Wednesday, October 03, 2012

தல போல வருமா....வாழ்த்துக்கள்

இருபது ஓவர் உலகக்கிண்ண போட்டிகளில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவை 32 ஓட்டங்களால் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.ஆனாலும் 112 ஓட்டங்களை அவுஸ்ரேலியா பெற்றதால் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.அடுத்து பாகிஸ்தான் அணி ரன் ரேட் அடிப்படையில் அவுஸ்ரேலியாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தது நேற்றய வெற்றியுடன் இரண்டு வெற்றிகளுடன் 4 புள்ளிகளுடன் இருந்தது.இதனால் இந்த குறூப்பில் இருந்த தென்னாபிரிக்கா தொடரில் இருந்து வெளியேறியது.ஆனால் தனது கடைசிப்போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு ஒரு வாய்பு அதாவது இந்தியாவை தொடரில் இருந்து வெளியேற்ற.

தென்னாபிரிக்கா இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்தியா அதிக ரன் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணியை வெல்லவேண்டும் இல்லை என்றால் இந்தியாவைவிட ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் முன்னிலையில் இருப்பதால் அரையிறுதிக்கு சென்றுவிடும். இந்தியா வெளியேறவேண்டிய நிலை ஏற்படும்.


இக்கட்டான நிலையில் களம் இறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினாலும் பின் யுவராஜ் சிங்,ரெய்னா,போன்றோயின் சிறப்பான துடுப்பாட்டத்தினால் 152 ஓட்டங்களை பெற்றது.

153 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய தென்னாபிரிக்க அணியை 122 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி வென்றால் ரன் ரேட் அடிப்படையில் அரையிருதிக்கு செல்லாம். என்ற நிலையில் இந்திய பந்துவீசாளர்கள் பந்துவீசத்தொடங்கினர்.

ஆனால் தென்னாபிரிக்காவின் டூ ப்ளஸ்சி இந்திய பந்துவீச்சாளர்களை பந்தாட தென்னாபிடிக்க அணி 151 ஓட்டங்களை பெற்றதால். இந்திய அணி 122 ஓட்டங்களுக்கு தென்னாபிரிக்காவை கட்டுப்படுத்த தவறியதால் இந்தியாவின் அரையிறுதி வாய்பு நழுவியது.

ஒரு ஒட்டத்தால் தோற்றாலும் இந்திய அணியை தொடரில் இருந்த வெளியேற்றிய மகிழ்ச்சியுடன் கெளரவமாக நாடு திரும்புகின்றது தென்னாபிரிக்க அணி.

2007 ஆண்டு முதலாவது இருபது ஓவர் உலகக்கிண்ணத்தை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணி அதன் பின் நடைபெற்ற மூன்று தொடர்களிலும் ஒன்றில் கூட அரையிறுதிக்கு தகுதிபெறவில்லை என்ற துரதிஸ்டமான நிலையை தக்கவைத்துக்கொண்டு வெளியேறியது.

தல போல வருமா?

நேற்றய தென்னாபிரிக்கா இந்தியாவுக்கு இடையிலான போட்டியில் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டவர் யுவ்ராஜ் சிங். இது இவர் புற்று நோயில் இருந்து குணமாகி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய பின் யுவ்ராஜ் சிங் வென்ற முதலாவது ஆட்டநாயகன் விருது.எனக்கு மிகவும் பிடித்த ஒரு கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருது வெற்றது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தல

இம்முறை இருபது ஓவர் உலகக்கிண்ண அரையிறுதி போட்டிகளில் இலங்கை,மேற்கிந்தியதீவுகள்,அவுஸ்ரேலியா,பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


இதில் அவுஸ்ரேலியா மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கின்றது.இரண்டு அணிகளும் பார்பதற்கு சமபலம் வாய்ந்தவையாக இருந்தாலும் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் ஓப்பிட்டால் அவுஸ்ரேலியாவின் பலம் சற்று கூடத்தான்.மேற்கிந்திய தீவுகள் அணியில் கெய்ல்,சாமுவேல் அதிரடி தொடக்கம் கொடுத்தாலும்,அவுஸ்ரேலியாவின் ஆரம்ப ஜோடி ஷேன் வாட்சன்,டேவிட் வார்னரை கட்டுப்படுத்த தவறினால் அவுஸ்ரேலியாவின் வெற்றியை தவிக்கமுடியாது.

இந்த தொடரில் இவர்கள் பிரமாதமாக ஆடிவருகின்றனர். நேற்று பாகிஸ்தான் அணிகூட இவர்கள் இருவரையும் ஆரம்பத்திலேயே வீழ்த்தியதுதான். பாகிஸ்தான் அணியின் வெற்றியில் பெரும்பங்காற்றியது.இவர்களை விட மத்திய வரிசையில் மிஸ்டர் கிரிக்கெட் என்று அழைக்கப்படுகின்ற மைக் ஹசி இவரும் ஒரு அச்சுருத்தும் வீரர் நேற்று அவரது ஆட்டம் அதற்கு சான்று.


பொறுத்திருந்து பார்போம் வெல்வது அவுஸ்ரேலியாவா,மேற்கிந்திய தீவா என்று.

மற்ற அரையிறுதியில் பாகிஸ்தான் அணி இலங்கையை எதிர்கொள்கின்றது. (இதுதான் முதலாவது அரையிறுதி போட்டியாக நாளை நடைபெறும்)சொந்தமண்ணில் ஆடுவது இலங்கைக்கு பலம் என்றாலும். முகமது ஹபீஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணி துடுப்பாட்டம்,பந்துவீச்சு என பலமாகவே இருக்கின்றது.சிறப்பாக பந்துவீசும் அதிரடி மன்னன் அப்ரிடி துடுப்பாட்டத்தில் இந்த தொடரில் இதுவரை பிரகாசிக்கவில்லை.அது பாகிதானுக்கு சற்று கவலை தரும் விடயம் என்றாலும் அப்ரிடி இலங்கைக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடியவர். எனவே அப்ரிடி துடுப்பாட்டத்தில் ஏதும் அதிரடி காட்டினால் ஏற்கனவே பலமான பாகிஸ்தான் துடுப்பாட்ட வரிசை மேலும் பலம் பெரும்.


இலங்கை அணியை பொருத்தவரை டில்சான்,மகேல,சங்கா நன்றாக ஆடிவருகின்றனர். அதைவிட பெரேரா,மத்தியூஸ் போன்றோரும் சகலதுறை ஆட்டத்தில் அசத்துவார்கள் என்று எதிர்பார்கலாம்.மலிங்க வின் பந்துவீச்சு இலங்கைக்கு பலம் ஆனாலும் பாகிஸ்தானுக்கு எதிராக மலிங்க என்ன செய்யபோகின்றார் என்ற எதிர்பார்பும் இருக்கின்றது. அதைவிட அஜந்த மெண்டிஸ் சுழற்பந்து வீச்சில் ஏதும் மாயஜாலம் நிகழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.


பொறுத்திருந்து பார்போம் பாகிஸ்தானா,இலங்கையா வெல்லப்போகின்றது என்று.
*********************************************************************************
நியூஸ்லாந்து அணி
இந்த தொடரில் இருந்து வெளியேறிய நியூஸ்லாந்து அணியை பற்றி சொல்லவேண்டும். கடந்த இரண்டு போட்டிகளில் சுப்பர் ஓவரில் தான் தோற்றது அதுவும் மயிரிழையில் வெற்றி நழுவியது.
மேற்கிந்திய அணியுடன் சுப்பர் ஓவரின் 18 ஓட்டங்களை விளாசினாலும் மோசமான பந்துவீச்சால்.தோல்வியை தழுவியது.அதுவும் கெய்ல் சாமுவேல் இருவரும் களத்தில் நிற்கும் போது சிறப்பாக பந்துவீசவேண்டும். இதில் ஒரு நோபோல் வேறு 6 பந்துகளில் 18 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை சிறப்பாக பந்துவீசியிருந்தால் கட்டுப்படுத்தியிருக சந்தர்ப்பம் இருந்தது ஆனால் நியூஸ்லாந்து தவறவிட்டது.

ரோஸ் டெய்லர்
இந்தபோட்டியில் தோல்வியுற்றதும் நியூஸ்லாந்து கேப்டன் ரோஸ்டெய்லரின் முகத்தை பார்க்கவே பாவமாக இருந்தது கிட்டதட்ட அழுதே விட்டார் என்று சொல்லாம். இந்தபோட்டியில் அவர் சிறப்பாக ஆடினாலும் ஏனையை வீரரகள் சொதப்பியதால் நியூஸ்லாந்தின் தோல்வி தவிக்கமுடியாதாகி தொடரில் இருந்து வெளியேறியது.
*********************************************************************************
இம்முறை இருபது ஓவர் உலகக்கிண்ணத்தை வெல்லப்போவது யார்? பொருத்திருந்து பார்போம்.
*********************************************************************************
விரைவில் புதிய தொடர் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்


*********************************************************************************

Post Comment

15 comments:

ராஜி said...

நான் கிரிக்கெட்டை அதிகம் ரசிப்பதில்லை. ஆனாலும் சகோதரனுக்காக வந்தேன் படித்தேன். தெரியாத விசயத்தில் எப்படி கருத்து சொல்ல முசியும். சோ பகிர்சுக்கு நன்றி

Unknown said...

பாகிஸ்தான் அல்லாது வேறு எந்த அணி வென்றாலும் சந்தோசம்தான்.இலங்கை வென்றால் இரட்டிப்பு சந்தோசம்.யுவராஜ்,ஹர்பஜன் எனக்கு பிடிக்காத வீரர்கள்.

Yoga.S. said...

காலை வணக்கம்,ராஜ்!உங்கள் சந்தோஷத்தில்(தல)நானும் பங்கு!

K.s.s.Rajh said...

@ராஜி
உங்கள் கடமை உணர்ச்சியை நினைக்க பெருமையாக இருக்கு அக்கா

K.s.s.Rajh said...

@UNMAIKAL

நண்பரே என் பதிவுக்கு நீங்கள் போட்ட கமண்டுக்கு என்ன சம்மந்தம் பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லாமல் உங்கள் தளத்திற்கான விளம்பரமாக கருத்துக்களை சொல்லியுள்ளீர்கள் ஏன் இந்த வேலை

K.s.s.Rajh said...

@Ahamed Jatheer

நன்றி நண்பரே

K.s.s.Rajh said...

@Yoga.S.

நன்றி ஜயா

திண்டுக்கல் தனபாலன் said...

...ம்... கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு... அவங்க நல்ல ஆடிட்டாங்க... !!

யுவ்ராஜ் சிங் மன உறுதியை நினைத்தால் சந்தோசமாக இருக்கு...

தனிமரம் said...

ராஜி அக்காள் சொன்னதை தனிமரமும் வழிமொழிகின்றேன் அடுத்த பதிவில் சந்திப்போம் :)))))

Anonymous said...

////2007 ஆண்டு முதலாவது இருபது ஓவர் உலகக்கிண்ணத்தை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணி அதன் பின் நடைபெற்ற மூன்று தொடர்களிலும் ஒன்றில் கூட அரையிறுதிக்கு தகுதிபெறவில்லை என்ற துரதிஸ்டமான நிலை////

இதற்கு மூள காரணம் ஐ.பி.எல்லும் இந்திய கிரிகெட் போர்டின் பணவெறி , மற்றும் ஆதிக்க வெறி மட்டுமே... என்ன சொல்றீங்க கிஸ்.ராஜ்?

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@தனிமரம்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@மொக்கராசு மாமா

இருக்கலாம் பாஸ் ஜ.பி.எல் போன்ற தொடர்களில் அடித்துதள்ளும் வீரர்கள் சர்வதேச இருபது ஓவர் தொடர்களில் சறுக்குவது வழமையாக இருக்குதானே

பி.அமல்ராஜ் said...

தலையின் ஆட்டம் நல்லம் தான்... இருந்தாலும் போடுற சீன் கொஞ்சம் ஓவரா இல்லையா ராஜ்??? இந்திய அணியை அதிகம் வெறுப்பவர்கள் ஏன் என்று பார்த்தால் முதல் காரணம் இந்த ஓவர் சீன் என்பதுதான். இந்திய அணி ஒரு திறமையான அணிதான். இல்லை என்று இல்லை. ஆனால் கொஞ்சம் இந்த Ground Gentleness ஐ பின்பற்றலாம் இல்லையா பாஸ்..

K.s.s.Rajh said...

@பி.அமல்ராஜ்

உண்மைதான் பாஸ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails