Monday, October 22, 2012

ஸ்கூட்டியில் போகும் ப்யூட்டிகளே கவனம் தேவை

இப்ப எல்லாம் பொண்ணுங்க பைக் ஓட்டிக்கொண்டு போகும் போது தாங்கள் மட்டும் தான் ரோட்டில் போகின்றோம் வேறுயாரும் போகவில்லை. மை பைக் மை பெற்றோல்,மை ரோட் என்ற நினைப்பில் தான் போறாங்க.
கொஞ்சம் கூட அவதானம் இல்லை பக்கத்தில் வரும் வாகனங்களை கணக்கெடுப்பது இல்லை.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு www.nanparkal.com)

சைட்டில் கண்ணாடி என்ற ஒன்று ஏன் வைக்கிறாங்க மேக்கப் போட்ட உங்கள் மூஞ்சியை பார்கவா?இல்லை அது பின்னால் வரும் வாகனங்களை பார்பதற்குத்தான் இருக்கு. ஆனால் நான் அவதானித்த மட்டில் பைக் ஓட்டி செல்லும் பெண்கள் பெரும்பாலும் இந்த கண்ணாடியை கவனித்து பைக் ஓட்டுவது இல்லை.

நானும் நண்பன் ஒருவனும் பைக்கில் போய்க்கொண்டு இருந்தோம் எங்களுக்கு முன்னால் ஸ்கூட்டியில் இரண்டு பொண்ணுங்க போய்க்கொண்டு இருந்தார்கள்.நாங்களும் ஹோன் (ஹாரன்) அடிக்கிறம் அடிக்கிறம்.அது அவர்களுக்கு கேட்டமாதிரி தெரியவில்லை.சரி இவர்கள் வழிவிடமாட்டார்கள் நாங்கள் முந்திச்செல்லோம் என்று முந்தவெளிக்கிடும் போது சரியாக நாங்கள் முந்தவெளிக்கிட்ட சைட்டில் ஸ்கூட்டியை திருப்பினார்கள்..இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு www.nanparkal.com)

எனக்கு நல்லா வாயில் வந்தது ஆனால் நாகரிகம் கருதி திட்டவில்லை.
ஆனால் நண்பன் நன்றாக திட்டிவிட்டான். ஏனடி கண்ணாடி என்ன ................ இருக்கு அதை பார்க்காம லூசு மாதிரி போறீங்க ஹோன்(ஹாரன்) அடித்தால் வழிவிட மாட்டிங்களா.என்று திட்டி தீர்த்துவிட்டான்

சொரி(சாரி) அண்ண என்றார்கள்.உங்கள் சொரி எவனுக்கு வேணும் அக்சிலண்ட் ஆன என்ன செய்வீங்க என்று சொல்லவும் அவர்கள் ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டார்கள்.

இப்படித்தான் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு அக்கா ஒரு நாள் மத்தியானம் ஓவர் ஸ்பீட்டில் தனது ஸ்கூட்டியில் வந்துகொண்டு இருந்தார்.அது பம்மிங் அதிகம்  உள்ள ஒரு ரோட் ஓவர் ஸ்பீட்டில் வந்த இவரால் பம்மிங்கில் கன்ரோல் பண்ணமுடியவில்லை விளைவு லாரியில் அடிப்பட்ட தவளை மாதிரி அக்கா நடுவீதியில் கிடந்தார். ஸ்கூட்டி பத்து மீட்டர் தள்ளி கிடந்தது.இது எல்லாம் தேவையா?.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு www.nanparkal.com)
ஸ்கூட்டி போன்ற லேடிஸ் பைக்குகளில் பெரும்பாலும் கியர் இருப்பது இல்லை ஆக்சிலேட்டர் கன்ரோல்தான். எனவே ஸ்பீட்டாக ஓடும் போது மிகுந்த அவதானமும் கன்ரோலும் தேவை. ஏனைய கியர் சிஸ்டம் உள்ள பைக்குகள் போல சட்டென நிறுத்தமுடியாது.அப்படி நிறுத்துவது என்றால் நல்ல கன்ரோல் இருக்கவேண்டும் இல்லை என்றால் விழுத்திவிடும்.


அதைவிட டைட்டான நடக்கவே முடியாத ஸ்கேட்டுகள் போட்டுக்கொண்டு பலர் பைக் ஓட்டுவதை பார்த்திருக்கின்றேன் சட்டென பைக்கை நிறுத்தினால் கால் ஊன்ற முடியாது காலை ஊன்ற அவர்களின் ஸ்கேட் விடாது.அப்பறம் என்ன ரோட்டில் விழுந்து கும்பிடவேண்டியதுதான்.எனவே பைக் ஒட்டும் போது சுடிதாரோ இல்லை ஜுன்ஸ் இல்லை பைக் ஓட்ட வசதியான ஆடைகளை அணிந்துகொண்டு ஓட்டுங்கள் சகோதரிகளே.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு www.nanparkal.com)
அதுக்காக பைக் ஓட்டும் எல்லாப் பெண்களையும் குறை சொல்லவில்லை சிலர் மிகுந்த அவதானத்துடன் செல்லுபவர்களும் இருக்கின்றார்கள்.

ஆண்கள் மட்டும் திறமாகவா பைக் ஓட்டுகின்றார்கள்.பெண்களை குறை சொன்ன ராஜ் ஒழிக என்று கோசம் போடுபவர்கள் தாராளமாக போடலாம்.
நான் அவதானித்த விடயத்தை சொன்னேன் அவ்வளவுதான்.

ரைவிங் என்பது ஒரு கலை அதை காதலிக்கவேண்டும் அவதானமாக இருக்கவேண்டும் அப்போதுதான் அது எம்மை காதலிக்கும் இல்லையேல் எம்மை காவுவாங்கிவிடும்.இது ஆண்,பெண் எல்லோறுக்கும் பொருந்தும்.

படங்கள்-கூகுள்
*********************************************************************************
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் என்ற தொடரை சில பல காரணங்களினால் முழுமையாக எழுதமுடியவில்லை. எனவே தற்போது அதை நிறுத்திவைக்கின்றேன்.ஏனோ தானோ என்று அந்த தொடரை எழுதுவதில் எனக்கு விருப்பம் இல்லை எங்கள் வலிகளை முழுமையாக பதிவு செய்யவேண்டு என்பதே என் ஆசை.எனவே என்றோ ஒரு நாள் முழுமையாக பதிவு செய்வேன்.என்ற நம்பிக்கையில் தற்போது தற்காலிகமாக நிறுத்திவைக்கின்றேன்.மன்னிக்கவேண்டும் நண்பர்களே
*********************************************************************************Post Comment

19 comments:

Anonymous said...

ஆம் நிச்சையம் பெண்கலும்
இது போல செய்ய கூடாது!நான் ஆண்கல் தான் இப்படி எல்லாம் ரோட்டில் செய்வார்கல் என்று கேல்வி பட்டு இருக்கேன்!
இந்த பதிவின் மூலம் பெண்கலை பற்றியும் நான் தெரிந்து கொண்டேன்
பகிர்ந்து கொண்டதர்க்கு நன்றி ராஜ்!K.s.s.Rajh said...

@சுடர்விழி

நன்றி அக்கா

ஆர்.வி. ராஜி said...

உண்மைதான். நிறைய பெண்கள் தன்னை யாரும் சீண்ட மாட்டார்கள் என்னும் அலட்சியத்துடனே செயல்படுகின்றனர்.
உடைகளிலும் கவனம் செலுத்துவதில்லை. இது கண்கூடாக காணக்கூடிய உண்மை.
இது போல் ஆண்களிலும் பல பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவரவர் சுயசிந்தனையோடு மற்றவர்களுக்கும் இடையூறு இல்லாமல் தாங்களும் பாதுகாப்புடன் சென்றாலே போதும். பல விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

பயனுள்ள பதிவு. அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

பலரும் அறிய வேண்டும்... அவரவர் உணர வேண்டும்...

அது சரி... இதற்காக "யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்" தொடரை எல்லாம் நிறுத்தி வைக்க கூடாது... (ஒரு நகைச்சுவைக்காக) விரைவில் தொடரவும்...

நன்றி...
tm3

சுதா SJ said...

நல்ல விழிப்புணர்வு பதிவு ராஜ் :))
இங்கே உந்த பிரச்சனை இல்லை.. ^_^
நான் ஊருக்கு வந்த போதும் இதை அதிகம் அவதானித்தேன்.. ரைவிங்'ல ரெம்ப கவனம் தேவை.. இவர்கள் அலட்சியத்தால் இவர்கள் உயிர்கள் மட்டும் இல்ல அடுத்தவர் உயிரும் அல்ல போகுது :(

சுதா SJ said...

தொடர் நிறுத்தியமை வருத்தம் அளிக்குது.. :( தொடரின் கடந்த பதிவுகளுக்கு கருத்திட முடியாவிட்டாலும் தொடந்து படித்துக்கொண்டுதான் இருந்தேன்.. எதார்த்தமான நம் மண் மணம் வீசும் தொடர்.. இப்படி இடையில் நிப்பாட்டி விட்டீர்களே....

என்னதான் சப்பக்கட்டு கட்டினாலும் தொடர்களுக்கு (தரமாக இருந்தாலும்) வரவேற்பு ரெம்ப குறைவே அதையும் மீறி உங்களைப்போன்ற ஒரு சிலரே தொடருக்கு முன் உரிமை கொடுக்கிறீர்கள்.. என்னைப்போன்ற ஒரு சிலரும் தொடரை ரசிக்க இருக்கிறார்கள் என்பதை மறக்கபடாது.

K.s.s.Rajh said...

@ஆர்.வி. ராஜி

நன்றி சகோதரி வரவுக்கும் சிறப்பான கருத்துக்களுக்கும்

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

தொடர் நிறுத்தியதுக்கு வேறு காரணம் பாஸ் ஆனால் கண்டிப்பாக நான் தொடரை முழுமையாக எழுதுவேன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@துஷ்யந்தன்
////
நல்ல விழிப்புணர்வு பதிவு ராஜ் :))
இங்கே உந்த பிரச்சனை இல்லை.. ^_^
நான் ஊருக்கு வந்த போதும் இதை அதிகம் அவதானித்தேன்.. ரைவிங்'ல ரெம்ப கவனம் தேவை.. இவர்கள் அலட்சியத்தால் இவர்கள் உயிர்கள் மட்டும் இல்ல அடுத்தவர் உயிரும் அல்ல போகுது ////

உண்மைதான் பாஸ்

K.s.s.Rajh said...

@துஷ்யந்தன்
////
தொடர் நிறுத்தியமை வருத்தம் அளிக்குது.. :( தொடரின் கடந்த பதிவுகளுக்கு கருத்திட முடியாவிட்டாலும் தொடந்து படித்துக்கொண்டுதான் இருந்தேன்.. எதார்த்தமான நம் மண் மணம் வீசும் தொடர்.. இப்படி இடையில் நிப்பாட்டி விட்டீர்களே....

என்னதான் சப்பக்கட்டு கட்டினாலும் தொடர்களுக்கு (தரமாக இருந்தாலும்) வரவேற்பு ரெம்ப குறைவே அதையும் மீறி உங்களைப்போன்ற ஒரு சிலரே தொடருக்கு முன் உரிமை கொடுக்கிறீர்கள்.. என்னைப்போன்ற ஒரு சிலரும் தொடரை ரசிக்க இருக்கிறார்கள் என்பதை மறக்கபடாது////

எனக்கும் வருத்தம் தான் பாஸ் ஆனால் தற்காலிகமாகத்தான் நிறுத்திவைத்துள்ளேன்.

நீங்கள் சொல்வது போல தொடர்களுக்கு வரவேற்பு குறைவு என்பது மறுக்கமுடியாத உண்மை

ஆனால் நான் அதற்காக இந்த தொடரை நிறுத்தவில்லை துஷி நிறுத்தியதற்கான காரணம் வேறு.

ஆனால் நிச்சயமகா நான் இந்த தொடரை தொடர்ந்து எழுதுவேன்.

சில பதிவுகள் ஹிட்ஸ் என்ற நிலையை தாண்டி ஆத்ம திருப்திக்காக எழுதுவதுண்டு உதாரணமாக மறக்க முடியாத பாடசாலைக்காலங்கள் போன்ற பதிவுகள் அது போலத்தான் இந்தத்தொடரும் நிச்சயம் இந்த தொடரை முழுமையாக பதிவு செய்வேன்.
அதுவரை மன்னிக்கவேண்டும் பாஸ்

Anonymous said...


எல்லாத்தையும் சொன்னீங்களே, இப்ப புதுசா பொண்ணுக எல்லாமே துப்பட்டால மூஞ்ச மூடிகிட்டு போறாங்களே அத பத்தி ஏன் ஏதும் சொல்லல? போறது சூப்பர் பிகரா? இல்ல சப்ப பிகரா?ன்னு தெரியாம எத்தன பேர் தவிக்கிறாங்க... :-(

K.s.s.Rajh said...

@மொக்கராசு மாமா (Real Santhanam Fanz)

ஒகே ஒகே தான் சொல்லிட்டாங்களே பாஸ் அதை நான் திருப்பி சொல்லப்போய்......என்னையும் ஒலகப்பட இயக்குனர்கள் மாதிரி நினைக்ககூடாது என்ற எண்ணத்தில்தான் சொல்லவில்லை ஹி.ஹி.ஹி.ஹி.....

தனிமரம் said...

சிந்திக்க வேண்டியவர்களுக்கு ஒரு ஆலோசனைப்பதிவு .ம்ம்

தனிமரம் said...

தொடரை நிறுத்த ஏதோ பின்புலம் இருக்கு எது எப்படியோ விரைவில் கடந்து வந்து எழுது காத்திருக்கின்றேன் வாசிக்க.

Anonymous said...

Nice observation...-:)
Where is part 4 bro?

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

நல்ல பதிவு ராஜ். இங்கயும் பெண்கள் வண்டி ஓட்டறப்போ இப்படித்தான், போன்ல பேசிக்கிட்டே வண்டி ஒட்டாரங்க, நானும் நிறைய நேரம் ரொம்ப கடுப்பாகியிருக்கேன். ஆனா ஆண்கள மட்டும் உயர்வா சொல்லிட முடியாது.

K.s.s.Rajh said...

@தனிமரம்
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ரெவெரி

நன்றி பாஸ்
யுத்தம் இல்லாத உலகம் தொடரைத்தானே கேட்டீர்கள் அதை நிறுத்திவைத்துள்ளேன் பாஸ்

K.s.s.Rajh said...

@Dr. Butti Paul (Real Santhanam Fanz)
உண்மைதான் நன்றி பாஸ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails