Tuesday, June 05, 2012

அன்பே எங்கே நீ.......பகுதி-2


இரவில் தூக்கம் இழந்து தவிப்பதை போல கொடியது வேறு எதுவும் இல்லை
என் இரவுகளில் இப்போது எல்லாம் பயத்திலே நகர்கின்றன.அதற்கு காரணமான உருவத்தின் மர்மத்தை அறிய எனக்கு ஆவலாக இருக்கின்றது இன்றைய இரவு பயத்திலே சென்றுவிட்டது அதுவும் இன்று அந்த உருவத்தின் முகத்தை பார்த்துவிட்டேன்.நாளை வரட்டும் எப்படியாவது அதை பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்று எண்ணிக்கொண்டே தூங்கிப்போய்விட்டேன்....
இனி....

பயத்துடன் விடிந்தது காலை. நான் இந்தக் கிராமத்துக்கு வந்து சில வாரங்கள் தான் ஆகின்றன.இங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சந்தைப் படுத்தல் பிரிவில் வேலைசெய்கின்றேன். நிறுவனத்துக்கு அருகிலே ரூம் கிடைத்தால் வசதியாக போய்விட்டது.அதைவிட குறைந்த வாடகை என்ற படியால்தான். இரவில் என் ரூமில் மர்மமான உருவத்தின் நடமாட்டம்  அறிந்தும். ரூம் மாறவில்லை அதைவிட அது என் மனப்பிரமையாக இருக்குமோ என்றும் தோன்றியது.

இன்று இரவு எப்படியும் அதன் மர்மத்தை கண்டரியவேண்டும் என்று நினைத்துக்கொண்டு வேலைக்கு கிளம்பினேன்.

இயற்கை எழில் மிகுந்த கிராமம் அது பசுமையான வயல்வெளிகள் நிறைந்த விவசாய பூமி.கிராமத்தை அடுத்து அடந்த காடு.மாலைப்பொழுதுகளில் பறவைகளில் இனிய ஓசை,காட்டு மிருகங்களின் அலறல் என்று ஒரு புறம் அழகாகவும் மறுபுறம் திகிலாகவும் இருக்கும்.


இன்று வேலை முடித்து வர லேட்டாகிவிட்டது. நேரம் இரவு எட்டு மணியை தாண்டிவிட்டது. குளிர்த்துவிட்டு அருகில் இருந்த கடையில் இரவு உணவை முடித்துக்கொண்டு வந்து உறங்கத்தயார் ஆனேன். இயல்பாகவே மனதில் பயம் வந்து ஒட்டிக்கொண்டது.

நள்ளிரவு நெருங்கியும் தூக்கம் வரவில்லை மெதுவாக கட்டிலில் இருந்து இறங்கி அலுமாரிக்கு பின்னால் போய் மறைந்திருந்து என் அறையை நோட்டம் விட்டேன். இன்று அந்த பெண் உருவம் எப்படி என் அறைக்குள் வருகின்றது எதற்காக வருகின்றது என்று அறிந்துகொள்ளும் ஆவலில் மறைந்திருந்தேன்.

நீண்ட நேரம் ஆகிவும் இன்று அந்த பெண் உருவத்தை காணவில்லை.ஒரு இரண்டு மணிநேரம் நான் அப்படியே அலுமாரிக்கு பின்னால் மறைந்திருந்தேன்.

மெதுவாக அந்த பெண் உருவம் என் அறைக்குள் நுழைந்தது. அது என் அறைக்குள் வரும் வழியை பார்த்ததும் எனக்கே ஆச்சரியமாக இருந்தது என் அறைக்கும் பக்கத்து அறைச் சுவருக்கும் இடையில் ஒரு கதவு இருக்கின்றது. சுவர் முழுவதும் திரைச்சீலை போட்டு இருந்த படியால் என் அறையில் இருந்து பார்க்க அந்த கதவு தெரியவில்லை.அதைவிட நான் இந்த அறைக்கு வந்து கொஞ்சநாட்கள்தான் ஆகின்றது காலையில் வேலைக்கு போனால் இரவில் தான் வருவேன்.எனவே அறையை முழுமையாக ஆராயவில்லை.

மெல்ல என் கட்டிலின் அருகில் வந்த அந்த பெண் உருவம் கட்டிலில் என்னைக் காணமால் சுற்றும் முற்றும் பார்த்தது.பிறகு கட்டிலை உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தது.அதற்கு பின் புறமாக நான் மறைந்திருந்து பார்த்துக்கொண்டு இருந்த படியால் அவளின் பின் புற அழகு மங்கிய ஒளியில்
தெளிவாக தெளிந்தது.


கடவுளை போல ஒரு கலைஞன் இந்த உலகத்தில் ஏது? என்ன ரசனை அவனுக்கு இந்தப்பெண்ணை இவ்வளவு அழகாக படைத்திருக்கின்றானே.

என் மனதில் இருந்த பயம் விலகி தைரியம் வந்தது. மெதுவாக அலுமாரிக்கு பின்னால் இருந்து எழுந்து அந்த பெண்ணை நெருங்கினேன்.மெதுவாக அருகில் சென்று அவள் கையை பற்றிப்பிடித்து யார் நீ இங்கே எதற்காக இந்த நள்ளிரவில் வருகின்றாய். உண்மையை சொல் என்று உரத்த குரலில் கேட்டேன்

உஸ்.........சத்தம் போடாதே என்று என் வாயை பொத்தினாள். பின் என்னை உற்றுப் பார் என்னை தெரியவில்லையா?என்றாள் நேற்று அவளின் முகத்தை தூர இருந்து பார்த்ததினால் அடையாளம் தெரியவில்லை இன்று மிக அருகில் அவள் முகம் அருகே பார்த்த போது அவளை எங்கோ பார்த்த ஞாபகம் வந்தது.
நீங்க......நீங்க............ராகவிதானே என்றேன்.
ஆம் ராகவியேதான் என்ன சரன் என்னை மறந்து போச்சா என்று குறும்பாக சிரித்தாள்.

ராகவி..........................என்று கத்தினேன்....

என் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த என் மனைவி. என்னங்க என்ன ஆச்சு ஏதும் கெட்ட கனவு கண்டிங்களா ஏன் ராகவி என்று கத்தினீங்க அவள்  தூங்கிக் கொண்டு இருக்கிறாள் என்று என் தலையை ஆதரவாக கோதினாள்.நான் அருகே படுத்திருக்கும் என் இரண்டு வயது குழந்தை ராகவியை பார்த்தேன் ஆழந்து உறங்கிக்கொண்டு இருந்தது.

என் மனைவி எழுந்து சென்று சாமியறையில் இருந்த விபூதியை எடுத்துக்கொண்டு வந்து எனக்கும் நெற்றியில் பூசிவிட்டு உறங்கிக்கொண்டு இருக்கும் குழந்தைக்கும் பூசிவிட்டு என்னிடம் மீண்டும் கேட்டாள். என்னங்க அப்படி என்ன கனவு கண்டீங்க நீங்க கத்தின கத்தில் நான் பயந்து போய்விட்டேன்.

ஆமா நான் ஒரு கிராமத்துக்கு வேலைக்கு போவது போலவும் அங்கே தனியாக தங்கியிருக்கும் போது நித்திரை இன்றி தவிப்பது போலவும் ஒரு கனவு கண்டேன் என்றேன்.கனவில் வந்த ராகவியை பற்றி சொல்லவில்லை

அதுக்கு ஏன் ராகவி என்று நம்ம பொண்ணு பெயரை சொல்லி கத்தினீங்க அவளுக்கு ஏதாவது ஆன மாதிரி கனவில் வந்திச்சா என்றாள்.

நானும் ஆம் என்று தலையை ஆட்டிவிட்டு .சரி நீ படுத்துக்கொள் என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியால் வந்தேன். என் மனம் எங்கும் தொலைந்து போயிறுந்த ராகவி பற்றிய நினைவுகள். நான் இன்றுவரை தேடிக்கொண்டு இருக்கும் ராகவியை பற்றி என் மனைவியிடம் எதுவும் சொன்னதில்லை என் மகளுக்கு ராகவி என்று பெயரைதான் வைக்கவேண்டும் என்று அடம்பிடித்து வைத்தேன்.


ஆனால் மெல்ல மெல்ல ராகவியை நான் மறந்து போயிருந்தேன்.ஆனால் இப்போது கனவில் வந்து அவள் மீதான நினைப்பை மீள் ஞாபகம் செய்துவிட்டாள்.
(தொடரும்)

படங்கள்-கூகுள்

முதல் பகுதியை படிக்க இங்கே கிளிக்-அன்பே எங்கே நீ......பகுதி-1






Post Comment

8 comments:

சசிகலா said...

மலரும் காதல் நினைவு மலங்க மலங்க விழிக்க வைத்து விட்டதோ ? சுவாரஸ்யம் தொடருங்கள் .

தமிழ்வாசி பிரகாஷ் said...

காதல் தொடரா... திகில், மர்மம் தொடரா?

ராஜா சுவாரஸ்யமா போகுது... கண்ட்னியு....

Yoga.S. said...

வணக்கம்,ராஜ்!நலமா???////ராஆஆஆஆஆ...கவீஈஈஈஈ................!மிஸ் பண்ணிட்டியேம்மா!!!!!!!!!!!!!!!!!!!!!ஹ!ஹ!ஹா!!!!திகிலடைய வைக்கிறீர்கள்,வாழ்த்துக்கள்!

Mahesh said...

ஐய்யோ ஆரம்பத்துலையே பல்ப்வாங்கிட்டேனே!

ம்ம்ம் கதை நல்லா இண்ட்ரஸ்டிங்கா போகுது அண்ணே
தொடருங்க!

Athisaya said...

ஆனாலும் சாதிசுட்டீங்க..பொண்ணுக்கு அவ பெயர வச்சுட்டிங்க.....உஷார்.அருமை நண்பா..!சந்திப்போம்

தனிமரம் said...

வித்தியாசமாக இருக்கு ராகவியின் நினைவுகள் தொடர் சுவாரசியம் கூடுகின்றது!

தனிமரம் said...

அட விற்பனை பிரதிநிதியா சரன் ம்ம்ம் பல ராகவிகள் வருவார்களே!ஹீஈ

தனிமரம் said...

இடத்தை கொஞ்சம் நல்லாக அவதானி ராச்!ம்ம் பின் புலம் முக்கியம் ஒரு ஆலோசனையே!ம்ம்ம்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails