Tuesday, October 30, 2012

சின்மயி-சரசர சாரக்காத்து வீசும் போது.....


எங்க பார்த்தாலும் சின்மயி பற்றிய பேச்சுத்தான்.பல பதிவர்கள் சின்மயி பிரச்சனை பற்றி எழுதுகின்றார்கள்.இந்தப்பிரச்சனையின் ஆரம்பம் என்ன?உண்மை நிலை என்ன? யார் பக்கம் தவறு என்று எனக்கு சரியாக தெரியாது எனவே இது பற்றி  நான் விவாதிக்கவில்லை

பலர் சின்மயிக்கு ஆதரவாகவும் பலர் ராஜனுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை சொல்லிவருகின்றார்கள்.இந்த பிரச்சனை பற்றி செய்தி வெளியிடும் ஊடகங்கள் சரியான முறையில் நடுநிலைத்தன்மையுடன் செய்திகளை வெளியிடவேண்டும்.ஒரு பக்கசார்பாக செய்திகளை வெளியிடக்கூடாது.அப்போதுதான் இந்த பிரச்சனை பற்றி தெரியாத சராசரி மக்களுக்கு உண்மை நிலை புரியும்.

சினிமா என்பது ஒரு கனவு தொழிற்சாலை அதற்கும் என்னைப்போன்ற ஈழத்து சராசரி ரசிகனுக்குமான தூரம் மிகமிக அதிகம்.சினிமா பிரபலங்களை ஏதோ அதிசயப்பிறவிகள் போலத்தான் சின்ன வயதில் நினைப்பதுண்டு.எங்கள் ஊர்களில் புதியபடங்கள் எல்லாம் உடனே  ரிலீஸ் ஆவது எல்லாம் இல்லை.படம் வந்து பலமாதங்கள் கழித்துதான் படம் வரும் சிலவேளை வராமலும் இருக்கும்.

சமாதான காலத்தில் நடிகரும் இயக்குனருமான மணிவண்ணன் கிளிநொச்சிக்கு வந்து இருந்தார்.அவர்தான் நான் நேரில் பார்த்த முதல் சினிமா பிரபலம் என்னால் அதை நம்பவே முடியவில்லை.ஏதோ நான் சினிமாவில் நடித்தது போல ஒரு சந்தோசம் மணிவண்ணனை பார்த்தது.

பிறகு ஆணிவேர் என்று ஒரு படம் ஈழத்தில்தயார் ஆனது அதில் நந்தாவும்,மதுமிதாவும் நடித்திருந்தனர்.அந்தப்படத்தின் சூட்டிங்கிற்காக அவர்கள் கிளிநொச்சிக்கு வந்து இருந்த போது அவர்களையும் நேரில் பார்த்து இருந்தேன்.

2010 ஆண்டு யாழ்பாணத்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் சில தென்னிந்திய பாடகர்களை பார்த்து இருக்கின்றேன்

கடந்த ஆண்டு நடிகை ஆர்த்தியும்,அவர் கணவர் நடிகர் கணேஸ்சும் வவுனியாவுக்கு ஒரு விழாவுக்கு வந்திருந்தனர்.

இவர்களை எல்லாம் கண்டது ஏதோ வாழ்நாளில் செய்த புண்ணியம் போல நினைத்துக்கொண்டேன்.


இந்தியாவிலிருந்து வந்த நண்பன் ஒருவன் சொன்னான்.நாங்கள்தான் நடிகர்களை,நடிகைகள்,பாடகர்கள்,பாடகிகளை பார்பது என்றால் பெரியவிடயமாக நினைக்கின்றோம் இந்தியாவில் சர்வசாதாரனமாக சூட்டிங்கின் போதும்,கடைத்தெருவுகளிலும் பார்கலாம் என்று.

அண்மையில் இந்தியாவுக்கு சென்று இருந்த போது நண்பன் சொன்னது உண்மை என்று புரிந்தது.இந்த இடத்தில் இந்தப்படத்தின் சூட்டிங் நடந்தது இதுலதான் அந்தப்படம் எடுத்தார்கள் என்று இந்திய நண்பர்கள் சொல்லும் போது பிரமிப்பாக இருந்தது.

இணையவளர்சி மூலம்  பிரபலங்களுக்கும் சராசரி ரசிகனுக்குமான இடைவெளி குறைந்துவிட்டது என்பது மறுக்கமுடியாது.சேவாக் இரட்டை சதம் அடித்தால் அவருக்கு நேரடியாக டுவீட்டர் மூலம் வாழ்த்து சொல்லமுடிகின்றது.

ஒரு சினிமாப்பிரபலத்துக்கு அவரின் படைப்புக்கள் பற்றிய விமர்சனம் நேரடியாக சொல்லமுடிகின்றது.

ஆனால் எதுவும் அளவோடு இருக்கவேண்டும்  இல்லையேல் அது பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதுக்கு சின்மயி விவகாரம் சான்று.பிரபலம் என்பதற்காக சின்மயி செய்தது எல்லாம் சரி என்றும் சொல்லமுடியாது.அவர் புகார் கூறிய ராஜன் செய்ததும் சரி என்றும் சொல்லமுடியாது.

சின்மயின் குரலின் வசீகரத்தில் கரைந்து போன ரசிகர்களின் நானும் ஒருவன்.ஸ்ரேயா கோசலுக்கு பிறகு என்னை அதிகம் கவர்ந்த ஒரு பாடகி .
அதுவும் வாகைசூடவா படத்தில் சின்மயி பாடிய சரசர சார காத்து வீசும் போது சாரைபார்த்து பேசும் போது சாரப்பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே பாடல் என் ஆல் டைம் பேவரிட்.


அதைவிட சின்மயி பல கதாநாயகிகளுக்கு படத்தில் பின்னனிக்குரல்(டப்பிங் வாய்ஸ்)கொடுத்திருக்கின்றார். அவரது குரல் காதாயாயகிகள் நிஜமாகவே சொந்தக்குரலில் பேசுவது போலவே அவ்வளவு அற்புதமாக இருக்கும்.அன்மையில்கூட மாற்றான் திரைப்படத்தில் கஜால் அகர்வாலுக்கு பின்னனிக்குரல் கொடுத்தது சின்மயிதான்.

சினிமா பிரபலங்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் உங்கள் கலையை நாங்கள் ரசிப்போம் அதற்காக உங்கள் செயல்பாடுகள் எல்லாம் சரி என்று நியாயப்படுத்தும் அளவுக்கு நாங்கள் முட்டாள்தனமான ரசிகர்களில்லை.

இந்த விடயத்தில் ராஜன் உண்மையாக சின்மயிக்கு ஆபாசமாக ட்டுவீட் செய்திருப்பின் அவருக்கு பரிந்து பேசுவதும் நியாயமற்றது.

பொறுத்திருந்து பார்போம் இந்தப்பிரச்சனையின் முடிவு என்ன என்று


ஆனாலும் என்னைபோன்ற சராசரி சின்மயி ரசிகனுக்கு சின்மயி குரல்மீதான ரசனை இந்த பிரச்சனைக்கு பிறகு  சற்று குறைந்துவிட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை.

Post Comment

14 comments:

தனிமரம் said...

அட நீயும் இந்தவிடயத்தை கையில் எடுத்து இருக்கின்றாய்??? அடுத்த பதிவில் சந்திப்போம் :)))

K.s.s.Rajh said...

@தனிமரம்
ஏன் பாஸ் இந்த ஓட்டம் ஒடுறீங்க ஹி.ஹி.ஹி.ஹி........

நன்னயம் said...

இதையும் படித்து பாருங்கள்

http://vovalpaarvai.blogspot.in/2012/10/blog-post_24.html

K.s.s.Rajh said...

@Ethicalist E

படித்தேன் பாஸ் பலவிடயங்களை அறிந்துகொண்டேன்

நன்றி பாஸ்

Anonymous said...

ஆனால் எதுவும் அளவோடு இருக்கவேண்டும்  இல்லையேல் அது பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதுக்கு சின்மயி விவகாரம் சான்று.பிரபலம் என்பதற்காக சின்மயி செய்தது எல்லாம்

சரி என்றும் சொல்லமுடியாது.அவர் புகார் கூறிய ராஜன் செய்ததும் சரி என்றும் சொல்லமுடியாது./// சரியா சொன்னப்பா! எப்பவுமே ப்ரச்சனைனா, 2 பக்கமுமே தப்புகள் இருக்கத்தானே
செய்யும்!

K.s.s.Rajh said...

@சுடர்விழி

நன்றி அக்கா

Unknown said...

இப்போ சிந்தம்பரத்தின் மகன் கேசில் ஒருவர் உள்ளேயாம்~
இனி ட்விட்டி பாருங்களேன்!

K.s.s.Rajh said...

@மைந்தன் சிவா

ஹி.ஹி.ஹி.ஹி.......

சுதா SJ said...

எனக்கு பாடகியாக விட பின்னணிக்குரல் கொடுப்பவராக சின்மயியை ரெம்ப பிடிக்கும் (இனி சந்தேகமே..)

அதுவும் விண்ணை தாண்டி வருவாயில் ஜெஸிக்கு (த்ரிஷா) கொடுத்த குரல்... வாவ்........ ஜெஸிக்கு சின்மயி குரல் கொடுக்காவிட்டால் இந்தளவுக்கு ஜெஸியை ரசித்து இருப்போமோ என்பதே சந்தேகம் தான்.

சுதா SJ said...

ராஜனை விட சின்மயி மேல் அதிக தவறு இருக்கு... :(( நேரடியாக மோதாமல் பொறி வைத்தே ராஜனை சிக்க வைத்து இருப்பது கண்டனத்துக்கு உரியது.

மேலும் சின்மயி பகிர்ந்த கருத்துக்கள் எந்த ஒருவனையும் கடுப்பேத்தும் அரைகுறை அறிவு ஜீவித்தனமே ...

சுதா SJ said...

ராஜ்....

சின்மயி_ ராஜன் விவகாரத்தை முழுதுமாக ஆராய்ந்து பாருங்கள் சின்மயின் வண்டவாளங்கள் தெரியும்..

முன்பு நடந்து முடிக்கப்பட்ட
டுவீட்டர் பிரபலங்கள் தொகுப்பில் தனக்கு அருகில் ராஜன் இருப்பதை சகிக்க முடியாமால் சின்மயி ஆடிய பாரத நாட்டியம் தெரியும்...

அதன் தொடர்ச்சியே பழி வாங்களே இந்த சிக்க வைத்த போலிஸ் கேஸ் .. சின்மயி விரித்த வலையில் ராஜன் செமையா மாட்டியதும் தெரியும்.

K.s.s.Rajh said...

@துஷ்யந்தன்

உண்மைதான் பாஸ்

திண்டுக்கல் தனபாலன் said...

தகவல்கள் வெவ்வேறு மாதிரி வருகின்றன... (பணத்தைப் பொறுத்து...?) பார்க்கலாம்...

நன்றி...
tm3

Unknown said...

இத பத்தி நானும் ஒரு பதிவு எழுதி வச்சு இருக்கேன் இந்த பதிவோடு அது ஒத்து போகிறது நண்பரே முழுமையாக இந்த விஷயத்தை மீடியா அணுகவில்லை என்பது மட்டும் உண்மை

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails