வணக்கம் நண்பர்களே என்ன பதிவுலகை விட்டு போகின்றேன் என்று சொல்லிட்டு போனவன் மீண்டும் வந்திருக்கேன் என்று பாக்கிறீங்களா?
நிலையற்ற இந்த மனிதவாழ்க்கையில் நிலையானது எது? எனவே எனது பதிவுலகைவிட்டு போகும் முடிவை வாபஸ் வாங்கிவிட்டு மீண்டும் வந்துவிட்டேன். நிலையற்ற பொருளாதார தேடலில் தொலைந்து போகின்ற சாதாரன சாமானியன் நான் எனவே கிடைக்கும் நேரங்களில் என் எழுத்துக்களையும் மதித்து என்னையும் பதிவுலகில் தூக்கிவிட்ட வாசகர்களுக்காக மீண்டும் பதிவுகள் எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
சகபதிவர்கள்,வாசகர்கள்,என்றநிலையைத்தாண்டி நண்பர்களாக,சகோதரர்களாக,உறவுகளாக பழகும் என் இனிய வலைப்பதிவு சொந்தங்களே மீண்டும் இந்த சிறியவனுக்கு உங்கள் ஆதரவையும் அன்பையும் தருவீர்கள் என்று நினைக்கின்றேன்.
இந்த வலையுலகம் எனக்கு நிறைய பாடங்களை கற்றுத்தந்தது ஒரு பதிவு எப்படி எழுதவேண்டும்,எப்படி எழுதக்கூடாது,எப்படி எழுதினால் வாசகர்களை கவரும்,அதிகம் ஹிட்ஸ் வாங்கும் பதிவுகளை எழுதுவது எப்படி? மொய்க்கு மொய்,பதிவுலக சண்டைகள்,அல்லக்கை பதிவர்கள், பதிவர்களின் அடாவடி(நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லைங்கோ) போன்ற பல மேட்டர்களை நான் ஏற்கனவே அறிந்தவனாக இருப்பதால் பதிவுலகில் என் இரண்டாவது இனிங்ஸ் கஸ்டமானதாக இருக்காது என்று நினைக்கின்றேன்.
(
பதிவுலகில் நான் ஒதுங்கியிருந்த காலங்களில் நான் ரசித்த சில விடயங்கள்
ஜ.பி.எல்
எப்பவும் ஜ.பி.எல் போட்டிகள் என்னை அதிகம் கவர்வது இல்லை கங்குலி என்ற ஜாம்பவானுக்காக மட்டுமே ஜ.பி.எல் பார்கத்தொடங்கியவன் இம்முறை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கங்குலி தலமையிலான புணே வாரியஸ் அணி ஆரம்பத்தில் சிறப்பாக ஆடினாலும் பின்னர் சொதப்பி தொடரில் இருந்து வெளியேறுகின்றது. இதனால் ஜ.பி.எல் போட்டிகள் மீது ஆர்வம் குறைந்துவிட்டது. ஆனால் தாதா அணி தோற்றாலும் வென்றாலும் கங்குலி மீதுள்ள அபிமானம் மட்டும் குறையவில்லை.எனக்கு மட்டும் இல்லை தாதா ரசிகர்கள் ஒருவருக்கும் அவர் மீதான அபிமான என்று குறையாது
![]() |
நேற்று இல்லை இன்று இல்லை எப்பவும் நீங்கள் ராஜாதான் எங்கள் தாதா |
சினிமா
கலகலப்பு படம் மிகச்சிறந்த நகைச்சுவை திரைப்படமாக மனதில் நிற்கின்றது சுந்தர்.சி யின் படங்களுக்கு நான் மிகப் பெரும் ரசிகன்(கவனிக்க அவர் இயக்கும் படங்களுக்குத்தான் நடிக்கும் படங்களுக்கு இல்லை)நீண்ட நாட்களுக்கு பிறகு சோகங்களை மறந்து விழுந்து விழுந்து சிரிக்கவைத்த படம் கலகலப்பு@மசாலா கபே.
பாடல்கள்
நான் பாடல்களை பெரிதும் விரும்பி கேட்பவன் கிடையாது ஒரு சில பாடல்களை மட்டுமே கேட்பேன் அந்த வகையில் மிக நீண்ட நாட்களின் பின் நான் விரும்பி கேட்ட பாடல் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் இடம் பெற்ற ”வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு”
கலக்கள் பாட்டு
நாளை முதல் மீண்டும் நேரம் கிடைக்கும் நேரங்களில் பல பதிவுகள் உங்களுக்காக உங்கள் நண்பர்கள் தளத்தில்
எனக்கு தெரிந்ததை நான் எழுதுகின்றேன் அதற்கான அங்கிகாரம் உங்கள் கைகளில் நண்பர்களே
நான் பதிவுலகிற்கு திரும்பி வந்ததும் செல்லம் எம்புட்டு வேகமாக ஓடிவருதுனு பாருங்க......................
மெல்ல....... நீ ஓடிவருகையில்
என் கால்கள் வலிக்கின்றன அன்பே....
சரன்யாவை நினைக்கும் போதுதான் இப்படி எல்லாம் எழுதத்தோனுது
முஸ்கி-தலைப்பு சும்மா ஒரு வெளம்பரத்துக்குதான் பின்ன நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு போடுறேன் யாரும் படிக்காட்டி அதுக்குதான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
|
29 comments:
வெல்கம் ராஜ். முடியும் போதெல்லாம் வாருங்கள். நாங்களெல்லாம் உடன் இருக்கிறோம் என்றும் ஆதரவு தர... கலகலப்பு நான் இன்னும பாக்கல்லை. உங்க செல்லம் ரொம்பவே அழகுதான்.
arumeyana pathivukal
come to my blog www.suncnn.blogspot.com
வருக நண்பரே வருக!
வழக்கம் போல் தருக பதிவு!
புலவர் சா இராமாநுசம்
ரீ எண்ட்ரிக்கு வாழ்த்துக்கள் தம்பி
பதிவுலகத்துக்கு வந்துட்டு இன்னும் என் பிளா பக்கம் வராமலேயே இருக்கியா நீ? ஒழுங்கா சீக்கிரம் வந்து சேர் தம்பி
@கணேஷ்
நன்றி பாஸ்
////
sunfun said...
arumeyana pathivukal
come to my blog www.suncnn.blogspot.com////
நிச்சயமாக வருகின்றேன் நன்றி சகோ
@ புலவர் சா இராமாநுசம் said...
வருக நண்பரே வருக!
வழக்கம் போல் தருக பதிவு!
புலவர் சா இராமாநுசம்
////
மிக்க நன்றி ஜயா
@ ராஜி said...
ரீ எண்ட்ரிக்கு வாழ்த்துக்கள் தம்பி
////
நன்றி அக்கா
@ ராஜி said...
பதிவுலகத்துக்கு வந்துட்டு இன்னும் என் பிளா பக்கம் வராமலேயே இருக்கியா நீ? ஒழுங்கா சீக்கிரம் வந்து சேர் தம்பி
////
ஹா.ஹா.ஹா.ஹா......வந்திட்டேன் இதோ வந்துவிட்டேன்
உன் வரவு நல் வரவாக அமையட்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.நீ ஓடிவார சரண்யாவுக்கு கவிதை எழுகின்றாய் நான் ஓடிப்போன சினேஹாவுக்கு எழுதலாமோ என்று யோசிக்கின்றேன்!:))))))
"ப்ளீஸ் இதை யாரும் படிக்க வேண்டாம்"அப்ப ஏய்யா எழுதின????ஹ!ஹ!ஹா!!!!!!!
மெல்ல...........நீ ஓடி வருகையில் என் கால்கள் வலிக்கின்றன அன்பே!////அப்புடிஎண்டால் ஓட வேணாமெண்டு சொல்ல வேண்டியது தான?
சரண்யாவை நினைக்கும் போது தான் இப்படியெல்லாம் எழுதத் தோணுது!///அப்ப நினைக்காம இரு ராசா!!!!பொம்பிளை பாத்தாச்சில்லை?ஹி!ஹி!ஹி!!!!
தலைப்பு சும்மா ஒரு விளம்பரத்துக்குத்தான்!////இஞ்ச பாருங்கோ!ஏதோ கோல்கேட் பற்பசைக்கு விளம்பரம் மாதிரிச் சொல்லுறார்!!!!!ஹ!ஹ!ஹா!!!!!!!
வணக்கம் தம்பி ராஜ்!நல்லாயிருக்கிறி யளா???வெல்கம் பாக்(WELL COME BACK)!!!இதுக்கு முந்தி என்ரை பேர்ல ஏதாவது ஏடாகூடமா கமென்ட் வந்திருந்தா,அது நான் இல்ல!ஆரோ பினாமி!!!!!!
வருக..வருக!
@தனிமரம்
நன்றி அண்ணே சினேகாவுக்குதானே தாராளமாக எழுதுங்க படிப்போம்
@ Yoga.S. said...
"ப்ளீஸ் இதை யாரும் படிக்க வேண்டாம்"அப்ப ஏய்யா எழுதின????ஹ!ஹ!ஹா!!!!!!!
////
ஒரு வித்தியாசமான தலைப்பு தான் ஜயா
@ Yoga.S. said...
மெல்ல...........நீ ஓடி வருகையில் என் கால்கள் வலிக்கின்றன அன்பே!////அப்புடிஎண்டால் ஓட வேணாமெண்டு சொல்ல வேண்டியது தான?
////
நான் ஓடச்சொல்லவில்லை என் மேலான காதல் அவளை ஓட வைக்கின்றது ஹி.ஹி.ஹி.ஹி........
@ Yoga.S. said...
சரண்யாவை நினைக்கும் போது தான் இப்படியெல்லாம் எழுதத் தோணுது!///அப்ப நினைக்காம இரு ராசா!!!!பொம்பிளை பாத்தாச்சில்லை?ஹி!ஹி!ஹி!!!!
////
மறக்கத்தெரியவில்லை சரன்யாவை
@
Yoga.S. said...
தலைப்பு சும்மா ஒரு விளம்பரத்துக்குத்தான்!////இஞ்ச பாருங்கோ!ஏதோ கோல்கேட் பற்பசைக்கு விளம்பரம் மாதிரிச் சொல்லுறார்!!!!!ஹ!ஹ!ஹா!!!!!////
எல்லாத்துக்கும் வெளம்பரம் தேவைப்படுது ஜயா என்ன பண்ணுறது
@ Yoga.S. said...
வணக்கம் தம்பி ராஜ்!நல்லாயிருக்கிறி யளா???வெல்கம் பாக்(WELL COME BACK)!!!இதுக்கு முந்தி என்ரை பேர்ல ஏதாவது ஏடாகூடமா கமென்ட் வந்திருந்தா,அது நான் இல்ல!ஆரோ பினாமி!!!!!!
////
வணக்கம் ஜயா நான் நல்லாயிருக்கின்றேன் நீங்க எப்படி?
உங்க பெயரிலையும் பினாமியா?அவ்வ்வ்வ்வ்வ்வ்
நன்றி ஜயா
@ செங்கோவி said...
வருக..வருக!
////
நன்றி பாஸ்
வா தம்பி ராஜா....
சவுக்கியமா?
மதுரைக்கு எப்போ மறுபடியும்?????
நீங்கள் மறுபடியும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பரே...
கங்குலிக்கு மட்டும்தான் அவர் சறுக்கும்போதெல்லாம் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
@தமிழ்வாசி பிரகாஷ்
வாங்க பாஸ் நான் நல்ல சுகம்
இந்த வருட இறுதியில் மீண்டும் இந்தியா வருவதாக ப்ளான் இருக்கு பாஸ்
@ பாலா said...
நீங்கள் மறுபடியும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பரே...
கங்குலிக்கு மட்டும்தான் அவர் சறுக்கும்போதெல்லாம் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
////
நன்றி பாஸ்
அதுதான் கங்குலியின் சிறப்பு அம்சம் எனக்கும் புரியாத புதிராகவே உள்ளது பாஸ்
வெயில் ரொம்ப ஜாஸ்தி !"
Post a Comment