Tuesday, May 29, 2012

என் திரைப்பட வரலாறு-1

வணக்கம் அன்பு நண்பர்களே இந்த தொடர் மூலம் எனக்கும் சினிமாவுக்குமான தொடர்பை அதன் மீதான ரசனையை தன்மையை அலட்டல் இல்லாமல் சுருக்கமாக சொல்லாம் என்று நினைக்கின்றேன் ஆமா திரைபட வரலாறு எழுத இவரு பெரிய அப்பாடக்கரு என்று யாரும் திட்டாதீங்கப்பா ஒரு சராசரி சினிமா ரசிகனின் சினிமா அனுபவங்கள் தான் இது.

நான் முதல் முதலாக பார்த்த படம் எது என்று நல்லா ஞாபகம் இருக்கு ”துர்க்கா” 1995ம் வருசம் என்று நினைக்கின்றேன் எனக்கு 6 வயதில் தான் நான் முதன் முதலாக சினிமா பார்க்க தொடங்கினேன்.அப்போது எல்லாம் எங்க ஊரில் தியேட்டர்கள் இல்லை ஏன் மினி என்று அழைக்கப் படும் சின்ன சினிமா கொட்டகைகள் தான் 


எங்கள் வீட்டுக்கு அருகில் டீ.வி. டெக் வாடகைக்கு எடுத்து படம் போட்டார்கள் அங்குதான் நான் துர்க்கா படம் பார்த்தேன் அந்த வயதில் துர்க்கா படம் வெகுவாக என்னை கவர்ந்தது 

அதுக்கு பிறகு எனக்கு படம் பார்க்கும் வாய்பு கிடைக்கவில்லை பிறகு 1996ம் ஆண்டும் கிளிநொச்சி இடப்பெயர்வின் பின் நாங்கள் புத்துவெட்டுவான் என்னும் ஊரில் வசிக்க தொடங்கிய போது.அங்கே பக்கத்து வீடுகளில் டீ.வி டெக் வாடகைக்கு எடுத்து படம் போடுவார்கள் ஆனால் அப்போது வீட்டில் அயல் வீடுகளுக்கு சென்றும் படம் பார்க்க எங்கள் வீட்டில் அனுமதியில்லை எனவே மீண்டும் படம் பார்க்கும் கனவு நிறைவேறவில்லை.

1997ம் ஆண்டு காலப்பகுதியில் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்,சூரியவம்சம் போன்ற படங்களின் பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் ஓலித்த காலப்பகுதி ”ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உன் பேர சொல்லும் ரோராப்பூ”இந்த பாடல் கேட்டதில் இருந்து இந்தப் படத்தை எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்று மனதில் நீங்காத ஆசை எழுந்தது.


பின் 1998ம் வருட நிறைவில் ஆனைவிழுந்தான் என்னும் ஊரிற்கு இடம் பெயர்ந்த போது.மீண்டும் சினிமா பார்க்கும் ஆசை நிறைவேறியது எங்கள் வீட்டிற்கு அருகில் டீ,வி இருந்தது அங்கே அண்டனாவுடன் டி,வி இருந்தபடியால் பொதிகையில் சனி,ஞாயிறு தினங்களில் மூன்று மணிக்கு ஓரு படம் தான் அதைவிட எந்த அலைவரிசையில் ஏதாவது படம் போட்டாலும் அயலவர்கள் எல்லோறும் ஒன்று சேர்ந்து மண்னெண்னை வாங்கி இஞ்சினுக்கு(ஜெனரேட்டர்) கொடுத்து படம் போடச்சொல்லி டீ.வி வைச்சிருக்கும் வீட்டுக்காரரிடம் அடம் பிடிப்பது வழக்கம் அவரும்  போட்டுவிடுவார்.

அதைவிட ஆனைவிழுந்தானில்”மினி” இருந்த படியால் அங்கு சென்றும் படம் பார்பதுண்டு மினி என்பது சும்மா ஒரு கொட்டகையில் டி.வியை வைத்து படம் போடுவார்கள் இதைத்தான் தியேட்டர் அப்போது என்று நாங்க சொல்லுறது


அப்படி நான் பார்த்த படங்கள் ஏராளம் சில குறிப்பிடதக்க படங்கள் உன்னிடத்தில்என்னைக்கொடுத்தேன்,சூரியவம்சம்,கிளிஞ்சல்கள்,விதி,ராஜாவின் பார்வையிலே,செந்தூரப் பாண்டி,பாண்டியன் IPS,துள்ளாதமனமும் துள்ளும்,காலமெல்லாம் காத்திருப்பேன், நினைவிருக்கும் வரை,போன்ற தமிழ்படங்கள் உடபட ரகுலா,அனகொண்டா,போன்ற ஆங்கிலப் படங்கள் இப்படி நிறைய படங்கள் அதைவிட மாகாபாரதம் அப்போது தொடராக மினியில் போடுவார்கள் அது 33 பகுதிவரை போட்டார்கள் அதையும் ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவேன் அப்போது சிறுவர்களுக்கு மினியில் டிக்கெட் காசு 10 ரூபாய்.

சிம்ரன்,மீனா,ரோஜா,தேவயாணி இவர்கள் தான் அப்போது இளைஞர்களின் கனவுக்கன்னிகள்.நாங்க சின்ன பயங்க என்பதால் எனக்கு ரோஜா பிடிக்கும்,மீனா பிடிக்கும் என்று சொல்ல அப்ப வெட்கம் இதனால் பம்மிக் கொண்டு இருந்துவிடுவோம் ஆனாலும் எனக்கு அப்பவே சிம்ரன்,தேவ்யாணி,ரோஜா, ஜஸ்வர்யா ராய் மேல ஒரு இதுதான் ஹி.ஹி.ஹி.ஹி.....
என்ன ஒரு அழகிய இடை கவர்சியிலும் சரி நடிப்பிலும் சரி இப்ப உள்ள ஹன்சிகா,பன்சிகா எல்லாம் தலைவி கிட்டையும் நெருக்க முடியாது
(யார்லே அது இப்ப சிம்ரன் போட்டோவை பார்த்தியா என்று கொந்தளிக்கிறது ஹி.ஹி.ஹி.ஹி)

பிறகு 2000ம் ஆண்டுக்கு பின் மெல்ல மெல்ல கிளிநொச்சியில் மீளக் குடியமர தொடங்கிய பின் ஆனைவிழுந்தானில் இருந்த ஒரே ஒரு மினியான கமல் மினியும் கிளிநொச்சிக்கு மாற்றம் பெற்றுவிட்டது.இதனால் மினியில் படம் பார்க்கும் கனவு தகர்ந்துவிட்டது.

பிறகு நாங்கள் மீண்டும் 2001 இல் கிளிநொச்சியில் மீளக் குடியமர்ந்த பிறகு தாராளமாக படம் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது இசை நிலா,கமல் என இரண்டு இரண்டு மினி இருந்தன.அதைவிட அயல் வீடுகளில் கலியாண வீடு,பிறந்த நாள் வீடுகளுக்கு படம் போடுவார்கள் விடிய விடிய 4 படம் போடுவார்கள் பாடசாலை விடுமுறை நாட்களில் கண்முழிச்சி விடியவிடிய படம் பார்பேன்.

அதன் பிறகு கொஞ்சம் வளர்ந்த பையன் ஆகிவிட்டதால் நண்பர்களுடன் சனி,ஞாயிறு கிழமைகளில் டியூசன் கட் அடித்துவிட்டு தவறாமல் படம் பார்க சென்றுவிடுவோம் பெரும்பாலும் கமல்,இசைநிலா மினிகளில் சனி,ஞாயிறு கிழமைகளில் மேட்னி ஷோவுக்கு வருவது பசங்கள் தான் அதுவும் ஓவ்வொறுத்தன் இடுப்பிலையும் கொப்பி,புத்தகம் சொருகியிருப்பான்கள் டியூசன் போறன் என்று சொல்லிவிட்டு மினிக்கு வந்திருப்பாங்க..ஹி.ஹி.ஹி.ஹி........

2001 இல் கிளிநொச்சி வந்த பின் முதன் முதலில் பார்த்த படம் கடவுள்,அருண்பாண்டியன்,ரோஜா மன்சூர் அலிகான்,நடித்த படம் இரண்டவதாக பார்த்த படம் நாசர் கதாநாயகனாக நடித்த மாயன் ஏற்கனவே பல படங்களில் வடிவேலுவை பார்த்திருந்தாலும் இந்தப் படத்தில் இருந்துதான் நான் வடிவேலுவின் தீவிர ரசிகனாக மாறினேன்.

இப்படியாக ஏராளமான படங்கள் பார்த்து முடிச்சாச்சி ஆனால் என்ன ஒரு குறை அப்போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த படியால் சினிமாப் படங்களில் சென்சர் செய்தே வெளியிடுவார்கள் கசமுசா சீன்கள்,கொஞ்சம் தூக்கலான குத்துப் பாடல்கள் எல்லாம் சென்சார் செய்துவிடுவார்கள் படமும் இரண்டரை மணித்தியால படம் என்றால் இரண்டு மணித்தியாலம் தான் இருக்கும் உதாரணத்துக்கு பகவதி படத்தில் வரும்” கை கை கை வைக்கிறா”பாட்டை சென்சார் பண்ணியே பகவதி படம் வெளியிடப் பட்டது.

சென்சர் பண்ணாத படம் பார்த்து பிடிபட்டால் டீ.வி.டெக் பறிமுதல் செய்யப் படும் கடுமையான தண்டனையும் வழங்கப் படும் அப்படி இருந்தும் பலர் விடுதலை புலிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு சென்சார் செய்யாத படங்களை பார்பார்கள்.

எங்கள் நண்பர்களுக்கும் சென்சர் பண்ணாத படம் பார்க்க ஆசையாக இருந்தது எப்படியும் சென்சர் பண்ணாத படம் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டோம் சென்சர் பண்ணாத படக்கொப்பியும் எடுத்தாச்சி ஆனால் எங்க பார்பது எப்படி பார்பது பார்த்து பிடிபட்டால் டின் கட்டிவிடுவார்கள் என்ற பயம் வேறு பார்த்தோமா இல்லையா அடுத்த பதிவில்

(தொடரும்)
*********************************************************************************
சூரியம் வம்சம் திரைப்படத்தில் இடம் பெற்ற மறக்க முடியாத மெகா ஹிட் பாடல் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ 
*********************************************************************************
விரைவில் உங்கள் நண்பர்கள் தளத்தில் புதிய தொடர்

*********************************************************************************

Post Comment

14 comments:

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!நலமா?அப்பா பள்ளிக்கூடம் கட் அடிச்சுப் படம் பாத்திருக்கிறியள்?முனி உலாவுற நேரத்தில,மினி தியேட்டர்ல படம்,ஹ!ஹ!ஹா!!!!!!!!(படம் பாத்து பிடிபட்டு...........................அங்கால நான் சொல்ல மாட்டன்)

தமிழ்வாசி பிரகாஷ் said...

அட, முன்னாள் தலைவி சிம்ரன் படம்!!!!!!!

K.s.s.Rajh said...

@Yoga.S.

வாங்க பாஸ் நான் நலம் நீங்கள் எப்ப்டி?

ஹி.ஹி.ஹி.ஹி........... அது ஒரு த்ரிலிங் அனுபவங்கள் பார்தோமா?பார்கலையா என்று அடுத்த பதிவில் சொல்கின்றேன்

K.s.s.Rajh said...

@
தமிழ்வாசி பிரகாஷ் said...
அட, முன்னாள் தலைவி சிம்ரன் படம்!!////

வாங்க பாஸ்

நேற்று இல்லை இன்று இல்லை எப்பவும் எங்கள் தலைவி சிம்ரன் தானுங்கோ

பால கணேஷ் said...

சுவாரஸ்யமா இருக்கு ‘மினி’ல படம் பாத்த உங்க நினைவுகள். சென்சார் செய்யப்படாத படம் பாத்தீங்களா இல்லையான்றதை தெரிஞ்சுக்க அடுத்த பகுதிக்கு வெயிட்டிங். அதுசரி... அதே கைய வெக்கிறா பகவதி பாட்டு டிவில வர்றப்ப எப்படி சென்ஸார் செய்வாங்களாம் தம்பி?

K.s.s.Rajh said...

@பா.கணேஷ்

வணக்கம் பாஸ்

டி.வியில வரும் போது சென்சர் செய்ய முடியாது அப்படி பார்த்தால்தான் உண்டு.

ஆனால் பெரும்பாலும் எங்கள் ஊர்களில் இப்ப உள்ளது போல அதிகளவான டீ.வி சனல்கள் ஓளிபரப்பு கிடையாது அண்டனா கட்டினால் பொதிகை போன்ற சனல்கள் தெரியும் டி.ஸ் டிவி எல்லாம் 2002ம் ஆண்டுக்கு பிறகு சமாதான காலத்தில் தான் வந்தது அதுவும் ஒரு சில வீடுகளில் மாத்திரம் தான் இருக்கும் அதிகளவு மினிகளிலும் வீட்டில் வீடியோ கேசட் வாடகைக்கு எடுத்தும் தான் சினிமா பார்பது வழக்கம்

நன்றி பாஸ்

ArjunaSamy said...

துர்கா படத்துல நடிச்சது

பேபி ஷாலினி இல்ல

அவங்க தங்கச்சி

பேபி ஷாம்லி..

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...

தனிமரம் said...

சினிமா அனுபவத்தைச் சொல்லுகின்றீர்கள் நானும் இந்தப்படங்கள் எல்லாம் அப்போது பார்த்தேன்!:)))

தனிமரம் said...

அதன் பிறகு கொஞ்சம் வளர்ந்த பையன் ஆகிவிட்டதால் நண்பர்களுடன் சனி,ஞாயிறு கிழமைகளில் டியூசன் கட் அடித்துவிட்டு தவறாமல் படம் பார்க சென்றுவிடுவோம் பெரும்பாலும் கமல்,இசைநிலா மினிகளில் சனி,ஞாயிறு கிழமைகளில் மேட்னி ஷோவுக்கு வருவது பசங்கள் தான் அதுவும் ஓவ்வொறுத்தன் இடுப்பிலையும் கொப்பி,புத்தகம் சொருகியிருப்பான்கள் டியூசன் போறன் என்று சொல்லிவிட்டு மினிக்கு வந்திருப்பாங்க..ஹி.ஹி.ஹி.ஹி........//இங்கேயும் அதே அதே கூத்துத்தான் அப்போது செய்தேன்!ஹீஈஈ

தனிமரம் said...

டின் கட்டினாங்களா ஆவலுடன் அடுத்த பகுதிக்கு காத்திருக்கின்றேன் ராச்!

தனிமரம் said...

ஆர். ரவிசங்கர் கற்பனையில் இந்த
ப்பாடல் எனக்கும் பிடிக்கும் ஒரு காலத்தில் !அதிகம் கேட்டது இப்போதும் காதில் ஒலிப்பது !

Athisaya said...

அடடா ஸ்கூல் கட்டடிக்கற அளவுக்கு கலை ஆர்வம் பாஸ்....!நல்லா வருவீங்கங்கப்பா....!வாழ்த்துக்கள்.

K.s.s.Rajh said...

@ArjunaSamy

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி சகோ நான் இவ்வளவு காலமும் ஷாலினி என்றுதான் நினைச்சுக்கொண்டு இருந்தேன் நன்றி சகோ

K.s.s.Rajh said...

@Athisaya

ஹா.ஹா.ஹா.ஹா. நன்றி சகோ

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails