Friday, December 23, 2011

அன்பைத் தேடும் இதயம்-(பகுதி-1)

காயத்திரியின் மனதில் அவன் உருவம் மீண்டும் மீண்டும் வந்து சஞ்சலப்படுத்திக்கொண்டு இருந்தது.அவளுக்கு அவனை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு ஆனால் எங்க என்று ஞாபகம் வரவில்லை ஏன் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தான் இன்றும் பார்ப்பானா?யார் அவன்? பல கேள்விகளை தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள். 

காயத்திரி இருபது வயது நிரம்பிய ஒரு அழகுப்பதுமை.ஊரில் அவள் தான் பல ஆண்களின் மனதை தன் அழகால் சஞ்சலப்படுத்திக்கொண்டு இருந்தாள் முதன் முறையாக ஒரு ஆண் அவள் மனதை சஞ்சலப்படுத்துகின்றான்.இத்தனைக்கும் அவன் ஒன்றும் பேரழகன் இல்லை கலைத்து விடப்பட்ட தலை முடி, கொஞ்சம் தாடி முகத்தில் மெலிதாக இழையோடியிருக்கும் மென் சோகம் இதுதான் அவனது அடையாளம்.இன்று அவனை அவள் தெருவில் கண்ட போது அவன் கண்களை நேருக்கு நேர் நோக்கிய போது அவனின் கண்களில் அப்படி ஒரு மின்னல் பவர் அதை எதிர்கொள்ளமுடியாமல் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பினாள்.

அவனை முன்பு எங்கயோ பார்த்த ஞாபகம் வந்தது அவளுக்கு. ஆனால் எங்க என்று தெரியவில்லை.சரி எங்கயோ பார்த்திருப்பேன் என்று அவளால் அந்த உருவத்தை தள்ளிவைக்கவும் முடியவில்லை மனம் எங்கும் அவன் விம்பம்.அப்படியே உறங்கிப்போனாள்.

காயத்திரி காயத்திரி என்று அவள் அறைக்கதவை தட்டிய அம்மாவின் குரல் கேட்டு விழித்தெழுந்தாள்.எழுந்து முதல் வேலையாக தன் லாப் டாப்பை ஆன் செய்தாள்.ஏன்டி காலையில் எழுந்ததும் அப்படி என்னதான் அந்த கம்பியூட்டரில் இருக்கோ அதை பார்த்துகிட்டு இருக்க என்று காயத்திரியின் அம்மா காப்பியை வைத்துவிட்டு திட்டிவிட்டு போனார்.

தான் விரும்பி வாசிக்கும் வலைத்தளங்களில் ஏதும் புதிய பதிவுகள் வந்திருக்கா என்று பார்த்தாள். அவளது அபிமான பதிவர் ”வன்னி ”எழுதிய ”கனவை தொலைத்த காலம்” என்னும் ஒரு கவிதை அவள் கண்ணில் பட்டது.அந்தக்கவிதையை படித்ததும் அவள் முகம் பிரகாசமானது காரணம் அவள் விரும்பி படிக்கும் வலைத்தளங்களில் வன்னியின் தளமும் ஒன்று காதல்,நகைச்சுவை,கவிதை,விளையாட்டு,அரசியல்,சினிமா,இப்படி அனைத்து துறைகள் பற்றியும் அற்புதமான பதிவுகளை தன் தளத்தில் எழுதிவருபவர் வன்னி இது அவருடைய புனைபெயர்தான்.வன்னியின் எழுத்துக்களுக்கு காயத்திரி தீவிரமான ரசிகை.
வன்னியின் பதிவை படித்துவிட்டு லாப்டாப்பை மூடி விட்டு எழுந்து குளியல் அறைக்குச்சென்றாள்.

தினம் தினம் அவளை பிறந்த மேனியாக தரிசிக்கும் பாக்கியம் பெற்ற உயிர் அற்ற குளியல் அறைச்சுவர்களுக்கு கூட அவள் மேல் காதல் வரும் அளவுக்கு பேரழகி அவள்.

காயத்திரி குளியல் அறையில் இருந்த கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்தாள்.கண்ணாடி அவள் அழகை அப்படியே தன்னுள் வாங்கி மீண்டும் அவளுக்கு காட்டியது தன் அழகை நினைத்து காயத்திரிக்கு பெருமையாக இருந்தது.என்ன ஒரு அழகு எவனுக்கு குடுத்துவைச்சிருக்கோ என்று மனதுக்குள் நினைத்தாள் அவள் முகம் நாணத்தால் சிவந்து போனது.அந்த நினைப்பில் மறுபடியும் அவன் முகம் அவள் நினைவில் வந்து போனது.
யாரடா நீ? ஏன் என் நினைவில் வந்து கொள்கின்றாய் உன்னை எங்கோ பார்த்திருக்கேன் ஆனால் எங்க என்று தெரியவில்லை ஏன் என்னை இம்சிக்கின்றாய்.

காயத்திரி குளிர்த்துவிட்டு தலையை துவட்டிக்கொண்டே தன் வீட்டு மொட்டைமாடிக்கு வந்தாள்.

மொட்டைமாடியில் நின்றவாறு தெருவை நோக்கினாள்.தெருவில் சிறுவர்கள் சிலர் விளையாடிக்கொண்டு இருந்தனர்.ஒருவர் மீன் மீன் என்று மீன் விற்றுக்கொண்டு சென்றார்.அவள் கண்கள் அவன் தெருவில் தென் படுகின்றானா என்று தேடியது?எதிரே இருந்த டீக் கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தான் அவன்.

உடனே அவசர அவரமாக கீழே இறங்கிய அவள் தன் வீட்டு வாசலில் காத்துக்கொண்டு இருந்தாள்.காரணம் அவன் எப்படியும் அவள் வீட்டைக்கடந்துதான் போகவேண்டும்.கிட்ட வரட்டும் பேசுவோம் என்று நினைத்தாள்.

அவன் அருகே வந்ததும் எக்ஸ்கியூஸ் மீ. கலோ உங்களைத்தான் என்று அவனை அழைத்தாள். அவன் இவள் அழைப்பதை காதிலும் வாங்கவில்லை பேசாமல் சென்றான். காயத்திரிக்கு கோபம் கோபமாக வந்தது இதுவரை தன்னிடம் எத்தனை ஆண்கள் பேசுவதற்காக ஜொள்ளுவிட்டு திரிந்திருக்கின்றார்கள்.ஆனால் தான் பேச அழைத்தும் ஒரு ஆண் நிற்கவில்லையே என்று அவளுக்கு கோபம் வந்தது. பெண்கள் அழகாய் இருந்தால் எந்த ஆணும் வந்து ஜெள்ளுவிடுவான் என்று அவள் மனதில் ஆண்களை பற்றி இருந்த எண்ணம் அந்த நொடிப்பொழுதில் மாறியது.
அவன் பின்னாலே சென்று கலோ கூப்பிடுறது விளங்கவில்லையா என்றாள்.

சட்டென்று திரும்பிய அவன் இவள் கண்களை நோக்கி சாரிங்க கவனிக்கவில்லை என்றான். பரவாயில்லை என்று அவள் சொன்னாள் ஆனால் அவனின் கண்களின் பார்வையை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை..அவன் கண்களின் பார்வையை எதிர்கொள்ள முடியாதவளாக வேறு பக்கம் பார்த்துக்கொண்டே அவனிடம் சொன்னாள் உங்களை எங்கயோ பார்த்திருக்கேன் ஆனால் எங்க என்று ஞாபகம் வரவில்லை யார் நீங்க உங்க பெயர் என்ன என்றாள்?

அவளது கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் அதை எல்லாம் ஏன் நீங்க கேட்குறீங்க உங்க பெயர் என்ன என்றான்? இவள் காயத்திரி என்றாள் நல்ல பெயர் என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட்டான் இவள் கலோ நான் கேட்டதுக்கு பதில் சொல்லவில்லை யார் நீங்க உங்க பெயர் என்ன நான் உங்களை எங்கயோ பார்த்திருக்கேன் ஆனால் ஞாபகம் வரவில்லை கலோ ப்ளீஸ் உங்க பெயர் என்ன? அவன் திரும்பி கோகுலன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்

அந்த பெயரைக்கேட்டதும் காயத்திரி ஒரு கணம் திகைத்துப் போனாள் கோகுலனா இவன் நம்பவே முடியவில்லை அதுதான் எங்கோ பார்தது போல இருந்தது ஏன் இவன் என்னை தெரிந்தது போல காட்டிக்கொள்ளவில்லை.ஒரு வேளை மறந்திட்டானா இல்லை அப்படி இருக்காது மறந்து இருக்க மாட்டான்.என்று பலவாறு எண்ணிக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள்.

முன்பு யார் அவன் என்று தெரியாமல் அவஸ்தை இருந்தது இப்ப அவன் யார் என்று ஓரளவு அறிந்த பின்னும் அவஸ்தை இருந்தது. அவனா இல்லை வேறு யாருமா ஏன் கோகுலன் என்று ஒருவனுக்குத்தான் பெயர் இருகனுமா என்று நினைத்தாள்.அப்பறம் இல்லை இவனை பார்த்த ஞாபகம் இருக்கு பெயரும் கோகுலன் என்று சொல்கின்றான் அப்ப அவன்தான் இவன்.

நாளைக்கு எப்படியும் அவனுடன் கொஞ்சம் பேச வேண்டும் இவன் அந்தக் கோகுலனா என்று கேட்க வேண்டும். என்று நினைத்துக்கொண்டாள்.

(தொடரும்)

இந்த தொடர் பற்றிய அறிமுகத்தை படிக்க-இங்கே கிளிக்

குறிப்பு -இதில் வரும் பாத்திரங்களும் காதல் காட்சிகள் அனைத்தும் கற்பனையே 


குறிப்பு-அன்பைத் தேடும் இதயத்தின் அடுத்த பகுதி(பகுதி-2) திங்கள் கிழமை வரும்

*********************************************************************************
என் தளத்தின் வாசகர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் உங்கள் நண்பர்கள் தளம் சார்பாக இனிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள் மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்
*********************************************************************************



Post Comment

46 comments:

Unknown said...

ஹிஹி முதல் பாகம் படித்தாகிவிட்டது...என்ன ஒரே அஜால் குஜாலா இருக்கு??ம்ம் எதோ கிளு கிளுப்பா கொண்டு போங்கோ...

தனிமரம் said...

கோகுலன் யார் என ஆவலுடன் காத்திருக்கின்றேன். அடுத்த பகுதிக்கு!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் ...தொடர்கிறேன் ...

குறையொன்றுமில்லை. said...

ஆரம்பமே சுவாரசியமா இருக்கு. அடுத்து என்னனு எதிர்பார்க்கவைக்கிரீங்க. சீக்கிரமே தொடருங்க.

MANO நாஞ்சில் மனோ said...

ஆரம்பமே அசத்தலா இருக்கே...!!!!

Yoga.S. said...

வணக்கம்,ராஜ்!அருமையான ஆரம்பம்!தொடருங்கள்,தொடர்வோம்!

திண்டுக்கல் தனபாலன் said...

அசத்தல் ஆரம்பம்! தொடர்க!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

சக்தி கல்வி மையம் said...

முதல் பகுதியே அசத்தலாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.. தொடரவும்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அடுத்த ஒரு புதிய தொடரா...

ஆரம்பிங்க....

சுவாரஸ்யம்....

ராஜி said...

புதிய தொடரா? கலக்குங்க

சென்னை பித்தன் said...

அசத்தலான தொடக்கம்.நன்று.

Rathnavel Natarajan said...

தொடருங்கள்.

Mathuran said...

ராஜ்.....

தொடர் அசத்தலா தொடங்கியிருக்கு...
அடுத்த பகுதிகளும் விரைவில் வரட்டும்

ஆகுலன் said...

அண்ணே அருமையான தொடக்கம்..

எனக்கு தொடர்கதை அவலவா பிடிக்காது ஏன் என்றால் முக்கியமான இடத்தில நிப்பாட்டி விடுகினம்..அவ்வ்வ்வ்..

சுதா SJ said...

மச்சி ரெம்ப எதிர்பார்க்க வைக்கும் முதல் அத்தியாயம்.. இதே விறு விறுப்புடன் கொண்டு செல்லுங்கள். வாழ்த்துக்கள்

சுதா SJ said...

மச்சி ரெம்ப பிஸி அதான் பிந்தி வந்துட்டேன்.. :(((

கோகுலன் - காயத்திரி
பெயர் பொருத்தம் சூப்பர் :))

சுதா SJ said...

வர்ணிப்புக்கள் நன்று.. இவை தொடரட்டும் :)

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
ஆரம்பம் அசத்தல்,
வர்ணனைகள் கலக்கல்.
வசன அமைப்புக்கள், பதிவின் நேர்த்தி யாவும் தொடருக்கான ஆரம்பத்திலே இத் தொடர் நன்றாக அமையும் என்பதனைக் கட்டியம் கூறுகின்றது.

கொய்யாலே...நிலைக் கண்ணாடி முன் அழகு ரசிக்கிறது...
முடியலை மச்சி...சூப்பரா இருக்கு அந்த வர்ணனை.

யோ...யாரப்பா அந்த வன்னி..கொஞ்சம் காதுக்குள் என்றாலும் சொல்லுங்க.

K.s.s.Rajh said...

@
மைந்தன் சிவா கூறியது...
ஹிஹி முதல் பாகம் படித்தாகிவிட்டது...என்ன ஒரே அஜால் குஜாலா இருக்கு??ம்ம் எதோ கிளு கிளுப்பா கொண்டு போங்கோ..////

ஹி.ஹி.ஹி.ஹி நன்றி மச்சி

பி.அமல்ராஜ் said...

முக்கியமான இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் பாஸ்.. (இதுதானே தொடர் கதைகள், சீரியல்களின் பலம்.).. அருமையாக நகர்கிறது கதை.. மீண்டும் அந்த கோகுலனையும் காயத்திரியையும் தரிசிக்க திங்கள் வருவேன். வாழ்த்துக்கள்.

Admin said...

நன்றாக சென்று கொண்டிருக்கிறது வாழ்த்துகள்..

வாக்கு (TM 9-TT 13)
அன்போடு அழைக்கிறேன்..

மௌனம் விளக்கிச் சொல்லும்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
கோகுலன் யார் என ஆவலுடன் காத்திருக்கின்றேன். அடுத்த பகுதிக்கு////

வாங்க அண்ணே நன்றி அண்ணே

K.s.s.Rajh said...

@
நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
தொடருங்கள் ...தொடர்கிறேன் .////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ Lakshmi கூறியது...
ஆரம்பமே சுவாரசியமா இருக்கு. அடுத்து என்னனு எதிர்பார்க்கவைக்கிரீங்க. சீக்கிரமே தொடருங்க.
///

நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
ஆரம்பமே அசத்தலா இருக்கே..////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
வணக்கம்,ராஜ்!அருமையான ஆரம்பம்!தொடருங்கள்,தொடர்வோம்////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
அசத்தல் ஆரம்பம்! தொடர்க!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
முதல் பகுதியே அசத்தலாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.. தொடரவும்.////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
அடுத்த ஒரு புதிய தொடரா...

ஆரம்பிங்க....

சுவாரஸ்யம்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ ராஜி கூறியது...
புதிய தொடரா? கலக்குங்க
////
நன்றி அக்கா

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
அசத்தலான தொடக்கம்.நன்று////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Rathnavel கூறியது...
தொடருங்கள்.
////

நன்றி சகோ

K.s.s.Rajh said...

@ மதுரன் கூறியது...
ராஜ்.....

தொடர் அசத்தலா தொடங்கியிருக்கு...
அடுத்த பகுதிகளும் விரைவில் வரட்டும்
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ ஆகுலன் கூறியது...
அண்ணே அருமையான தொடக்கம்..

எனக்கு தொடர்கதை அவலவா பிடிக்காது ஏன் என்றால் முக்கியமான இடத்தில நிப்பாட்டி விடுகினம்..அவ்வ்வ்வ்..
////

ஹி.ஹி.ஹி.ஹி. தம்பி அதுதான் தொடர் கதை அவ்வ்வ்வ்வ்வ்வ் நம்ம கதை சுவாரஸ்யமாக இருக்கும் வா

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
மச்சி ரெம்ப பிஸி அதான் பிந்தி வந்துட்டேன்.. :(((

கோகுலன் - காயத்திரி
பெயர் பொருத்தம் சூப்பர் :)////

மச்சி கோகுலன் என்ற பெயரை சூட்டியவர் நம்ம நிரூபன் பாஸ் தான்

நன்றி மச்சி

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
வணக்கம் நண்பா,
ஆரம்பம் அசத்தல்,
வர்ணனைகள் கலக்கல்.
வசன அமைப்புக்கள், பதிவின் நேர்த்தி யாவும் தொடருக்கான ஆரம்பத்திலே இத் தொடர் நன்றாக அமையும் என்பதனைக் கட்டியம் கூறுகின்றது.

கொய்யாலே...நிலைக் கண்ணாடி முன் அழகு ரசிக்கிறது...
முடியலை மச்சி...சூப்பரா இருக்கு அந்த வர்ணனை.

யோ...யாரப்பா அந்த வன்னி..கொஞ்சம் காதுக்குள் என்றாலும் சொல்லுங்க////

ஹி.ஹி.ஹி.ஹி வன்னி ஒரு கற்பனை பாத்திரம் அவ்வ்வ்வ்வ்வ்வ்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
பி.அமல்ராஜ் கூறியது...
முக்கியமான இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் பாஸ்.. (இதுதானே தொடர் கதைகள், சீரியல்களின் பலம்.).. அருமையாக நகர்கிறது கதை.. மீண்டும் அந்த கோகுலனையும் காயத்திரியையும் தரிசிக்க திங்கள் வருவேன். வாழ்த்துக்கள்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ மதுமதி கூறியது...
நன்றாக சென்று கொண்டிருக்கிறது வாழ்த்துகள்..

வாக்கு (TM 9-TT 13)
அன்போடு அழைக்கிறேன்..

மௌனம் விளக்கிச் சொல்லும்////

நன்றி பாஸ்

Unknown said...

ஆரம்பமே அருமை!
ஆவலைத் தூண்டுகிறது!
இளமை துள்ளுது!

தொடரத் தொடர்வேன்

புலவர் சா இராமாநுசம்

முற்றும் அறிந்த அதிரா said...

சூப்பராகப் போகிறது கதை. அதெப்படி கரெக்ட்டா கணக்கு வச்சுச் சொல்றீங்க அடுத்த திங்கள் அடுத்த பாகம் என அவ்வ்வ்வ்வ்:)).

அது சரி உங்களுக்கு வேறு படமேதும் கிடைப்பதில்லையோ.... நெடுக இந்தக்காவையே போஉறீங்களே அதுதான் கேட்டேன்:))).

N.H. Narasimma Prasad said...

முதல் பகுதி மிகவும் அருமை நண்பரே. விரைவில் அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன். பகிர்தலுக்கு நன்றி. இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

அன்பைத்தேடும் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

பால கணேஷ் said...

தம்பி ராஜ்! முதல் அத்தியாயத்திலேயே சுவாரஸ்யத்தை பதியனிட்டிருக்கிறீர்கள். இப்படியே தொடருங்கள். (எழுத்துப் பிழைகளை சற்று கவனித்தால் நலம்) எல்லோர் மனங்களையும் வெல்ல வாழ்த்துக்கள்.

ம.தி.சுதா said...

குளியலறைச் சுவர், கண்ணாடி என ஒப்பீட்டு வர்ணனைகளால் சும்மா பிச்சு உதறுகிறீர்களே தலைவா...

கலக்குங்க...

அம்பாளடியாள் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி என் கிறிஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்களிற்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் உரித்தாகட்டும் சகோ .

K.s.s.Rajh said...

அனைவருக்கும் நன்றி நண்பர்களே

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails