Friday, August 05, 2011

ஈழத்துப்பெண் ஒருத்தியின் கதை கவிதை வடிவில்

என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய வாசகர்களே.


பாடசாலைக்காலங்களில் எனக்கு ஏற்பட்ட முதல் காதலோடு கவிதை எழுத ஆரம்பித்தேன் ஆனால் எல்லாம் காதல் கவிதைகளே இதுவரை நான் காதல் தவிர்த்து வேறு எந்தக்கவிதைகளும் முழுமையாக எழுதியது கிடையாது.பாடசாலைக்காலத்திற்கு பிறகு கவிதையும் எழுதுவது இல்லை காதல் செய்வதும் இல்லை.


முதன் முறையாக காதல் தவிர்ந்த ஒரு கவிதை இது ஒரு கவிதை சார்ந்த கதை
இந்தக்கவிதை இலங்கையில் வன்னியில் வாழ்ந்த ஒரு பெண் தனது கதையை சொல்வதாக அமைந்துள்ளது இதில் சொல்லப்பட்ட பெண்பாத்திரம் கற்பனையே.இதில் வரும் சம்பவங்கள் சமூகத்தில் நடந்த நிகழ்வுகளே..


வணக்கம் நான் வன்னி வனிதா.
அடைமொழியுடன் பெயரைச்சொல்வது.
என் அடையாளத்தை சொல்லத்தான்
வன்னியில் பிறந்தது நான் செய்த குற்றமா?
இல்லை வாழவேண்டிய வயதில் வாழ்க்கையை
தொலைத்த ஆயிரம் ஆயிரம் மக்கள் செய்த குற்றமா?

கடவுள் எங்களை படைத்ததோடு சரி 
அப்பறம் கண்டு கொள்ளவேஇல்லை
கருனை இல்லாத அவரை நாம் கையெடுத்து கும்பிட்டபோதும்
அவர் எங்களை காப்பாற்றவில்லை. 
யுத்தம் மேகம் எங்கள் வாழ்க்கையை.
வாரி எடுத்துக்கொண்டது.

வாழவேண்டிய வயதில் 
கணவனை இழந்த கைம்பெண்கள்.
கைகளை இழந்த சிறுவர்கள்.கால்களை இழந்த பெண்கள்
எம் உடல் உறுப்புக்களையும் பறித்துக் கொண்டான்
உருவமே இல்லாத இறைவன்.

பாடசாலையில் படித்த போது பக்கத்து வகுப்பு பரந்தாமன்
என்னைக் காதலிப்பதாக கடிதம் தந்தான்.
அவன் என்னை என் மனதைக்காதலிக்கவில்லை
என் உடம்மை காதலித்த அவனது காமபுத்தியை
கண்டு கொண்ட நான் அவனிடம் இருந்து அகன்று விட்டேன்

இதனால் ஆத்திரம் அடைந்த அவன் என்னைப்பற்றி
அசிங்க அசிங்கமாக என் பாடசாலையில் கதைகளை அவிழ்த்து விட்டான்
இதனால் அவமானங்களும் அவப்பெயர்களும் எனக்கு வந்தன.
வாழ்க்கையே வெறுத்தது வாழவே பிடிக்கவில்லை
பாடசாலையில் ஒரே கேலிப்பேச்சுக்கள்
என்ன செய்யலாம் என்று சிந்தித்தபோது

பெண்கள் சமைக்கவும்,துணிதுவைக்கவும்
ஆண்களுக்கு அடிமைகளாகவே காலம் காலமாக
இருந்தவந்த எம் சமூகத்தில்.
பெண்களில் வீரத்தை உலக்கு அறியச் செய்தவரின்.
வழியில் போய்ச்சேரலாமா என்று எண்ணிய போது.

என்றைக்காவது மரணம் வரும் என்று தெரிந்தும்
மரணத்தை சந்திக்க தைரியம்
இல்லாத பல மனிதர்களைப்போல்
மரணத்திற்கு பயந்து நானும் முடிவை மாற்றிக்கொண்டேன் .

வேறு வழி பாடசாலையை விட்டே நின்று விட்டேன்
மீண்டும் யுத்தம் என்னும் அரக்கன்
எங்களைத்தள்ளிக்கொண்டு போய் வன்னியில்
புது மாத்ளன் என்னும் ஒரு சிறிய இடத்தில் ஒதுக்கி விட்டான்.

மாரி மழைபொழிந்த எம் நிலத்தில்
செல் மழை பொழிந்தது.
மலசலம் கழிப்பதற்கு கூடகடல் கரையில்
ஆண்கள் பெண்கள் என்ற வித்தியாசம் இன்றி
எல்லோறும் அருகருகே குந்தி இருந்து
மலம் கழிக்கவேண்டிய நிலமை
அப்போதும் சில கேவலமான புத்தி கொண்ட ஆண்களின் காமப்பார்வைகள்.
கடவுளே ஏன் எங்களுக்கு மட்டும் இந்த நிலமை.
எங்கள் குரல் அப்போது கடவுளின் காதுகளில்
சின்னதாக கேட்டுவிட்டது போலும்..

எம் உறவுகளை காவுகொண்ட யுத்தம் முடிவுக்கு வந்தது
உயிரை மட்டும்கையில் பிடித்துக்கொண்டு
வந்த எமக்கு முகாம் வாழ்க்கை ஆரம்பமாகியது.
இலட்சக்கணக்கான மக்களுக்கு உணவு,நீர்,இருப்பிடவசதிகளை
உடனடியாக செய்வது கஸ்டமான காரியம்தானே.
ஆனாலும் முகாம்களில் ஓரளவு எங்களுக்கு எல்லாம் கிடைத்தன.

உண்மையில் ஆமிக்காரங்கள்(இராணுவத்தினர்)
என்றால் எங்களது எதிரிகள் என்று தமிழ் மக்களுக்கு
சொல்லிச்சொல்லி எங்களுக்கு அவர்கள் மீது ஒரு கசப்புணர்வை
ஏற்படுத்தி விட்டார்கள் என்று என்னத்தோன்றியது.
அந்த அளவுக்கு தங்களால் முடிந்த
உதவிகளை ராணுவத்தினர் எமக்குச்செய்தார்கள்.

கல்லாய் இருக்கும் கடவுளைவிட
கஸ்டப்படும்போது உதவுவர்களை கடவுள் என்று சொல்லலாம்.
அந்த சமயத்தில் எமக்கு உதவிய ஓவ்வொறு ஆமிக்காரர்களும்
ஆண்டவனாகவே தெரிந்தார்கள்.

ஆண்கள் என்றால் எப்படியும் ஒன்று இரண்டு உடுப்புக்களுடன்
சமாளித்து விடுவார்கள்.
பெண்கள் நினைத்தாலும் சமாளிக்க முடியாத
பல இயற்கையான விடயங்களை
பாலாப் போனகடவுள் தந்துள்ளான்
அதில் ஒன்று மாதவிடாய்
சரியாக குளிக்ககூட வசதிகள் இல்லை
மாற்று உடுப்பும் இல்லை மங்கையரின்
நிலைமையை சிந்திச்சுப்பாருங்கள்.

இப்படியாக கழிந்த வாழ்க்கையில்
யுத்தம் முற்றாக ஓய்ந்த எம் மண்ணில்
மீள்க்குடியேற்றம் செய்யப்பட்டோம்
வளமான வன்னி மண் வளம் இழந்து இருந்தது
ஆனாலும் உழைப்புக்கு பெயர் பெற்ற எம் மக்கள்
தங்களது வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பிவிட்டார்கள்

ஆண்பிள்ளை என்றால் காலம் முழுவதும்
பெற்றோர் உடன் வாழ்வான்
பெண்பிள்ளைகள் காலா காலத்தில்
கலியாணம் முடிச்சு இன்னோருத்தர்
வீட்டுக்குப்போகனுமே.
கலியாணப்பேச்சை எடுத்தார் அப்பா
மாப்பிளைத்தேடும் படலம் ஆரம்பம் ஆகியது

கூலிவேலை செய்யும் மாப்பிளை
வேண்டாம் என்றார் அப்பா
வெளிநாட்டு மாப்பிளை
வேண்டும் என்றார் அம்மா
அரசாங்க உத்தியோகம் உள்ள
மாப்பிளை வேண்டும் என்றார் பாட்டி
அவர் அவர்களுக்கு பேசிக்கொண்டார்களே தவிர
என்னிடம் எதுவும் கேட்கவில்லை
எனக்கும் ஒரு மனசு இருக்கு என்று புரியாமல்

கடைசியில் இங்கிலாந்தில் வேலைசெய்யும்
இலங்கைத்தழிழராம், பேசி முடிப்போம்
என்றார் என் மாமா ,கலியானப்பேச்சு தொடங்கியது
இந்தியாவில் கலியாணமாம் அது முடிந்ததும்
மாப்பிளை திரும்பி இங்கிலாந்து போய்விடுவாராம்
ஒருமாதத்தில் என்னை எடுப்பாராம் எதோ மாடுகளை
விலைபேசி விற்பது போல் என் கலியாணம் நடந்து முடிந்தது.

வெளிநாட்டு வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்படும்
பலரைப்போல் என் அப்பாவும் பெருமிதத்துடன்
தன் பெரிய சுமை நீங்கிவிட்டது
என் மகள் வெளிநாட்டில் வாழப்போகின்றாள்
எம் மாப்பிளை வெளிநாட்டில் இருக்கின்றார் என்று
ஊரில் எல்லோரிடமும் சொல்லி பெருமைப்பட்டுக்கொண்டார்

கலியாணம் முடிந்தகையோடு
என்னவர் காரியத்தை முடித்துவிட்டதால்
நான் மாசம் ஆகிவிட்டேன்

என்னை எடுப்பதாக சொன்ன என்னவர்
கோல்தான்எடுக்கிறார் என்னை எடுப்பதைக்கானோம்
பாவம் அவரும் என்னதான் செய்வார்
தன் பிறந்த மண்ணை விட்டு
பிழைப்புக்காக எங்கையே பல ஆயிரம் மையில்
தூரத்தில் கஸ்டப்படுகின்றார்.

என்னவரைபோல் இப்படி எத்தனை உறவுகள்
தாம் பிறந்த மண்ணைவிட்டு சொந்தங்களை விட்டு
வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள்
இங்கே அவர்களின் உறவுகள்
கொஞ்சமும் உழைப்பவரை பற்றி சிந்திக்காமல்
அவர்கள் அனுப்பும் காசில்
நாகரிக வாழ்க்கை வாழ்கின்றனர்

உறவுகள் சந்தோசமாக வாழவேண்டும் என்பதற்காக
கடல்கடந்து வெளிநாடுகளில் வேலை செய்யும் உறவுகள்
உண்மையிலேயே போற்றப்படத் தக்கவர்களே.
ஒருவாரு என்னவர் என்னை தன்னுடன் அழைத்துக்கொண்டார்
சொந்தங்களைவிட்டு பிறந்த மண்ணைவிட்டு
நானும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால்
புறப்பட்டுப்போனேன்.

இனி என் குழந்தை குருதிக்கறை படிந்த
என் வன்னி மண்ணில்
பிறக்கப்போவதில்லை .
என் மண்ணின் வாசனை அதற்குத்தெரியப் போவதுஇல்லை.

இங்கு வந்து பார்த பிறகுதான் தெரிகின்றது
எங்கள் ஊரைபோல இங்கும் அரசாங்க உத்தியோகத்தர்கள்
படித்துமுடித்து தனியார் கம்பனிகளில் வேலைசெய்பவர்கள்
சொந்தமாக வியாபாரம் செய்பவர்கள்,
கடைகள் வைத்து இருப்பவர்கள் என்று.
அங்கு மாதிரியே இருக்கின்றார்கள்.
என்ன ஒரு வித்தியாசம் இங்கு
எங்கள் ஊரைவிட நிறைய காசு உழைக்கமுடிகின்றது.
அதை ஊருக்கு அனுப்புகின்றபோது
அவர்கள் அங்கு வசதியாக வாழமுடிகின்றது.

என்கணவரும் இங்கிலாந்தில் ஒரு கடையில்தான்
வேலைசெய்கின்றார்.எனக்கு அதைப்பார்க்கும்
போது ஊரில் கூலி வேலை செய்யும்
மாப்பிளை வேண்டாம் என்று சொன்ன அப்பாவின்
கூற்று நினைவுக்கு வருகின்றது

எது எப்படியோ நான் இப்ப வெளிநாட்டில் வாழ்க்கைப்பட்டு விட்டேன்
இன்னும் சில வருடங்கள் கழித்து வெளிநாட்டில் பிறக்கப்போகும்
என் குழந்தையுடன் என் கணவரும் நானும் என் வன்னிமண்ணை. சுற்றுலாப்பயணியாக பார்க்கவரும் பலரைப்போல் மீண்டும் வருவோம் புலம்பேர் தமிழர்களாக.

சரி நீங்கள் உங்கள் வேலையை மறக்காமல் கருதுரைகளைச்சொல்லிவிட்டுபோங்க,முடிந்தால் இன்ட்லி,தமிழ் மணத்தில் ஓட்டுக்களையும் போட்டுவிட்டுப்போங்க.

Post Comment

9 comments:

Anonymous said...

///கடவுள் எங்களை படைத்ததோடு சரி
அப்பறம் கண்டு கொள்ளவேஇல்லை
கருனை இல்லாத அவரை நாம் கையெடுத்து கும்பிட்டபோதும்
அவர் எங்களை காப்பாற்றவில்லை.
யுத்தம் மேகம் எங்கள் வாழ்க்கையை.
வாரி எடுத்துக்கொண்டது./// உண்மையான வரிகள் என்ன தான் செய்வது, விதியை நொந்து கொள்வதை தவிர!!

Anonymous said...

///அந்த சமயத்தில் எமக்கு ஓவ்வொறு ஆமிக்காரங்களும்
ஆண்டவனாகவே தெரிந்தார்கள்./// இது உண்மையா இல்லை கற்பனையா?? ,ஏனென்றால் இந்த இடத்தில் இசைபிரியா, கிருசானி ,காரைநகர் தர்சினி போன்று அவர்களால் சீரழிக்கப்பட்ட எம்மவர்கள் தான் கண் முன் வருகிறது ?? ஒரு சிலர் இருப்பார்கள் நானும் கண்டுள்ளேன், ஆனால் ஒட்டு மொத்தமாக ...?

Anonymous said...

////இனி என் குழந்தை குருதிக்கறை படிந்த
என் வன்னி மண்ணில்
பிறக்கப்போவதில்லை ./// இந்த ஒரு நின்மதியை தவிர வெளிநாட்டில் வேறு ஒரு சந்தோசமும் கிடைக்காது! சொர்க்கமே தந்தாலும் சொந்த ஊர் போல வருமா !!

Anonymous said...

தமிழ் ரென் மற்றும், தமிழ் மணத்தில் இணைக்கவில்லை போலும் ,மீண்டும் வந்து ஓட்டு போடுகிறன் .

K.s.s.Rajh said...

@கந்தசாமி. சொன்னது..
நன்றி நண்பரே தமிழ் மணத்தில் இணைக்கச்சென்றால் புதிய இடுக்கை எதுவும் இல்லை என்று சொல்கின்றது.
என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.

K.s.s.Rajh said...

@கந்தசாமி. சொன்னது…
///அந்த சமயத்தில் எமக்கு ஓவ்வொறு ஆமிக்காரங்களும்
ஆண்டவனாகவே தெரிந்தார்கள்./// இது உண்மையா இல்லை கற்பனையா?? ,ஏனென்றால் இந்த இடத்தில் இசைபிரியா, கிருசானி ,காரைநகர் தர்சினி போன்று அவர்களால் சீரழிக்கப்பட்ட எம்மவர்கள் தான் கண் முன் வருகிறது ?? ஒரு சிலர் இருப்பார்கள் நானும் கண்டுள்ளேன், ஆனால் ஒட்டு மொத்தமாக ...

நண்பரே அந்த சமயத்தில் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப்பெண்ணுக்கு அப்படி தோன்றி இருக்கலாம்..

Anonymous said...

தமிழ் மணத்தில் இணைச்சு விட்டு விட்டேன்,இரண்டாவது ஓட்டை நீங்கள் போடுங்கள்))

Anonymous said...

///அந்தப்பெண்ணுக்கு அப்படி தோன்றி இருக்கலாம்./// கற்பனையில் தோன்றிய பெண் தானே ..

K.s.s.Rajh said...

@கந்தசாமி. சொன்னது
நன்றி நண்பரே..இதில் சொல்லப்பட்ட பெண்பாத்திரம் கற்பனைதான் ஆனால் அந்த வசனங்கள் பலர் என்னிடம் சொல்லி கேட்டு இருக்கின்றேன்.அந்த கஸ்ட்ப்பட்ட சூழ்நிலையில் உதவிய ஆமிக்காரர்களை அவர்கள் ஆண்டவன் மாதிரி உதவி புரிந்தார்கள் என்று.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails