Wednesday, August 10, 2011

(50வது பதிவு)மரணம் உடல்களைப்பிரிக்கலாம் ஆனால் நட்புக்கு என்றும் மரணம் இல்லை



வணக்கம் நண்பர்களே பதிவுக்கு போகமுன் கொஞ்சம் இதையும் படிங்க.
இது எனது 50வது பதிவாகும்.பதிவுலகில் நான் தடம் பதித்து கிட்டத்தட்ட 9மாதங்கள் ஆகிவிட்டது கடந்த ஆண்டின் இறுதியில் பதிவுலகில் நுழைந்தாலும்.பதிவுலகம் பற்றி எனக்கு பெரிதாக தெரியாத படியால் ஆரம்பத்தில் என் பதிவுகள் பலரைச்சென்று சேரவில்லை.இந்த ஆண்டில் தான் எனக்கும் பதிவுலகில் ஒர் அங்கிகாரம் கிடைத்தது.இப்ப நிறையவாசகர்கள் என் வலைப்பதிவை படிக்கின்றார்கள்.இது மிகுந்த மகிழ்ச்சியை தந்தாலும். ஆரம்பத்தில் நான் பதிவுலகில் அடையாளம் காணப்படவில்லை என்று எனக்குள்ளே ஒரு வருத்தம் இருந்தது. தேடிப்போய் நான் கருத்துரை போட்டாலும்.எனக்கு கருத்துரைகள் வருவது குறைவாகவே இருந்தது.இதனால்.நான் சரியாக எழுதவில்லையோ என்று எனக்கு கவலை இருந்து கொண்டே இருந்தது. நான் எழுதி பெரிய அளவில் கவனிக்கப்படாத பதிவுகள் சிலவற்றை இந்தப்பதிவின் இறுதியில் பட்டியல் இட்டு உள்ளேன்.அவை பெரிதாக கவனிக்கப்படாவிட்டாலும்.நல்லபதிவுகளாக எனக்குத்தோன்றியவை.



எனது பதிவுகளை வாசித்து ஆதரவு வழங்கிவரும்.எனது வாசகர்கள் மற்றும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.குறிப்பாக இரண்டு பேருக்கு நன்றி சொல்ல வேண்டும்.ஒன்று வலைப்பதிவர் பாலாவின் பக்கங்கள் நண்பர் பாலா.இதை ஏன் சொல்கின்றேன் என்றால் என் தளத்தை தனது தளத்தில்.நீங்களும் வாசிக்கலாம் பகுதியில் இணைத்து எனக்கு முதன் முதலில் ஓர் அங்கிகாரம் வழங்கினார்.இன்று எனது தளத்திற்கு வரும் வாசகர்களில் ஒரு பகுதியினர் இவரது தளத்தின் ஊடாகவே வருகின்றார்கள்.நண்பரே இது மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றினாலும் பரவாஇல்லை.ஏற்கனவே எனது முரளிதரன் பற்றிய தொடரில் உங்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தாலும்.உங்களுக்கு மீண்டும் என் 50வது பதிவில் மனமார்ந்த நன்றிகள்.
இரண்டாவது வளர்ந்துவரும் பதிவர்களை ஊக்கப்படுத்தும்.நண்பர் நாற்று நிரூபன்.இவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.அனைத்து வாசகர்கள்.மற்றும் சக வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் மனமார்ந்த நன்றிகள்.


சரி பதிவுக்கு வருவோம்
இந்தப்பதிவு. என் நண்பர்கள்.சுஜந்தன் மற்றும்.மரிய யூலியன் இருவருக்கும் சமர்ப்பணம்.இவர்கள் தற்போது இந்த உலகில் இல்லை.




சுஜந்தன்
இவன் எனக்கு என் 10ம் வகுப்பில் அறிமுகமானவன்.பார்ப்பதற்கு முரட்டுத்தோற்றம் கொண்டவனாக தோன்றினாலும் உண்மையில் இவனது மனம் குழந்தை போல அது இவனுடன் பழகியவர்களுக்குத்தெரியும்.பாடசாலையில் பலருக்கு இவனைப்பிடிக்காது.காரணம் என்னவென்றால் இவன் சுபாவம்தான்.இவனுக்கு கோபம் கொஞ்சம் அதிகமாக வரும்.ஏன் நான் கூட இவனுடன் ஆரம்பத்தில் பெரிதாக பழகவில்லை.பெற்றோர்கள் தூர இடத்தில் இருப்பதால் இவன் எங்களது பாடசாலைக்கு அருகில் இருந்த அவர்களது கடையின் பின்னால் இருந்த அறையில் தங்கி இருந்து படித்து வந்தான்.பெரும்பாலும் நான்,இவன்,அர்ச்சுணா என்ற இன்னும் ஒரு நண்பன் மூவரும் தான் ஒன்றாக திரிவோம்.அன்புக்காக ஏங்கிய இவன் ஆரம்பத்தில் 11ம் தரத்தில் படிக்கும் போது ஒரு பெண்னைக்காதலித்தான் ஆனால் அவன் அந்தக்காதலை அவளிடம் சொல்லவில்லை.ஏன் எங்கள் வகுப்பில் படித்த பலருக்கு கூடதெரியாது.எனக்கும் அப்போது தெரியாது.இந்தக்காலப்பகுதியில் அந்தப்பெண் மீது எனக்கும் காதல் வந்துவிட்டது.அந்தவயதில் அதை காதல் என்று எல்லாம் சொல்ல முடியாது இருந்தாலும் அப்படித்தான்.காதலைசொல்லவெல்லாம் தைரியாம் இல்லாத வயசு அது.பின் அந்தப்பெண் உயர்தரக்கல்விக்காக வேறு பாடசாலைக்குச்சென்று விட்டாள்.நானும் இவனும் ஒன்றாகவே உயர்தரம் படித்தோம்.எனக்கு அவள் மீதான காதல் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
இப்படி இருக்கும் போது அவன் என்னிடம் ஒரு நாள் சொன்னான். மச்சான் (அந்தப்பெண்ணின் பெயரைச்சொல்லி)நான் அவளைக்காதலிக்கின்றேண்டா என்றான்.
(பெயர் என்ன வென்று நீங்கள் கேட்பது புரிகின்றது அது எல்லாம் சொல்ல முடியாது நண்பர்களே ஏன் என்றால் அவள் சில வேளை இந்தப்பதிவை வாசிக்கலாம் அதனால் சொல்ல முடியாது,ஆனால் நான் அவளைக்காதலித்தது அவளுக்கு தெரியும். என்பதால் அவள் புத்திசாலியாக இருந்தால் இப்போது சுஜந்தனின் காதலைப்பற்றியும் தெரிந்து கொள்வாள்)

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை நான் அவனிடம் சொன்னேன் மச்சான் நானும் அவளை லவ் பன்னுறண்டா.....ஆனால் நீ லவ் பன்னுறது இப்ப நீ சொல்லித்தான் தெரியும் ஏண்டா முன்னாடியே சொல்லி இருக்கலாம்தானே என்றேன்.ஒரு கணம் திகைத்துப்போய் நின்றான் பிறகு சொன்னான் பரவாஇல்லை ராஜ் நீயே அவளை லவ் பன்னிக்கொள் நான் என் லவ்வை மறந்து விடுகின்றேன் என்றான்.
அவன் சும்மா சொல்லவில்லை.உண்மையாகவே நான் காதலைத்தேடிய பக்குவப்படாத அந்த பருவத்தில் என் கூடவே துணையாக நின்றான்.


காலங்கள் யாருக்காகவும் காத்து இருப்பது இல்லை அது தன் போக்கில் போகும்,பிறகு சுஜந்தன் இன்னும் ஒரு பெண்ணைக்காதலித்து அவளிடம் இவன்காதலைச்சொன்னபோது அவள் இவனதுகாதலை ஏற்றுக்கொள்ளவில்லை.ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பரவாஇல்லை இவனை அவமானப்படுத்திவிட்டாள்.பிறகு அந்தப்பெண் எங்கள் வகுப்பில் படித்த இன்னும் ஒரு பையனைக்காதலித்து .எதோ காவியக்காதல் ரேஞ்சுக்கு பில்டப்பன்னி.இப்ப அவனைவிட்டு விட்டு வேறு ஒருவனை திருமணம் செய்து விட்டாள் அது வேறகதை.
எனக்கு ஒரு கவலை சுஜந்தன் இந்த உலகில் வாழும்போது பலர் இவனை புரிந்து கொள்ளவில்லை புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாஇல்லை அவர்கள் இவனை காயப்படுத்தாமலாவது இருந்து இருக்கலாம்.
காலஒட்டத்தில் எம் மண்ணின் சாபக்கேடான யுத்தத்தில் சாவு இவனையும் தன்னுடன் அணைத்துக்கொண்டது.

சுஜந்தனுக்கும் எனக்குமான நட்பை விவரிக்க வார்த்தைகள் என்னிடன் இல்லை


மரியயூலியன்
சுஜந்தனைப்போலத்தான் யூலியனும் என் பாடசாலை வாழ்க்கை எனக்குத்தந்த என் நண்பர்களில் இவனும் ஒருவன்.இவன் எனக்கு உயர்தரத்தில் கல்வி கற்கும் போதுதான் அறிமுகம் ஆனான்.இவன் நம்ம இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் அசைக்கமுடியாத கேப்டன் கங்குலியின் தீவிரமான ரசிகன்.இந்த விடயம் தான் எனக்கும் இவனுக்குமான நட்பை வலுப்படுத்தியது. இவனது மரணம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது.யுத்த மழைபொழிந்த எம் மண்ணில் எல்லோறும் எங்கே இருக்கின்றார்கள் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் தேடிக்கொண்டு இருந்த காலப்பகுதியில் இவனது மரணம் நிகழ்ந்துவிட்டது.
சுயன்(சுஜந்தன்) எனக்கு எப்படியோ அதேபோல் யூலியனுக்கும் எனக்குமான நட்பும் மிகவும் ஆழமானது.


வன்னி மண்ணில் பிறந்தது நாங்கள் செய்த குற்றமா.இல்லையே ஆனால் பாலாப்போன கடவுள் எங்களை அங்கு படைத்துவிட்டு எங்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும் பரவாஇல்லை.எங்களுக்கு கஸ்டத்தை வழங்காமல் இருந்து இருக்கலாம். எங்கள் தலைவிதியாக நாங்கள் வாங்கிவந்த வரத்தில்..குருதிக்கறை படிந்த சாவுக்கே சவால் விட்ட எங்கள் மண்ணில் இறந்து போன உறவுகளில் இவர்களும் கலந்துவிட்டார்கள்.

இந்த உலகில் நான் வாழும் காலம் முழுவதும் உங்களை என்றும் நினைவுகூர்ந்து கொண்டே இருப்பேன்.என் அன்பு நண்பர்களே.
.
By-K.s.s.Rajh


நான் எழுதிய பெரிதாக கவனிக்கப்படாத சில எனக்குப்பிடித்த பதிவுகள்

  1. சிறுகதை-விதியின் ரேகை
  2. என்னவளே அடி என்னவளே
  3. ஈழத்துப்பெண் ஒருத்தியின் கதை கவிதை வடிவில்
  4. மீண்டும் ஒரு கவிதை உனக்காக
  5. சச்சினின் 50வது டெஸ்ட் சதம் தற்போது விளையாடுகின்ற வீரர்களால் முறியடிக்க முடியுமா?/
  6. எங்க ஊர் கிறிகெட் அணி vs உலகநட்சத்திர கிறிக்கெட் அணி,ஒரு கலக்கல் கற்பனை கிறிக்கெட்போட்டி
  7. காதலர் தின சிறப்பு நேர்காணல்
  8. உலகக்கோப்பை கிரிக்கெட் லொள்லு/நம்ம கேப்டன்கள் ரூம் போட்டு யோசிச்சால்.
நன்றி
வணக்கம்

Post Comment

12 comments:

Anonymous said...

வாழவேண்டிய வயசில் .... கொடுமை நண்பா ..என்ன பாவம் செய்தார்கள் அவர்கள் ((

K.s.s.Rajh said...

@கந்தசாமி. சொன்னது…
வாழவேண்டிய வயசில் .... கொடுமை நண்பா ..என்ன பாவம் செய்தார்கள் அவர்கள் (

எல்லாம் எங்கள் தலைவிதி என்று நொந்து கொள்ள வேண்டியதுதான்

நிரூபன் said...

(50வது பதிவு)மரணம் உடல்களைப்பிரிக்கலாம் ஆனால் நட்புக்கு என்றும் மரணம் இல்லை//

முதலில் தங்களின் ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

தொடர்ந்தும் பல அருமையான பதிவுகளால்...உங்கள் எழுத்தாற்றலைப் பெருக்கி...தமிழ் எழுத்துலகில் வெற்றிக் கொடி கட்ட வேண்டும் என வாழ்த்துகிறேன்.

நிரூபன் said...

மச்சி....எனக்கு ஏன் நன்றி சொல்லனும்?
நன்றிக்குப் பதிலாக வட்ட்கச்சி விதானையாரின் மகள் இப்பொ எங்கே இருக்கிறா என்று தேடிக் கண்டு பிடித்துத் தர முடியுமா?

நிரூபன் said...

சந்தோசமாக கும்மியடிக்க வேண்டிய பதிவில்...
இறுதிப் பந்திகள் மூலம் மனதைக் கனக்கச் செய்து விட்டீங்க.

என்ன செய்ய...தமிழன் என்றால்...இப்படியான விடயங்களையும் கடந்து தப்புவோர் தப்பி வாழா...இறப்போர் இறந்து மடிய வேண்டும் என்று காலம் இட்ட சாபம் தானே இது.

நிரூபன் said...

இப்போ பயங்கர பிசி, உங்களின் பழைய பதிவுகளை டைம் கிடைக்கும் போது கண்டிப்பாகப் படிக்கிறேன்.

K.s.s.Rajh said...

@(50வது பதிவு)மரணம் உடல்களைப்பிரிக்கலாம் ஆனால் நட்புக்கு என்றும் மரணம் இல்லை//

முதலில் தங்களின் ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

தொடர்ந்தும் பல அருமையான பதிவுகளால்...உங்கள் எழுத்தாற்றலைப் பெருக்கி...தமிழ் எழுத்துலகில் வெற்றிக் கொடி கட்ட வேண்டும் என வாழ்த்துகிறேன்.

தங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பா

K.s.s.Rajh said...

@நிரூபன் சொன்னது…
மச்சி....எனக்கு ஏன் நன்றி சொல்லனும்?
நன்றிக்குப் பதிலாக வட்ட்கச்சி விதானையாரின் மகள் இப்பொ எங்கே இருக்கிறா என்று தேடிக் கண்டு பிடித்துத் தர முடியுமா//

அடங்கொய்யால..................அவவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

பிரியதர்சினி.மாணிக்கவாசகம் said...

நல்ல நண்பர்களை என்றும் மறக்கமுடியாதுதான்..

ஒரு கேள்வி.இப்படி படத்துடன் கருத்துரைகள் எவ்வாறு இடுவது

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃகுருதிக்கறை படிந்த சாவுக்கே சவால் விட்ட எங்கள் மண்ணில் இறந்து போன உறவுகளில் இவர்களும் கலந்துவிட்டார்கள்.ஃஃஃஃஃ

மறக்க முடியாத வடுக்கள் சகோதரம்...

K.s.s.Rajh said...

@பிரியதர்சினி.மாணிக்கவாசகம் சொன்னது…
நல்ல நண்பர்களை என்றும் மறக்கமுடியாதுதான்..

ஒரு கேள்வி.இப்படி படத்துடன் கருத்துரைகள் எவ்வாறு இடுவது

நன்றி சகோதரி.
படத்துடன் கருத்துரைகள் இடுவதற்கு கூகுள் கணக்கு வேண்டும்.

K.s.s.Rajh said...

@♔ம.தி.சுதா♔ சொன்னது

உண்மைதான் சகோ

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails