Wednesday, February 27, 2013

நான் ரசித்த சில பேஸ்புக் ஸ்டேட்டஸ்

பேஸ்புக்கில் வலம் வந்த போது நான் ரசித்த சில ஸ்டேட்டஸ்களை இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.


1)நம்ம பதிவர் நண்பர் மைந்தன் சிவா
உடலழகை பார்த்து வருபவன் வேண்டாம்..சிறிது காலத்தில் குழந்தை பிறந்த பின்னர் உடலழகு போய்விடும்.,அழகு நிரந்தரமானது அல்ல அதனால் மனச பார்த்து காதலிக்கிற ஆம்பிளை தான் வேண்டும் என்று கேட்கின்ற பெண்கள்,அப்படி மனசை பார்த்து வரும் கணவனுக்கு வழுக்கை இருக்கிறதா தொப்பை இருக்கிறதா என்று பார்க்காமலா இருக்கின்றார்கள்?


ஆண்கள் சூப்பர் பிகரா மொக்கை பிகரா/குண்டு பிகரா ஸ்லிம் பிகரா என்று பார்த்து தெரிவு செய்வதை போல,தனக்கு கிடைக்கும் ஆண் வழுக்கை தலையனா இல்லை தொப்பை அப்பனா அல்லது இரண்டும் இல்லாதவனா என்கின்ற தெரிவு பெண்களுக்கு மிக சவாலான ஒன்று!

பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு வழுக்கை இல்லாத,தொப்பை இல்லாத மாப்பிள்ளை தான் வேண்டுமென்று கனவுகண்டாலும்,அவரவர் கொடுப்பனவை பொறுத்து தான், வழுக்கையோ தொப்பையோ இல்லை இரண்டும் இல்லாத மாப்பிள்ளையோ கிடைக்கிறது.

முடி கொட்டுதலும்,தொப்பை வைப்பதும் தான் இன்றைய ஆண்கள் மத்தியிலிருக்கும் முக்கிய இரு பிரச்சனைகள்..!இரண்டையுமே தடுப்பதென்பது குதிரைக்கொம்பு என்றாலும்,இரண்டாவதை முயற்சி செய்தால் முளையிலேயே கிள்ளியெறிய முடியும்!
#'மெயின்டெய்னன்ஸ்' இப்போது ஆண்களினதும் முக்கிய வார்த்தையாகிவிட்டது...!


2)நம்ம பதிவர் விக்கி மாம்ஸ்
திடீர்ன்னு பகையாளி உருவாவதில்லை...நேற்றுவரை தோள் கொடுத்து நின்ற நண்பர்கள் தான்(!) பகையாளியாகி விடுகிறார்கள்....என்ன செய்வது...நமது பலம்..பலவீனம் தெரிஞ்சவங்க கூட கேம் ஆடுவது எவ்வளவு சிரமம்னு அனுபவிச்சவங்களுக்குதான் தெரியும் - சுயம்!

3)நம்ம பதிவர் துஷி
என் கிட்ட இருக்கிற மிக பெரிய மைனஸ் என் கோபம் தான் என்று எனக்கு நல்லாவே தெரியும். ஆனாலும் அதை மாத்திக்கத்தான் முடியல்ல. சரி.. இது என் அடையாளமாகவே இருந்துட்டுப்போகட்டுமே

4)நம்ம தலிவர் பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி
ஃபேஸ்புக்ல எல்லாருக்கும் விருப்பமானவனா இருக்கனும்னு நினைச்சா அது ரொம்ப ரொம்ப ஈசி, அதாவது கிட்டத்தட்ட எல்லாராலேயும் முடியும்.


அதுக்கு சில குறுக்கு வழிகள் உண்டு அது :-



1. எல்லாருக்கும் லைக் போட்டுடனும். யாரையும் மிஸ் பண்ணிட கூடாது. ஏன்னா நீங்க லைக் போடாதவங்க நீங்க லைக் போட்டவங்களுக்கு பிடிக்காதவங்களா இருக்கலாம், அதனால அவங்களுக்கு உங்களை பிடிக்காம போக வாய்ப்பிருக்குது.


2. எல்லாருக்கும் கமெண்ட் போடனும். அதுவும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாம போடனும். ஏன்னா பாராட்டிக் கமெண்ட் போட்டா அந்தாளுக்கு பிடிக்காதவுககிட்ட கெட்டபேர், விமர்சிச்சி கமெண்ட் போட்டா அந்த அவங்களுக்கே பிடிக்காது. சரினு மொக்கை கமெண்ட் அல்லது ஸ்மைலி மட்டும் போட்டாலும் அந்த மாதிரி கமெண்ட்ஸ் பார்த்து முகஞ்சுளிக்கிறவங்க கிட்ட கெட்டப்பேர்.

3. இருக்கற ஆளுக எல்லாரையும் ஃப்ரண்ட்சா சேர்த்துக்கனும், யாரும் உங்களை பிரண்ட்ஸ் வட்டத்துக்குள்ளே சேர்க்கலேன்னாலும் கண்டுக்கப்படாது....

4. கட்டக்கடேசியா மிக முக்கிய மான பாயிண்ட் இதை டைரில குறிச்சி வச்சி, மனப்பாடமும் பண்ணிக்கிறது நல்லது ஃபேஸ்புக்ல பொம்பள புள்ளைக பேர்ல (சமந்தா ராம்சாமி, நயன்தாரா முனியசாமி இந்த மாதிரி இருந்தா நல்லது) ஒரு 10-15 ஃபேக் அக்கோண்டை கிரியேட் பண்ணிட்டு ஃபுல்டைமா உக்காந்துடனும். அப்புறம் எல்லாமே கதம் கதம்....

5)நம்ம பதிவர் வீடு சுரேஸ்குமார்
பிளாக்குலதான் மொய்க்கு...மொய்யு, ஆஹா அருமைன்னு சாவடிக்கறாங்கன்னு முகப்புத்தகம் வந்தா லைக் போடலை, சேர் பண்ணலைன்னு ஒரே அழுவாச்சி காவியம் பாடுற மகான்களே..! குழம்பு ருசியா வைக்கத் தெரிஞ்சா கோழி குருடா இருந்தாலும் பட்டையக் கிளப்புங்க..! என்னங்கண்ணா நாஞ் சொல்றது செரிதானுங்க....!

6)பதிவர் பூங்கோதை 

உணர்வுகளை நொருக்கிப் போடும் 

உணர்வற்ற இதயங்கள் உலவும்
ஊடகம் இது.. பார்த்துக் கால் பதியுங்கள்
உங்கள் காயங்களுக்கு யாரும் 
உத்தரவாதமில்லை!!! நானும் கூட.

7)பதிவர் KR Vijayan

அறிவுரை சொல்வதற்கு என்று தனியாகத் தகுதிகள் ஏதும் உள்ளதா?"


"அப்படி எதுவும் கிடையாது. சமீபத்தில் ஒரு திருமண மண்டபத்துக்குச் சென்று இருந்தேன். அங்கு கழிவறையின் உள்பக்கக் கதவில் எழுதப்பட்டு இருந்த வாசகம், 'வரும்போது எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தீர்களோ, செல்லும்போதும் அப்படியே வைத்துவிட்டுச் செல்லுங்கள்!'

8)பதிவர் காட்டான்

முக நூல் நண்பர்களிடையே நடக்கும் சண்டையில் என்னா லாபமுன்னா கைகலப்பு நடக்காது...ரத்த கறையும் வராது..!! ஆனா நேரடி சண்டையை விட மனதில் அதிக வடு ஏற்படலாம்..!;-

9)பதிவர் ஹேமா
தனித்திருப்பது ஏதும் எனக்கொன்றும்

கஸ்டமேயில்லை.....
சொல்வழி கேட்கா
மனம்தான் என் வெறுமையை 
எழுதிக்கொண்டிருக்கிறது 

10) நான் போட்ட என்னுடைய ஸ்டேட்டஸில் எனக்கு மிகவும் பிடித்தது
எல்லோர் மனங்களிலும் ஏதாவது ஒரு வலி இருந்துக்கொண்டு தான் இருக்கும் அதை சிலர் வெளியில் சொல்கின்றோம் சிலர் மனதிலே புதைத்துவிடுகின்றோம்

#வலிகள் உள்ள வாழ்க்கையும் ஒரு வகையில் சுவாரஸ்யம் தான்

அனைவருக்கும் நன்றி


முஸ்கி-இன்னும் நிறைய ஸ்டேட்டஸ் இருக்கு பதிவு நீண்டு விடும் என்பதால் 10 மட்டுமே தந்துள்ளேன் ஒவ்வொறு மாத முடிவிலும் இனி இப்படி நான் ரசித்த ஸ்டேட்டஸ்களை பதிவாக போடலாம் என்று இருக்கேன்.

முஸ்கி-நீண்டகாலம் என் தளத்திற்கும் பாலோவர் விட்ஜெட்டிற்கும் வாய்யா தகறாரு இதனால் 200 மேற்பட்ட பாலோவர்ஸை இழந்துவிட்டேன் மீண்டும் பாலோவர் விட்ஜெட் இணைத்துள்ளேன் சிரமம் பார்க்காது மீண்டும் பாலோ செய்யவும் நண்பர்களே




Post Comment

14 comments:

jgmlanka said...

ஆஹா.. ராஜ்.. இது ஒரு நல்ல முயற்சி... மாதக் கடைசியில் நாங்களும் இங்கு வந்து ஒரு மீள்பார்வை செய்ய ஒரு அரிய சந்தர்ப்பம் கொடுக்கிறீர்கள் ... :)

திண்டுக்கல் தனபாலன் said...

முகநூல் அதிகம் செல்வதில்லை... அறிந்தேன்... நன்றி... தொடர்க...

Yoga.S. said...

அருமை,ராஜ்!!!இந்த முகநூல் மூலம் சில வேளைகளில்,காந்திகளும்,வள்ளுவர்களும் கூட நிகழ்காலத்தில் உருவாகக் கூடும்!

jgmlanka said...

ஆவ்வ்வ்வ்.. என்னுடைய ஸ்டேட்டஸ்ம் சேர்த்திருக்கிறீங்களே... ம்ம்மிக்க நன்றி ராஜ்..வலிகள் ஏதோ ஒரு வடிவத்தில எல்லோருக்கும் இருக்கு.. சரி தான்

K.s.s.Rajh said...

@பூங்கோதை
////
ஆஹா.. ராஜ்.. இது ஒரு நல்ல முயற்சி... மாதக் கடைசியில் நாங்களும் இங்கு வந்து ஒரு மீள்பார்வை செய்ய ஒரு அரிய சந்தர்ப்பம் கொடுக்கிறீர்கள் ... :)////அப்படியா மிக்க சந்தோசம்

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்
////
முகநூல் அதிகம் செல்வதில்லை... அறிந்தேன்... நன்றி... தொடர்க.//// நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@Yoga.S.
////
அருமை,ராஜ்!!!இந்த முகநூல் மூலம் சில வேளைகளில்,காந்திகளும்,வள்ளுவர்களும் கூட நிகழ்காலத்தில் உருவாகக் கூடும்!//// உண்மைதான் நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@பூங்கோதை

////
ஆவ்வ்வ்வ்.. என்னுடைய ஸ்டேட்டஸ்ம் சேர்த்திருக்கிறீங்களே... ம்ம்மிக்க நன்றி ராஜ்..வலிகள் ஏதோ ஒரு வடிவத்தில எல்லோருக்கும் இருக்கு.. சரி தான்////

அப்ப பதிவை முழுவதும் படிக்காமல் தான் கமண்ட் போடுறீங்க போல ஹி.ஹி.ஹி.ஹி.............

K said...

மீண்டும் ஃபாலோவராக இணைந்துவிட்டேன் மச்சான் சார்! ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அருமை! பன்னி அண்ணா சொன்னது கலக்கல்!

K said...

அப்புறம் மைந்தன்! சான்ஸே இல்ல! ஆல்வேய்ஸ் ராக்ஸ்!

K.s.s.Rajh said...

@மாத்தியோசி மணி மணி
////
மீண்டும் ஃபாலோவராக இணைந்துவிட்டேன் மச்சான் சார்! ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அருமை! பன்னி அண்ணா சொன்னது கலக்கல்!////

நன்றி மச்சான் சார்

K.s.s.Rajh said...

@மாத்தியோசி மணி மணி
////
அப்புறம் மைந்தன்! சான்ஸே இல்ல! ஆல்வேய்ஸ் ராக்ஸ்!////

ஆம் அவரின் ஸ்டேட்டஸ்க்கு நான் பெரிய ரசிகன்

தனிமரம் said...

ஆஹா மைந்தன் மெயிண்டன்ஸ் இப்ப புரியுது!ஹீ எனக்கு முகநூல் எல்லாம் இல்லை!ஹீ

K.s.s.Rajh said...

@தனிமரம்
நன்றி பாஸ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails