Saturday, May 26, 2012

விஜய்க்கும் தோனிக்கு என்ன தொடர்பு தோனிக்கு ஒரு விசில் போடு........

மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் அதிஸ்டம்+திறமை ஒருங்கே பெற்ற ஒரு கிரிக்கெட் கேப்டன்.உலகில் எத்தனையோ திறமையான கிரிக்கெட் வீரர்கள் தோன்றியிருக்கின்றார்கள் ஆனால் எல்லோறும் திறமையான கேப்டன்களாக இருக்கமாட்டார்கள்.ஏன் பல வீரர்களுக்கு அணிக்கு கேப்டனாகும் சந்தர்பமே கிடைக்காமல் இருக்கும்.சிலர் அந்த பதவி வழங்கப்பட்டாளும் திறமையாக செயல் படமுடியாமல் தோல்விகளால் துவண்டுவிடும் போது ராஜினாமா செய்துவிடுவார்கள் இதற்கு மிகச்சிறந்த உதாரணம் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கிரிக்கெட்டில் எவ்வளவோ சாதனைகள் செய்த அவரால் கேப்டன் பதவியில் மட்டும் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை.


ஒரு அணியை வழிநடத்தும் திறன் என்பது இலகுவானது இல்லை பல சாவால்களை வெற்றி கொள்ளவேண்டும் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டும் ஒரு அணிதோற்றாலும்,வென்றாலும் முதல் பார்வை அதன் கேப்டன் மீதே ஏற்படும்.உதாரணமாக உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் முடிவடையும் போது பல அணிகளின் கேப்டன்கள் மாற்றப்படுவார்கள் இல்லை தானாக விலகிவிடுவார்கள்.

இந்திய அணியின் கேப்டன்களில் கபில்தேவ்,அசாருதின்,கங்குலி போன்றோரை தவிர்த்துவிட்டு இந்திய கிரிக்கெட் வரலாற்றை நோக்க முடியாது அதே போல இவர்கள் வரிசையில் தோனியையும் தவிர்க்கமுடியாது.

ஒரு வீரராக விக்கெட் கீர்பராக என்னைக் கவர்ந்த தோனி ஒரு கேப்டனாக கவர்ந்தது இல்லை.ஆனாலும் தோனி ஒரு சிறந்த கேப்டன் தான் என்பதில் சந்தேகம் இல்லை இக்கட்டான சூழ்நிலைகளில் தோனி எடுக்கும் ரிக்ஸ் இது சில நேரங்களில் தோல்வியடைந்தாலும் சில முக்கியமான இடங்களில் வெற்றியளித்துள்ளது. சுழற்சிமுறையில் சேவாக்,சச்சின்,கம்பீர் போன்றோரை தொடக்க வீரர்களாக களம் இறக்கி அது வெற்றியளிக்காமல் பலரின் விமர்சனங்களுக்கு தோனி ஆளானார்.

ஆனால் கடந்த உலகக்கோப்பை இறுதி போட்டியில் அதுவரை அந்த தொடரில் பெரிதாக சோபிக்காத தோனி இறுதிப்போட்டியில் நல்ல பார்மில் இருந்த யுவராஜ் சிங்கிற்கு முன் தான் களம் இறங்கி அதிரடியாக விளையாடி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.இந்தியாவுக்கு உலகக்கோப்பையும் கைவசமானது.அதைவிட உலகக்கோப்பை தொடருக்கு முன் அவுட்டப் பார்மில் இருந்த யுவராஜ் சிங் மேல் நம்பிக்கை வைத்து உலகக்கோப்பை போட்டிகளில் களம் இறக்கினார் விளைவு இந்தியாவுக்கு உலகக்கோப்பை கிடைத்தது.பல போட்டிகளில் யுவராஜின் தனித்துவமான சகலதுறை ஆட்டமே இந்தியா உலகக்கிண்த்தை வெல்ல பிரதான காரணங்களில் ஒன்று.
உலக்க்கோப்பையை வென்ற அந்த தருனம் ஆடுகளத்தில் யுவராஜ் சிங் & தோனி

இந்த ஜ.பி.எல் 2012 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெருமா இல்லையா என்பதே கேள்விக்குறியாக இருந்த நிலையில் அதிஸ்டவசமாக ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. இறுதிப்போட்டிக்கு நுழையவேண்டுமானல் மும்பை இந்தியன்ஸ் அடுத்தது டெல்லி அணியை வெல்லவேண்டும் என்ற கட்டாயம் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பான வெற்றியை பெற்று தோனி தன் மீதான ரசிகர்களின் எதிர்பார்பை பூர்த்திசெய்தார் அந்தப்போட்டியில் சென்னை அணிவெல்ல தோனியின் சிறப்பான அதிரடி கலந்த துடுப்பாடம் முக்கிய காரணம்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

அதே போல நேற்று நடைபெற்ற டெல்லி அணியுடனான போட்டியில் வென்றால் தான் இறுதிப்போட்டிக்கு நுழையமுடியும் என்ற நிலையில் நேற்று மிகச்சிறந்த ஒரு வெற்றியை பெற்று இருக்கின்றது சென்னை சூப்பர்கிங்ஸ்
அதுவும் கடந்த போட்டிகள் எதிலும் சோபிக்காத முரளிவிஜய் மிகச்சிறப்பாக ஆடி தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்தார் அதைவிட  தோனி தன்மீதுவைத்த நம்பிக்கையையும் காப்பாற்றினார் காரணம் தொடர்ந்தும் சோபிக்க தவறிய முரளிவிஜய்க்கு தோனி ஏன் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கருத்தும் பலரிடம் இருந்தது.

முரளி விஜய்
இந்திய அணியின் என்னைக் கவர்ந்த வீரர்களில் முரளி விஜயும் ஒருவர் மிகச்சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ஜொலிக்கவேண்டியவர் இடையில் சிறப்பாக ஆடமுடியாமையினால் இந்திய அணியில் இவரது இடம் உறுதியானதாக இல்லை.சேவாக்,சச்சின்,கம்பீர் என இந்திய அணியின் ஆரம்பதுடுப்பாட்ட வீரர்கள் பலமாக இருந்த படியால் இவர்களில் ஓருவர் ஆடமுடியாவிட்டால் முரளிவிஜய்க்கு வாய்ப்பு அளிக்கப்படும் அப்படி வாய்ப்யு அளிக்கப்படும் பல போட்டிகளில் முரளிவிஜய் பிரகாசிப்பது இல்லை.கிடைத்த வாய்ப்புக்களை அவர் சரியாக பயன்படுத்தவில்லை.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
இந்த ஜ.பி.எல் தொடரில் ரஹானே மிகச்சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரராக உருவெடுத்துள்ளாதால் இதனால் இந்திய அணியில் மீண்டும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக முரளிவிஜய்க்கான வாய்பு சந்தேகமே ஆனால் டெஸ்ட் போட்டிகளுக்கு ரஹானேவுடன் ஓப்பிடும் போது முரளிவிஜய் சிறப்பு  முரளிவிஜய் தனது துடுப்பாட்டத்தை மேப்படுத்திக்கொண்டு மீண்டும் இந்திய அணியில் இடம் பெற முயற்சிக்கவேண்டும் 

ரஹானே
சேவாக்,கம்பீர்,சச்சின்,இவர்களில் ஒருவர் விளையாடாமல் விடும் போட்டிகளின் போது கிடைக்கும் வாய்புக்களை இளம் வீரர்கள் சரியாக பயன்படுத்தி இந்திய அணியின் எதிர்கால ஆரம்ப துடுப்பாட்ட நச்சத்திரங்களாக மிளிரவேண்டும்.
ஒரு அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் பங்கு மகத்தானது அவர்கள் சிறப்பாக ஆடி ஓட்டங்களை குவிக்கும் போது பின்னால் வரும் வீரர்கள் நெருகடி இன்றி விளையாட முடியும்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
எது எப்படியோ இந்த ஜ.பி.எல் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.இறுதிப்போட்டியில் ஜெயிக்க போவது யார்? கம்பீர் தலைமையிலான கொல்கத்தாவா இல்லை தோனி தலைமையிலானா சென்னையா? பொறுத்திருந்து பார்ப்போம் 
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
நம்ம தாதா கங்குலி சொல்லியிருக்கார் இம்முறை கொல்கத்தாதான் கிண்ணத்தை வெல்லும் என்று.தலையே சொல்லிட்டார் அப்பறம் என்ன என் சப்போட்டும் நிச்சயம் கொல்கத்தாவுக்குத்தான் தாதா சொன்னா அவரின் ரசிகர்களுக்கு மாற்று கருத்து இருக்குமா என்ன?
பொறுத்திருந்து பார்ப்போம்.

முஸ்கி-தலைப்பில் சொன்ன விஜய் டாகுதர் இல்லைங்கண்ணா அது கிரிக்கெட்டர் முரளி விஜய் ஹி.ஹி.ஹி.ஹி......
*********************************************************************************
விரைவில் உங்கள் நண்பர்கள் தளத்தில் புதிய தொடர் மனதை கொள்ளை கொள்ளும் முழுநீள காதல் கதை அன்பே எங்கே நீ.....


*********************************************************************************

Post Comment

6 comments:

தனிமரம் said...

அட்டா திருப்பியும் டாக்குத்தர் பதிவா என்று பார்த்தால் கிரிக்கட்டா நம்ம எரியா வேற பாஸ்§ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

தனிமரம் said...

புதிய தொடர் அன்பே எங்கே நீ இதுவே கவிதையாக இருக்கு கலக்குங்கோ பின் தொடர்கின்ரேன்! தொடர் வெற்றிகரமாக அதிகபாகம் தாண்ட வாழ்த்துக்கள்§

Yoga.S. said...

வணக்கம்,ராஜ்!நல்ல வேளை தப்பீட்டன்/தப்பீட்டீங்கள்??????ஹ!ஹ!ஹா!!!!!!!

Yoga.S. said...

இன்னுமா "அவங்களை" (போட்டோ)நம்புறீங்க?த்சோ!த்சோ!!!!!

திண்டுக்கல் தனபாலன் said...

தலைப்பை பார்த்தவுடன் பயந்தேன். நல்ல வேலை தப்புசிட்டீங்க...

K.s.s.Rajh said...

தனித்தனியே பதிலளிக்க முடியாமைக்கு மன்னிக்கவும் நண்பர்களே அனைவருக்கும் நன்றி

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails