில் வெளிவந்த திரைப்படம்.



ஜனவரி 31,2009 இந்த அற்புதமான கலைஞனின் இந்த உலகைவிட்டு மறைந்தார்.

 2009ம் ஆண்டு எங்கள் மண்ணில் கடும் யுத்தமழை பொழிந்துகொண்டு இருந்த நேரம் அது.அந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் நாகேஷ் இறந்துவிட்டதாக அறிந்த போது ஏதோ குடும்பத்தில் ஒருவர் மறைந்துவிட்டதை போல மனம் வலித்தது.

இங்கே நாகேஷ் என்ற மனிதன் தான் மறைந்தார் நாகேஷ் என்ற கலைஞனுக்கு என்றும் மரணம் இல்லை

இன்று இந்த மாபெரும் கலைஞனின் பிறந்தநாளாகும்.


Post Comment

14 comments:

தனிமரம் said...

காலத்தால் மறக்கமுடியாத கலைஞன் நாகேஸ் அவரின் வில்லன் நடிப்பில் எனக்கு அதிகம் பிடித்தது சேரன் பாண்டியன் பட நடிப்பு.
சிறப்பான நாளில் சிறப்பான ஒரு அலசல்!

தனிமரம் said...

நாகேஸ் பிறந்தநாளுக்கு ராச் இன்று பால்க்கோப்பி தருவாரா!:)))

தனிமரம் said...

நாகேஸ் மனோரம்மா கூட்டனி மிகவும் ரசிக்கும் நகைச்சுவைப்பாத்திரங்களாக எப்போதும் இருக்கும்.அன்பே வா படத்தில் இவர்கள் காட்சிக்கு முண்டியடித்து ஒரு திரையரங்கில் பார்த்த ஞாபகம் இன்னும் படம் பழசு என்றாலும் சில ஊரில் பழைய படம் ஒட்டும் போது கும்பல் ஜாஸ்த்திதான்!:))

தனிமரம் said...

நாகேஸ்போல இனிவரும் காலம் யாரு வருவார்?????

K.s.s.Rajh said...

@தனிமரம்

வாங்க பாஸ் அண்ணனுக்கு ஒரு பால் கோப்பி

இனிவரும் காலங்களிலும் நிச்சயம் இன்னும் ஒரு கலைஞன் உருவாகுவார் பாஸ்

நன்றி பாஸ்

Yoga.S. said...

காலை வணக்கம்,ராஜ்!அருமையான பிறந்த நாள் நினைவுப் பகிர்வு!நாகேஷின் நகைச்சுவை இல்லாத படங்களே அந்தக் காலத்தில் இருந்ததில்லை.நன்றி பகிர்வுக்கு!

K.s.s.Rajh said...

@Yoga.S.

நன்றி ஜயா

கோகுல் said...

மறக்க முடியாத கலைஞர்.

இவரது பிறந்த நாளையும் மறக்க முடியாது,காரணம் சொல்லவும் வேண்டுமோ?

திண்டுக்கல் தனபாலன் said...

மறக்க முடியாத நகைச்சுவை கலைஞன்...

K.s.s.Rajh said...

@கோகுல்

ஆமா பாஸ் நிச்சயம் உங்களால் மறக்கமுடியாது

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

நன்றி பாஸ்

K said...

எம் அனைவரையும் நன்கு கவர்ந்த நாகேஷ் அவர்களின் நினைவினைச் சிறப்பாகப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மச்சான் சார்! முன்பு நீங்கள் நாராயணன் அவர்கள் பற்றி வரைந்த பதிவு இன்னமும் மனசில் நிழலாடுது மச்சான் சார்!

K.s.s.Rajh said...

@மாத்தியோசி - மணி

ஆமா நாராயணன் மறக்கமுடியுமா?
நன்றி மச்சான் சார்

Anonymous said...

கமல் சொல்றாப்புல ஒரு நடிப்பு ராட்சஷன் நாகேஷ்.. நாங்க எல்லாம் இந்தகால சந்தானம்,சிவகார்த்திகேயன் டைப் காமெடிய ரசிக்கிற பயலுகளாவே இருந்தாலும்,,,, ஒரு காமெடி சேனல்ல நாகேஷ் காமெடியும், இன்னொரு காமெடி சேனல்ல இந்த கால காமெடியும் போட்டாங்கன்னா, நம்ம பர்ஸ்ட் ப்ரெஃபெரன்ஸ் நாகேஷ் காமெடிதான்... நேத்து கூட பிறந்த நாள் ஸ்பெஷலா சில காமெடி க்ளிபிங்ஸ் போட்டாங்க, அதுல ஒண்ணுல வில்லத்தனமான நம்பியாரின் திக்கு-வாய் மகனா வருவாரு, சான்சே இல்ல...

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails