Thursday, May 24, 2012

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த ஒரு நகைச்சுவை கலைஞன் ஓமக்குச்சி நரசிம்மன்

தமிழ் திரையுலகில் எத்தனையோ நடிகர்கள் வந்து போயுள்ளார்கள் ஆனால் சிலர் மனசில் சட்டென்று ஓட்டிக்கொள்வார்கள் அந்த வகையில் என்னை மிகவும் கவந்த ஒரு நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன். இவர் பெயர் கூட எனக்கு தெரியாது ஆனால் இவரின் தீவிரமான ரசிகன் நான்
இவரை பற்றி ஒரு பதிவு எழுதவேண்டும் என்று நான் முன்பே நினைத்திருந்தேன் ஆனால் இவர் பற்றிய விபரங்கள் தெரியாததனால் எழுதவில்லை தற்போது இணையதளத்தில் தேடி இவர் பற்றிய விபரங்களை பெற்று தொகுத்து தந்துள்ளேன்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)


தமிழில் ‘அவ்வையார்’ (1953) படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் எல்.ஐ.சி.யில் பணிபுரிந்தபடியே 1969ம் ஆண்டு, “திருக்கல்யாணம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து சகலகலா வல்லவன், சூரியன், மீண்டும் கோகிலா, தம்பிக்கு எந்த ஊரு, குடும்பம் ஒரு கதம்பம், புருஷன் எனக்கு அரசன், போக்கிரிராஜா’ போன்ற ஹிட் படங்கள் உட்பட 
.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
“இந்தியன் சம்மர்’ என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ள இவர், “தலைநகரம்’ படத்திற்கு பின்னர் சினிமாவில் நடிக்கவில்லை. ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா, வங்காளம் ஆகிய மொழிகளிலும் நடித்து இருக்கிறார். ‘இந்தியன் சமர்’ என்ற ஆங்கில படம் உட்பட மொத்தம் 1,500-க்கும் மேற்பட்ட படங்களில் ஓமக்குச்சி நடித்துள்ளார்.

ஓமக்குச்சி நரசிம்மன். ரஜினி, கமல், சரத்குமார், அர்ஜுன் போன்ற பலருடன் நடித்துள்ளார். கவுண்டமணியுடன் இணைந்து நிறைய படங்களில் காமெடி செய்துள்ளார். நாடக இயக்குனர் தில்லைராஜனின், “நாரதரும் நான்கு திருடர்களும்’ நாடகத்தில் நரசிம்மன், கராத்தே பயில்வான் வேடத்தில் நடித்தார். சீன் காமெடியாக அமைய வேண்டும் என்பதற்காக ஜப்பானைச் சேர்ந்த பிரபல கராத்தே வீரர் யாமக்குச்சியின் பெயரை நாடகத்தில் கரெக்டர் பெயராக வைக்க இயக்குனர் முடிவு செய்தபோது, தமிழில் அப்பெயரை ஓமக்குச்சி என்று வைத்தால் காமெடியாக இருக்கும் என்று நினைத்து, வைத்தார். இந்த நாடகத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததால், நூறு நாட்கள் வரை நடந்தது. அதிலிருந்தே நரசிம்மனை, “ஓமக்குச்சி நரசிம்மன்’ என அழைக்க ஆரம்பித்தனர்.

ஓமக்குச்சி நரசிம்மன் மனைவி பெயர் சரஸ்வதி. இவர்களுக்கு விஜயலட்சுமி, நிர்மலா, சங்கீதா என்ற மகள்களும் காமேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர்.


சூரியன் படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து கலக்கியிருப்பார் அந்தப் படத்தில் இடம் பெரும் வசனங்கள் இன்றளவும் பிரபலம்

குறிப்பாக ஓமக்குச்சி நரசிம்மன் மேல் எரிச்சலாகும் கவுண்டமணி “நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா” என்று பேசும் வசனம் மிகவும் பிரபலம்.


ஓமக்குச்சி நரசிம்மன் என்ற பெயர் பலருக்கு தெரியாவிட்டாலும் பல சினிமா ரசிகர்கள் இவரின் ரசிகர்களாக மாறியிருப்பார்கள் அந்தளவுக்கு காமடி வேடங்களில் கலக்கிய ஒரு கலைஞன்.

இவரது மெல்லிய உருவமும் நடுவில் முடியில்லாமல் மொட்டை தலையும் சைட்டில் வளந்த நீண்ட முடியும் இவரை படங்களில் பார்த உடனே சிரிப்பை உண்டு பண்ணும்.

.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.co
“இந்தியன்” படத்தில் கவுண்டமணியிடம் கைகள் நடுங்கி டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது. “முதல்வன்” படத்தில் வடிவேலுவின் இடுப்பில் குத்தி ““போடா பண்ணி”” என திட்டவைத்து மேலதிகாரியிடம் மாட்டி விடுவது... போன்றவையும் வயிறுநோக சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள்

தமிழ் சினிமாவில் பலரை சிரிக்கவைத்த இந்த கலைஞன் இரண்டு ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தனது 73வது அகவையில் 2009, மார்ச் 11, புதன் இரவு 9.30 மணிக்கு சென்னையில் இறந்தார்.
தமிழ் சினிமாவில் என்றும் இவரது நகைச்சுவைகள் காலத்தால் அழியாதவை.
*********************************************************************************
சூரியன் படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து ஓமக்குச்சி நரசிம்மன் கலக்கிய காமடி காட்சிகள் 


*********************************************************************************
முஸ்கி-என் தளத்தில் பாலோவர் விட்ஜெட்டை காணவில்லை எப்படி மீள கொண்டு வருவது என்று புரியவில்லை முன்பு அட் பண்ணிண மாதிதிரி அட் பண்ணும் போதும் வெரும் 23 பாலோவர்ஸ் தான் காட்டுகின்றது முன்பு இருந்த 100 க்கு மேல் பட்ட வர்களை காணவில்லை எனமே எப்படி மீளவும் பாலோவர் விட்ஜெட்டை சரி செய்வது என்று யாருக்கும் தெரிந்தால் கூறுங்கள் நண்பர்களே.
*********************************************************************************

Post Comment

11 comments:

Yoga.S. said...

வணக்கம்,ராஜ்!நலமா?ஓமக்குச்சி நரசிம்மன் நாகேஷ் காலத்திலிருந்தே அவ்வப்போது படங்களில் தோன்றியிருக்கிறார்.அவரை,பெரும்பாலும் விசு,பாக்கியராஜ் போன்றோர் பயன்படுத்தியிருக்கின்றனர்.இது கொசுறு தான்!நீங்கள் குறிப்பிட்டது போல் கவுண்டருடன் செய்த காமெடிகள் அதிகம் தான்!

Yoga.S. said...

அப்புறம் அந்த விட்ஜெட்,அது........பொறியாளர் நிரூபனுக்குத் தான் தெரியும்!

நிரூபன் said...

பாஸ்...
உங்க ப்ளாக்கினை ஒரு கொஞ்ச நேரத்திற்கு .com இல் இருந்து blogspot.com பழைய முகவரிக்கு மாத்துங்க.
அப்புறமா பாலோவர் விட்ஜெட்டை மறுபடியும் இணையுங்க.
மீண்டும் புது ப்ளாக் டொமைன் முகவரியை கொடுங்க.
விட்ஜெட் தோணும்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஓமக்குச்சி நரசிம்மன் பற்றி நல்ல தொகுப்பு ! நன்றி நண்பரே !

ஸாதிகா said...

ஓமகுச்சி நரசிம்மன் நினைவலைகள் அருமை.

K said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! என்னது ஓமக்குச்சி நாராயணனா? இவரைப் பார்க்கும் போது.... என் செடி பூப்பூக்குதே :-)))

இவரைப் பற்றிய எல்லாத் தகவல்களும் அருமை! எல் ஐ சி யில் வேலை பார்த்தாரா? 1500 படங்கள் வரை நடித்துள்ளாரா? எல்லாமே ஆச்சரியமாகத்தான் இருக்கு!

அந்த சூரியன் காமெடி.... சான்ஸே இல்லை! எப்போது பார்த்தாலும் சிரிப்பு நிற்காது! அழகான தகவல் தொகுப்பிற்கு நன்றி!

ஆ... சொல்ல மறந்துட்டேன்! வணக்கம் மச்சான் சார்! ரொம்ப நாளைக்கு அப்புறம் சந்திக்கிறோம்! கும்புடுறேனுங்கோ! இனிய வியாழக் கிழமை வாழ்த்துக்கள்! :-)))

தனிமரம் said...

வணக்கம் ராச் நலமா?
ம்ம்ம் ஓமக்குச்சியின் நகைச்சுவை எப்போதும் சிரிக்கக்கூடியது.அவர் பற்றிய நிறைய தகவல்கள் தெரிந்து எழுதியதற்கு பாராட்டுக்கள் .நானும் இப்போது தான் தெரிந்து கொண்டேன் ஆங்கிலப்படத்திலும் நடித்தார் என்ற தகவல்!

தனிமரம் said...

மூவைத்த  வாய்க்கால் திறந்து விட்டாச்சு போல ஹீ ஹீ அப்ப இனி தாராளமாக குளிக்கலாம் சீச்சீ பால்க்கோப்பி குடிக்கலாம்!அவ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

அனைவருக்கும் நன்றி நண்பர்களே

பால கணேஷ் said...

விசுவுடன் சேர்ந்தும், கவுண்டமணியுடனும் இந்த நகைச்சுவை நடிகரை பல படங்ளில் ரசித்திருக்கிறேன். ஒரு முறை நேரில் சந்தித்ததுண்டு. ஆனால் இத்தனை பின்னணித் தகவல்கள் இப்பத்தான் தெரிந்து கொண்டேன். அருமையாத் தொகுத்திருக்கீங்க தம்பி.

Unknown said...

ஓமக்குச்சியை எனக்கும் பிடிக்கும்
விபரங்கள் அருமை!

புலவர் சா இராமாநுசம்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails