Tuesday, February 26, 2013

விக்கெட் கீப்பர் தோனியின் இரட்டை சதம் நான் நினைத்தது நடந்துவிட்டது

ஆஸ்ரேலியவுக்கு எதிரான டெஸ்ட்போட்டியில் இந்திய அணியின் வீக்கெட்கீப்பர் மகேந்திரசிங்தோனி டெஸ்ட்போட்டிகளில் தனது முதலாவது இரட்டைசதத்தை பதிவு செய்துகொண்டார்.பாராட்டுக்கள்.

என்னடா தோனியை விமர்சிக்கும் நானே பாராட்டுக்கின்றேன் என்று நினைக்கிறீங்களா நான் விமர்சிப்பது இந்திய அணித்தலைவர் தோனியைத்தான்.விக்கெட் கீப்பர் தோனியையோ இல்லை துடுப்பாட்டவீரர் தோனியையோ இல்லை.


தோனி அறிமுகமான காலம் தொட்டு அவரது வளர்ச்சியை நான் அவதானித்து வருக்கின்றேன் குறுக்கிய காலத்தில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக மாறியது அவர் திறமைக்கு சான்று.

ஒரு களுவித்தாரனவோ இல்லை சங்ககாரவோ இல்லை கில்கிறிஸ்ட்,மார்பெளச்சர்,மொயின்கான்,அண்டிபிளவர் இவர்களைப்போல நட்சத்திர விக்கெட்கீப்பர்கள் யாரும் நீண்டகாலம் இந்திய அணியில் இல்லை என்ற குறை தோனி அறிமுகம் ஆக முன்பு வரையிருந்தது.தினேஸ் கார்த்திக்,பார்த்தீவ் பட்டேல் என்று வாய்ப்பு கிடைத்தாலும் அவர்களால் பெரியளவில் ஜொலிக்கமுடியவில்லை அதனால் அந்தக்காலங்களில் இந்திய சுவர் ராகுல் ராவிட்டை விக்கெட் கீப்பராக மேலதிகமாக ஒரு சுமையை சுமத்தினார் கேப்டன் கங்குலி கங்குலி தலைமையிலான இந்திய அணி விளையாடிய ஏராளமான போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்பட்டவர் ராவிட்தான்.


2004 ஆம் ஆண்டு தோனியின் வரவுக்கு பின் ராவிட் சுமை நீங்கியது ஆனால் தோனி அறிமுகம் ஆன புதிதில் இவரும் வழமையான விக்கெட் கீப்பர்தான் என்றே எல்லோறும் நினைத்தனர்.ஆனால் தோனி தனது அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் பலரின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.பல சிறந்த இனிங்ஸ்களை ஆடி தன் திறமையை வெளிக்காட்டின்னார் விளைவு இந்திய அணியின் கேப்டன் அளவுக்கு உயர்ந்தார்.அத்தோடு இந்திய அணிக்கு ஒரு நட்சத்திர விக்கெட் கீப்பர் இல்லாத குறையையும் போக்கினார்.

கில்கிறிஸ்ட்,மார்பெளச்சர் அளவுக்கு தோனி சிறந்த விக்கெட் கீப்பர் என்று சொல்லமுடியாவிட்டாலும் கிரிக்கெட் உலகில் தோன்றிய சிறந்த விக்கெட் கீப்பர்களுல் தோனியும் ஒருவர்.

எனக்கு ரொம்பநாளாகவே மனதில் ஒருவிடயம் இருந்துகொண்டேயிருந்தது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி டெஸ்ட் போட்டிகளில்  ஒரு இரட்டை சதம் அடிக்கவேண்டும் என்று.அது இப்போது நிறைவேறியுள்ளது.


இப்படி இன்னும் சில வீரர்களை நான் எதிர்ப்பார்ததுண்டு அதில் சிலர் அடித்துள்ளனர் சிலர் இன்னும் அடிக்கவில்லை.பாகிஸ்த்தான் அதிரடி மன்னன் அப்ரிடியை பெரிதும் எதிர்ப்பார்த்தேன் ஆனால் அவரது அதிகபட்ச ஓட்டம் 158* இந்தியாவுக்கு எதிரான அந்தபோட்டியில் இம்சமாம் உல் ஹக்கும் அப்ரிடியும் சிறப்பான ஒரு இணைப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

அப்ரிடிஇரட்டைசதம் அடிப்பார் என்று எதிர்பார்த்து இருந்தேன் ஆனால் போட்டியின் வெற்றியை கருத்தில் கொண்டு கேப்டன் இம்சமாம் உல் ஹக் டிக்ளேயர் செய்தார்.சில சதங்களை அப்ரிடி அடித்திருந்தாலும் ஒரு இரட்டை சதத்தை கூட பதிவு செய்யவில்லை என்ற கவலை எனக்கு இப்போதும் இருக்கு தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து அப்ரிடி ஒய்வு பெற்றுவிட்டதால் அது இனி நிறைவேறப்போவது இல்லை.

அடுத்து யுவராஜ் சிங்.அதிகமான டெஸ்ட் வாய்ப்புக்கள் இவருக்கு கிடைக்கவில்லை கிடைத்த ஆட்டங்களிலும் பெரிதாக ஜொலிக்கமுடியவில்லை.இவரது அதிக பட்ச டெஸ்ட் ஒட்டம் 169 ஆனால் இன்னும் இவர் டெஸ்ட்போட்டிகளில் இருந்து ஒய்வு பெறவில்லை.ஆனால் வாய்ப்பு கிடைப்பதில் பலத்த போட்டியிருக்கு பார்ப்போம் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பிடித்து கலக்குவார் என்று எதிர்பாக்கின்றேன்.

அப்பறம் நம்ம தாதா கிரிக்கெட்டில் கேப்டனாகவும்,துடுப்பாட்டவீரராகவும்,பந்துவீச்சாளராகவும் ஜொலித்த நம்ம தாதா டெஸ்ட் போட்டிகளில் பல அதிரடியான சதங்களை விளாசியிருந்தாலும் நீண்டகாலம் இரட்டை சதம் ஒன்றை பெறவில்லை.பின்பு பாகிஸ்தானுக்கு எதிராக தாதா 239 ஒட்டங்களை விளாசிய போது ஏதோ நான் இரட்டை சதம் அடித்ததை போல ஒரு பீலிங் .

சச்சின் இதுவரை 195 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தாலும் அவரது அதிகபட்ச டெஸ்ட் ஒட்டம் 248* நான் சச்சின் ரசிகன் இல்லாவிட்டாலும் அவர் ஒரு முச்சதம் டெஸ்ட் போட்டிகளில் அடிக்கவேண்டும் என்று நினைத்ததுண்டு இன்னும் அவர் ஒய்வு பெறவில்லை சச்சின் எப்போது எப்படி ஆடுவார் என்று அவருக்கே தெரியாது பார்போம் சிலவேளை அவர் இனி முச்சதம் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எனக்கு பிடித்த விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்.ஆனால் ஒரு கேப்டனாக தோனி என்னை எப்பவும் கவந்தது இல்லை இனி கவரப்போவதும் இல்லை

படங்கள்-கூகுள்

Post Comment

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

செம விளாச்சல்...

பால கணேஷ் said...

Good Batsman and keeper Dhoni. Your write up is well and enjoyable Raj! Superb! I express my greetings to dhoni through you here. tks.

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@பால கணேஷ்
////said...
Good Batsman and keeper Dhoni. Your write up is well and enjoyable Raj! Superb! I express my greetings to dhoni through you here. tks.////

நன்றி பாஸ் ஏன் இங்கிலீஸ் கமண்ட் என்னாச்சு?

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails