Monday, May 28, 2012

இலங்கை பதிவுலகம் செல்லும் நிலை சரிதானா?

வணக்கம் நண்பர்களே என் மனதில் ரொம்ப நாளாக ஒரு கேள்வி இருந்துகொண்டே இருந்தது அதாவது இந்திய பதிவுலகுடன் ஒப்பிடும் போது எமது இலங்கை பதிவுலகத்தின் நிலை அவ்வளவு சிறப்பானதாக இல்லை

எம்மை எல்லாம் பதிவுலகில் வளர்த்துவிட்ட எம் எழுத்துக்களை ஊக்கப் படுத்தியவர்கள் பெரும்பாலும் இந்திய உறவுகள் தான்.நான் பதிவெழுத வந்து ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகப்போகுது ஆனால் எனக்கு தெரிந்த இலங்கை பதிவர்களை விரல் விட்டு எண்ணலாம்,மைந்தன் சிவா,மதி சுதா,மதுரன்,ஜீ,அமல்ராஜ் அண்ணா,வரோ அண்ண ஜனா அண்ணா,லோசண் அண்ணா,அதைவிட புலம் பெயர்ந்து இருக்கும் நிரூபன்,ஜடியாமணி,காட்டான்,தனிமரம்,கந்தசாமி,அம்பலத்தார்,துஷி,
இவர்களையும் இதில் உள்ளடக்கலாம்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

இப்படித்தான் ஏனைய இலங்கை பதிவர்களுக்கும் ஒரு சிலரை மாத்திரமே தெரிந்திருக்கும் பெரும்பாலும் இந்திய சொந்தங்களுடன் தான் பதிவுலகில் அதிக  நெருக்கம் எமக்கு இருக்கின்றது.இந்தியாவை போன்று இங்கு பதிவர்கள் பதிவர் சந்திப்புக்களை அடிக்கடி நடத்துவது இல்லை.நான் பதிவுலகிற்கு வருவதற்கு முன்பு லோசன் அண்ணாக்கள் பதிவர் சந்திப்புக்களை நடத்தியிருந்ததை அறிந்திருக்கின்றேன் இப்ப அவர்களும் நடத்துவது இல்லை என நினைக்கின்றேன்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
உண்மையில் பதிவர் சந்திப்புக்கள் என்பது அவசியமான ஒன்று பதிவர்களுக்கு இடையில் நல்ல புரிந்துணர்வுகளை ஏற்படுத்தும்.அதைவிட இந்தியாவுடன் ஒப்பிடும் போது இங்கே பதிவர்களுக்கான ஆதரவு குறைவே.ஆனந்தவிகடன் போன்ற பிரபலமான பத்திரிக்கைகள்,தளங்கள்,பதிவர்களை மக்களிடையே அறிமுகம் செய்வதில் பிரதான பங்கு வகிக்கின்றன உதாரணமாக,விகடன் குழுமத்தில் வலையோசை,விகடன் குட் ப்ளாக் என்று ஓவ்வொறு பதிவர்களையும் மங்களிடையே அறிமுகம் செய்கின்றன இதனால் நல்ல எழுத்துக்கள் நல்ல படைப்புக்கள் அங்கிகாரம் பெருகின்றன,என் பதிவுகள் கூட பல விகடன் குட் ப்ளாக்கில் தெரிவாகியிருக்கின்றது.ஆனால் இலங்கையில் அப்படி ஒரு நிலை எனக்கு தெரிய குறைவாகவே உள்ளது.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
வெற்றி வானொலியில் நாளும் ஒரு தளம் என்று லோசன் அண்ணா அறிமுகம் செய்துவருகின்றார் அது வரவேற்க வேண்டிய விடயம்.

இந்த நிலை மாறவேண்டும் இலங்கையிலும் பதிவுலகம் பிரபலம் அடையவேண்டும் அதற்கு என்ன வழி என்று இலங்கை பதிவுலக நண்பர்களே சிந்தியுங்கள் முதலில் பதிவர் சந்திப்புக்களை அதிகளவு நடத்தவேண்டும்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
இங்கேயும் திறமையான பல பதிவர்கள் சரியான அங்கிகாரம் இல்லாமல் இருக்கின்றார்கள் உதாரணமாக என்னை மிகவும் கவர்ந்த இலங்கை பதிவர்களில் ஒரு பதிவர் மதிசுதா இவரின் எழுத்துக்களில் எப்பவும் ஒரு சமூக அக்கறை இருக்கும்.காத்திரமான விவாதங்கள் இருக்கும்.ஆனால் அவருக்கான அங்கிகாரம் என்பது எந்த அளவில் இருக்கு?இதுவே மதிசுதா இந்திய பதிவராக இருந்திருந்தால் நிச்சயம் அவருக்கான அங்கிகாரம் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.பல முன்னனி ஊடகங்களில் அவரது படைப்புக்கள் வெளிவந்திருக்கும் ஒரு சிறந்த சமூக எழுத்தாளனாய் நிச்சயம் மாறியிருப்பார்.இப்படி எத்தனையோ பதிவர்கள் இருக்கின்றார்கள்.

எனவே இந்திய பதிவுலகத்தை பார்த்து பொறாமையில் இந்த பதிவு எழுதப் பட்டது இல்லை இதை இந்திய உறவுகள் புரிந்துக்கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்.இந்தியாவுக்கு போகும் போது என்னால் மதுரையில் பதிவர் தமிழ்வாசி பிரகாஸ் அண்ணனை சந்திக்க முடிகின்றது என்றால் ஏன் யாழ்பாணத்தில் இருக்கின்ற மதிசுதாவையோ இல்லை மதுரனையோ மன்னாரில் இருக்கின்ற அமல்ராஜ் அண்ணாவையோ சந்திக்க முடியவில்லை.அதுக்கு காரணம் இலங்கை பதிவர்கள் எமக்கிடையில் சரியான புரிந்துணர்வு இல்லை இதுக்கு காரணம் இந்தியாவை போல இங்கே அடிக்கடி பதிவர் சந்திப்புக்கள் நடத்தப் படுவது இல்லை புதிதாக பதிவெழுதவரும் பதிவர்களுக்கான அங்கிகாரம் சரியாக இல்லை பிரபலமான பதிவர்கள் மாத்திரம் அறியப் படுகின்றார்கள் புதிய பதிவர்கள் வந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுகின்றார்கள்.

என் நண்பர்கள் தளம் பதிவுலகில் ஓரளவு அறியப்பட்ட தளம் தான் ஆனால் இலங்கை பதிவர்களில் எத்தனை பேருக்கு எனது தளம் தெரியும் என்றால் நிச்சயம் விரல் விட்டு எண்ணலாம்.இதுவே இந்திய சொந்தங்களிடம் இல்லை புலம் பெயர் உறவுகளிடம் கேட்டால் ராஜ் அவன் என் சகோதரன் என்று சொல்லும் அளவிற்கு எனக்கும் அவர்களுக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு இருக்கு.இது போலதான் இலங்கையில் இருக்கும் பல பதிவர்களின் நிலை.

பதிவர் நிரூபன் அண்ணா அவர்களால் முகப்பு புத்தகத்தில் உருவாக்கப் பட்ட நாற்று குழுமம் பதிவர்களுக்கு இடையில் நல்ல உறவுப் பாலமாக பல புதியவர்களை அடையாளம் காட்டும் இடமாக இருந்தது.நான் எல்லாம் பதிவுலகில் வளர்ந்தது அங்கிருந்துதான் ஆனால் அங்கேயும் பல உள் குத்து அரசியல்கள்,ஈகோ பிரச்சனைகள் போன்ற பல விடயங்களால் அதன் நோக்கம் மாறிவிட்டது.தற்போது மீண்டும் நாற்று குழுமம் புத்துணர்ச்சி பெற்று இருப்பது வரவேற்க வேண்டிய விடயம்.ஆனால் அங்கே எத்தனை இலங்கை பதிவர்கள் இருக்கின்றார்கள் என்று கேட்டால் நிரூபன் அண்ணாவால் கூட சொல்ல முடியாது. ஒரு சில பிரபலமான பதிவர்களை தவிர பெரும்பாலும் புலம் பெயர் இலங்கை பதிவர்களே இருக்கின்றார்கள்.இலங்கை பதிவர்களின் பங்களிப்பு அங்கு குறைவே

நண்பர்களே இந்தப்பதிவு யாருக்கும் உள்குத்தும் இல்லை வெளிக்குத்தும் இல்லை யார் மனசையும் புண்படுத்துவதும் நோக்கம் இல்லை இலங்கையில் பதிவர்களுக்கு இடையில் நல்ல புரிந்துணர்வு ஏற்படவேண்டும் அடிக்கடி பதிவர் சந்திப்புக்கள் இடம் பெறவேண்டும் நல்ல படைப்புக்கள் அங்கிகாரம் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப் பட்டது இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் அவர்கள் மன்னிக்கவேண்டும்.

மாற்றம் பெருமா இலங்கை பதிவுலகம் பொறுத்திருந்து பார்ப்போம்.

முஸ்கி-இது என் 175 வது பதிவு ஒரு நல்ல விடயம் சொன்னதாக மனதிற்கு ஒரு திருப்தி 
*********************************************************************************
விரைவில் உங்கள் நண்பர்கள் தளத்தில் புதிய தொடர்

*********************************************************************************

Post Comment

31 comments:

Unknown said...

மனதில் இருப்பதை அப்படியே கொட்டியிருக்கிறீர்கள்....!நான் வந்த புதிதில் பிரமிப்பாய் பார்க்கப்பட்ட பதிவுலகம் இப்பொழுது சிறிய வட்டத்துக்குள் அடங்கிவிட்டது.இந்திய பதிவர்கள் பதிவுலகில் பயங்கர சண்டை போடுவார்கள் ஆனால் நேரில் நட்பை பேணுவார்கள். ஒரு பால் இருக்கின்றது அதை நான் பசும்பால் என்கிறேன், நீங்கள் இல்லை இது எருதுவின் பால் என்கிறீர்கள், விவாத முடிவில் அது எந்த பிராணியின் பால் என்பதை கண்டறிய வேண்டுமே தவிர...நட்பு பாதிக்கப்படக்கூடாது!

நானும் யாராவது ஒரு இலங்கை பதிவரை பதிவர் சந்திப்பில் கவுரவப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்...யாரும் மாட்டவில்லை நீங்கள் வந்தது எங்களுக்கு அதிக தொடர்பு இல்லாத மதுரையாக போய் விட்டது இதே ஈரோடாகவோ கோவையாகவோ இருந்தால் இன்னும் நெகிழ்ந்து இருப்பீர்கள்..! ஈரோட்டுல எந்த இடத்தில் இருந்து அழைத்தாலும் சிபி அண்ணன் பதினைந்து வினாடியில் அங்கு இருப்பார்!

K.s.s.Rajh said...

@வீடு சுரேஸ்குமார்

எனக்கு மட்டும் இல்லை பல இலங்கை பதிவர்களின் மனதில் இந்த ஆதங்கம் இருக்கும் பாஸ்

இந்தியா வந்த போது நிறைய பதிவர்களை சந்திக்கவேண்டும் என்று இருந்தேன் ஆனால் முடியவில்லை அடுத்த முறைவரும் போது நிச்சயம் பலரை சந்திக்கவேண்டும் என்பது என் விருப்பம் பார்ப்போம் நன்றி பாஸ்

தனிமரம் said...

வண்க்கம் ராச்!
நிச்சயம் ஜோசிக்க வேண்டிய அதிக விடயத்தை  நீங்கள் காத்திரமாக  பதிவு இட்டு இருக்கின்றீர்கள் ஆனால் துரதிஸ்ரம் ந்
ம்மவர்களிடையே இருக்கும் புரிந்துணர்வு இன்மை சிறுசிறுவிடயங்களை எல்லாம் ஏதோ கொலைச் செயல்போல பார்பதும் அதனையே ஒப்பாரியாக பார்ப்பதும்! ம்ம்ம் மதியின் பதிவுகள் சமுகநல அக்கறையோடு வரும் ஆனால் அவருக்கே உரிய அங்கிகாரம் பலர் கொடுக்காத போது புதியவர்கள் எப்படி வளர்வது.வீடு சுரேஸ்க்குமாரின் கருத்தையும் நான் ஆமோதிக்கின்றேன்!

தனிமரம் said...

சில உள்குத்தை கண்டுக்காமல் போகலாம் ஊமைக்குத்தை கண்டு நிதானிக்கும் போது ஈகோ வரத்தான் செய்யும் திறமையும் அனுபவமும் சீண்டப்படும் சில சமயங்களில் தனித்துவம் பேணுவதில் தப்பில்லையே இது என் கருத்து .பொதுவிடயங்கள் பகிர வேண்டிய இடத்தில் பலர் வேற பதையில் போகும் போது எப்படி புரிந்துணர்வை ஏற்படுத்துவது??ம்ம் முடிந்தால் இதை ஒரு  விவாதம் செய்யலாம் ஆனால் விவாதத்தைக்கூட விதண்டா வாதம் ஆக்கி தனக்கு எல்லா தொழில்நுட்பமும் தெரியும் என்று நீ நான் சொல்வதைக்கேட்கணும் அடிமை என்று எண்ணும் செயலை மாற்றினால் பலரோடு சேர்ந்து ஏன் நம்க்கு அங்கிகாரம் கிடைக்காமல் போகும் ??இது என் சிந்தனை  உனக்கும் எனக்கும் இருக்கும் புரிதல் மனோவுக்கும் எனக்கும் இருக்கும் புரிதல் ஏன் நம்மவர்களுடன் அதிகம் செய்யமுடியவில்லை இங்கே துசி,காட்டான்,கந்து ,நான் எல்லாரும் சந்திச்ச பின் இப்போது நல்ல நட்பு இருக்கு அது தொடர்கின்றது!

K.s.s.Rajh said...

@தனிமரம்

நன்றி பாஸ்

திண்டுக்கல் தனபாலன் said...

மனதில் உள்ளதை உண்மையாக சொல்லி உள்ளீர்கள் நண்பரே !

Yoga.S. said...

வணக்கம்,ராஜ்!உங்கள் ஆதங்கம் நியாயமானது.அதிகம் எழுத விருப்பமில்லை,ஏனெனில் நான் ஒரு பார்வையாளன் மட்டுமே என்பதால்!இருப்பினும் ஒரு விடயம்,ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு ,வெறுப்புகள் இருக்கும்.அனுசரித்துப் போவது முதன்மையானதாக இருத்தல் அவசியம்.எண்ணிக்கையில் அடக்கி விடக் கூடிய ஈழப் பதிவர்களே வலையுலகில் இருக்கையில்,உள்குத்து,வெளிக்குத்து என்று................................மேலும்,எனக்குத் தெரிந்து புலம்பெயர் பதிவர்களில் சிலர் விடுபட்டிருப்பது தெரிகிறது.பெயர்களா முக்கியம்?தொடர்ந்து உங்களால் இயன்றதை செய்யுங்கள்,எம்மால் முடிந்ததை உதவுவோம்.பகிர்வுக்கு நன்றி ராஜ்!

K said...

வணக்கம் மச்சான் சார்! நன்றாகவே எழுதியுள்ளீர்கள்!

நான் இப்போதெல்லாம் இப்படியான விஷயங்களில் தலை போடுவதே இல்லை! எல்லோருடனும் நல்லுறவோடு இருப்பது பற்றி மட்டுமே சிந்தித்து வருகிறேன்!

அதனால் இது பற்றி அதிகம் பேச விரும்பேலை!

அடுத்த பதிவில் சந்திப்போம் :-)))

ராஜ நடராஜன் said...

கருத்துக்களின் அடிப்படையிலேயே நான் அனைவரையும் படிக்கிறேன்.

ஈழ சகோதரர்களின் சமூக அக்கறை பதிவுகளுக்கு எனது ஆதரவு எப்பொழுதும் உண்டு.

Unknown said...

அன்பரே!
தங்கள் கருத்து வரவேற்கத்
தக்கதே!
பொதுவாக உலகெங்கும் உலவுகின்ற தமிழ்ப் பதிவர்கள் அனை
வரும் ஒன்று பட்டு ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே என ஆசை!

சா இராமாநுசம்

rajamelaiyur said...

எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு ..

rajamelaiyur said...

175 வது பதிவுக்கு வாழ்த்துகள் .. தொடர்ந்து கலக்குங்கள்

rajamelaiyur said...

இன்று

நடிகர் விஜய்யை கிண்டல் செய்து வம்பில் மாட்டிய விஜய் டிவி

Anonymous said...

@புலவர் சா இராமாநுசம் Good en aasayum adhae dhaan .. enna pannalaam idea pannunga.. i am not a blogger.. i am reader only.. so neenga pannunga.. ennaala mudinja help panraen i.a

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ Yoga.S. said...
வணக்கம்,ராஜ்!உங்கள் ஆதங்கம் நியாயமானது.அதிகம் எழுத விருப்பமில்லை,ஏனெனில் நான் ஒரு பார்வையாளன் மட்டுமே என்பதால்!இருப்பினும் ஒரு விடயம்,ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு ,வெறுப்புகள் இருக்கும்.அனுசரித்துப் போவது முதன்மையானதாக இருத்தல் அவசியம்.எண்ணிக்கையில் அடக்கி விடக் கூடிய ஈழப் பதிவர்களே வலையுலகில் இருக்கையில்,உள்குத்து,வெளிக்குத்து என்று................................மேலும்,எனக்குத் தெரிந்து புலம்பெயர் பதிவர்களில் சிலர் விடுபட்டிருப்பது தெரிகிறது.பெயர்களா முக்கியம்?தொடர்ந்து உங்களால் இயன்றதை செய்யுங்கள்,எம்மால் முடிந்ததை உதவுவோம்.பகிர்வுக்கு நன்றி ராஜ்!
////

நிச்சயமாக ஜயா நிறைய புலம பேர் பதிவர்களை குறிப்பிடவில்லைதான் மன்னிக்கவேண்டும்.

உங்கள் அன்புக்கு நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
மாத்தியோசி - மணி said...
வணக்கம் மச்சான் சார்! நன்றாகவே எழுதியுள்ளீர்கள்!

நான் இப்போதெல்லாம் இப்படியான விஷயங்களில் தலை போடுவதே இல்லை! எல்லோருடனும் நல்லுறவோடு இருப்பது பற்றி மட்டுமே சிந்தித்து வருகிறேன்!

அதனால் இது பற்றி அதிகம் பேச விரும்பேலை!

அடுத்த பதிவில் சந்திப்போம் :-)/////

ஹி.ஹி.ஹி.ஹி..........நன்றி மச்சான் சார்

K.s.s.Rajh said...

@ ராஜ நடராஜன் said...
கருத்துக்களின் அடிப்படையிலேயே நான் அனைவரையும் படிக்கிறேன்.

ஈழ சகோதரர்களின் சமூக அக்கறை பதிவுகளுக்கு எனது ஆதரவு எப்பொழுதும் உண்டு.
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ புலவர் சா இராமாநுசம் said...
அன்பரே!
தங்கள் கருத்து வரவேற்கத்
தக்கதே!
பொதுவாக உலகெங்கும் உலவுகின்ற தமிழ்ப் பதிவர்கள் அனை
வரும் ஒன்று பட்டு ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே என ஆசை!

சா இராமாநுசம்
////

நிச்சயமாக உங்கள் ஆசை மிகவும் சிறப்பானது இது பற்றிய முயற்சிகளுக்கு அத்திவாரம் இடம் படுமாயின் எனது ஆதரவு எப்பவும் உண்டு

K.s.s.Rajh said...

@ GUNDU BULB said...
@புலவர் சா இராமாநுசம் Good en aasayum adhae dhaan .. enna pannalaam idea pannunga.. i am not a blogger.. i am reader only.. so neenga pannunga.. ennaala mudinja help panraen i.a
////

நன்றி பாஸ் உங்களை போன்ற வாசகர்களின் ஆதரவுதான் எங்களை மேலும் மெருக்கூட்டும் மிக்க நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

நன்றி பாஸ்

நிரூபன் said...

வணக்கம் மச்சான் சார்,
நல்லா இருக்கீங்களா?

நாற்று குழுமம் மீளமைக்கப்பட்டு விட்டது.

இப்போது எனக்கும் நேரம் இல்லை.. நடந்தவை யாவும் இறந்த காலமாகவே இருக்கட்டும். எதிர்காலத்தில் நல்லுறவோடு அனைவரும் பயணிப்போம்,.

உங்கள் படைப்புக்களிற்கு எப்போதும் எம்மால் இயன்ற பங்களிப்புக்களை வழங்குவோம்!

காற்றில் எந்தன் கீதம் said...

அதிகம் எழுதுவதில்லையே தவிர நானும் இலங்கை பதிவர் தான்... உங்கள் ஆதங்கம் எனக்கும் உண்டு...
என் முதல் வருகை இது உங்கள் 175வது பதிவுக்கு வாழ்த்துகள்

நிரூபன் said...

தங்களின் 175வது பதிவிற்கு வாழ்த்துக்கள் மச்சான் சார்..

தொடர்ந்து கொஞ்சம் வித்தியாசமாக மண் வாசனையுடன் பதிவுகளைப் படைக்க வாழ்த்துக்கிறேன்.

K.s.s.Rajh said...

@நிரூபன்
வாங்க பாஸ் நான் நல்ல சுகம் நீங்கள் எப்படி? நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
காற்றில் எந்தன் கீதம் said...
அதிகம் எழுதுவதில்லையே தவிர நானும் இலங்கை பதிவர் தான்... உங்கள் ஆதங்கம் எனக்கும் உண்டு...
என் முதல் வருகை இது உங்கள் 175வது பதிவுக்கு வாழ்த்துகள்////

மிக்க நன்றி பாஸ்

கலைவிழி said...

உண்மை தான் சகோதரரே. ஈழத்தில் பலர் ஈகோ கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒத்துப் போகாமல் எதிர்ப்பை அவர்கள் பெருமையாக நினைக்கின்றனர் போலும். எழுத்துக்களில் இருக்கும் பக்குவம், பணிவு, பெருந்தன்மை பெரும்பாலானவர்கள் மனதில் இல்லை. யாழ்ப்பாணத்தான் என்று சொல்வதில் பெருமைப்படுபவர்களில் நானும் ஒருத்தி. ஆனாலும் இந்த விடயத்தில் வெட்கம் தான்.

ம.தி.சுதா said...

பிந்திய வருகைக்கு மன்னிக்கவும் ராஜ்..

முதலில் 175 வது பதிவுக்கு என் வாழத்துக்கள்

ம.தி.சுதா said...

தாங்கள் சொல்வது ஆணித்தரமான கருத்துத் தான்...

ஆனால் ஒரு விஜடயம் பலரை சென்றடைகிறது என்ற ஒரே ஒரு திருப்திக்காக மட்டுமே எழுதத் தோன்றுகிறது... மற்றும்படி முகதுதிகளாகவே மற்றையரவையைக் கருத வேண்டியிருக்கிறது...

K.s.s.Rajh said...

@கலைவிழி

நன்றி சகோதரி

K.s.s.Rajh said...

@♔ம.தி.சுதா♔

நன்றி பாஸ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails