Friday, August 15, 2014

பரந்தாமனின் (சு)வாசம்-ஒரு ராதையின் தேடல் -பகுதி-6

சின்ன வயதில் இருந்து குடும்ப உறவுகளிடம் இருந்து விலகியே இருந்திருக்கின்றேன் நான். குறிப்பிட்டு சொல்லப்போனால் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து உணவுகூட உண்டதில்லை.ஆனால் வைஸ்னவி அக்காவீட்டில் தம்பி,தங்கச்சி என்று எல்லோரும் ஒரு நண்பர்களைப்போல பழகுவதை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது.நமக்கு கிடைக்காத ஒரு விடயத்தை பார்க்கும் போது ஆச்சரியம் வருவது இயல்புதானே.
ஒரு மூன்று மணித்தியாலங்கள் அவரின் வீட்டில் இருந்திருப்போம் ஆனால் ஏதோ முப்பது வருடம் இருந்ததைப்போல ஒரு உணர்வு.அந்த மூன்று மணித்தியால பழக்கத்தை வைத்து சொல்கின்றேன் அவர் குடும்பம் ஒரு கோயில்.வைஸ்னவி அக்காவின் அம்மாவிடம் நீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்தேன் எப்போதும் பெரியவர்களுடன் பேசுவது ரொம்ப பிடிக்கும் காரணம் நிறைய விடயங்களை அறிந்துகொள்ளாம்.அனுபவமே வாழ்கையில் சிறந்த ஆசான் எனவே பெரியவர்களிடம் பேசுவதை நான் அதிகம் விரும்புவேன்.

வைஸ்னவி அக்காவின் வீட்டில் இருந்து விடைபெறும் போது தன்னுடைய கையால் ரொட்டி சுட்டு(சப்பாத்தி) அதற்கு தக்காளிப்பழ சம்பல்(சட்னி)யும்  அரைத்து பார்சல் கட்டித்தந்தார் போகும் போது ட்ரெயினில் சாப்பிட்டுக்கொண்டு போகும் படி நான் தக்காளிப்பழம் சாப்பிடுவதில்லை என்றதும்.ஜாம் தடவிய இரண்டு ரொட்டிகளை எனக்கு பார்சல் பண்ணித்தந்தார்.அவரின் ஊரில்  இருந்து எங்கள் ஊருக்கு கிட்டதட்ட ஏழு மணித்தியால பயணம். என்னுடன் வந்த நண்பன்அந்த ரயில் பயணம் முழுவதும்  வைஸ்னவி அக்காவை பற்றியே பேசிக்கொண்டு வந்தான் எப்படி ராம் இப்படி ஒரு நண்பி உனக்கு கிடைத்தார்.ரொம்ப அழகான அன்பான ஆளாக இருக்கின்றார்.அது இது என்று அவரின் புராணம் தான் பாடிக்கொண்டு வந்தான்.அவனுக்கு தனது பெயரிலே அதாவது கிருபா என்று ஒரு ஜயரை வைஸ்னவி அக்கா தேடுவது பெரிய சந்தோசம் .எப்படியும் அவரை தேடிக்கண்டு பிடிக்கவேண்டும் ராம் என்று சொல்லிக்கொண்டே வந்தான்.

எனக்கோ அந்த இரவு ரயில் பயணம் தூக்கம் தொலைந்து போய்விட்டது சில மாதங்களில் வைஸ்னவி அக்கா வெளிநாட்டுக்கு போய்விடுவார் அதற்கு கிருபாவை கண்டு பிடிக்கவேண்டும்.அவர் இருக்கும் ஊரில் உள்ள எனது நண்பன் அர்ஜுனுக்கு சொல்லி பல நாட்கள் ஆகிவிட்டது அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்ன செய்வது என்ற சிந்தனையிலே  தூக்கம் வரவில்லை.வைஸ்னவி அக்கா தந்த ரொட்டியை சாப்பிட்டுவிட்டு வலுக்கட்டாயமாக கண்களை மூடி தூக்கத்தை தழுவமுயற்சித்து தோற்றுக்கொண்டு இருந்தேன்.அந்த தூக்கம் இல்லாத இரவு முழுவதும் கிருபாவை பற்றிய சிந்தனைதான்.

நானும் பரீட்சை எழுதிவிட்டதால் இனி அழகாபுரி பக்கமும் போகவேண்டி வராது எனவே கிருபாவை தேடுவது சற்று சிரமமாகத்தான் இருந்தது.வைஸ்னவி அக்காவுக்கும் தான் வெளிநாடு செல்லும் நாட்கள் நெருங்க நெருங்க பயம் ஆட்கொள்ளத்தொடங்கிவிட்டது தன்னை ஆட்கொண்டவனிடம் சொல்லாமல் போய்விடுவமோ என்று..........


அப்போதுதான் அந்த மகிழ்சியான செய்தி அர்ஜுனிடம் இருந்து கிடைத்தது.
டேய் ராம் நீ கேட்ட ஜயர் இங்கே எங்கள் ஊரில் தான் இருக்கார் கண்டுபிடித்துவிட்டேன் வா நேர போய் பார்ப்போம் என்று..........

உடனே வைஸ்னவி அக்காவிற்கு போன் பண்ணி சொன்னேன்.அவருக்கு வார்தைகள் வரவில்லை.தானும் வருவதாக சொன்னார்.எனக்கு அதில் உடன்பாடு இல்லை ஒருவரை பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமல் இவரையும் அழைத்துப்போக உடன்பாடு இல்லை ஆனால் இவரே இல்லை நானும் வருவேன் என்று அடம்பிடித்தார் சரி வாங்க என்று சொல்லிவிட்டு அழகாபுரிக்கு நானும் செல்லத்தயார் ஆனேன்.


இரண்டு நாட்களின் பின் வைஸ்னவி அக்காவும் ஊரில் இருந்து அழகாபுரிக்கு வந்துவிட்டார்.அவரும் அவரின் தம்பியும் வந்திருந்தார்கள்,நானும் என் நண்பனும் எங்கள் ஊரில் இருந்து போயிருந்தோம் நால்வருமாக அர்ஜுனின் ஊர் நோக்கி பயணித்தோம்.இதில் என்ன ஆச்சரியம் தெரியுமா? அந்த ஊர் எங்கள் கல்லூரிக்கு மிக அருகில் தான் இருக்கின்றது.எங்களுக்கு தெரியவில்லை.வைஸ்னவி அக்கா முன்பு அடிக்கடி சொல்லுவார்.கிருபா இங்கே அருகில் தான் இருக்கின்றார்.என்னால் உணர்ந்துகொள்ளமுடிகின்றது அவர் சுவாசிக்கும் காற்றை நானும் சுவாசிப்பதாக உணர்கின்றேன் என்று அவரது உணர்வுகள் சரிதான் மிக அருகில் இருந்தது அந்த ஊர்.


வைஸ்னவி அக்காவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம் அன்று அவர் அணிந்திருந்த வெள்ளைக்கலர் டீசேர்ட் மற்றும் நீல டெனிம் அவருக்கு மேலும் அழகு சேர்க்க ஜொலித்துக்கொண்டு இருந்தார்.

அர்ஜுனிடம் சென்று எங்கே ஜயர் வீடு என்று விசாரிக்க சிறிது தூரம் போகவேண்டும் என்று சொன்னான்.வைஸ்னவி அக்காவையும்.அவரின் தம்பியையும்,என் நண்பனையும் ஒரு இடத்தில் நிற்கவைத்துவிட்டு நானும் அர்ஜுனும் கிருபாவின் வீடு நோக்கி போனோம்.முதலில் நாங்கள் போய் உறுதிப்படுத்திவிட்டு வருகின்றோம் அதன் பிறகு நீங்கள் வாருங்கள் என்பதுதான் ப்ளான்.அந்த நேரம் பார்த்து அர்ஜுன் ஒன்று சொன்னார் ஏண்டா ராம் இவ்வளவு அழகாக இருக்காங்க உண்மையை சொல்லு உனக்கு இவாவுக்கும் என்ன தொடர்பு.நீ எல்லா மேட்டரையும் இவாக்கு முடிச்சிட்ட போல உனக்கு எங்கயோ மச்சம் இருக்குடா இப்படி ஒரு சூப்பர்............ மடக்கிட்டியே.எனக்கு தர்மசங்கடமாக போய்விட்டது அவன் பேசியதை வைஸ்னவி அக்காவும் கேட்டு இருக்கவேண்டும்...........

போடா லூசா லூசுக்கதை கதைக்காத என்று கோபமாக திட்டிவிட்டு
அவனை அழைத்துக்கொண்டு கிருபா வீடு நோக்கி பயணித்தேன்

ஒரு கடையில் கேட்டோம் கிருபா ஜயர் வீடு எது என்று. இதுதான் என்று ஒரு வீட்டைக்காட்டினார்கள்.அந்த வீட்டிற்கு முன் சிறிது நேரம் நின்று என்ன பேசுவது என்று அர்ஜுனும் நானும் யோசித்துக்கொண்டு இருக்கும் போது 
ஒருவர் எங்கள் மெளனம் களைத்தார்.

யார் நீங்க யார் வேணும்?

அவரை பார்த்தேன்? வைஸ்னவி அக்கா போட்டோவில் காட்டிய அதே முகம்.அப்ப இவர்தான் கிருபாவா? அப்படி என்றால் வைஸ்னவி அக்காவின் தேடல் முற்றுப்பெற்றுவிட்டதா? ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் எங்கள் முன் நிற்பவன் கொஞ்சம் சின்னப்பையனாக இருந்தான்..வைஸ்னவி அக்காவின் கூற்றுப்படி கிட்டதட்ட கிருபாவுக்கு 25 வயதுக்கு மேல வரும் என்று அல்லவா சொல்லியிருந்தார் இதுல நிற்பவருக்கு ஒரு 19,20 வயதுதான் வரும்.
சரி அவரிடமே கேட்டு விடுவோம். கிருபா? கிருபா ஜயாவா நீங்கள்?

இல்லை நான் அவரின் தம்பி எங்க அண்ணாதான் கிருபா.அவர் இப்ப.கோயில் உட்ஷவம் ஒன்றுக்காக போய்விட்டார் வருவதற்கு ஜந்து ஆறு நாட்கள் ஆகும்.

உங்களுக்கு என்ன வேண்டும்?

இல்லை நாங்களும் கோயில் உட்ஷவம் ஒன்றிற்காக அவரை கேட்கத்தான் வந்திருக்கோம்.அவரின் நம்பர் தரமுடியுமா? என்று கேட்டேன்.

அவரும் சரி என்று கிருபாவின் நம்பரை தந்தார்.வைஸ்னவி அக்கா சொல்லிய தகவல் எல்லாம் வைத்து சில விடயங்களையும் இவரிடம் உறுதிப்படுத்தினேன் எல்லாம் சரியாக பொறுந்தியது எனவே நாங்கள் தேடும் கிருபா இவரின் அண்ணன் தான் என்றும் அவரின் வீடு இதுதான் என்றும் 100 வீதம் உறுதியாகிவிட்டது.

மனம் முழுக்க சந்தோசத்துடன் வைஸ்னவி அக்காவிடம் வந்தோம்.அவரிடம் வந்து விடயத்தை சொன்னதும் மிகுந்த சந்தோசம் அடைந்தார்.அப்பறம் கேட்டார் பாருங்க ஒரு கேள்வி.உண்மையாவே ராம் நீங்க அவரின் வீட்டைக்கண்டு பிடித்துவிட்டீங்களா பொய் ஏதும் சொல்லவில்லையே.என்று..

அவர் அப்படி கேட்டதும் அர்ஜுனுக்கு கடுப்பாகிவிட்டது அவன் சொன்னான் ராம்.நீ சொன்ன என்ற ஒரே காரணத்துக்காகத்தான் விசாரித்து சொன்னேன் ஏதும் பிரச்சனைகள்வந்தால் என்னை மாட்டிவிட்டுடாதா 

டேய் உனக்கு ஒருபிரச்சனையும் வராது அப்படி வந்தால் என்னய சொல்லு நான் தான் விசாரித்தன் என்று நான் பார்த்துக்கொள்கின்றேன் என்று அர்ஜுனிடம் சொல்லிவிட்டு.அந்த இடத்தைவிட்டு வந்துவிட்டோம் வரும் போது வைஸ்னவி அக்காவிடம் சொன்னேன்.நீங்கள் சொன்ன கிருபாவை நான் பார்தது இல்லை நீங்கள் தந்த தகவல்களின் அடிப்படையில் .அப்படி ஒரு நபர் இருந்தால் நூறுவீதம் இவர்தான்.அவரின் நம்பர்தான் இதுதான் இந்தாங்க என்று அந்த நம்பரைக்கொடுத்தேன்.

ஆனால் உங்கள் நம்பரில் இருந்து கோல் பண்ணாதீர்கள் வேறு ஒரு  நம்பர் வேண்டி அதில் இருந்து கோல் பண்ணிக்கதைங்க அத்துடன் உங்களின் உண்மையான பெயரை பயன்படுத்தவேண்டாம் ஒரு பெயர் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் அந்த பெயரை பயன்படுத்துங்கள்.

கிருபாவை ஏமாற்றுவது நோக்கம் இல்லை.நீங்கள் இன்னும் சில வாரங்களில் வெளிநாடு போகப்போகின்றீர்கள் உங்களுக்கு உங்கள் மனசில் அவரை பார்த்து மனதை பறிகொடுத்ததை சொல்லவேண்டும் இதில் ஏதும் பிரச்சனைகள் வந்து அதனால் உங்கள் வாழ்கை நாசமாகிவிடக்கூடாது.எனவே போனில் கதைத்து நேரில் சந்திக்கமுடிந்தால் சந்தித்து சொல்லுங்கள் இல்லை போனிலே சொல்லிவிடுங்கள்.என்று சொன்னேன். 

(நான் சொந்தப்பெயரை பயன்படுத்தவேண்டாம் என்று சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கு அதனால் வைஸ்னவி அக்காவின் வாழ்கை முழுவதும் பாதிக்கப்பட சந்தர்பம் இருக்கு.சமூகத்தின் பார்வையில் தப்பான அர்த்தம் கற்பிக்கப்பட்டு விடும் எனவே தான் சொந்தப்பெயரை பயன்படுத்தவேண்டாம் என்று சொன்னேன்.சொந்தபெயரை பயன்படுத்தாமைக்கான அந்த காரணத்தையும் இந்த தொடரில் குறிப்பிட போவது இல்லை )

உடனே இப்ப உங்கள் போனில் இருந்து கோல் எடுக்க ராம் அவரின் குரலை கேட்கனும் என்று சொன்னார் வைஸ்னவி அக்கா.

சரி என்று என் போனில் இருந்து அந்த நம்பருக்கு கோல் எடுத்தேன் எதிர்முனையில் ஹலோ யாரு என்று ஒரு குரல்.நான் ஒரு கோயிலுக்கு உட்ஷவம் செய்யவேண்டும் எவ்வளவு காசு எடுப்பீர்கள் அது இது என்று எல்லாம் கேட்டுவிட்டு பிறகு போனை கட் பண்ணிவிட்டு வைஸ்னவி அக்காவை பார்த்தேன்.

அந்த மனுசன் தான் அவனின் குரல்தான் இது ராம். தாங்யூ வெறி மச் நன்றி ராம் என்று உணர்சி வசப்பட்டு அவரின் வார்தைகள் தழுதழுத்தது.

கிருபா பற்றி சில நிமிடம் பேசிக்கொண்டேயிருந்தார்.அவரது கண்கள் கலங்கி கண்ணீர் முட்டியது அன்றுதான் அவர் அழுது பார்த்திருக்கேன்.

நீ துரதிஸ்டசாலிடா கிருபா. இப்படி ஒரு அன்பை அனுபவிக்க உனக்கு குடுத்துவைக்கவில்லை என்று மனசில் நினைத்துக்கொண்டேன்

சரி வேறு என்ன உங்கள் ஊருக்கு போனதும் புது சிம் வாங்கி அவருக்கு கோல் பண்ணி சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லுங்கள் 

வேறு பெயரை பயன்படுத்த சொன்னீங்களே ராம் நீங்களே ஒரு பெயரை வையுங்கள் எனக்கு?

ஹா.ஹா.ஹா.ஹா..........நான் பெயர் வைப்பதா?

பரவால்ல பாஸ் வையுங்க என்றார்.

வைஸ்னவி அக்காவின் சொந்தப்பெயர் மிகவும் அழகானது  அவர் அழகைபோலவே அவர் பெயரும் அழகானது.எனவே அந்த அழகு தேவதைக்கு ஒரு அழகான பெயரைத்தான் சூட்டவேண்டும்.சட்டென என் மனசில் இந்தபெயர் வந்து நின்றது வைஸ்னவி எப்படி பெயர் என்று அவரை பார்த்து கேட்டேன்.சூப்பர் ராம் அழகான பெயர் என்றார்.

தேவதைகளுக்கு அழகான பெயர்தானே சூட்டவேண்டும் என்றேன்
டேய் என்று குறும்பாக சிரித்தார்........உண்மையில் வைஸ்னவி அக்காவின் சொந்தப்பெயரை விட வைஸ்னவி என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தம்.ஆம்  வைஸ்னவி என்பது அவரின் சொந்தப்பெயர் இல்லை கிருபாவுடன் போனில் கதைப்பதற்காக நான் அன்று அவருக்கு வைத்த பெயர்தான் வைஸ்னவி..

.ஆமா ராம் கேட்கனும் என்று நினைத்தேன் உங்கள் நண்பர் அர்ஜுன் என்ற சொன்னார் என்னைப்பார்ததும்

ஏன் உங்களுக்கு விளங்கவில்லையா

இல்லை ஒரளவு விளங்கியது முழுமையாக சொல்லுங்கள்

இல்லை அது வந்து வந்து

இப்ப சொல்லப்போறீங்களா இல்லையா?

இல்லை அவன் கேட்டான் உங்களுக்கு ......................................... என்றும்
நீங்களும் நானும் ................................. என்றும் சொன்னான் அதுதான்.

ஏன் ராம் இப்படி இருக்காங்க இப்படியானவர்களுடன் சேராதீங்க என்று சொன்னார் சற்று வருத்தம் கலந்த தொணியில்

இல்லை இவன் மட்டும் இல்லை இதுதான் இந்த சமுதாயம்
இது தனி ஒருவனின் பார்வை இல்லை இது இந்த சமுதாயத்தின் பார்வை 

அதுவும் சரிதான் ராம் என்று தலையசைத்தார்

அவன் பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன் sorry என்றேன்

நீங்கள் ஏன் ராம் மன்னிப்பு கேட்கனும் அவன் அப்படி பேசினதுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள். மற்றவர்களின் கதை நமக்கு எதுக்கு நாம் நாமாகவே இருப்போம் ராம்

அது சரி நாம் நாமாகவே இருப்போம் என்று தலையசைத்தேன் 

சரி அக்கா வேற என்ன நாங்கள் ஊருக்கு கிளம்புறோம்

நானும்  நண்பனும் அழகா புரியை விட்டு எங்கள் ஊருக்கு புறப்பட தயார் ஆனோம்.

வைஸ்னவி அக்காவும் அன்று தனது ஊருக்கு போகப்போவதாக சொன்னார்.இனி எப்ப அழகாபுரிக்கு வருவதோ தெரியவில்லை ராம்.சிலவேளை வராமாலே வெளிநாடு போனாலும் போய்விடுவேன் 

யோசிக்காதீங்க எல்லாம் நல்லதே நடக்கும் ஊருக்கு போனதும் கோல் பண்ணி கிருபாவுடன் கதைங்க பார்போம் என்ன நடக்குது என்று சொல்லிவிட்டு கிளம்பி எங்கள் ஊருக்கு நானும் நண்பனும் வந்துவிட்டோம் ஒரு தேடலில் முக்கால்வாசி வெற்றியடைந்துவிட்டதாக  மனம் முழுவதும் ஒரு திருப்தி எனக்கு

(தொடரும்)

இந்த தொடரின் முன்னய பகுதிகளை படிக்க-
பகுதி-1
பகுதி-2
பகுதி-3
பகுதி-4
பகுதி-5




Post Comment

5 comments:

Unknown said...

வைஸ்னவி-வைஷ்ணவி
எல்லோறும்-எல்லோரும்
பார்பதற்கு-பார்ப்பதற்கு
வரும்டம்-வருடம்
அறிந்துகொள்ளாம்-அறிந்துகொள்ளலாம்
(முதல் இரு பந்தியில் மட்டும்)

தவிர்த்துப் பார்த்தால்,கதையை அழகாக கொண்டு செல்கிறீர்கள்.வாழ்த்துக்கள் பாஸ் :)

K.s.s.Rajh said...

வாங்க தல நீண்டநாட்களுக்கு பிறகு இங்கே சந்திப்பதில் மகிழ்சி எழுத்துப்பிழைகளை இப்போது தவிர்க்கமுடியவில்லை முடிந்தளவு விரைவாக திருத்திக்கொள்கின்றேன்
நன்றி பாஸ்

Unknown said...

வணக்கம்,ராசா!நலமா?///நன்றாக சுவாசிக்கிறீர்கள்,எங்களையும் சுவாசிக்க வைக்கிறீர்கள்.நன்று!(எழுத்துப் பிழைகள் ஒரு பொருட்டே அல்ல!)

K.s.s.Rajh said...

@Subramaniam Yogarasa

நன்றி ஜயா

Unknown said...

உணர்வுகளை வரிகளாக மாற்றுவது மிகவும் கடினம் ஆனால் உனது ஆக்கம் அழகாக உள்ளது.....

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails