Showing posts with label தொடர்கதை. Show all posts
Showing posts with label தொடர்கதை. Show all posts

Monday, December 26, 2011

(பகுதி-2)அன்பைத் தேடும் இதயம்

கடந்த பதிவில்

அந்த பெயரைக்கேட்டதும் காயத்திரி ஒரு கணம் திகைத்துப் போனாள் கோகுலனா இவன் நம்பவே முடியவில்லை அதுதான் எங்கோ பார்தது போல இருந்தது ஏன் இவன் என்னை தெரிந்தது போல காட்டிக்கொள்ளவில்லை.ஒரு வேளை மறந்திட்டானா இல்லை அப்படி இருக்காது மறந்து இருக்க மாட்டான்.என்று பலவாறு எண்ணிக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள்.

முன்பு யார் அவன் என்று தெரியாமல் அவஸ்தை இருந்தது இப்ப அவன் யார் என்று ஓரளவு அறிந்த பின்னும் அவஸ்தை இருந்தது. அவனா இல்லை வேறு யாருமா ஏன் கோகுலன் என்று ஒருவனுக்குத்தான் பெயர் இருகனுமா என்று நினைத்தாள்.அப்பறம் இல்லை இவனை பார்த்த ஞாபகம் இருக்கு பெயரும் கோகுலன் என்று சொல்கின்றான் அப்ப அவன்தான் இவன்.
நாளைக்கு எப்படியும் அவனுடன் கொஞ்சம் பேச வேண்டும் இவன் அந்தக் கோகுலனா என்று கேட்க வேண்டும். என்று நினைத்துக்கொண்டாள்.

இனி..........

அன்று இரவு காயத்திரியின் தூக்கம் பறி போனது.நேற்றைவிட இன்று அவன் முகம் அதிகமாக தொல்லை படுத்தியது இவன் தான் அந்த கோகுலன் என்று முடிவுக்கு வந்தாள். எப்படியும் இன்று அவனிடம் கொஞ்ச நேரம் பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். அவள் வழமையாக படிக்கும் அவளின் அபிமான பதிவர் ”வன்னி”யின் பதிவுகளை கூட படிக்கவில்லை அவள் மனம் அலைபாய்ந்தது.காலையில் சீக்கிரம் எழுந்து தன் வீட்டு வாசலில் காத்து இருந்தாள்.

Post Comment

Friday, December 23, 2011

அன்பைத் தேடும் இதயம்-(பகுதி-1)

காயத்திரியின் மனதில் அவன் உருவம் மீண்டும் மீண்டும் வந்து சஞ்சலப்படுத்திக்கொண்டு இருந்தது.அவளுக்கு அவனை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு ஆனால் எங்க என்று ஞாபகம் வரவில்லை ஏன் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தான் இன்றும் பார்ப்பானா?யார் அவன்? பல கேள்விகளை தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள். 

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails