Wednesday, October 17, 2012

நவராத்திரி அது ஒரு அழகிய காலம்

தற்போது நவராத்திரி ஆரம்பித்துவிட்டதாம் என்று செய்திகள் வாசிக்கின்ற போதுதான்
அறிந்துகொள்ள முடிகின்றது.பள்ளிக்கூடக்காலங்களில் நவராத்திரி என்றாலே 10 நாட்களும் செம ஜாலியாக இருக்கும்.

சரஸ்வதி பூசை என்று நவராத்திரியை எங்கள் ஊர்களில் சொல்லுவது வழக்கம்.சரஸ்வதி பூசை ஆரம்பித்தாலே காலையில் 1மணித்தியாலங்கள் சரஸ்வதி பூசை நடைபெறுவதால்.காலையில் 1மணித்திலாலம் லேட்டாகித்தான் பாடங்கள் நடைபெரும் இதனால் 45 நிமிட பாடவேளை 35 நிமிடங்களாக குறைக்கப்படும்.அதில் ஒரு சந்தோசம் இதில் என்ன சந்தோசம் என்றால் சில ஆசிரியர்கள் வந்து போடும் மொக்கைகளில் இருந்து பத்து நிமிடம் தப்பிச்சாச்சு என்றுதான் ஹீ.ஹீ.ஹீ.ஹீ.......

எங்கள் வகுப்பில் இருக்கும் பொண்ணுங்க சிலர் நவராத்திரி என்றால் பத்து நாட்களுக்கும் விரதம் பிடிப்பார்கள்.


சோ நமக்கு பிடிச்ச பொண்ணுங்க உணவு உண்ணாமல் இறைவனை வழிபடும் போது நாங்க மட்டும் எப்படி உணவு உண்ணலாம் என்று யோசித்து நாங்களும் விரதம் பிடிப்போம்.பாக்கிறவங்க நினைப்பாங்க பையன் பக்தி பழமாக இருக்கிறானே இந்த வயதில் என்ன ஒரு பக்தி என்று உருகுவாங்க.கூட அந்த பொண்ணுங்களும்தான் 

ஆனால் சைக்கில் கேப்பில் டீ.வடை.பிஸ்கட் என்று உள்ளவிட்டு விடுவோம் காலையில் வயிறுமுட்ட தின்றுவிட்டு உண்ணாவிரதம் இருந்த கருனாநிதி போல

அதைவிட பெரும்பாலும் காலையில் பூசை அது இதுனு உசிரவாங்குவாங்க அதனால் என்ன செய்வோம்னா லேட்டாகி பள்ளிக்கூடத்துக்கு போறது.அப்ப லேட்டா வந்தால் பூசை நடக்கும் ஹாலில் இருக்கவிடாமல் வெளியில் நிற்கசொல்லுவாங்க நாங்களும் சந்தோசமாக ஹாலுக்கு வெளியில் நின்று உள்ளே இருக்கும் பொண்ணுங்களை சைட் அடிப்போம் அவ்வ்வ்வ்வ்வ்வ்

நவராத்திரி இறுதிநாள் அன்று இரவிரவாக பள்ளிக்கூடமே கெதி என்று கிடப்போம்.

ஆசிரியர்கள் மாணவர்கள் என்று எல்லோறும் சேர்ந்து பொங்கல் வைத்து  அதை எல்லோறுக்கும் பகிர்ந்து கொடுப்பது என செம ஜாலியாக இருக்கும்.

ஒரு முறை இப்படித்தான் உயர்தரம் படிக்கும் போது அயல் பாடசாலையின் நவராத்திரி கொண்டாட்டத்துக்கு போய்விட்டு லேட்டாக வந்தோம்.

ஏண்டா இன்று உங்கள் பூசை ஆச்சே ஏன் லேட்டா வாறீங்க என்று ஆசிரியர் கேட்டார்.இல்லை டீச்சர் அந்தக் கோயிலில் இன்றைக்கு சிறப்பு பூசை அதுதான் போயிட்டு வந்தோம்னு கையில் இருந்த விபூதியை ஆசிரியருக்கும் கொடுத்துவிட்டு சாமாளித்தோம். எங்கள் நெற்றியில் ஏற்கனவே நாங்கள் போட்ட பட்டையை பார்த்துவிட்டு ஆசிரியர் உருகிப்போனார்.இவ்வளவு பக்திமான்களா நம்ம பசங்க என்று.

இன்னும் ஒரு முறை நவராத்திரிக்கு கரும்பு வெட்டுகின்றோம் என்று ஆசிரியர் சொன்ன அளவைவிட கூடுதலாக வெட்டி ஒருவரின் கரும்பு தோட்டத்தை காலி பண்ணியதும் செம ஜாலி.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.மனித வாழ்க்கையில் மறக்கமுடியாத சில காலங்கள் இருக்கும் எதுவிதமான கவலைகளும் இல்லாமல் ஜாலியாக இருக்கும் மாணவப் பருவம் தான் அது.எதை பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் அந்தப் பருவம் எல்லோறுடைய வாழ்க்கையிலும்  என்றும் மறக்கமுடியாத காலமாகும்.

முதல் காதல்,முதல் பாராட்டு,முதல் நண்பன்,முதல் வெற்றி,முதல் தோல்வி என்று பலவிடயங்கள் முதன் முதலில் சந்திக்கும் இடம் மாணவப்பருவம் தான்.அதிலும் பலருக்கு முதல் காதல் உருவாகுவது இந்த மாணவப்பருவத்தில் என்பது மறுக்கமுடியாத உண்மை.

அதுவும் முதல் காதல்-வாழ்க்கையில் ஒரே ஒருவரைத்தான் காதலித்தேன் என்று எவறுமே சொல்லமுடியாது அப்படி சொன்னால் அது அப்பட்டமான பொய்.பலபேருக்கும் முதல் காதல் கைகூடியதாக சரித்திரம் இல்லை பெரும்பாலும் மிக சின்னவயதில் ஏற்படும் காதல்களை நாம் காதலிப்பவர்களிடம் சொல்லாமலே விட்டு இருப்போம்.ஒருதலைக்காதலாகவே பலருக்கு முதல் காதல் அமைந்துவிடுவதும் உண்டு.

எனக்கு தெரிய என் வகுப்பில் ஒரு பெண் படித்தாள்.அவள் மேல் பலருக்கு ஒரு கண்.எனக்கு தெரிய எத்தனையோ பேர் அவளைக் காதலித்தார்கள் ஆனால் அதில் எத்தனை பேர் அவளிடம் அந்தக் காதலை சொன்னார்கள் என்று தெரியாது.ஆனால் அவள் யாரையும் காதலிக்கவில்லை என்றுதான் எல்லோறும் நினைத்தோம்.

இப்போது பல வருடங்களுக்கு பிறகு தான் தெரிய வந்தது அந்தப்பெண்ணுக்கு எங்கள் கூட படித்த ஒரு பையன் மேல் ஒரு தலையாக காதல் இருந்திருக்கு அதை அவள் வெளிக்காட்டியது இல்லை.இதில் இருந்து தெரியும் நீதி மாணவப் பருவத்தில் எல்லோறுக்கும் முதல் காதல் உருவாகியிருக்கும்.ஹி.ஹி.ஹி.ஹி............

எனக்கும் பாடசாலை பருவத்தில் பலர் மேல் காதல் வந்தது ல்வ்வுனா லவ்வு உங்க வீட்டு எங்க வீட்டு லல் இல்லை அப்புடி ஒரு லவ் இன்றுவரை அந்த காதல் மாறவில்லை அவர்கள் பெயரையே சொல்லுறேன்
ஜஸ்வர்யா ராய்,தேவயானி,மனிஷா கொய்ராலா,இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

எது எப்படியோ சில விடயங்கள் ஞாபகம் செய்யும் போது பல விடயங்கள் ஞாபகத்துக்கு வரும் அந்த வகையில் நவராத்திரி என்றதும் பாடசாலையில் அடித்த கூத்துக்கள் தான் எனக்கு ஞாபகம் வருகின்றன.


ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே...
ஏதோ ஒன்றை தொலைத்தது போலே
ஏதோ மீண்டும் பிறந்தது போலே...................


Post Comment

12 comments:

Anonymous said...

நான் என்னவோ நவராத்திரி பத்தி ஏதாச்சும் புராண விசயங்கள் இருக்கும்னு பாத்தாக்கா, ஓரே ராஜ் புராணமா இல்ல இருக்கு? அவ்வ்வ்வ்வ்வ் புராணம் சூப்பரப்பு!

K.s.s.Rajh said...

@சுடர்விழி

எனக்கு புராணவிடயங்கள் தெரியாது

நன்றி அக்கா

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது...

நன்றி... tm3

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

நன்றி பாஸ்

தனிமரம் said...

நவராத்திரி ம்ம் பல நினைவுகளை மீட்டிச் செல்லும் அது ஒரு கனாக்காலம் .நீங்காத நெஞ்சில் ஓர் ராகம் என்பதைச் சொல்லலாம்! பள்ளி வாழ்வில் :)))

பால கணேஷ் said...

ஏம்ப்பா... இது நவராத்திரி பற்றின பகிர்வா, இல்லை நீ பார்த்த பெண்களைப் பற்றியதா... எதுவா இருந்தாலும் கொசுவர்த்தி சுத்தினா அந்தப் பகிர்வு படிக்க இனிமை தான். இதுவும் அப்படியே ராஜ்.

K.s.s.Rajh said...

@தனிமரம்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@பால கணேஷ்

நன்றி பாஸ்

சுதா SJ said...

உண்மைதான் நண்பா..
அது ஒரு காலம் இல்ல :(
நவராத்திரி என்றதும் பல நினைவுகள் இருந்தாலும் சட்டென நினைவு வருவது... ரெம்ப நேரம் சகலகலாவல்லி சொல்லி கடுப்பேத்துவதுதான்... ஆவ்வ்வ்வ்வ்

சுதா SJ said...

அப்புறம் நவராராத்திரி என்றதும் கண்டிப்பா தங்களுக்கு "ப்ரியா" நினைவு வருமே...... ஹீஹீஹீஹீ

K.s.s.Rajh said...

@துஷ்யந்தன்
ஆமா பாஸ் ரொம்ப கடுப்பா இருக்கும்

K.s.s.Rajh said...

@துஷ்யந்தன்
////அப்புறம் நவராராத்திரி என்றதும் கண்டிப்பா தங்களுக்கு "ப்ரியா" நினைவு வருமே...... ஹீஹீஹீஹீ
////

ஹி.ஹி.ஹி.ஹி..........நான் மறந்தாலும் நீங்க பிரியாவை மறக்கமாட்டீங்க போல

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails