Monday, December 26, 2011

(பகுதி-2)அன்பைத் தேடும் இதயம்

கடந்த பதிவில்

அந்த பெயரைக்கேட்டதும் காயத்திரி ஒரு கணம் திகைத்துப் போனாள் கோகுலனா இவன் நம்பவே முடியவில்லை அதுதான் எங்கோ பார்தது போல இருந்தது ஏன் இவன் என்னை தெரிந்தது போல காட்டிக்கொள்ளவில்லை.ஒரு வேளை மறந்திட்டானா இல்லை அப்படி இருக்காது மறந்து இருக்க மாட்டான்.என்று பலவாறு எண்ணிக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள்.

முன்பு யார் அவன் என்று தெரியாமல் அவஸ்தை இருந்தது இப்ப அவன் யார் என்று ஓரளவு அறிந்த பின்னும் அவஸ்தை இருந்தது. அவனா இல்லை வேறு யாருமா ஏன் கோகுலன் என்று ஒருவனுக்குத்தான் பெயர் இருகனுமா என்று நினைத்தாள்.அப்பறம் இல்லை இவனை பார்த்த ஞாபகம் இருக்கு பெயரும் கோகுலன் என்று சொல்கின்றான் அப்ப அவன்தான் இவன்.
நாளைக்கு எப்படியும் அவனுடன் கொஞ்சம் பேச வேண்டும் இவன் அந்தக் கோகுலனா என்று கேட்க வேண்டும். என்று நினைத்துக்கொண்டாள்.

இனி..........

அன்று இரவு காயத்திரியின் தூக்கம் பறி போனது.நேற்றைவிட இன்று அவன் முகம் அதிகமாக தொல்லை படுத்தியது இவன் தான் அந்த கோகுலன் என்று முடிவுக்கு வந்தாள். எப்படியும் இன்று அவனிடம் கொஞ்ச நேரம் பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். அவள் வழமையாக படிக்கும் அவளின் அபிமான பதிவர் ”வன்னி”யின் பதிவுகளை கூட படிக்கவில்லை அவள் மனம் அலைபாய்ந்தது.காலையில் சீக்கிரம் எழுந்து தன் வீட்டு வாசலில் காத்து இருந்தாள்.

வழமை போல கோகுலன் டீ குடிக்க காயத்திரி வீட்டுக்கு முன்பு இருக்கும் கடைக்கு வந்தான்.அவனைக்கண்டதும் காயத்திரியின் கண்கள் பிரகாசமானது ”சந்திரன் வரவுக்காக காத்திருந்து மலரும் அல்லிமலர் போல”இந்த காயத்திரி என்ற பெண்மலரின் முகம் அவன் வரவை கண்டதும் மலர்ந்தது.

அவனிடம் போய் கோகுலன் என்று அழைத்தாள் அவன் என்ன என்றான் உங்க கூட கொஞ்சம் பேசனும். அதற்கு கோகுலன் என்ன சொல்லுங்க என்றான்.காயத்திரி பேசத்தொடங்கினாள்
நீங்க கிளிநொச்சில இருந்த என் மாமாவின் மகன் சதீஸ் உடைய ப்ரண்ட் கோகுலன் தானே?
ஏன் என்னை தெரியாதது போல காட்டிக்கொள்கிறீங்க?
பீளீஸ் சொல்லுங்க நீங்க அந்த கோகுலன் தானே
பட பட என்று கேட்டு முடித்தாள்

ஆம் நான் அந்தக் கோகுலன் தான் உங்களை இங்கே கண்டதும் என்னால் நம்ப முடியவில்லை அதைவிட உங்களை ஏன் டிஸ்டப் செய்யனும் என்று நினைத்தேன் அதான் உங்களை பல முறை கண்ட போது கதைக்கவில்லை என்றான் கோகுலன்.
அன்று சாரி கேட்ட நினைத்தேன் நீங்க என்னை பேசவே விடவில்லை இன்று இரண்டு வருடத்துக்கு பிறகு சாரி கேட்கின்றேன் சாரி காயத்திரி என்றான்

இல்லை கோகுலன் நான் தான் சாரி கேட்கனும் உங்கள் மனசை ரொம்ப காயப்படுத்திட்டேன் இப்ப சாரி அனால் என்னால் உங்களை மன்னிக்க முடியாது என்று திட்டிவிட்டு காயத்திரி சென்று விட்டாள்.கோகுலனும் ஒன்றும் சொல்லாமல் அவள் போவதை பார்த்துக்கொண்டு நின்றான்.

வீட்டிற்கு வந்து கட்டிலில் விழுந்தாள் காயத்திரி அவள் நினைவுகள் இரண்டு வருடங்கள் பின் நோக்கி சென்றன
இரண்டு வருடங்களுக்கு முன்பு
தன் மாமாவின் மூத்த மகன் இன்பாவின் திருமணத்திற்கு காயத்திரி முதல் முறையாக கிளிநொச்சிக்கு சென்றாள்.உறவுகள் கூடி மகிழந்த அந்த திருமணக் கொண்டாட்டத்தில் நகைச்சுவைகள்,கேலிகளுக்கு பஞ்சம் இருக்கவில்லை அவளின் மாமாவின் இரண்டாவது மகன் சதீஸ்க்கும் அவளுக்கும் அடுத்த டும் டும் என்று உறவினர்கள் கிண்டல் செய்ய காயத்திரி நாணத்தால் வாட சதீஸ் ஹீரோ ரேஞ்சிக்கு பில்டப் கொடுக்க கலகலப்பாக இருந்தது திருமண வீடு.

சதீஸின் நண்பன் தான் கோகுலன். திருமண வீட்டில் ஓடியாடி வேலை செய்து கொண்டு இருந்தான்.சதீஸ் எங்க மச்சி இருக்கிற இந்த பொருற்கள் எல்லாம் எங்க வைக்கிறது என்று கேட்டுக்கொண்டே கோகுலன் சதீஸின் அறைக்குள் நுழைந்தான்.அங்கே

பெளர்ணமி நிலா ஒன்று சேலை மாற்றிக்கொண்டு இருந்தது. பச்சை நிற காஞ்சிபுரப்பட்டு சேலையை இடுப்பில் சுற்றியபடி அதை கட்டத்தெரியாமல் ஒரு அழகிய பெண் சிலை தடுமாறுவதை கண்டான் கோகுலன். ஒரு கணம் அவன் கண்கள் வேறுபக்கம் திரும்பினாலும் மறுபடியும் அவளை உற்று நோக்கியது.


அரைவாசி கட்டிய சேலையில் அவள் அழகு அங்கங்கள் அங்கும் இங்கும் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்தன,பச்சை நிற ஜாக்கெட்டில் திமிரிக்கொண்டு இருந்த மேருமலையை போன்ற அவள் முன்னழகு.அவன் ஆண்மைத் தீயை தூண்டி விட்டது.அவளை வைத்த கண்வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.

தன்னை ஒரு ஆடவன் பார்த்துக்கொண்டு இருக்கான் என்று அறியாமல் சேலை கட்டுவதில் மும்முரமாக இருந்த காயத்திரி சட்டென நிமிர்ந்து பார்த்ந்தாள் கதவின் ஓரம் நின்று அவளை பார்த்துக்கொண்டு இருந்த கோகுலனை பார்த்ததும் தன் கைகளை நெஞ்சுக்கு குறுக்கே வைத்து தன் முன்னழகை மறைக்க முயன்றாள் ”இலையைக் கொண்டு மலையை மறைக்க முடியுமா?” அது போல அவள் கைகளால் மறைத்தாலும் அவள் அழகு வெளியே தெரிந்தது சட்டென கோகுலன் அந்த இடத்தைவிட்டு போய் விட்டான்.


காயத்திரிக்கு தான் சேலை கட்டுவதை அவன் பார்த்துவிட்டான் என்ற கோபம் இருந்தாலும்.ஒருகணம் அவன் விழிகளை சந்தித்த போது அதில் இருந்த அந்த பவர் அவளை அந்த கண்களுக்குள் சிறைபடுத்திக்கொண்டது.

வெளியில் வந்தாள் காயத்திரி அவனை தேடினால் அவனை எங்கும் காணவில்லை.மதியம் சாப்பாட்டு நேரம் எல்லோறும் ஒன்றாக சாப்பிட ஆரம்பிக்கும் போது அவன் வந்து சாப்பிட அமர்ந்தான் காயத்திரி பந்திவைத்துக்கொண்டு வரும் போது அவன் அருகில் வந்ததும்.உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும் சாப்பிட்டு முடித்ததும்.பின்னுக்கு உள்ள மாமரத்தடிக்கு வாங்க என்று ரகசியமாக சொல்லிவிட்டு சென்றாள்.



கோகுலனுக்கு சாப்பாடும் இறங்கவில்லை ஒருவேளை தான் பார்ததை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லியிருப்பாளோ?ஏன் மாமரத்தடிக்கு வரச்சொன்னாள் என்று அவன் மனம் அலைபாய்ந்தது.ஒழுங்காக சாப்பிடாமல் இலையில் அப்படியே வைத்துவிட்டு கையை கழுவிவிட்டு அவசர அவசர மாக வீட்டிற்கு பின்னால் உள்ள மாமரத்தடிக்கு சென்றான்.

சிறிது நேரத்தில் காயத்திரி அங்கே வந்தாள்.தலை குனிந்தபடி கோகுலன் நின்றான்.கலோ நீங்க ஏன் தலையை குனிந்து கொண்டு இருக்கீங்க நான் தான் வெட்கப்படனும் என்று அவனை சீண்டினாள்.
இல்லைங்க நான் வேணும் என்று அந்த அறைக்குள் வரவில்லை சதீஸ் இருக்கானா என்று பார்கத்தான் வந்தேன். அங்கே சேலை கட்டிக்கொண்டு இருந்த உங்களை கண்டதும் என்னை அறியாமல் பார்த்துவிட்டேன் மன்னிச்சு கொள்ளுங்க என்றான்.

பரவாயில்லை விடுங்க முதலில் எனக்கு கோபம் கோபமாத்தான் வந்தது அப்பறம் உங்க முகத்தை பார்க்க பாவமாக இருந்தது சரி அதைவிடுங்க உங்க பெயர் என்ன என்றாள்?
என் பெயர் கோகுலன் உங்க பெயர்? 
என் பெயர் காயத்திரி இது என் மாமா வீடுதான் என்றாள்
அப்ப நீங்க சதீஸ்க்கு மச்சாள் முறையா என்றான் கோலன்
ஆமா ஏன் கேட்குறீங்க ?
இல்லை அப்ப அடுத்த டும் டும் உங்களுக்கும் சதீஸ்க்கும் தானே?
அவன் அப்படி கேட்டதும் அவள் சொன்னாள் என்ன சதீஸ்க்கும் எனக்குமா?
படவா அடிவாங்குவ என்று செல்லமாக அவனை திட்டினாள்

சரி சரி நான் கிளம்புறன் அப்பறம் பார்ப்போம் என்று சொல்லிவிட்டு காயத்திரி சென்று விட்டாள்.


”இது நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்கிறது இது இடையா அது இல்லாதது போல் இருக்கின்றது ”என்ற சினிமா பாடல் வரிகள் அவள் நடந்து செல்லும் போது அவள் பின்னழகை பார்க்கும் போது போது கோகுலன் மனதில் தோன்றி மறைந்தது.
(தொடரும்)

முஸ்கி-இதில் வரும் பாத்திரங்கள் காதல் காட்சிகள்,சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே 

படங்கள்-கூகுள் தேடலில் பெறப்பட்டவை நடிகை அனுஷ்காவினுடையது

இந்த தொடரின் முன்னய பகுதிகளை படிக்க

குறிப்பு-இந்த தொடரின் அடுத்த பகுதி(பகுதி-3)வரும் வெள்ளிக்கிழமை(30-12-2011)வரும்

************************************************************************************************************
வாசகர்கள், நண்பர்கள்,அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
************************************************************************************************************

Post Comment

29 comments:

நிரூபன் said...

வணக்கம் மச்சான் சார்,
டெம்பிளேட் எல்லாம் கலக்குது.
ஈஸியா ஓப்பின் ஆகுது,
இருங்க படிச்சிட்டு வாரேன்,

நிரூபன் said...

மச்சான் சார்,
ஒரு சின்ன டவுட்,
கதை நிகழ் காலம் எப்போது?
ஏன்னா வன்னி எப்போது பதிவு எழுத தொடங்கினார்?

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
வணக்கம் மச்சான் சார்,
டெம்பிளேட் எல்லாம் கலக்குது.
ஈஸியா ஓப்பின் ஆகுது,
இருங்க படிச்சிட்டு வாரேன்////

படிச்சிட்டு வாங்க பாஸ்

நிரூபன் said...

ஆச்சரியமா இருக்கு மச்சான் சார்..
கிளிநொச்சியில சேலை கட்டும் போது நழுவுவதை பார்த்திருக்கானா?
எனக்கு சான்ஸ் கிடைக்கலையே?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


யாரைய்யா அந்தப் பொண்ணு...
முதல் சந்திப்பிலையே படவா என்று திட்டியிருகக.

கோகுலன் கொடுத்து வைச்ச ஆளைய்யா.

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
மச்சான் சார்,
ஒரு சின்ன டவுட்,
கதை நிகழ் காலம் எப்போது?
ஏன்னா வன்னி எப்போது பதிவு எழுத தொடங்கினார்////

ஹி.ஹி.ஹி.ஹி கதை தற்போது நடைபெருவதாகவே சொல்லப்படுகின்றது..

வன்னி உட்பட அனைத்தும் கற்பனை ஒரு கற்பனை பாத்திரம் பாஸ்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
ஆச்சரியமா இருக்கு மச்சான் சார்..
கிளிநொச்சியில சேலை கட்டும் போது நழுவுவதை பார்த்திருக்கானா?
எனக்கு சான்ஸ் கிடைக்கலையே?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


யாரைய்யா அந்தப் பொண்ணு...
முதல் சந்திப்பிலையே படவா என்று திட்டியிருகக.

கோகுலன் கொடுத்து வைச்ச ஆளைய்யா////

ஹி.ஹி.ஹி.ஹி எனக்கும் பார்க கொடுத்து வைகலை தான் அவ்வ்வ்வ்வ்வ்வ்

அந்தப்பொண்ணு அவன் தன்னை பார்த்த முதல் பார்வையிலே அவன் கண்களில் சிறைபட்டு விட்டாள் எனவே அவனை செல்லமாக படவா என்று திட்டி இருக்கலாம்.

Yoga.S. said...

காலை வணக்கம்,ராஜ்!கதை அருமையாக செல்கிறது.தொடருங்கள்!

ராஜி said...

முஸ்கி-இதில் வரும் பாத்திரங்கள் காதல் காட்சிகள்,சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே
>>>
சும்மா பதிவிட்டிருந்தால் பிரச்ச்னை இல்லை. இப்படி முஸ்கி போட்டாலே அதுல ஏதோ விஷயம் இருக்குன்னு எங்களுக்கு புரிஞ்சுடுச்சே.

Anonymous said...

யாரப்பா அந்த வன்னி பதிவர் ? ராஜ தனா ?

அதென்னையா மேரு மலை ... அவ என்ன நமீதாவா! ஹாஹா

நல்லா சூடு புடிக்குது பாஸ்..)

சக்தி கல்வி மையம் said...

இந்த கதையில் வரும் கதாப் பாத்திரங்கள் கற்பனையே.. - நம்பிட்டேன்.. ஆங் .. கதை சுவாரஸ்யமா போயிட்டு இருக்கு.. ஆனா கதை நல்ல இருக்கே, இந்த நடிகைங்க படம் எதற்கு?

Unknown said...

அட~

குறையொன்றுமில்லை. said...

கதை சுவாரசியமா போகுது தொடருங்க.

சுதா SJ said...

ராஜ்..... கதை ரெம்ப சுவராசியமா போகுது... வாழ்த்துக்கள்.

தொடர்.. சினிமா பார்க்கும் உணர்வை கொடுக்குது. வாசகர்களை கட்டிப்போடும் "சினிமா' மசாலாக்களை தொடரிலும் அங்கங்கே தூவி ரெம்ப ரசிக்க வைக்கிறீங்க பாஸ்.

உங்கள் தொடர்களில் (முன்னைய) இது ரெம்ப வித்தியாசம் செம விறு விறுப்பு.... இப்படியே தொடருங்கள்.

சுதா SJ said...

அந்த "வன்னி" பதிவர் ராஜ் தான??!!!!!

எனக்கு என்னவோ.... கோகுலனிடம் இருந்து காயத்திரியை தட்டி பறிக்க போவது பதிவர் வன்னி (ராஜ்) போலதான் இருக்கு... ஹா ஹா

சுதா SJ said...

தொடர் எனக்கு ரெம்ப புடிச்சு இருக்கு..... ஆர்வமாய் தொடர்கிறேன் ராஜ் :)

Unknown said...

கற்பனையில் இளமை ஊஞ்சலாடு!
ஆவல், எதிர் பார்ப்பு, அருமை!

புலவர் சா இராமாநுசம்

தனிமரம் said...

கலியாணவீட்டுக் கலாட்டாக்கள் மூலம் கண்ணில் விழுந்த காயத்திரியின் கதையைச் சொல்லிச் செல்கின்றீர்கள் தொடருங்கள் பின் தொடர்கின்றேன்!

முற்றும் அறிந்த அதிரா said...

கற்பனை நன்றாகவே போகுது....

K.s.s.Rajh said...

@Yoga.S.FR
////காலை வணக்கம்,ராஜ்!கதை அருமையாக செல்கிறது.தொடருங்கள்////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
ராஜி கூறியது...
முஸ்கி-இதில் வரும் பாத்திரங்கள் காதல் காட்சிகள்,சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே
>>>
சும்மா பதிவிட்டிருந்தால் பிரச்ச்னை இல்லை. இப்படி முஸ்கி போட்டாலே அதுல ஏதோ விஷயம் இருக்குன்னு எங்களுக்கு புரிஞ்சுடுச்சே////

ஹா.ஹா.ஹா.ஹா. அப்படி இல்லை அக்கா போடாவிட்டால் என் சொந்தக் கதை என்று சொல்வாங்க அதுதான் போட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
யாரப்பா அந்த வன்னி பதிவர் ? ராஜ தனா ?

அதென்னையா மேரு மலை ... அவ என்ன நமீதாவா! ஹாஹா

நல்லா சூடு புடிக்குது பாஸ்////

யோவ் கந்து எல்லாம் கற்பனை தான்
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
இந்த கதையில் வரும் கதாப் பாத்திரங்கள் கற்பனையே.. - நம்பிட்டேன்.. ஆங் .. கதை சுவாரஸ்யமா போயிட்டு இருக்கு.. ஆனா கதை நல்ல இருக்கே, இந்த நடிகைங்க படம் எதற்கு////

நன்றி பாஸ் அடுத்த பகுதியில் தூக்கிவிடுகின்றேன்

K.s.s.Rajh said...

@
விக்கியுலகம் கூறியது...
அட~

////

ஹா.ஹா.ஹா.ஹா.இது என்ன பாஸ் புது ஸ்டைல் கமண்டாக இருக்கு இன்று நிரூபன் அவர்கள் எழுதிய பதிவு படிச்சீங்க போல.அவ்வ்வ்வ்வ்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Lakshmi கூறியது...
கதை சுவாரசியமா போகுது தொடருங்க////

நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
ராஜ்..... கதை ரெம்ப சுவராசியமா போகுது... வாழ்த்துக்கள்.

தொடர்.. சினிமா பார்க்கும் உணர்வை கொடுக்குது. வாசகர்களை கட்டிப்போடும் "சினிமா' மசாலாக்களை தொடரிலும் அங்கங்கே தூவி ரெம்ப ரசிக்க வைக்கிறீங்க பாஸ்.

உங்கள் தொடர்களில் (முன்னைய) இது ரெம்ப வித்தியாசம் செம விறு விறுப்பு.... இப்படியே தொடருங்கள்////

நன்றி மச்சி

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
அந்த "வன்னி" பதிவர் ராஜ் தான??!!!!!

எனக்கு என்னவோ.... கோகுலனிடம் இருந்து காயத்திரியை தட்டி பறிக்க போவது பதிவர் வன்னி (ராஜ்) போலதான் இருக்கு... ஹா ஹா////

ஹா.ஹா.ஹா.ஹா. அனைத்தும் கற்பனை பாத்திரங்கள் பாஸ்

K.s.s.Rajh said...

@ புலவர் சா இராமாநுசம் கூறியது...
கற்பனையில் இளமை ஊஞ்சலாடு!
ஆவல், எதிர் பார்ப்பு, அருமை!

புலவர் சா இராமாநுசம்
/////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
கலியாணவீட்டுக் கலாட்டாக்கள் மூலம் கண்ணில் விழுந்த காயத்திரியின் கதையைச் சொல்லிச் செல்கின்றீர்கள் தொடருங்கள் பின் தொடர்கின்றேன்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
athira கூறியது...
கற்பனை நன்றாகவே போகுது..////

ஹா.ஹா.ஹா.ஹா நன்றி அக்கா

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails