Saturday, October 13, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -3

1998ம் ஆண்டின் இறுதியில் ஆனைவிழுந்தான் நோக்கிய இடப்பெயர்வு இங்கே 2001ம் ஆண்டின் இறுதிவரை எங்களுக்கு அடைக்களம் கொடுத்தமண்.
1999ம் ஆண்டு உக்கிரமாக யுத்தம் நடந்துகொண்டு இருந்த காலப்பகுதியாகும் தெருவுக்கு தெரு மரணஓலங்கள் ஒலித்துக்கொண்டு இருக்கும்.

ஊரில் இன்று ஒரு அண்ணாவைக் கண்டால் அடுத்தநாள் அவரை காணக்கிடைக்காது கேட்டால் அவர் வீரச்சாவு என்பார்கள்,மனம் வலிக்கும் இன்று இருந்தவர் அடுத்தநாள் இறந்துவிட்டாரே என்று.வாழவேண்டிய வயதில்,ஏன் இவர்கள் மரணிக்கின்றார்கள்.என்று தீரும் இந்த மரணங்கள் என்று ஓவ்வொறு ஈழமக்கள் மனங்களிலும் ஆழமாக இருந்த கேள்வி இது.


அப்போது ஊர்களில் பரவாலாக இருந்த பேச்சு அவர் இயக்கத்துக்கு போயிட்டாராம்,அவரின் மகள் இயக்கத்துக்கு போயிட்டாளாம்,இவன் ராசன் இயக்கத்துக்கு போயிட்டானாம் இதுதான் எங்கு திரும்பினாலும் செய்தி. இளைஞர்களாக இருந்த பலர்  விடுதலைப்புலிகளுடன் தங்களை இணைத்துக்கொண்டனர்.

வயதானவர் முதல்,பலரும் தங்களால் இயன்றளவு எல்லைப்படை என்றும் மக்கள் படை என்றும் வன்னி மக்கள் தங்களால் இயன்றளவு பங்களிப்பை வழங்கிக்கொண்டு இருந்தார்கள்.

வியட்நாம் போரில் வியட்நாம் மக்கள் குழந்தையை தொட்டிலில் போட்டு நித்திரை ஆக்கிவிட்டு போருக்கு போனதாக படித்திருக்கின்றோம்.கணவனும் மனைவியும் ஒரே போர்முனையில் சண்டையிட்டதை படித்திருக்கின்றோம் இது வியட்நாம் வரலாறு.ஆனால் ஈழத்தில் வன்னியில் வாழ்ந்த ஓவ்வொறு குடிமகனும் இவ்வாறான சம்பவங்களை நேரில் பார்த்திருப்பான்.

தந்தை எல்லைப்படையிலும்,மகள் போராளியாகவும் ஒரே களமுனையில் நின்று போர்புரிந்தது போன்ற பல வரலாறுகள் எங்கள் மண்ணில்.

எங்கும் மரணஓலங்களும், வெடிகுண்டு ஓசைகளும்மே இயல்பான வாழ்க்கையின் அடையாளமாக மாறியது.

ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை முறையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கை வன்னிமக்களுடையது.பொருளாதாரத்தடை இருந்த நேரம் எந்த பொருற்களும் வராது,இருப்பதை கொண்டு வாழ்கின்ற வித்தையை எங்களுக்கு சொல்லித்தந்தது யுத்தமும்,வறுமையும்தான்.

பங்கர் லாம்பு என்ற ஒன்றை கண்டுபிடித்ததும்,சைக்கிள் டைனமோவை சைக்கிள் ரிம்முடன் இணைத்து மின்சாரம் உற்பத்தி செய்ததும்,சைக்கிள் டயறுக்குள் வைக்கோலை அடைந்து சைக்கிள் டீயூப்புக்கு பதிலாக பயன் படுத்தியது,போன்ற வறுமையிலும் சிறப்பாக வாழும் பல கண்டுபிடிப்புக்களை நிகழ்த்திய வன்னிமக்கள் உண்மையில் ஓவ்வொறுவரும் விஞ்ஞானிதான்.

பங்கர் லாம்பு-இது எப்படி என்றால் ஒரு ஜாம் போத்தலில் கம்பியை வளைத்து அதுக்குள் செறுகி அதில் சைக்கிள் வால்கட்டையை இணைத்து அதில் திரியை இணைத்து. பிறகு போத்தலினுள் கொஞ்சம் பஞ்சியை போட்டு அதில் மண்ணெண்ணையை ஊற்றினால் பஞ்சில் ஊறும் மண்ணெண்ணை பல நாட்களுக்கு தாக்குபிடிக்கும்.சிறிதளவு எண்ணையில் பலநாட்கள் விளக்கு எரியும்.
இதுதான் பங்கர் லாம்பு குறைந்தளவு வெளிச்சம் கிடைக்கும் என்றாலும்  குறைந்தளவு எண்ணையில் பல நாட்கள் ஒளிரும் இந்த பங்கர் லாம்பு வெளிச்சத்தில் படிக்காக போரினால் பாதிக்க பட்ட ஈழத்து மாணவர்கள் யாரும் இருக்கமுடியாது
ஆனால் யாரும் யுத்தத்தை விரும்பியது கிடையாது எப்போது இது தீரும். நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்று ஓவ்வொறு மக்களின் மனங்களிலும் இருந்த தீராத ஆசை அது.

பத்திரிகைகளில்  யுத்தம் இல்லாத இடங்களில் வாழும் மக்கள் பற்றி அறிந்துகொள்கின்றபோது எங்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையாதா?என மனதுக்குள் அழுத காலங்கள் பல.கடவுளிடம் யுத்தம் இல்லாத உலகம் கேட்டு தினம் தினம் மன்றாட்டங்கள்.

மூன்று பேர் கொண்ட குடும்பத்தில் உழைப்பாளியான தந்தை எல்லைப்படையில் சேர்ந்து அவர் இறந்துவிட்டால் அந்த குடும்பத்தின் நிலையை என்னவாகும்.அந்த குழந்தைகளின் எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறி? இப்படி எத்தனை கதைகள் திருமணம் செய்து இரண்டு மாதத்தில் கணவனை பறிகொடுத்த மனைவி,தாயை பறிகொடுத்த பிள்ளைகள் தந்தையை இழந்த பிள்ளைகள்,பிள்ளைகளை இழந்த பெற்றோர்.
கைகால்களை இழந்த சிறுவர்கள்.

இந்த ஜென்மம் மட்டும் இல்லை இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் யுத்தம் இல்லாத உலகத்தில் பிறக்கவேண்டும் என்பதை எங்கள் மக்களின் முதல் ஆசையாக இருக்கும்.

தனி ஈழம் அமைப்பேன்,அதுதான் என் உயிர் மூச்சு,என கோபாலபுரத்தில் குந்தியிருந்து அறிக்கைவிட்டு உண்ணாவிரதம் என்று சொல்லிவிட்டு காலையில் வயிறுமுட்ட உண்டு அது செமிப்பதற்காக கட்டியில் படுத்துறங்கிவிட்டு அதை உண்ணாவிரதம் என்று சொல்லி அரசியல் நாடகம் ஆடும் கருனாநிதி போன்ற அரசியல்வாதிகளுக்கு தெரியுமா? பசி என்றால் என்ன குருதி என்றால்,என்ன மரண ஓலம் என்றால் என்ன? என்று

தயவு செய்து எங்களுக்கு நன்மை செய்கின்றேன் என்ற போர்வையில் உங்களுக்கு சுயலாபம் தேடும் அரசியல்வாதிகளே ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்துகொள்ளுங்கள் உண்மையில் எங்களுக்கு எதாவது செய்யவேண்டும் என நினைத்தால் எங்களை பற்றி பேசாமல் இருங்கள் அதுவே போதும்.

புதிய இடம் புதிய பாடசாலை என ஆனைவிழுந்தான் வாழ்க்கை சதீஸ்க்கு புதிதாக தெரிந்தது ஆனால் பல நண்பர்கள் உருவானார்கள்.புத்துவெட்டுவானை விட்டு வந்தது அவனுக்கு கவலையாக இருந்தாலும் புதிய நண்பர்களின் மூலம் அந்தக் கவலை தீர்ந்தது.சதீஸ்க்கு மிகவும் பிடித்தமான விடயங்களில் கிரிக்கெட்டும் ஒன்று முதன் முதலில் அவன் கிரிக்கெட் விளையாடியது அவனுக்கு கிரிக்கெட்டை கற்றுக்கொடுத்தது ஆனைவிழுந்தாந்தான்.

புதிய பாடசாலையில் சக மாணவர்களும்,ஆசிரியர்களும் இவனிடம் அன்பாக பழகினர்.அதில் குறிப்பாக அருனா டீச்சரும்,சுலேகா டீச்சரும் குறிப்பிடத்தக்கவர்கள்.இதில் அருனா டீச்சர் பற்றி சொல்லவேண்டும் என்றால் ஒரு தாயை போல அவனிடம் பாசம் காட்டியவர்.விஞ்ஞான பாட ஆசிரியர் அவர்.

அருனா டீச்சருக்கு தாய் இல்லை தந்தைமட்டும்தான் பிறகு தந்தையும் இறந்துவிட்டார்.அவர் திருமணம் முடித்தபின் அவரது கணவனையும் இறுதியுத்தம் காவுவாங்கியது.இப்படி எத்தனையோ அருனா டீச்சர்கள் எங்கள் மண்ணில் இருக்கின்றார்கள்
(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பகுதிகளை படிக்க இங்கே கிளிக்-யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் தொடர்

முஸ்கி-சதீஸ் என்ற ஒருவர் கதை சொல்வதாக இந்த தொடர் நகர்ந்து செல்கின்றது ஆனால் இதில் குறிப்பிடப்படும் சதீஸ் நான் இல்லை.




Post Comment

6 comments:

கரிகாலன் said...

தொடர்ந்து எழுதவும் .
வாழ்த்துக்கள்

தனிமரம் said...

முஸ்கி ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன் தொடர்ந்து அவதானம் பிரதானம் தம்பி!ம்ம்ம்

தனிமரம் said...

ஜாம் விளக்கு 1991 இல் இருந்து பலர் நேரடி அனுபவம் !
ஜாம் எனபது ? போத்தலில் அடைக்கப்படும் பதப்படுத்திய பழச்சுவை!ம்ம்ம் தமிழக உறவுகள் அறிய வேண்டும் என்பதால் தனிமரம் சொல்லிவிடும் விளக்கம் !கருத்து நீக்கும் உரிமை ஆசிரியருக்கு உண்டு!

தனிமரம் said...

தொடர் நல்லாக அவழத்தைச்சொல்லிய வண்ணம் அமைகின்றது தொடருங்கள் பின் வருகின்றேன்!

திண்டுக்கல் தனபாலன் said...

எவ்வளவு சிரமம், வேதனை என்பதை "பங்கர் லாம்பு" சொல்கிறது.... தொடர்கிறேன்...

துரைடேனியல் said...

இதயம் கசியும் கண்ணீர்க் கதைகள்.... ஈழத்தின் மறுபக்கத்தை உணர்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் சகோ. பங்கர் லாம்பு கண்டு ஆச்சர்யப்பட்டேன். நல்ல ஐடியாதான்!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails