Monday, August 08, 2011

இப்படியும் ஆங்கிலம் கற்கலாம்.ஒரு சுவையான பதிவு




பல்வேறுபட்ட மக்களுடன் தொடர்பை ஏற்படுத்த நாம் விரும்பியோ விரும்பாமலோ தாய்மொழிதவிர்ந்த ஏனைய மொழிகளையும் கற்கவேண்டிய சூழ்நிலை உருவாகுகின்றது.அப்படிப்பட்ட நேரங்களில் பெரும்பாலும் எல்லா நாட்டவர்களுக்கும் கைகொடுக்கும் ஒரு மொழி ஆங்கிலம் என்றால் அது மிகையாகாது.இன்றைய நாகரிக உலகில் பெரும்பாலும் ஆங்கில மொழியை தெரிந்தால். அவர் பெரிய அறிவுஜீவி போல நினைக்கின்றனர் சில ஞானசூன்யங்கள்.ஆனால் ஆங்கிலம் என்பது ஒரு மொழியே இன்றி அது ஒரு அறிவல்ல என்பதை அவர்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும் என்பது என்  கருத்து.

ஆங்கில மொழி பேசுவது என்ன அவ்வளவு கஸ்டமா என்று. இந்த மாதிரி ஞானசூன்யங்களின் செயற்பாட்டினால் ஒரு காலத்தில் நான் நினைத்தது உண்டு.இதனால் பாடசாலையில் படிக்கின்றபோது எனக்கு ஆங்கில மொழிமீது ஒரு கசப்புணர்வே ஏற்பட்டு விட்டது.எங்கள் ஊர்களில் பாடசாலைகளில் ஆங்கிலம் ஒரு பாடமாகத்தான் இருக்கும்.அது பெரும்பாலும் மதிய இடைவேளைக்கு அடுத்த பாடமாக இருப்பதால்.ஆங்கிலப்பாடத்தில் நித்திரைதான் இல்லாவிட்டால் இடைவேளை முடிந்தும் வகுப்பறைக்கு வராமல்,கிரிக்கெட்விளையாடி ஆங்கிலப்பாடத்துக்கு கட் அடிப்பது உண்டு.ஆனால் கிரிக்கெட்தான் எனக்கு ஆங்கிலமொழியை பிற்காலத்தில் கற்றுத்தரப்போகின்றது என்று அப்போது எனக்கு தெரிந்து இருக்கவில்லை.

எங்கள் பாடசாலையில் பெரும்பாலும் பொண்ணுங்க,ஆங்கிலப்பாடத்தில் கில்லாடியாக இருப்பார்கள்.பசங்க எப்பவும் சுமார்தான்.இதனால் எங்களுக்கு ஆங்கிலப்பாடத்தில் பெரும் சிரமம்தான்.
ஒரு சில அல்லக்கை பசங்க(எங்களுடன் சேராமல் பொண்ணுங்க கூடயோ இல்லை ஆசிரியர் கூட விசுவாசமாக சில பசங்க இருப்பாங்கதானே அவங்களை இப்படித்தான் நாங்க அழைப்பது)
அடுத்த நாள் படிப்பிக்க போகும் ஆங்கிலப்பாடத்தை பெரும்பாலும் ஆங்கிலப்புத்தகத்தை வாசிப்பதுதான்.எனவே அந்த அல்லக்கைகள் என்னா செய்வாங்கன்னா ஆங்கிலம் தெரிந்த யார்கிட்டையாவது போய் கேட்டு அடுத்த நாள் வாசித்துக்காட்டவேண்டிய பாடங்களை மனப்பாடம் செய்தோ இல்லை தமிழில் எழுதிவைத்தோ வாசித்துக்காட்டி தாங்கள் எதோ இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர்கள் மாதிரி பந்தா பன்னுவார்கள்,ஆசிரியரும்,பொண்ணுங்களும்,அந்த அல்லக்கை பசங்களுக்கு பாராட்டு மழை பொழிவார்கள்.எங்களுக்கு பல்ப்புதான்.
தமிழில் எழுதிவைத்து வாசிப்பது என்றால் உதாரணத்துக்கு-what you want?என்பதை ”வட் யூ வோன்ட்”என்று தமிழில் எழுதி அதை வாசிப்பதுஆகும்.இவர்கள் இதை வாசிக்கும் ஆங்கிலப்புத்தகத்தில் மறைத்துவைத்து வாசிப்பார்கள்.ஆசிரியரும் புத்தகத்தை வாங்கி பார்க்க மாட்டார் இதனால் அவங்களுக்கு சாதகமே.
ஏன் நீங்களும் அப்படி எழுதிவைத்து வாசிக்கலாமே என்று கேட்கலாம் ஆனால் எங்களுக்கு வெட்டி பந்தா பிடிக்காது என்று சொன்னாலும். உண்மை அதுஇல்லை ஆரம்பத்தில் இருந்தே அந்த அல்லக்கை பசங்க இந்த வழிமுறையக்கையாண்டதனால் ஆசிரியருக்கு அவங்க மேல சந்தேகம் இருக்காது. நாங்க ஆரம்பத்தில் ஆங்கிலப்பாடத்துக்கே நிற்காமல் விட்டு,ஆங்கிலத்தில் அக்கறை எடுக்காமல் விட்டு விட்டு. திடீர் என்று வாசித்தால்.ஆசிரியருக்கு சந்தேகம் வருமே அதனால் நாங்க அப்படிச்செய்வது இல்லை.

அப்ப டுபாக்கூர் வேலைபன்னி ஆங்கில ஆசிரியரிடமும்,பொண்ணுங்களிடமும் நல்ல பெயர் வாங்கிய அந்த அல்லக்கை பசங்க ஊரில இருக்கிறாங்க.இதில் ஒன்றை சொல்லவேண்டும் அவங்க ஆசிரியரிடமும்,பொண்ணுங்களிடமும் நல்ல பெயர் வாங்குவதால் மட்டுமே அவங்களுக்கும் எங்களுக்கும் ஆகாது மற்றபடி அவங்களும் எங்களுக்கு நண்பர்கள்தான்.
சில வேளை இந்தப்பதிவை அவங்க வாசித்தால் அவன்களுக்கு ஒன்று சொல்கின்றேன் மச்சான் அப்ப வெட்டி பந்தாமூலம் ஆங்கில ஆசிரியரிடமும்,பொண்ணுங்களிடமும்,நல்ல பெயர்வாங்கினீங்கதானே இப்ப உங்களுக்கு நான் சவால் விடுறன் ஏலும் என்றால் இப்ப வாங்க உங்கள் ஆங்கிலப்புலமையை சோதிப்பம்,நீயா நானா தொடர்ந்து பேசுவோம்,(ஹி,ஹி,ஹி ஒரு சின்ன சந்தோசம் தான்)

இப்படியாக எனக்கும் ஆங்கிலத்துக்கும் இடையிலான இடைவெளி நீண்டுகொண்டே போனது.வடிவேல் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் சொன்னதுபோல. கழிவறையில் அமர்ந்து கொண்டே கணப்பொழுதில் யோசித்தேன்.அப்படி என்னதான் ஆங்கில மொழியில் இருக்கின்றது.ஏன் நாம் அதைகற்க முடியாது முயன்று பார்க்களாமே.

சரி யாரிடம் ஆங்கிலம் கற்கலாம்,எனது அண்ணா ஆங்கிலத்தில் சரளமாக பேசுவார்,எழுதுவார்,வாசிப்பார்.அவரிடம் கற்கலாமா என்று யோசித்தபோது எதும் பிழை விட்டால் அண்ணா வாங்கு வாங்கென்று வாங்கிவிடுவார்.எனவே அந்த முயற்சியை கைவிட்டேன்

அப்போது எனக்கு ஒருவர் அறிமுகம் ஆனார் அவர் பெயர் கேதீஸ் என்னுடன் கிரிக்கெட் விளையாடும் ஒரு அண்ணன்.சில நேரங்களில் அவர் விளையாடவர மாட்டார் ஏன் என்று கேட்டால் ஆங்கில கிளாஸ்(வகுப்பு)எடுக்கப்போறனான் என்பார்.

ஆகா கையிலேயே வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகின்றோமே.அவரிடம் கேட்டேன் நானும் உங்கள் கிளாசுக்கு வரலாமா என்று அதற்கு அவர் தாராளமாக வா என்றார்.நானும் இரண்டு பொண்ணுங்களும் சேர்த்து மொத்தம் 3 பேர் வகுப்பில்.ஆசிரியர் ஏற்கனவே எனக்கு தெரிந்தவர்,எங்கள் கிரிக்கெட் டீமில் விளையாடுபவர் என்றதால் எனக்கு பிரச்ச்னை இருக்கவில்லை.நல்லாத்தான் போய்கிட்டு இருந்துச்சு.
அதைவிட அங்கு படித்த இரண்டு பொண்ணுங்களைவிட நான் நல்லா படிப்பன் என்றபடியால்(ஆங்கிலத்தில் இல்லை மற்ற பாடங்களில்)எனக்கு ஒரு மரியாதை கிடைத்தது.

ஒருநாள் நான் ஆசிரியர் கேதீஸ் அண்ணாவிடம் கேட்டேன் ஏன்ணே ஆங்கிலத்தை இலகுவாக கற்க ஏதும் வழிகள் இருக்கா?நீங்க எப்படி ஆங்கிலம் படிச்சிங்க.ஏன்னா எங்கள் ஊர்களில் பாடசாலைகள், கல்விக்கூடங்கள் தவிர்ந்த இடங்களில் ஆங்கிலம் பயன்படுத்தப்படுவது இல்லை.இனையதள வசதிகளும் இல்லை.எனவே யாராவது ஆசிரியரிடம் படித்தால்தான் உண்டு.
காரணம் என்ன என்றால் ஊரைச்சொல்கின்றேன் காரணத்தை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் கிளிநொச்சி.
எனவே ஆங்கிலம் பேசப்படுகின்ற சூழ்நிலை அங்கு இல்லை

எனவே.தான் நான் அவரிடம் கேட்டேன் அதற்கு அவர் எனக்கு ஒரு காரணத்தை சொன்னார்.தம்பி.உனக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்பதால் நீ இலகுவாக ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம்.கிரிக்கெட் போட்டிகளின் போது வர்ணையைக் கூர்ந்து கவனி .ஒரு 10,15,போட்டிகளுக்கு பிறகு அதில் என்ன சொல்கின்றார்கள் என்று உனக்கு புரிய ஆரம்பிக்கும். அடுத்த அடுத்தபோட்டிகளில் உனக்கே ஆங்கிலத்தின் மீதும் நேர்முகவர்ணனை மீதும் உனக்கு விருப்பம் வரும் காலப்போக்கில் உன்னாலும் ஆங்கிலம் பேசமுடியும் என்றார்.
அதை விட முடிந்தால் ஆங்கிலப்படங்களும்,பார் என்றார்.

முடிந்தால் பார் என்று அவர் சொன்னதற்கு காரணம் இருக்கின்றது எங்கள் ஊரில் ஆங்கிலப்படங்கள் தமிழாக்கம் செய்துதான் வெளியிடப்படும்,ஆங்கிலமொழியில் வராது அதனால்தான் அப்படிச்சொன்னார்.அடடா இதுவறை நமக்கு இந்த ஜடியா தோன்றாமல் போய்விட்டதே. கரும்புதின்ன கைக்கூலியா?.அதுவரை கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கின்றபோது.கங்குலியையும்,சச்சினையும்,சனத்தையும்,ஸ்ரிவோக்கையும்,ராகுல் ராவிட்டையும்,அத்தப்பத்துவையும்,இப்படி இவர்களின் ஆட்டங்களை மட்டுமே பார்த்துவந்த நான் முதன் முதலாக நேர்முக வர்ணனையும் காதுகொடுத்து கேட்க ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் அதில் சொல்லப்படுகின்ற கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள்,ஸ்கோர்கள்,மட்டுமே விளங்கினாலும்,போகப்போக எனது ஆசிரியர் கேதீஸ் அண்ணா சொன்ன மாதிரி.வர்ணணையில் என்ன சொல்கின்றார் என்பது புரிய ஆரம்பித்தது.இதனால் போட்டிகளில் வீரர்களின் ஆட்டங்களைவிட அவர்கள் கொடுக்கும் பேட்டிகள்,நேர்முக வர்ணணை,போன்றவர்றை ரசித்துப்பார்க்க ஆரம்பித்தேன்.இதனால் எனக்கு இந்த வழிமுறைகளைச்சொன்ன ஆசிரியர் கேதீஸ் அண்ணாவின் கிளாசுக்கு போவதையும் கட்பன்னி விட்டேன்.

நாமதான் கிரிக்கெட் பார்த்து ஆங்கிலம் படிக்கின்றோமே பிறகு என்னாத்துக்கு அவரது கிளாஸ்.இந்தக்காலப்பகுதியில் இந்திய கிரிக்கெட் அணியின் அசைக்கமுடியாத தலைவராக இருந்த சவ்ரவ்கங்குலியை எனக்கு மிகவும் பிடிக்கு அவரது தீவிரமான ரசிகன் நான்.எனவே கங்குலி பேட்டி கொடுக்கும் போது அதை உற்று கவனிப்பேன்,ஒரளவு அவர் என்ன சொல்கின்றார் என்று புரிந்தாலும்.ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்ட கிரிக்கெட் வீரர்கள் இருக்கின்றார்கள் தானே,அவர்கள் கதைப்பது புரியாது ஏன் என்றால் அவர்களின் உச்சரிப்பு வேகமாக இருக்கும். இதனால்.போட்டி முடிந்ததும் வீரர்கள் பேட்டி கொடுத்தால் அதைனை பதிவு செய்து(ரெக்கோட் பன்னி)பின்பு பலமுறை அதனை திருப்பிதிருப்பி கேட்க ஆரம்பித்தேன்.(போட்டியின்ஆட்ட நாயகன்,கேப்டன்கள் போன்றோர்கள் பெரும்பாலும் பேட்டி கொடுப்பார்கள்)

இதனால் காலப்போக்கில் எந்த ஆங்கிலத்தைவெறுத்தேனோ அதே ஆங்கிலத்தின் மீது எனக்கு காதல் வந்துவிட்டது.ஆங்கிலப்பத்திரிகைகளில் வருகின்ற செய்திகளை தேடிப்படிப்பேன்,ஆரம்பத்தில் கிரிக்கெட் செய்திகளை மாத்திரமே என்னால் வாசிக்க முடிந்தது காரணம்,போட்டிகளை பார்த்துவிடுவதால்,என்ன செய்தி சொல்லப்படுகின்றது என்று இலகுவாகப்புரியும்.பிறகு படிப்படியாக,ஏனைய செய்திகளையும் என்னால் வாசிக்கமுடிந்தது.

பிரிட்னி பியர்ஸ் மேடம் அழகா இருக்காங்களா

இதில் இன்னும் ஒரு விடயம்.பொப் பாடகி பிரிட்னி பியர்ஸ்சை.எனக்கு ரொம்பப்புடிக்கும் அதனால் அவங்கள் சம்மந்தமான செய்திகளையும் தேடிப்படித்தேன்.(அப்போது பிரிட்னி பியர்ஸ் சம்மந்தமான செய்திகள் ஆங்கிலப்பத்திரிகைகளில் பிரபல்யம்)பின் விளங்காத சொற்களை,அகராதியில் பார்த்து தெரிந்து கொண்டேன்.

ஒருவாறு என்னால் இப்போது ஆங்கிலத்தில் பேச வாசிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்து விட்டது.இதில் இன்னும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றும் நடந்தது.ஆரம் பத்தில் கிரிக்கெட் வர்ணணையை கேட்க ஆரம்பித்தபோது ஒரு நாள்.எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு அக்காவும் அவர்கணவரும்,ரேடியோவில் கிரிக்கெட் வர்ணனை கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.அவர்கள் ஆங்கிலம் நன்றாக பேசுவார்கள்,நான் அவர்களிடம் ஸ்கோர் என்ன வென்று கேட்டேன்,அதற்கு அவர்கள் ஸ்கோர் கேட்குற ஆளைப்பார் என்று என்னைப்பார்த்து சொன்னார்கள்.இப்ப விளங்குகின்றதா நான் ஏன் பதிவின் ஆரம்பத்தில் ஞானசூன்யங்கள் என்று குறிப்பிட்டது இப்படி பட்டநபர்களைத்தான்.எனக்கு சரியான அவமானமாகப்போய் விட்டது.உடனே நான் அவர்களிடம் போய் ஸ்கோர் கேட்டால் என்ன பிரச்சனை உங்களுக்கு நான் இந்த வர்ணணையில் என்ன சொல்கின்றார்கள் என்று சொல்லவா என்றேன்.அதற்கு அவர்களும்,சரி என்றார்கள்.ஏதோ தைரியத்தில் சொல்லி விட்டேன் ஆனாலும் எனக்கு மனதுக்குள் சின்ன பயம் தப்பித்தவறி பிழையாக சொல்லி விட்டால்.இருந்தாலும் மனதை திடப்படுத்திக்கொண்டு வர்ணனையைக்கேட்க ஆரம்பித்தேன் எனது நல்லகாலம் இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டிதான் நடந்து கொண்டு இருந்தது வீரர்களின் பெயர்கள் எல்லாம் பழக்கப்பட்ட பெயர்கள்தான் எனவே வடிவாக அவதானித்தேன் என்ன சொல்கின்றார்கள் என்று .


எந்தப்போட்டி தெரியுமா நம்ம தலை கங்குலி குறைந்த ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 10,000ம் ஓட்டங்களைக்கடந்த வீரராக சாதனை படைத்தாரே அந்தப்போட்டிதான் அப்போது தலைதான் ஆடிக்கொண்டு இருந்தார்.நான் நன்றாகக்கேட்டேன் வர்ணனையாளர் என்ன சொல்கின்றார் என்று.அவர் சொல்வது தெளிவாகப்புரிந்தது.உடனே நான் வர்ணனையாளர் சொன்னதை அப்படியே அவர்களிடம் சொல்லிவிட்டு தல 10,000 ரன்களைக்கடந்த சந்தோசத்தில் வந்து விட்டேன்.அந்த அக்காவும்.அவரது கணவரும் அடுத்தநாள்.என்னிடன் மன்னிப்பு கேட்டது வேறவிடயம்.


இப்படி எனது ஆங்கில அறிவு ஒரளவு நன்றாக வளர்ந்து விட்டது
ஆனால் அடுத்த ஆப்பு எனக்கு காத்து இருந்தது.
சந்தர்ப்ப வசத்தால் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பும் எனக்கு கிடைக்கவில்லை.என்ன செய்யலாம் என்று சிந்தித்தபோது.

இலங்கையில் பல்கலைக்கழகங்களைவிட பல பிரசித்தி பெற்ற தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன,அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பெரும்பாலும் படிப்பு முடிந்ததும் நல்ல வேலைகள் கிடைக்க கல்லூரிகளே உத்தரவாதம் வழங்குகின்றன.
பாடசாலைக்காலத்தில் தமிழ் மொழியில் எழுதிப்படிப்பது என்பதால் ஆங்கிலப்பாட நேரம் தவிர பிரச்சனை வராமல் இருந்தது.உயர்கல்வி என்று வந்த போது முழுக்க ஆங்கிலம்,அதுவும் இலங்கையில்,கண்டி,கொழும்புப்பக்கம் இருக்கும் மாணவர்கள் ஆங்கிலம் பேசும் சூழ்நிலைகள் அவர்களுக்கு இருப்பதால் இயல் பாகவே ஆங்கிலத்தில் அவர்களால் ஒரளவு சரளமாக எழுதப்பேச முடியும்.

நம்ம பாடு கோவிந்தாதான் ஆனால் எனக்கு இப்ப ஆங்கிலம் பேசவும் வாசிக்கவும் தெரிந்ததால் பெரிய பிரச்சனை இருக்கவில்லை.எழுத்து என்று வரும்போதுதான் எனக்கு அப்பதான் விளங்கியது,அடடா.கிரிக்கெட்டைபார்த்து ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்ட எனக்கு, ஆங்கிலம் எழுதுவதை யோசிக்காமல் விட்டு விட்டோமே என்று.மீண்டும் பிரச்சனை ஆனால் தொடர்ந்து வகுப்புக்களை கவனிக்கும் போது எனக்கும் இயல்பாகவே ஒரளவுக்கு ஆங்கிலத்தில் பாடங்களை எழுதமுடிந்தது.முழுமையாக எழுதமுடியவில்லை.இப்போதும் முயற்சி செய்கின்றேன் காலப்போக்கில் ஆங்கிலத்தில் முழுமையாக எழுதவும் கற்றுக்கொள்வேன் என்ற நம்பிக்கை உள்ளது பார்ப்போம்.

இதைவிடநான் கொழும்பு போய் வருகின்றபோது கொழும்பில் இருந்து வவுனியாவுக்கு ரெயினில்(புகையிரதம்)வரும் போதுகிட்டதட்ட 7, 8 மணித்தியாளங்கள் ஆகும்.அந்த சந்தர்ப்பங்களில் சுற்றுலாவரும்நிறைய வெள்ளைக்காரங்க,ரெயினில் வருவாங்க.நான் அவங்களிடம் போய் நானா பேசுவேன்.எந்தப்பிரச்சனையும் இன்றி அவர்களிடம் ஆங்கிலத்தில் கதைக்கலாம் காரணம் அவர்கள் நான் என்ன சொல்கின்றேன் என்றுதான் பார்ப்பார்களேதவிர சிலநம்ம இங்கிலீஸ்படித்த தழிழ் ஞான சூன்யங்கள் மாதிரி நாம் கதைப்பதில் அந்தப்பிழை இந்தப்பிழை என்று குறை சொல்ல மாட்டார்கள்.காரணம் நம்ம ஆளுகள் ஆங்கிலத்தை அறிவாக பார்க்கின்றார்கள்.அவங்க ஆங்கிலத்தை மொழியாகப்பார்க்கின்றார்கள்

இதனால் மகா ஜனங்களே உங்களுக்கு சொல்வது என்ன வென்றால்

  • முதலில் ஆங்கிலம் என்பது ஒரு மொழி அது ஒரு அறிவல்ல என்பதை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள்
  • ஆங்கிலம் மட்டும் இல்லை எந்த மொழியாக இருந்தாலும் அதை நாம் இலகுவாக கற்பதற்கு அந்த மொழி பேசுகின்ற சூழ் நிலைகளை உருவாக்கிக்கொள்ளவேண்டும்
  • அத்தோடு அந்த மொழிப்படங்களை பார்த்தாலும் முழுமையாக புரியா விட்டாலும் சில புதிய சொற்களை கற்றுக்கொள்ளலாம்.
  • அதைவிட ஆங்கிலத்தை படித்தால் மட்டும் போதாது அதை நாம். கதைப்பது சரியோ பிழையோ என்ற அச்சத்தைவிட்டு முதலில் கதைக்கவேண்டும்,பேசப்பேசத்தான் எமது உச்சரிப்புக்கள்.தெளிவு பெரும் 
  • அத்தோடு இப்போது பல இனையதளங்கள் ஆங்கிலமொழியை இலகுவாக கற்பதற்கு உதவி புரிகின்றன கூகுளில் தேடிப்பாருங்கள் அற்புதமான பல இனையதளங்களின் பெயர்கள் கிடைக்கும்.
  • அத்தோடு உங்களுக்கு ஆர்வமான துறைகள் என்று இருக்கும்தானே.அது சம்மந்தமான ஆங்கில கட்டுரைகள் .வீடியோக்களைப்பாருங்கள்.தெரியாத சொற்களை அகராதியில் பார்த்து முழுமையான அர்த்தங்களை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.உங்களாலும் ஆங்கிலம் பேசமுடியும் என்பதை நீங்கள் உணரத்தொடங்குவீர்கள்.இது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை.கிரிக்கெட்மீது இருந்த ஆர்வம் எப்படி எனக்கு ஆங்கிலத்தை கற்றுத்தந்ததோ அதே போல்.உங்களாலும் முடியும்.
ஆங்கிலம் கற்க எவ்வளவோ வழிமுறைகள் இருக்கலாம்,அத்தோடு பல ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களிடம் நீங்கள் படிக்கலாம்.அவற்றுக்கு முன்னால் நான் சொன்ன விடயங்கள் மிகச்சிறியதே.இது என் அனுபவங்கள்தான்.

தல பேசுகின்றார் பாருங்கள் என்ன ஒரு ஸ்டைல்

இன்று என்னாலும் ஆங்கிலத்தில் பேச முடிகின்றது என்றால் அதற்கு,ஒரு காரணமாக இருந்த கிரிக்கெட்டிற்கும்.முக்கியமாக தல கங்குலிக்கும் நன்றிகள் ஏன் என்றால் நான் அதிகளவு மீண்டும் மீண்டும்,கேட்டு புரிந்து கொண்ட கிரிக்கெட் வீரர்களின் பேட்டிகளில் கங்குலியினுடைய பேட்டிகள் தான் அதிகம்.ஒரு விடயத்தை திருப்பத்திரும்ப,கேட்டால் சலிப்ப்பு ஏற்படுவது வழமையே ஆனால் நான் கங்குலியின் தீவிர ரசிகன் என்ற படியால் எனக்கு அவரது பேட்டிகளை மீண்டும் மீண்டும் கேட்கும் போது சலிப்பு வரவில்லை அந்தவகையில் தலைக்கு நன்றிகள்.
இப்போது கங்குலி நேர்முக வர்ணணையாளர் ஆகிவிட்டதால் எனக்கு அவரது ஆங்கில வர்ணணைகளைக்கேட்டும் போது அவர் எதோ என் தாய்மொழி தமிழில் கதைப்பது போல் எனக்குத்தோன்றுகின்றது.


முயன்றால் முடியாதது எதுவும் இல்லை முயன்று பாருங்கள் உங்களாலும் முடியும்

உங்கள் கருத்துரைகளைச்சொல்லிவிட்டுப்போங்க
முடிந்தால் ஓட்டுக்களையும்போட்டுவிட்டுப்போங்க.



Post Comment

23 comments:

நிரூபன் said...

ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் அருமையான பதிவு,
எம் பள்ளி நாட்களிலும் ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படித்திருக்கிறோம்;-)))
சேம் சேம் பப்பி சேம்...

சேக்காளி said...

மிக மிக பயனுள்ள கட்டுரை!.ஆங்கிலம் கற்க ஆர்வம் உள்ள அளவிற்கு நம்மில் எத்தனை பேர் முயற்சி செய்கிறோம்?.வெட்கப் படாமல் ஆங்கிலம் நம் வாயில் இருந்து வர ஆரம்பித்து விட்டால் அப்புறம் தொடர்வது எளிது தான்.மேலும் மற்ற மொழிகளை கற்பதற்கும் ஆங்கிலம் கற்பதற்கும் உள்ள வித்தியாசம் மற்ற மொழிகளின் தவறுகளை முதலில் நாம் கற்பதில்லை.எனவே தப்பு தப்பாக பேச ஆரம்பித்து பின்பு தவறுகளை திருத்திக் கொள்கிறோம்.ஆனால் ஆங்கிலத்தில் தவறுகளை தெரிந்து கொண்டு அடுத்து பேச ஆரம்பிக்கும் போது தவறாக பேசி விடுவோமோ என்ற சுய கௌரவம் பேசாமலேயே இருந்து விட செய்கிறது.எப்படியோ "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்"என்பது எம்மொழியும் நாப்பழக்கம் என்றும் ஆகும்.

K.s.s.Rajh said...

@சேக்காளி சொன்னது…
//மிக மிக பயனுள்ள கட்டுரை!.ஆங்கிலம் கற்க ஆர்வம் உள்ள அளவிற்கு நம்மில் எத்தனை பேர் முயற்சி செய்கிறோம்?.வெட்கப் படாமல் ஆங்கிலம் நம் வாயில் இருந்து வர ஆரம்பித்து விட்டால் அப்புறம் தொடர்வது எளிது தான்.மேலும் மற்ற மொழிகளை கற்பதற்கும் ஆங்கிலம் கற்பதற்கும் உள்ள வித்தியாசம் மற்ற மொழிகளின் தவறுகளை முதலில் நாம் கற்பதில்லை.எனவே தப்பு தப்பாக பேச ஆரம்பித்து பின்பு தவறுகளை திருத்திக் கொள்கிறோம்.ஆனால் ஆங்கிலத்தில் தவறுகளை தெரிந்து கொண்டு அடுத்து பேச ஆரம்பிக்கும் போது தவறாக பேசி விடுவோமோ என்ற சுய கௌரவம் பேசாமலேயே இருந்து விட செய்கிறது.எப்படியோ "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்"என்பது எம்மொழியும் நாப்பழக்கம் என்றும் ஆகும்//

நன்றி நண்பரே தங்கள் வருகைக்கு.
நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பா.

K.s.s.Rajh said...

@நிரூபன் சொன்னது…
ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் அருமையான பதிவு,
எம் பள்ளி நாட்களிலும் ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படித்திருக்கிறோம்;-)))
சேம் சேம் பப்பி சேம்..
ஹி,ஹி,ஹி,ஹி,ஹி

சக்தி கல்வி மையம் said...

நண்பரே..
தங்களின் தளத்திற்கு முதன்முதலாய் வருகிறேன்..
வாழ்த்துக்கள்..

இனி தொடர்ந்து வருவேன்..

சக்தி கல்வி மையம் said...

ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை அருமையாக சொல்லி இருக்கீங்க,,
பாராட்டுகள்..

Anonymous said...

சேம் பிளட் ))

K.s.s.Rajh said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது..
நன்றி நண்ரே உங்கள் வருகைக்கு.

K.s.s.Rajh said...

@கந்தசாமி. சொன்னது…
சேம் பிளட் )

நன்றி நண்பா

மாலதி said...

தங்களின் தளத்திற்கு முதன்முதலாய் வருகிறேன்..
வாழ்த்துக்கள்..

இனி தொடர்ந்து வருவேன்..

மாலதி said...

ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் பதிவு,

K.s.s.Rajh said...

@மாலதி சொன்னது..
நன்றி.தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்

சமுத்ரா said...

good one

பாலா said...

நண்பரே கிட்டத்தட்ட உங்களைப்போலத்தான் நானும் ஆங்கிலம் கற்றேன். ஆங்கிலத்தை பார்த்தை அஞ்சாமல், அதை அலட்சியமாக கற்றாலே எளிதில் கற்று விடலாம். நன்றி.

K.s.s.Rajh said...

@சமுத்ரா சொன்னது…
good one
நன்றி மீண்டும் வருக

K.s.s.Rajh said...

@பாலா சொன்னது…
நண்பரே கிட்டத்தட்ட உங்களைப்போலத்தான் நானும் ஆங்கிலம் கற்றேன். ஆங்கிலத்தை பார்த்தை அஞ்சாமல், அதை அலட்சியமாக கற்றாலே எளிதில் கற்று விடலாம். நன்றி

நன்றி நண்பரே. தாங்கள் சொல்வது உண்மைதான்

சுதா SJ said...

என் முதல் வருகை
அசத்தலாக எழுதுகிறீர்கள்
தொடர்ந்து வருவேன் நண்பா

சுதா SJ said...

சேம் சேம் பப்பி சேம்

சுதா SJ said...

பயன் உள்ள பதிவு பாஸ்
இன்றைய காலகட்டத்தின் தேவை அறிந்து அழகாக எழுதி உள்ளீர்கள்
வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

@"கற்றது தமிழ்" துஷ்யந்தன் சொன்னது…
என் முதல் வருகை
அசத்தலாக எழுதுகிறீர்கள்
தொடர்ந்து வருவேன் நண்பா

நன்றி நண்பா.நல்வரவு

பிரியதர்சினி.மாணிக்கவாசகம் said...

நல்ல தகவல்,,,,,,

Anonymous said...

A good blogpost. Hope this will get a prize in Tamilmanam contest soon

Ur method of learning is as follows:

Remove urself to a place where English is spoken freely.

Remove hesitation or shyness

Learn it through things familar to u.

Friend,

These methods r not new. In use in teaching of English. V teach English through the method of unconscious learning in familar circumstances.

I wd suggest u may listen to Britney Spears's songs also in English. Watch good hollywood movies also.

But all will take time. So, for quicker results, work hard reading and listening.

K.s.s.Rajh said...

//பெயரில்லா சொன்னது…
A good blogpost. Hope this will get a prize in Tamilmanam contest soon.//

my dear friend.
Thanks for your comment.
this is only my own experience.
welcome to my webpage.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails