Monday, October 08, 2012

ராசி இல்லாத கேப்டன்களும்,அசத்திய மேற்கிந்திய தீவுகளும்

நேற்று நடைபெற்ற 20ஒவர் உலகக்கிண்ண போட்டியின் இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றது.இந்த வெற்றி மீண்டும் மேற்கிந்திய தீவுகளில் கிரிக்கெட் எழுச்சி பெற்றுள்ளதற்கான அடையாளம்.

சர்வதேசகிரிக்கெட்டில் ஒரு காலத்தில் ஜாம்பவானாக திகழ்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி
1975 ஆம் ஆண்டும் நடைபெற்ற முதலாவது 60 ஓவர் உலகக்கிண்ணத்தையும்(அப்போது ஒருநாள் போட்டிகள் 60 ஓவர்களாக இருந்தது) இரண்டாவது கிண்ணத்தையும் மேற்கிந்த தீவுகள் அணி வென்றது.1983இல் இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. அதன் பின் மெல்ல மெல்ல மேற்கிந்திய தீவுகளின் வீழ்ச்சி ஆரம்பமானது.வீழ்ச்சியில் இருந்து அவர்களால் நீண்டகாலமாக மீளமுடியவில்லை. நீண்டகாலம் என்பது 20,25 வருடங்கள்

2004ஆம் ஆண்டு பிரைன் லாரா தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி ஜ.சி.சி மினி உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது இதுதான் கடந்த 25 வருடங்களில் ஜ.சி.சி.நடத்திய தொடர்களில் மேற்கிந்தியதீவுகள் பெற்ற ஒரே கிண்ணம்.


நேற்று மீண்டும் வரலாறு திரும்பியுள்ளது.மேற்கிந்தியதீவுகள் அணியின் தற்போதைய கேப்டன் டரன் சமியின் சிறப்பான தலைமைத்துவத்திற்கும் வீரர்களின் கூட்டு முயற்சிக்கும் கிடைத்த பரிசு உலகக்கிண்ணம்.

டரன் சமி

வாழ்த்துக்கள் சமி தொடர்ந்தும் சர்வதேச கிரிக்கெட்டில் உங்கள் ஆதிக்கம் தொடரட்டும்.

இலங்கை அணி
1996 ம் ஆண்டு  50 ஓவர் உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை அணி. அதன் பின் 2007 ஆண்டு மகேல ஜெயவர்த்தன தலைமையில் உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு வந்தது.ஆனால் அவுஸ்ரேலியாவின் அதிரடி மன்னன் கில்கிறிஸ்ட் தனிநபராக இலங்கையிடம் இருந்து கிண்ணத்தை பறித்தார்.

பிறகு 2009ம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கிண்ண போட்டிகளில் குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு வந்தது.இதில் பாகிஸ்தான் அதிரடி மன்னன் அப்ரிடி இலங்கைக்கு வில்லனாக கிண்ணம் பாகிஸ்தான் வசமானது.

2011 ம் ஆண்டு குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி மீண்டும் 50ஓவர் உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு வந்தது.ஆனால் இந்திய அணியின் கேப்டன் தோனியும்,கம்பீரும் இலங்கைக்கு வில்லனாக கிண்ணம் இந்தியா வசம்.

நேற்று 2012 இருபது ஒவர் உலகக்கோப்பை இறுதிபோட்டியில் மகேல ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அணிக்கு சாமுவேல்ஸ் வில்லனாக கிண்ணம் மேற்கிந்திய தீவுகள் வசம் ஆனது.


மகேல,சங்கா இருவருக்கு கேப்டனாக உலகக்கிண்ண போட்டிகளில் ராசி இல்லை போல.

இலங்கை அணியை பொறுத்தவரை இளம் வீரர்களுக்கு அதிக வாய்பு அளிக்கவேண்டும் எத்தனை நாளைக்குத்தான் அதிரடிக்கு டில்சானையே நம்புவது.மகேல,சங்கா,டில்சான் இவர்களில் ஒருவர் சிறப்பாக ஆடாவிட்டாலும் இலங்கையின் தோல்வி தவிர்க்கமுடியாததாகின்றது.

இந்த தொடரின் இலங்கை அணி சிறப்பாகவே செயல் பட்டார்கள் ஆனால் இறுதிப்போட்டியில் சொதப்பிவிட்டார்கள்.

பொறுத்திருந்து பார்போம் இனிவரும் காலங்களில் இலங்கை அணி என்ன செய்யப்போகின்றது என்று.

முஸ்கி-யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் தொடரின் பகுதி-2 நாளை எதிர்பாருங்கள்


Post Comment

9 comments:

Yoga.S. said...

காலை வணக்கம்,ராஜ்!/////பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் காலங்களில் இலங்கை அணி என்ன செய்யப் போகிறது என்று!///என்ன,இனி வரும் காலங்களில் கால் இறுதிப் போட்டியில் கூட நுழைய மாட்டார்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!!

K.s.s.Rajh said...

@Yoga.S.

ஹா.ஹா.ஹா.ஹா.......

காட்டான் said...

இலங்கை அணி கப்டனுக்கு பொருத்தமான பாடல்.. "நான் ஒரு ராசியில்லாத ராஜா"!!! ;-))

K.s.s.Rajh said...

@காட்டான்

ஹா.ஹா.ஹா.ஹா.........
நல்ல பொருத்தமான பாடல்தான் மாம்ஸ்

Anonymous said...

வெஸ்ட் இன்டிஸ் டிசெர்வ் இட்...

shabi said...

1975 ல 50 ஓவர் இல்ல 60 ஓவர்

திண்டுக்கல் தனபாலன் said...

...ம்... பார்க்கலாம்... அடுத்த முறை...

K.s.s.Rajh said...

@மொக்கராசு மாமா

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@shabi

ஆம் நண்பரே தவறுக்கு மன்னிக்கவேண்டும் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails