Thursday, May 31, 2012

என் திரைப்பட வரலாறு-2

கடந்த பதிவில்

சென்சர் பண்ணாத படம் பார்த்து பிடிபட்டால் டீ.வி.டெக் பறிமுதல் செய்யப் படும் கடுமையான தண்டனையும் வழங்கப் படும் அப்படி இருந்தும் பலர் விடுதலை புலிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு சென்சார் செய்யாத படங்களை பார்பார்கள்.

எங்கள் நண்பர்களுக்கும் சென்சர் பண்ணாத படம் பார்க்க ஆசையாக இருந்தது எப்படியும் சென்சர் பண்ணாத படம் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டோம் சென்சர் பண்ணாத படக்கொப்பியும் எடுத்தாச்சி ஆனால் எங்க பார்பது எப்படி பார்பது பார்த்து பிடிபட்டால் டின் கட்டிவிடுவார்கள் என்ற பயம் வேறு பார்த்தோமா இல்லையா 
இனி.....

ஒரு மாதிரி சென்சார் செய்யாத படக் கேசட் எடுத்தாச்சு அடுத்து பார்க்க வேண்டும் எங்கே பார்கலாம் என்று நண்பர்கள் சிந்தித்துக்கொண்டு இருந்தபோது நண்பன் ஒருவனின் உறவிணர் வீட்டில் ஒருத்தரும் இல்லை எனவும் அவன் மட்டுமே தனியாக இருக்கின்றான் என்றும் தகவல் கிடைக்க எங்கள் நண்பர்கள் டீம் அவனது வீட்டை நோக்கி படை எடுத்தது.

அவனும் எந்த மறுப்பும் சொல்லாமல் படம் போட ஓக்கே சொல்லிவிட்டான்
பிரபுதேவா,அப்பாஸ்,சிம்ரன்,ரம்பா,மற்றும் பலர் நடித்த வி.ஜ.பி,ரஜனி நடித்த அருணாச்சலம்,படையப்பா,ஆகிய மூன்று படங்களும் பார்த்தோம் இதில் வி.ஜ.பி படத்தில் தான் சிம்ரன் கொஞ்சம் கிளாமர் காட்டினார் மற்ற படங்கள் சென்சார் பண்ணி பார்பதற்கும் சென்சார் பண்ணாமல் பார்பதற்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை ஹி.ஹி.ஹி.ஹி......


அதுக்கு பிறகு அங்கே ஒரு நாள் திவான் படம் பார்த்தோம் இப்படியாக சென்சார் பண்ணாத படம் பார்த்தாச்சு ஆனால் கடவுள் புண்ணியத்தில் விடுதலைப்புலிகளிடம் சிக்கவில்லை.ஆனால் படம் பார்த்த மாணவன் ஒருவன் ஆர்வக் கோளாரில் எங்கள் பாடசாலையில் சொல்லிவிட்டான் நாங்க சென்சார் பண்ணாத படம் பார்த்தோம் என்று.அதோட நிக்காம பயபுள்ள பார்த்த படங்களின் பெயரையும் சொல்லிடுச்சி எங்க வகுப்பாசிரியர் ஒரு போக்கான ஆள்.அவர் வி.ஜ.பி படம் பார்த்தோம் என்றது நாங்க பிட்டு படம் பார்த்தாக நினைத்துக்கொண்டு எங்களை கடுமையாக எச்சரிக்க தொடங்கினார் புலிகளிடம் பிடித்து கொடுப்பதாக வெருட்டிவிட்டார்.

நம்ம பசங்க நடுங்கி போயிட்டாங்க ஆனால் நானும் இன்னும் ஒரு நண்பனும் உறுதியாக நின்றோம் சார் நாங்க பிட்டுப் படம் பார்கவில்லை வி.ஜ.பி என்பது பிரபுதேவா நடித்த தமிழ் படம் நீங்க அவர்களிடம் சொன்னால் பரவாயில்லை 
நீங்கள் சொல்லுங்கள் என்றோம்.மனசுக்குள் பயம் தான் ஒருவேளை சொல்லிவிட்டார் என்றால் சென்சார் பண்ணாத படம் பார்த்துக்கு மாட்டிவிடுவோம் ஆனால் என்ன துணிவு என்றால் நாங்க சென்சார் பண்ணாத படம் பார்த்ததுக்கு ஆசிரியரிடம் எந்த ஆதராமும் இல்லை ஏன் என்றால் அவர்களிடம் சொன்னால் ஆதாரத்துடன் சொல்லவேண்டும் சும்மா வாய் மொழியாக ஆசிரியரிடம் நண்பன் சொன்னது போல சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஆனால் பிறகு கவனித்து பார்பார்கள் ஆனால் நாங்கள் தான் அதுக்கு பிறகு படம் பார்பதை நிறுத்திவிட்டோமே என்ற துணிவும்தான்.

பிறகு ஆசிரியரும் அந்த பிரச்சனையை விட்டுவிட்டார்.அதுக்கு பிறகு நாங்களும் சென்சார் பண்ணாத படம் பார்பது இல்லை.ஆனாலும் சினிமா மீதான ரசனை குறையவில்லை நிறைய படங்கள் பார்த்தோம் சனி,ஞாயிறு மாலைவேளைகளில் மினியில் தான் நிற்போம்.

தற்போது டியேட்டர்கள் உள்ள ஊரில் இருந்தாலும் ரிலீஸ் ஆகும் புதுப்படத்தை எந்த வித தணிக்கையும் இல்லாமல் முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடும் வசதி இருந்தாலும் எல்லாப் படங்களும் பார்பது இல்லை படங்களை தேர்ந்தெடுத்து மட்டுமே பார்பது வழமையாகிவிட்டது. என்ன இருந்தாலும் அந்த காலப்பகுதியில் கிளாஸ் கட்ட அடித்து சினிமா பார்பது.சென்சார் பண்ணாத படம் பார்பது எல்லாம் அப்போது ஒரு த்ரிலிங்தான்.

தற்போது சினிமா மீதான ரசனை குறைந்துவிட்டது நீண்ட காலத்துக்கு பிறகு 
மனசை தொட்ட படங்கள் ”விண்ணைத்தாண்டி வருவாயா,மதராச பட்டிணம் ”
இந்த இரண்டும் படங்களும் பார்ததும் மனசில் ஏதோ இனம் புரியாத பீலிங் பாடசாலை காலத்து காதல்கள் எல்லாம் மனசில் வந்து போனது ம்ம்ம்ம்ம்ம் ஓவ்வொறு மனுசனுக்கும் ஓவ்வொறு பீலிங்....


இத்தாலியன் ஜாப் என்று ஒரு ஆங்கிலப் படம் வந்தது அதில் தங்கத்தை கொள்ளை அடிக்க ப்ளான் போடுகையில் அவர்களது கொள்ளையர் டீமில் ஒரு திறமையான கம்பியூட்டர் இஞ்ஜினியர் இருப்பார் அவர் ராஃபிக் கண்ரோலை தன் பக்கம் எடுத்து சிக்னல் எல்லாம் தங்களுக்கு ஏற்ற மாதிரி மாத்தி அமைச்சு தங்கம் வரும் வாகனத்தை மட்டும் வேறு பக்கம் திருப்பி விடுவார்கள் என்ன இந்த சீனை எங்கோ தமிழ் படத்தில் பார்த்தது மாதிரி இருக்கா ஆம் மங்காத்தா படத்தில் இதை உல்ட்டா பண்ணிதான் வெங்கட் பிரபு பிரேம்ஜியின் கதாபாத்திரத்தை உருவாக்கியிருப்பார் என்ன இத்தாலியன் ஜாப் படத்தில் தங்கம் மங்காத்தாவில் காசாக காட்டியிருப்பார்கள் அவ்வளவுதான்.ஏற்கனவே இத்தாலியன் ஜாப் படம் பல முறை பாத்திருந்ததால் மங்காத்தாவின் அந்த கொள்ளை அடிக்கும் சீனை ரசிக்க முடியவில்லை..மற்றும் படி அண்மையில் ரசித்த படங்களின் பட்டியலில் மங்காத்தாவையும் இணைக்கலாம்

அண்மையில் கலகலப்பு@ மாசாலா கபே படம் பார்த்தேன் நீண்டநாட்களுக்கு பிறகு மனம் விட்டு சிரிக்க முடிந்தது.சுந்தர்.சி யின் படங்களில் நகைச்சுவைக்கு குறையிருக்காது அதை இந்ததப் படத்திலும் நிருபித்து இருந்தார்.

எனக்கும் சினிமாவுக்குமான ரசனைத்தன்னை மிகப்பெரியது ஆனால் அதை எல்லாம் எழுத நிறைய பதிவுகள் தேவை எனவே சுருக்கமாக இந்த தொடரை முடிக்கலாம் என்று நினைக்கின்றேன்.
(முற்றும்)
********************************************************************************
விரைவில் புதிய தொடர் உங்கள் நண்பர்கள் தளத்தில்
*********************************************************************************

Post Comment

16 comments:

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!நல்லாயிருந்திச்சு!முடிச்சிட்(கதையை)டீங்க!///இப்படியாக சென்சார் பண்ணாத படம் பாத்தாச்சு.ஆனால் கடவுள் புண்ணியத்தில் வி.பு.களிடம் சிக்கவில்லை////எஸ்கேப் ஆயிட்டாண்டா,ஹ!ஹ!ஹா!!!ஹி!ஹி!ஹி!!!

Unknown said...

நாங்க சென்சார் பண்ணாத படம் பார்க்கிறோம்.....! யாரும் மிரட்டுவதில்லை! ஆனா கட்அடிச்சு படம் பார்த்து ஆசிரியர்களிடம் பிரம்படி நிறைய வாங்கியிருக்கிறோம்!ஷகிலா படம் உட்பட...ஹஹ!

தனிமரம் said...

அப்படியா சங்கதி ஆனாலும் வாத்தியார் விட்டுட்டார் வாங்கில் ஏத்தாமல்!ம்ம்ம் நானும் இப்போது பார்க்கவில்லை [பல படம் ம்ம்ம்ம்

Mahesh said...

ஹி...ஹி..ஹி..எப்படியோ சென்சார் பண்ணாம
படம் பார்த்து முடிச்சிட்டீங்கலே!
ம்ம்ம் பரவால!



அண்ணா நல்லா எழுதி இருக்குரீங்க
உங்க அனுபவத்தை!

அடுத்த ஒரு தொடர் சீக்கிரம் ஆரம்பியுங்கல்!

Athisaya said...

அண்ணே..என்க்கு ஒருவிடயம் கேக்கனும் போல இருக்கு.தப்பா நினைக்கப்படாது.அவனா நீஈஈஈஈஈஈ
அனுவவப்பகிர்வு சுவாரஸ்யம்.

Athisaya said...
This comment has been removed by the author.
K.s.s.Rajh said...

@Yoga.S.

ஹி.ஹி.ஹி.ஹி......நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
வீடு சுரேஸ்குமார் said...
நாங்க சென்சார் பண்ணாத படம் பார்க்கிறோம்.....! யாரும் மிரட்டுவதில்லை! ஆனா கட்அடிச்சு படம் பார்த்து ஆசிரியர்களிடம் பிரம்படி நிறைய வாங்கியிருக்கிறோம்!ஷகிலா படம் உட்பட...ஹஹ////

ம்ம்ம்ம்ம்ம் நாங்க கொடுத்துவைச்சது அம்புட்டுதான் பாஸ்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@Thursday, May 31, 2012 3:03:00 PM
தனிமரம் said...
அப்படியா சங்கதி ஆனாலும் வாத்தியார் விட்டுட்டார் வாங்கில் ஏத்தாமல்!ம்ம்ம் நானும் இப்போது பார்க்கவில்லை [பல படம் ம்ம்ம்ம்
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ mahesh said...
ஹி...ஹி..ஹி..எப்படியோ சென்சார் பண்ணாம
படம் பார்த்து முடிச்சிட்டீங்கலே!
ம்ம்ம் பரவால!



அண்ணா நல்லா எழுதி இருக்குரீங்க
உங்க அனுபவத்தை!

அடுத்த ஒரு தொடர் சீக்கிரம் ஆரம்பியுங்கல்////

நன்றி பாஸ் சீக்கிரம் ஆரம்பிக்கின்றேன் பாஸ்

K.s.s.Rajh said...

@Athisaya
////
அண்ணே..என்க்கு ஒருவிடயம் கேக்கனும் போல இருக்கு.தப்பா நினைக்கப்படாது.அவனா நீஈஈஈஈஈஈ
அனுவவப்பகிர்வு சுவாரஸ்யம்.
////

அடிங்.......................பிச்சு போடுவன் பிச்சு......

நன்றி சகோ

K.s.s.Rajh said...

@ வலைஞன் said...
வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்////

வணக்கம் நண்பரே பதிவு போடவே நேரம் இல்லை நேரப்பிரச்சனை காரணமாக நான் பல திரட்டிகளில் பதிவை இணைப்பது இல்லை நிச்சயமாக அடுத்த அடுத்த பதிவுகளை இணைத்துவிடுகின்றேன் நன்றி பாஸ்

பாலா said...

இவ்வளவு சுருக்கமாக முடிப்பீர்கள் என்று நினைக்கவில்லை. சரி அடுத்த தொடருக்கு வெயிட்டிங்.

திண்டுக்கல் தனபாலன் said...

vaalkaa valamudan !
வாழ்த்துக்கள் !

K.s.s.Rajh said...

@பாலா
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

நன்றி பாஸ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails