Wednesday, October 10, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -பகுதி-2

நாங்கள் இருந்த காணியில் ஷெல் விழுந்து வெடித்ததும் எல்லோறும் பரபரப்பானோம்.ஒருவரை ஒருவர் தேடினோம் கடவுள் அருளால் யாருக்கும் எதுவும் ஆகவில்லை.இனி இங்கே இருக்க முடியாது வேறு இடம் போவோம் என்று முடிவாகியது. அடுத்தநாள் விடிந்ததும் மீண்டும் இடப்பெயர்வு முறுகண்டியில் இருந்து புத்துவட்டுவான் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தோம்.
1996ம் ஆண்டில் இருந்து இங்கே 1998ம் ஆண்டின் இறுதிவரை எங்களுக்கு அடைக்களம் கொடுத்தது இந்த மண்.

புத்துவெட்டுவான் காளிகோயில் அந்த ஊரில் பிரபலமான  கோயில் கோவிலை சுற்றி 10 ஏக்கர் அளவில் கோயில் காணி.சோலையாக காட்சி அளிக்கும் காட்டு மரங்கள்.அதனை ஒட்டி ஒரு குளம்.அடுத்து வயல் வெளிகள் பின் நீண்டகாடு என மனதுக்கு அமைதியை தரும் பசுமையான சூழல் அது.


எங்கள் குடும்பம்,மாமாவின் குடும்பம்,சித்தி,சித்தப்பா, என நாங்கள் உறவிணர்கள் எல்லோறும் பக்கத்து பக்கத்திலே வீடுகள் அமைத்துக்கொண்டோம்.

அந்தக்காணியில் பல்வேறு இடங்களில் இருந்து இடம் பெயர்ந்த பல குடும்பங்களிருந்தார்கள்.என் வயதுடைய நிறைய பிள்ளைகள் இருந்ததால் எனக்கு இரட்டிப்பு சந்தோசம்.இடம் பெயர்ந்து வந்திருக்கின்றோம் அடுதத்வேளை சாப்பாட்டிற்கு என்ன செய்வது,எப்படி அடுத்த நாளைக் கடத்துவது என்ற எந்த வித கவலையும் அற்ற குழந்தைப்பருவம் அது.


அந்தக்காணியில் இருந்த அகிலன்,தீபா,பிரதீபன் இவரது தங்கை பிரதீபா,சிறி,என் மச்சாள் முறையிலான வாணி,என் சித்தியின் குழந்தைகள் என எனது நட்பு வட்டம் மிகப்பெரியது.இதில் பிரதீபாவுக்கும் எனக்கு படிபில் செம போட்டி இருக்கும் புத்துவெட்டுவான் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் 1996 இன் இறுதியில் இருந்து 1998 இறுதிவரை அதாவது 3ம் வகுப்பின் இறுதியில் இருந்து 5 வகுப்பு இறுதிவரை எனக்கு அவளுக்கும் போட்டி ஒரே ஒரு முறைமட்டுமே அவள் முதலாம் பிள்ளையாக வந்திருக்கின்றாள்.ஏனைய அனைத்து தடவையும் நானே முதலாம் பிள்ளை.
என்ன தான் அவளுக்கு எனக்கும் போட்டி இருந்தாலும் எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது.

புத்துவெட்டுவானில் இருந்து நாங்கள் வந்ததில் இருந்து 1998க்கு பிறகு அவளை நான் பார்கவில்லை மீண்டும் 2009இல் பார்த்த போது என்னால் பிரதீபாவை அடையாளம் காணமுடியவில்லை. அவளே என்னை அடையாளம் கண்டு என் பெயரை சொல்லிய போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது.

சரி பழய கதைக்கு வருவோம் புத்துவெட்டுவானில் என் குழந்தைப்பருவம் மிக மிக மகிழ்ச்சியாக போய்க்கொண்டு இருந்தது.வறுமை எங்களை துரத்த தொடங்கியது.

அப்பாவும் தன்னால் முடிந்தவரை எங்களுக்கு எந்தக்குறையும் வராமல் பார்த்துக்கொண்டார்.ஆனால் அதையும் மீறி வறுமை துரத்தியது.ஆனால் எந்த சூழ்நிலையிலும் பள்ளிக்கூடம் போவதை மட்டும் நான் நிறுத்தவில்லை.அதை என் பெற்றோரும் விரும்பவில்லை.

பப்பி லவ் என்று சொல்வார்களே அதாவது மிகச்சின்ன வயதில் யார்மேலையாவது வரும் காதல்தான் பப்பி லவ். இதை காதல் என்று சொல்லமுடியாது ஒருவித ஈர்பு என்றால் பொருத்தமாக இருக்கும்.

எனக்கும் பப்பி லவ் உருவாகியது அவள் பெயர் ருஜானி,எங்களுக்கு சொந்தக்கார பெண்தான்.நானே சின்னப் பையன் என்னைவிட அவளுக்கு ஒருவயது குறைவு.

பொம்மை மாதிரி மிகவும் அழகாக இருப்பாள்.சதீஸ் சதீஸ் என என்னேரமும் என்னுடனே சுற்றிக்கொண்டு இருப்பாள். பள்ளிக்கூடம் போகும் போது.நான் என் மச்சாள் வாணி,மற்றும் பிரதீபா எல்லோறும் ஒன்றாகத்தான் செல்வோம்.ருஜானி மேல் பப்பி லவ் வந்ததில் இருந்து இவர்களுடன் போவது இல்லை.எதாவது காரணம் சொல்லி ருஜானி வரும் வரை காத்திருந்து அவளுடன் தான் போவேன். பள்ளிக்கூடம் நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் இருக்கும் அதுவரை கதைத்துக்கொண்டு நடந்து செல்வதில் எனக்கு ஒரு சந்தோசம்.

நான் அகிலன்,சிறி என நண்பர்கள் எல்லோறும் ஒரு டீம் அதிலும் சிறியும் நானும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம்.
காடு பக்கத்தில் இருந்த படியால்,நாவல் பழம்,பாலைப்பழம் சாப்பிட காட்டுக்கு விறகு எடுக்கப்போவது என அந்த சின்ன வயதிலையே தனியாக எந்த பயமும் இல்லாமல் காட்டுக்குள் போய்வரும் துணிவு வந்துவிட்டது.


ஒரு முறை இப்படித்தான் விறகு எடுக்க போன போது நானும் சிறியும் இன்னும் ஒரு நண்பனும் காட்டுக்குள் வழிதவறிவிட்டோம்.
நடக்கிறோம் நடக்கிறோம் நடந்துகொண்டேயிருக்கின்றோம் காலையில் வழி தவறினோம் மதியம் ஆகிவிட்டது வழியை கண்டு பிடிக்கமுடியவில்லை.

காட்டில் தவறிவிட்டால் எப்பவும் வந்த வழியை தேடிக்கொண்டு இருப்பதைவிட காட்டில் இருந்து வெளியேற ஒரு வழியை கண்டுபிடிப்பது சிறந்தது வந்தவழியை தேடிக்கொண்டு இருந்தால் நிச்சயம் எம்மால் அதை கண்டு பிடிப்பது கடிணம்.

நானும் சிறியும்,மற்ற நண்பனும் ஒரு உயரமான மரத்தில் ஏறி பார்த்தோம் ஊர்மனைகள் தெரிகின்றதா என்று கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒன்றும் தெரியவில்லை.

கீழே இறங்கி மறுபடியும் நடக்கத்தொடங்கினோம்.அப்போது யானைகளின் காலடித்தடம் கண்டு பிடித்தோம். அந்த வழியே நடக்கத்தொடங்கினோம் இது மிகவும் ஆபத்தானது.ஆனாலும் எங்களுக்கு இருந்த ஒரே ஒரு நம்பிக்கை அது குளத்தை நோக்கி போகும் என்பதே காரணம் நாங்கள் இருந்த கோயில் காணியில் உள்ள குளத்தின் மறுகரையில் மாலை 4 மணிக்கு எல்லாம் யானைகள் தண்ணீர் குடிக்கவருவதை நாங்கள் வேடிக்கை பார்போம்.

எனவே இந்தப்பாதையும் அங்கேதான் போகும் என்ற நம்பிக்கையில் நடக்கத்தொடங்கினோம். எங்கள் நம்பிக்கை வீணாகவில்லை.நாங்கள் நினைத்த படியே அது குளத்திற்குதான் போனது.

வீட்டிற்கு வந்து விடயத்தை சொன்னதும் அடி பின்னி எடுத்துவிட்டார்கள்.

இப்படி குறும்பும், குழப்படியுமாக என் குழந்தைப் பருவம் சென்று கொண்டு இருந்தது.

ஆனால் புத்துவெட்டுவானில் தொடர்ச்சியாக இருக்கமுடியவில்லை காரணம் வறுமை.எனவே வேறு இடத்துக்கு செல்வது என வீட்டில் முடிவெடுத்தார்கள்.ஏற்கனவே பல குடும்பங்கள் வேறு இடங்களுக்கு செல்லத்தொடங்கினார்கள்.

 எனக்கு அப்ப மனதில் இருந்த கவலை எல்லாம் பழகிய நண்பர்களைவிட்டு செல்லப்போகின்றோமே என்றுதான்.

1998ஆம் ஆண்டின் இறுதியில் புத்துவெட்டுவானில் இருந்து ஆனைவிழுந்தான் என்ற ஊர் நோக்கிய பயணம். அன்றுதான் ருஜானியை கடைசியாகப்பார்த்தேன். அதுக்கு பிறகு பல ஆண்டுகள் ஆகியும் பார்க்கமுடியவில்லை.பல ஆண்டுகளுக்கு பிறகு உறவிணர் ஒருவரின் கல்யாண வீடியோவில் ருஜானியை பார்தேன் சிறுமியாக இருந்த ருஜானி இளம்பெண்ணாக அழகு பதுமையாக இருந்தாள்.நேரில் பார்க்கவேண்டும் என மனதில் ஆசை இருந்தாலும் பார்க்கமுடியவில்லை.
இப்ப எங்க இருக்கின்றாளோ எப்படி இருக்கின்றாளோ தெரியாது.

சில நேரங்களில் நினைவுகளில் வந்து போகும் அழகிய ஞாபகங்கள் வறுமையிலும் மகிழ்ச்சியாக வாழ கற்றுத்தந்த புத்துவெட்டுவான் வாழ்க்கையும், கூடவே ருஜானியும்.
(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பகுதிகளை படிக்க இங்கே கிளிக்-யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் தொடர்

முஸ்கி-இதில் சதீஸ் என்ற ஒருவர் கதை சொல்வதாக இந்த தொடர் நகர்ந்து செல்கின்றது ஆனால் இதில் குறிப்பிடப்படும் சதீஸ் நான் இல்லை.





Post Comment

7 comments:

K said...

நான் தான் முதலாவது மச்சான் சார் :))

K.s.s.Rajh said...

@மாத்தியோசி - மணி

வாங்க மச்சான் சார் வாங்க உங்கள் தங்கச்சி வீடுதானே நீங்க முதலாவதாக வந்தால் என்ன கடைசியாக வந்தால் என்ன உரிமையுடன் வாங்க

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!பப்பி லவ்வா?என்னய்யா சொல்லுற?ஹி!ஹி!ஹீ!!!!!

தனிமரம் said...

வணக்கம் ராச் தம்பி வீட்டுக்கு எப்பவும் வரலாம் அக்கம் பக்கம் போய் கொஞ்சம் விளையாடிவிட்டதில் நேற்று பிந்திவிட்டேன்!:))
பப்பி லவ்வா நான் அறியேன் தொடர் நினைவைத் தாலாட்டிய வண்ணம்  நடை பயில்கின்றது!

தனிமரம் said...

ரிஜானி ம்ம்ம் நல்லத்தான் இருக்கு ஹீ பெயரைச் சொன்னேன் பாஸ்!:)))

தனிமரம் said...

தொடருங்கள் வருகின்றேன் !

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல நினைவுகள்... தொடர்கிறேன்...

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails