நவீன நாட்டாமை நல்லதம்பியின் முதல் பஞ்சாயத்து இன்று கூடுகின்றது.
அதற்கு முன் அனைவரையும் அறிமுகம் செய்து வைக்கின்றேன்.
நவீன நாட்டாமை நல்லதம்பி
![]() |
வணக்கம்முங்கோ நான் நவீன நாட்டாமை நல்லதம்பி |
நாட்டாமை மனைவி ரகசியா ராணி
![]() |
வணக்கமுங்க நான் நாட்டாமை பொண்டாட்டி ரகசியா ராணி |
நாட்டாமையின் அல்லக்கை ஒண்டிப்புலி
![]() |
ஹி ஹி ஹி ஹி வணக்கமுங்க நான் தானுங்க நாட்டாமைக்கு வலக்கை, இடக்கை, அல்லக்கை,எல்லாம் எம் பேரு ஒண்டிப்புலி |
இந்தப்பஞ்சாயத்து முழுவதும் மொக்கை கலந்த நகைச்சுவையே யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.
நாட்டாமை நல்லதம்பியின் கன்னிப்பஞ்சாயத்து இதோ ஆரம்பம்.
ஓண்டிப்புலி -அமைதி நாட்டாமை நல்லதம்பி பஞ்சாயத்துக்கு வரார் வரார்
நாட்டாமை நல்லதம்பி-ஏண்டா..அதான் யாரும் இல்லையே பிறகு என்னடா அமைதி அமைதினு கத்துற
ஒண்டிப்புலி-நாட்டாம இப்படி எல்லாம் பில்டப் கொடுக்கனும் இல்லாட்டி உங்க பஞ்சாயத்துக்கு எவன் வருவான் சும்மா யாரவது வந்த மாதிரி காட்டிக்கொள்ளனும்
நாட்டாமை நல்லதம்பி-நீ காட்டுவியோ மறைப்பியோ முதல்ல நாட்டாமையின் கன்னிப்பஞ்சாயத்து ஆரம்பம்னு சொன்னியே கூப்பிர்றா அந்த கன்னிகளை..
ஒண்டிப்புலி-ஜயோ நாட்டாமை கன்னிப்பஞ்சாயத்துனா முதலாவது பஞ்சாயத்துனு அர்தம் கன்னிப்பெண்களை வைத்து பஞ்சாயத்துப்பன்னுவது இல்லை(கடவுளே இவன் எல்லாம் எப்படி தீர்ப்பு சொல்லப்போறானோ)
நாட்டாமை-சரி சரி எங்கடா அம்மணி அம்மணியை கூப்பிர்றா
நாட்டாமை மனைவி ரகசியா ராணி-இதோ வந்துட்டனுங்க மாமோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
நாட்டாமை-அம்மணி நான் பஞ்சாயத்துப்பன்னுறப்போ நீயும் அருக இருக்கனும் அப்பதானே என்ற பெரும உனக்கு தெரியும்
நாட்டாமை மனைவி ரகசியா ராணி-சரிங்க.......மாமா
ஓண்டிப்புலி-நாட்டாம சரி சட்டு புட்டுனு பஞ்சாயத்தை ஆரம்பிங்க
நாட்டாமை-ஏண்டா புட்டை தின்னுட்டு ஆரம்பிம்பமுங்கிறியா..
ஓண்டிப்புலி-ஜயோ எப்பவும் சாப்பாட்டு நினைவுதானா. இது அதில்ல நாட்டாம சீக்கிரம் பஞ்சாயத்தை ஆரம்பிங்க
நாட்டாமை-சரி யார் ரா.....இன்னைகு வந்து இருக்கான் என்றா பிரச்சனை...
ஓண்டிப்புலி-அது ஒரு பயபுள்ள வந்து இருக்கு பேரு கோயிந்சாமியாம்.
நாட்டாமை-ஏண்டா தம்பி நீதான் கோயிந்சாமியா என்றா பிரச்சனை.
கோயிந்சாமி-ஜாயா வணக்கமுங்க நா ஒரு கிரிக்கெட் ரசிகனுங்க இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில நம்ம தல சச்சின் 100 சதம் அடிப்பாருனு எதிர்பாத்தனுங்க அவரு அடிக்கலைங்க இதனால எனக்கு மனசு நொந்து போச்சுங்க அதனால நீங்கதான் ஒரு நல்ல தீர்ப்பா சொல்லனும் சாமி..
நாட்டாமை-(ஒண்டிப்புலியிடம் மெதுவாக சொல்கின்றார்)ஏண்டா ஒண்டிப்புலி நான் நாட்டாமையா இருக்கிறது உனக்கு புடிகலையா சச்சின் எவ்வளவு பெரிய ஆளு அவர எப்புடிடா நான் ஏன் சதம் அடிக்கலைனு கேட்டு தீர்ப்பு சொல்லுறது.
என் முதலாவது பஞ்சாயத்தையே கடைசி பஞ்சாயத்து ஆக்கிடுவபோல.
ஓண்டிப்புலி-நாட்டாமை முதல் பஞ்சாயத்தே சச்சினை பற்றி கூடுனாதான்.நிறைய பேர் கருத்துரைகளை சொல்லி,உங்களை வாங்கு வாங்குனு வாங்குவாங்க ஒரு பப்புளிசிட்டி முதல் பஞ்சாயத்துலே கிடைக்குமுல்ல
நாட்டாமை-அப்புடிங்கிற.....டேய் இருந்தாலும் இந்த கிரிக்கெட் பசங்களுக்கு பஞ்சாயத்து பன்னி தீர்ப்பு சொன்னா நடுவர் முடிவ மறுபரிசீலனை பன்றமாதிரி நாட்டாமை முடிவையும் மறுபரிசீலனை பன்னச்சொல்லி கேட்டாய்ங்கனா.
நாட்டாமை மனைவி ரகசியா ராணி-அதேல்லாம் கேக்க மாட்டாங்க மாமா நீங்கயாரு நவீன நாட்டாமை நல்லதம்பியாச்சே உங்க கிட்டையே நவீன தொழில்நுட்பத்தை புகுத்தி மறுபரிசீலனை பன்ன முடியுமா...
ஓண்டிப்புலி-அதான் அக்காவே சொல்லிடாங்களே ஆரம்பிங்க நாட்டாம
நாட்டாமை-உங்க அக்கா எப்படா சொன்னா ஒண்டிப்புலி
ஓண்டிப்புலி-எங்க அக்காவ நாங்க ஏன் சொல்லுறம் உங்க பொண்டாட்டியதான் உரிமையோட அக்காங்கிறம்.
நாட்டாமை-அடிங்........ கொய்லால சொல்லுவிங்கடா சொல்லுவிங்க..
கோயிந்தசாமி-ஜயா உங்க கதைகளை அப்பறம் வச்சுக்கோங்க முதல்ல தலையை கூப்பிட்டு விசாரிங்க.
நாட்டாமை-கூப்பிர்றா அந்த தம்பி சச்சினை.
ஓண்டிப்புலி-ஏன்னே நாட்டாமை கூப்பிடுறார்ல வாங்க.
சச்சின் - யேஸ் ஜ ஆம் சச்சின் வை ஆ யூ கோல் மீ...
நாட்டாமை-ஏண்டா இவர் ஜ எம் சச்சின்னா நான் எஸ்.ஜீ .நல்லதம்பீடா
ஓண்டிப்புலி-ஜயோ நாட்டாம ஜ ஆம் சச்சின் வை ஆ யூ கோல் மீ .என்றால் அவரது பெயர் சச்சினாம் ஏன் அவர கூப்பிட்டிங்கனு கேக்குறார்
நாட்டாமை-ஓஓஓஓஓஓஓ! சரி சரி ஏன் தம்பி சச்சின் ஒங்களுக்கு தமிழ் தெரியுமா தமிழ்மொழியில் பேசுங்க..
சச்சின்-பைன் .எங்க டீமில.தமிழ் பசங்க நிறையா பேர் விளையாடி இருக்காங்க் அதனால் எனக்கு தமிழ் பேச வரும் தமிழ் பேசுறன்.
நாட்டாமை-ரொம்ம நன்றீங்க தம்பி பஞ்சாயத்து ஆரம்பிக்க முன்பு ஒன்னு உங்களை பஞ்சாயத்துகு கூப்பிட்டதுக்கு உங்க ரசிகர்களை கொந்தளிக்கவேனாமுனு சொல்லுங்க இல்லாட்டி பதிவுக்கு கீழ கருத்துரைகளில் எனக்கு நொங்கு எடுத்துடுவாய்ங்க.
சச்சின்-நோ பிராப்ளம் என் ரசிகர்களே. ஒரு கிரிக்கெட் ரசிகன் நான் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் 100ராவது சதம் அடிப்பன் என்று எதிர்பார்து இருக்கான்.நான் அடிக்காதனால் ஏமாற்றம் அடைந்து பஞ்சாயத்தை கூட்டி இருக்கான் சோ நீங்கள் யாரும் இந்தபஞ்சாயத்து தலைவர் நல்லதம்பியை குறை சொல்லவேண்டாம் மாறாக அவருக்கு நல்ல கருத்துரைகளைக்கூறி அவரது பஞ்சாயத்து தொடர் மேலும் மேலும் வளர வாழ்த்துங்கள்
நாட்டாமை-தம்பி இப்பபுரியுது உங்களை ஏன் கிரிக்கெட்டையும் தாண்டி நிறைய பேருக்கு புடிக்குதுனு உங்க நல்ல மனசுக்கு நீங்க 100 சதம் இல்லைங்க 150 சதமே அடிப்பீங்க..
சச்சின்-நோ நோ நாட்டாமை நான் எப்பவும் சாதனைக்காக விளையாடுவது இல்லை என் அணி வெல்ல வேண்டும் என்பதற்கே விளையாடுபவன்
நாட்டாமை-ஏண்டா கோயிந்சாமி இந்த தம்பிதான் இவ்வளவு சொல்லுதே தான் சாதனைக்கு ஆக விளையாடுவது இல்லைனு பிறகு ஏண்டா அவரு 100 சதம் அடிக்கனும் அப்படி இப்படினு அவருக்கு தொல்லை குடுக்குறீங்க.
கோயிந்சாமி-ஜயா அவரு சாதனைக்கு விளையாடாட்டியும் சாதனைகள் அவரதேடி வருதே பிறகு நாங்க ஏன் அவருகிட்ட சாதனையை எதிர்பாக்க முடியாதுனு சொல்லுறீங்க.
ஓண்டிப்புலி-ஏண்டா கோயிந்சாமி நீ நாட்டாமையே எதிர்த்து பேசுறியா?
கோயிந்சாமி-நான் எங்க அண்ணே நாட்டாமையை எதிர்த்து பேசுறேன் எங்கள் மன ஆதங்கத்தைதானே சொல்லுறன்.
நாட்டாமை-ஏண்டா நீங்களே பேசிக்கிட்டு இருந்தா அப்ப நான் எதுக்குடா நாட்டாமைனு.
கோயிந்சாமி-அப்ப நல்ல தீர்ப்பா சொல்லுங்க
நாட்டாமை-ஏன் தம்பி சச்சின் நீங்க என்னா சொல்லுறீங்க..
சச்சின்-நாட்டாமை நான் அன்னைக்குச் சொன்னததான் இன்னைக்கு சொல்றன் இன்னைக்கு சொல்றதைத்தான் என்னிக்கும் சொல்வன்
நாட்டாமை-ஏன் தம்பி நீங்க தமிழ் சினிமாப்படம் பாப்பீங்களோ நல்லா பஞ்டயலாக் எல்லாம் பேசுறீங்க.முடிவா என்னதான் சொல்லுறீங்க?
சச்சின்-இல்லை என்னை கிரிக்கெட் சூப்பர் ஸ்டாருனு சொல்லுறாங்க அதான் சும்மா ஒரு பஞ்டயலாக்.நான் முடிவா என்ன சொல்லுறேன்னா அடுத்த இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த இரண்டு போட்டியுலயும் நான் சதம் அடிப்பதைவிட அணியின் வெற்றி பெறுவதைத்தான் விரும்புகின்றேன்.ஆனாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சிப்பேன்.
நாட்டாமை-ஏண்டா கோயிந்சாமி அதான் அந்த தம்பி தெளிவா சொலிடுச்சுல்ல இப்பசரிதானே. (சச்சினைப்பார்த்து)தம்பி சச்சின் நீங்க பஞ்சாயத்துக்கு வந்ததுக்கு நன்றி 100 வது சதம் அடிக்க இந்த நவீன நாட்டாமை நல்ல தம்பியும் வாழ்த்துகின்றேன்.
சச்சின் -நன்றி நாட்டாமை அப்ப நான் கிளம்புகிறேன்(சச்சின் பஞ்சாயத்தை விட்டு போகின்றார்)
கோவிந்சாமி-நாட்டாமை ஜயா பஞ்சாயத்து கூடினதே கூடிடுச்சு அப்படியே கேப்டன் டோனியையும் கூப்பிட்டு அடுத்த இரண்டு போட்டியிலையும் வென்று இங்கிலாந்து டெஸ்ட் தொடரை சமன் செய்யச்சொல்லுங்க.
நாட்டாமை-ஏண்டா ஒண்டிபுலி கோவிந்சாமி சொல்லுறது மாதிரி கேப்டனைக் கூப்பிடு அடுத்த போட்டிகளில் வென்று ரசிகர்களை மகிழ்ச்சி படுத்த சொல்லி தீர்ப்பு சொல்லி பஞ்சாயத்தை முடிப்பம்.
ஒண்டிப்புலி-கேப்டன் அதான் நாட்டாமை கூப்பிடுறார்ல வாங்க
கேப்டன்-ஏய் யார பஞ்சாயத்துக்கு கூப்பிடுற நானே ஒர் நாட்டாமைதான் எனக்கேவா? நான் நடிச்ச சின்னக்கவுண்டர் படம் பாத்தியா அதுலபாரு நான் நடிச்சு இருப்பேன் நாட்டாமையா அது நாட்டாம உங்க நாட்டாம நாட்டாமை மாதிரியா இருக்கான் அங்....
நாட்டாமை-டேய் ஒண்டிப்புலி இவர ஏண்டா கூப்பிட்ட நான் கேப்டன் டோனிய கூப்பிடச்சொன்னா,கேப்டன் விஜயகாந்த கூப்பிடுற
ஒண்டிப்புலி-தெளிவாச் சொல்லலாம்முல்ல கேப்டன்னா அது விஜயகாந் சார்தனே
நாட்டாமை-சார் கேப்டன் சார் உங்களை மாறி கூப்பிட்டுட்டம் மன்னிச்சுக்கோங்க நீங்க போய்ட்டு வாங்க
கேப்டன் -தமிழ்மொழியில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்புடா...இருந்தாலும் பரவாஇல்லை நா போறேன் அங்.
நாட்டாமை-ஸ் ........................அப்பாட நன்றி சார்.ஏம்பா கேப்டன் டோனிய கூப்பிடு..
ஒண்டிப்புலி-கேப்டன் டோனி வாங்க சார்.
டோனி- நாட்டாமைக்கு ஒரு விசில் போடு..
நாட்டாமை-ஏன் தம்பி நீங்க எப்படி நல்லா தமிழ் பேசுறீங்க..
டோனி-அது வந்து சென்னை சுப்பர் கிங்ஸ்டீமுக்கு கேப்டனா இருக்கேன்ல அதான் தமிழ் பேச கத்துகிட்டேன்.
நாட்டாமை-சரி தம்பி கிரிக்கெட் ரசிகன் கோயிந்சாமி சொலுறான் அடுத்த இரண்டு போட்டியிலையும் நீங்க வென்று இங்கிலாந்து டெஸ்ட் தொடரை சமன் செய்யனும்னு செய்வியளா?
டோனி-முதல்ல ஒரு விடயம் சொல்லனும் நல்ல தீர்ப்புகளுக்கு நாடவேண்டிய இடம் நவீன நாட்டாமை நல்லதம்பி(சொல்விட்டு டோனி நாட்டாமையைப்பார்க்கின்றார்)
நாட்டாமை-ஏண்டா ஒண்டிப்புலி என்னடா இந்தத்தம்பி நம்மள விளம்பரப்படுத்துது..
ஒண்டிப்புலி-அது வந்து அவர் விளம்பரத்துல நடிச்சு நடிச்சு அவருக்கு பழகிப்போச்சு.
நாட்டாமை-தம்பி விளம்பரப்படுத்துனது போதும் முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க நான் தீர்ப்பு சொல்லனும்.
டோனி-சேவாக் வந்து இருக்கிறதால் எங்க டீம் பலம் பெற்று இருக்கு.அவருடன் சேர்ந்து,தல சச்சின்,அண்ணாத்த ராவிட்,சின்ன அண்ணாத்த லக்ஸ்மன்,எல்லாம் சிறப்பா ஆடினா வெல்ல முடியும்.கண்டிப்பா வெல்லுவம்
கோயிந்சாமி-ஜயா அப்ப அவரு நல்லா ஆடுவாறானு கேளுங்க
நாட்டாமை-ஏம்பா டோனி கோயிந்சாமி கேக்குறதுக்கு என்னா பதில் சொல்லுற அடுத்தபோட்டிகளில் நீ நல்லா விளையாடுவியா?
டோனி-ஹி ஹி ஹி ஹி ஹி ஹி..................................................................
நாட்டாமை-சிரிப்பை விடு தம்பி இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த இரண்டு போட்டிகளில் நீ சதம் அடிப்பியோ இல்லை அரைச்சதம் அடிப்பியோ எனக்கு தெரியாது ஆனா போட்டியை வெல்லனும்டா இல்லாட்டி உன்னை கிரிக்கெட்டைவிட்டே தள்ளி வைக்கிறண்டா இது தான் தம்பி என்ற தீர்ப்பு.
(கோயிந்சாமியைப்பார்த்து)ஏண்டா கோயிந்சாமி இப்ப உனக்கு திருப்திதானே
கோயிந்சாமி-ஆமங்க ஜயா..
எல்லோறும் டோனியை பார்கிறார்கள்
டோனி இடது கைக்கு கீழ வலதுகையை வைச்சு சிக்னல் செய்கின்றார்
நாட்டாமை -ஏண்டா ஒண்டிப்புலி .தம்பி டோனி என்றா சிக்னல் செய்யுறார்
ஒண்டிப்புலி-நாட்டாம அவர் ரிவ்யூ கேட்கிறார்
நாட்டாமை-அப்புடினா என்னடா?
ஒண்டிப்புலி-நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்வது.
நாட்டாமை-ஜயோ ஆள விடுங்கடா சாமி.உங்க ஆட்டத்துக்கு நான் வரலை
நாட்டாமை தலைதெறிக்க ஓடுகின்றார் பின்னாலேயே அல்லக்கை ஒண்டிப்புலியும்.நாட்டாமை மனைவி ரகசியா ராணியும் ஓடுகின்றனர்
(இன்னு ஒருவர் பஞ்சாயத்து கூட்டும் போது காமடிப்பஞ்சாயத்து தொடரும்)
அப்படியே நீங்கள் கருத்துரைகளைச்சொல்லிவிட்டுப்போங்க முடிந்தால் தமிழ் மணம்,இன்ட்லி,உலவு,தமிழ் 10,போன்றவற்றில் ஓட்டுக்களைப்போட்டு விட்டுப்போங்க
|
12 comments:
நல்லா சிரிப்பு வருகின்றது.தொடர்ந்து பஞ்சாயத்து கூடுமா?
உங்களுக்கு தலயை கலாய்க்காட்டி தூக்கம் வராதோ நண்பா....ஆனாலும் தலயே நாட்டாமையை திட்ட வேண்டாம் என்று சொன்னதால நாட்டாமைக்கு வாழ்த்துக்கள்
@பிரியதர்சினி.மாணிக்கவாசகம் சொன்னது
நன்றி சகோதரி..கிழமைக்கு ஒருதடவையாவது பஞ்சாயத்து கூடும்
@பெயரில்லா சொன்னது....
நன்றி உங்கள் கருத்துரைகளுக்கு.
நீங்கள் சொல்வது போல் இல்லை.சச்சினின் சாதனைகளைப்பற்றியும் நான் பதிவுகள் எழுதியுள்ளேன்.சச்சின் சாதனைகள் நிகழ்த்தும் போது மகிழ்ச்சி அடையும் ரசிகர்களில் நானும் ஒருவன்
கிரிக்கெட்டை விட்டு தள்ளி வைத்தாலும் ஐ.பி.எல். ஆடி பணத்தை அள்ளுவார் தோனி!
@சிவகுமார் ! சொன்னது..
சரியாச்சொன்னீங்க..
நன்றி நண்பரே ..உங்கள் வரவு நல்வரவாகட்டும்.தொடர்ந்து வாருங்கள்
இந்தப் பஞ்சாயத்து கூடும்.எப்படியும் கிழமைக்கு ஒரு பஞ்சாயத்தாவது கூடும்.//
இது முந்திப் பண்பலை 98இல் வாற குணத்தான், மணியண்ணையின்....கருத்துக்களத்தினை எனக்கு நினைவுபடுத்துகிறது.
யோ...கொய்யாலா...படம் எல்லாம் சூப்பரா இருக்கு.
நீ காட்டுவியோ மறைப்பியோ முதல்ல நாட்டாமையின் கன்னிப்பஞ்சாயத்து ஆரம்பம்னு சொன்னியே கூப்பிர்றா அந்த கன்னிகளை..//
அவ்...அவ்....நாட்டாமைக்கு இப்ப கன்னி கேட்கும், அப்புறமா மப்பேத்த தண்ணியும் தேவைப்படுமோ;-)))
முதல் பஞ்சாயத்தில் நகைசுவைக்கு குறைவில்லை, எழுத்து நடையும் அருமை, ஆனால்...நான் நினைத்தேன் ஏதோ முக்கியமான விடயத்தினை வைத்துத் தீர்ப்புச் சொல்லப் போறீங்க என்று,
ஆனால் கிரிக்கெட்டை வைத்து கிளு கிளுப்பு ஏற்படுத்திட்டீங்க.
உங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
@நிரூபன் சொன்னது…
யோ...கொய்யாலா...படம் எல்லாம் சூப்பரா இருக்கு
நன்றி சகோ நான் தான் எடிட்செய்தன்
@நிரூபன் சொன்னது…
நீ காட்டுவியோ மறைப்பியோ முதல்ல நாட்டாமையின் கன்னிப்பஞ்சாயத்து ஆரம்பம்னு சொன்னியே கூப்பிர்றா அந்த கன்னிகளை..//
அவ்...அவ்....நாட்டாமைக்கு இப்ப கன்னி கேட்கும், அப்புறமா மப்பேத்த தண்ணியும் தேவைப்படுமோ;-))
உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் நண்பரே.
Post a Comment