Wednesday, August 10, 2011

என்ன நடந்தது இந்திய அணிக்கு?சுடச்சுட ஒரு பதிவு ஆறப்போகுது விரைவா வாசிங்க.

முதலில் 6 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் அரங்கிற்கு மீண்டும் திரும்பிய ஸிம்பாவே அணி பங்களாதேஸ்க்கு எதிரான ஸிம்பாவேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான வெற்றி ஒன்றை பெற்றார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதல் நாளான இன்று உணவு இடைவேளை முடிந்து இப்போது போட்டி ஆரம்பமாகி விட்டது ஆனால் இந்திய அணி 100ஒட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறுகின்றது



இந்திய அணியின் துடுப்பாட்டத்தை பார்க்கும் போது ஏதோ சின்னப்பசங்கள் கிரிக்கெட் ஆடுவது போல் இருக்கின்றது.அதிலும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட சேவாக் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து விட்டார்.போகின்ற போக்கைப்பார்த்தால் இந்த போட்டியிலும்இந்திய அணிக்கு தோல்விதான் போல.சகிர்கான் உட்பட முன்னனி பந்துவீச்சாளர்கள் இந்தப்போட்டியில் விளையாடாதனால் .இந்திய அணி துடுப்பாட்டத்தில் நல்ல ஸ்கோரை எட்ட வேண்டும் இல்லை என்றால் இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்துவது கடினம்.தற்போது 6 விக்கெட்டுக்களை இந்திய அணி இழந்து விட்டது,சேவாக்,கம்பீர்.சச்சின்.ராவிட்,லக்ஸ்மன்,ரெய்னா.போன்றவர்களின்
விக்கெட்டுக்கள் காலி.கேப்டன் டோனி மட்டுமே துடுப்பாட்டவீரராக ஆடிக்கொண்டு இருக்கின்றார்.இந்தியாவின் எஞ்சியுள்ள விக்கெட்டுக்கள் பந்து வீச்சாளர்களே.

எப்புடியாவது இந்த போட்டியை வெல்லனும் நண்பா.இல்லாட்டி இந்த வலைப்பதிவு எழுதுற பசங்க நம்மள காலாய்த்துடுவாங்க
எனவே டோனி பொறுப்பை உணர்ந்து ஆடவேண்டும் பொருத்து இருந்து பார்ப்போம் என்ன செய்யப்போகின்றார் என்று.ஒரு வேளை இந்தப்போட்டியிலோ இல்லை அடுத்து எஞ்சியுள்ள ஒரு டெஸ்ட்டிலோ இந்திஅணி தோல்வி அடைந்தால் டெஸ்ட்தரவரிசையில் முதல் இடத்தை இழக்கவேண்டி ஏற்படும்.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தையும் இங்கிலாந்தின் பந்துவீச்சைப்பார்த்தால் அது நடந்தாலும் ஆச்சரியம் இல்லை.

கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவின் தோல்வியை ஏற்க மனம் இல்லாது சில நண்பர்கள் என்னிடம்.இங்கிலாந்து திறமையான அணி இல்லை.சேவாக் இல்லாத படியால் தான் வென்றார்கள்.சகிர்கான் விளையாடி இருந்தால் வென்று இருக்கலாம்.நான் இந்திய அணியை மட்டம் தட்டுகின்றேன்.அப்படி இப்படி கூறினார்கள்.
அவர்களிடம் அப்ப சொன்னதைத்தான் இப்பவும் சொல்கின்றேன்.சச்சின்..ராகுல் ராவிட்.லக்ஸ்மன்,டோனி,யுவராஜ்,ஹர்பஜன் சிங்,போன்றோர் விளையாடிய போட்டிகளில்தானே இங்கிலாந்து வென்றது.இந்தப்போட்டியில் சேவாக் வந்தும் இப்ப முதல் இனிங்சில் இந்திய அணி தடுமாறுகின்றது அல்லவா.எனவே இப்பவாச்சும் நம்புங்கப்பா இங்கிலாந்து திறமையான அணி என்று.

இந்த பதிவு எழுத தொடங்கிய போது 6 விக்கெட்டுக்களை இழந்து இருந்த இந்திய அணி இப்ப பதிவைமுடிக்கும்போது இன்னும் ஒரு விக்கெட்டையும் இழந்து விட்டது.ஆட்டம் இழந்தவர் அமிர்த் மிர்ஷா.
.
பொறுத்து இருந்து பார்ப்போம் இந்த போட்டியிலும் இந்திய அணிக்கு தோல்வியா இல்லை மீண்டு எழுந்து வெற்றி பெறுமா?


மிஸ்கி-இப்ப இந்திய அணியின் ஸ்கோர்-158/7 விக்கெட்டுக்கள்.டோனி தன் பொறுப்பை உணர்ந்து சிறப்பாகவும் அதே நேரம் அதிரடியாகவும் விளையாடிக்கொண்டு இருக்கின்றார்


மிஸ்கி-2-இன்று நான் முதன் முறையாக ஒரேநாளில் மூன்று பதிவுகள் பதிவிட்டுள்ளேன்
இதில் எனது 50வது பதிவும் அடங்கும்.
50வது பதிவு-மரணம் என்பது உடல்களைப்பிரிக்கலாம் ஆனால் நட்புக்கு என்றும் மரணம் இல்லை

அப்படியே உங்கள் வேலையை மறக்காமல்.செய்திட்டுப்போங்க அதான் கருத்துரைகள்,ஓட்டுக்கள்.

Post Comment

11 comments:

Anonymous said...

205 /8 பொறுங்க பாஸ் இங்கிலாந்தின் இனிங்சையும் பார்த்திட்டு....

K.s.s.Rajh said...

அது சரிதான் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை டோனி பின்னி பெடல் எடுக்கின்றார்

நிரூபன் said...

சுடச்சுட ஒரு பதிவு ஆரப்போகுது விரைவா வாசிங்க//

அவ்.....ஆறப் போகுதா//இ.....

நிரூபன் said...

மச்சி....எனக்கும் கிரிக்கட்டிற்கும் வெகு தூரம்....

K.s.s.Rajh said...

@நிரூபன் சொன்னது…
மச்சி....எனக்கும் கிரிக்கட்டிற்கும் வெகு தூரம்...

தூர நின்று வேடிக்கை பாருங்கள்.பல விடயங்களில் புகுந்து விளையாடும் நீங்கள்(பதிவுகளில்)கிரிக்கெட் சம்மந்தமான பதிவு ஒன்றை எழுதவும் உங்களால் முடியும்.

ஆகுலன் said...

ஆகா வந்துடன்...இனியும் வருவன்..........

K.s.s.Rajh said...

@ஆகுலன் சொன்னது…
ஆகா வந்துடன்...இனியும் வருவன்......

நன்றி நண்பா நல்வரவு

ம.தி.சுதா said...

சிம்பாவே பழைய ஸ்ரிக், புளொவர், ஜோன்சன் போன்றோரை தருமா என எதிர்பார்த்தேன் இந்த வெற்றியே வாயடைக்க வச்சிட்டுது..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1).

பிரணவன் said...

50 பதிவுகளை கடந்தமைக்கு எனது வாழ்த்துக்கள். . .உங்கள் பதிவுகள் பலரைச் சென்றடையவும் வாழ்த்துக்கள். . .

K.s.s.Rajh said...

@♔ம.தி.சுதா♔ சொன்னது…
சிம்பாவே பழைய ஸ்ரிக், புளொவர், ஜோன்சன் போன்றோரை தருமா என எதிர்பார்த்தேன் இந்த வெற்றியே வாயடைக்க வச்சிட்டுது

ஒரு காலத்தில் ஸிம்மாவேயும் கிரிக்கெட்டில் முன்னனி அணிகளுக்கு சவால் விட்ட அணிதானே

K.s.s.Rajh said...

@பிரணவன் சொன்னது…
50 பதிவுகளை கடந்தமைக்கு எனது வாழ்த்துக்கள். . .உங்கள் பதிவுகள் பலரைச் சென்றடையவும் வாழ்த்துக்கள். .

நன்றி சகோ

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails