Monday, June 04, 2012

அன்பே எங்கே நீ........பகுதி-1


காதல் சாதாரன சாமானியன் தொடக்கும் கடவுள் வரை யாரும் இதன் தீண்டலில் இருந்து தப்பியிருக்க முடியாது.எதோ ஒரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் எல்லோறும் இந்த மனித வாழ்க்கையில் காதலை சந்தித்து இருப்போம்.இல்லை கட்டாயம் எம் வாழ்க்கை முடியும் முன் சந்திப்போம்.

இல்லை நான் ஒருவரையும் காதலிக்கவில்லை என்று யாரும் சொல்ல முடியாது வெளியில் சும்மா ஒரு பந்தாவுக்காக நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை என்று சொன்னாலும் ஓவ்வொறுவரின் அடிமனதிலும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு காதல் அரும்பியிருக்கும். சிலவேளைகளில் நாம் காதலித்தவர்களிடம் அந்தக் காதலை சொல்லாமலேவிட்டு இருப்போம் ஆனால் யாரும் காதலிக்காமல் இருந்திருக்க முடியாது.இருக்க முடியாது.


ஒருவேளை திருமணத்திற்கு முன் யாரையும் காதலிக்காவிட்டாலும் திருமணத்திற்கு பிறகு எமது துணையை காதலிப்போம் எனவே இந்த மனித வாழ்க்கையில் காதலை தவிர்க முடியாது.


ரொம்ம நாளாக ஒரு முழுநீளக் காதல் கதை எழுதவேண்டும் என்று எனக்கு ஆசை அதன் வெளிப்பாடுதான் இந்தக் கதை.இது உண்மைக் கதை இல்லை முழுவதும் கற்பனையே.
எனக்கு தெரிந்ததை நான் எழுதுகின்றேன் அதற்கான அங்கிகாரம் உங்கள் கைகளில்.
அன்புடன்
கே.எஸ்.எஸ்.ராஜ்

அன்பே எங்கே நீ............பகுதி-1

டிக்.டிக்.டிக்.டிக்..........என் அறையின் சுவரில் இருந்த கடிகாரம் ஓடிக்கொண்டு இருந்த ஓசையை தவிர இந்த நள்ளிரவில் வேறு எந்த சத்தங்களும் இல்லை ஊரே அமைதியாக உறங்கிக்கொண்டு இருந்தது....நான் மட்டும் நித்திரை இன்றி தவித்துக்கொண்டு இருந்தேன்.கட்டிலில் இருந்த படி என் அறையை நோட்டம் விட்டேன்.அப்போது

என் அறையில் யாரோ நடமாடுவதை போல தெரிந்தது என் சப்தநாடிகளும் ஒடுங்கிப்போனது இந்த நேரத்தில் யார் இங்கே அதுவும் இன்று இல்லை இப்போது கொஞ்ச நாட்களாக இப்படி ஒரு உருவம் என் அறையில் நள்ளிரவில் நடமாடுகின்றது.எழுந்து சென்று யார் என்று பார்க்கவும் பயம் யார் என்று கேட்கவும் துணிவு இல்லை.திருடன் என்றும் சொல்ல முடியாது காரணம் அறைக் கதவுகள் பூட்டித்தான் இருக்கின்றது.அதைவிட காலையில் ஒருவர் வந்து போனதுக்கான எந்த அடையாளமும் இருக்காது.அதுவும் குறிப்பிட்ட நள்ளிரவு நேரத்தில் மட்டும் வருவது யாராக இருக்கும் வந்தும் எதுவும் பேசுவதும் இல்லை என்னையே பார்த்து கொண்டு இருக்கும் நான் பயத்தில் வேறு பக்கம் திரும்பிவிடுவேன் பின்பு அந்த உருவத்தை காணக்கிடைக்காது.அதுவும் அந்த உருவம் வரும் வேளையில் நான் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும் என்னை அறியாமலே விழித்துக்கொள்வேன்.

மெல்ல அந்த உருவம் என் கட்டிலை நெருங்கியது
என் கட்டில் அருகே வந்ததும் அப்படியே நின்றது பின் வழமை போல என்னையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தது.
இன்று மனதில் கொஞ்சம் துணிவை வரவழைத்துக்கொண்டு தலையை உயர்த்தி பார்த்தேன்.வெள்ளை நிற ஆடையில் அழகிய பெண்ணின் உருவம் அது.அந்த மெல்லிய இருளிலும் அந்த பெண்ணின் முகம் அழகாக தெரிந்தது.
கரு நீல விழிகளில் உயிரை பறிக்கும் பார்வை,முகத்தில் ஒருவித புன்னகை,
இலியானாவின் இடையை போல சின்ன கழுத்து அதுக்கு கீழே செதுக்கிவைத்த சிற்பமாக அவள் பெண்மையின் அங்கங்கள்,வர்ணிக்க தேவையற்ற பேரழகியாக இருந்தாள் மெலிதாக ஒரு நறுமணம் அவள் மேனியில் இருந்து வந்து கொண்டு இருந்தது.


அந்த நள்ளிரவில் ஊரடங்கிப்போன வேளையில் இப்படி ஒரு பேரழகி என் அறைக்கு வரவேண்டிய தேவை என்ன?அதுவும் தினமும் வருகின்றாள்.பூட்டிய அறைக்குள் எப்படி அவளால் வரமுடிகின்றது ஒருவேளை பேயாக இருக்குமே பேயாக இருந்தால் வெள்ளை ஆடை உடுத்துவதை திரைப்படங்களில் பார்த்து இருக்கின்றேன் அதே போல இவளும் வெள்ளை ஆடைதான் உடுத்தியிருக்காள் ஆனால் பேய் என்றால் இவ்வளவு அழகாகவா இருக்கும் அதைவிட பேய்க்கு கால்கள் இருக்காது என்றும் கேள்விப் பட்டுள்ளேன் இவளுக்கு வாழைத்தண்டு போல அழகான பளபளப்பான கால்கள் இருக்கே.பிறகு எப்படி பேயாக இருக்க முடியும்.

மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு யார் நீ? இங்கே என்ன செய்கின்றாய் என்றேன்.அந்த உருவத்திடம் இருந்து பதில் இல்லை மீண்டும் ஒரு முறை கேட்டேன். நீ அந்தப் பக்கம் திரும்பிக்கொள் நான் பதில் சொல்கின்றேன் என்றது.நானும் அந்தப் பக்கம் திரும்பிக்கொண்டேன் சிறிது நேரம் பதில் இல்லை திரும்பவும் நான் கேட்டேன் யார் நீ? இங்கே என்ன செய்கின்றாய்.பதில் இல்லை திரும்பி பார்த்தேன் அந்த உருவத்தை காணவில்லை.என் மனதில் பயம் குடிகொண்டது அவள் உருவம் மட்டும் கண்ணுக்குள்ளே நின்றது. அந்த நள்ளிரவில் தனிமையான அறையில் அப்படி ஒரு பேரழகியை கண்டது என் மனதில் சலனத்தை உண்டு பண்ணியிருந்தது.ஆனாலும் மனம் பயத்தில் நடுங்கியது போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டேன் மின்விசிறி ஓடிக்கொண்டு இருந்தும் என் உடல் வியர்த்து கொட்டியது.

ஓவ்வொறு இரவுகளும் விடியலுக்கான ஆரம்பம்.மனிதனுக்கு மனிதன் இரவுப் பொழுதுகள் மாறுபடும் காதலர்களுக்கு ஆனந்த அவஸ்த்தையாக இருக்கும் காதலில் தோல்வியுற்றவர்களுக்கும் சமநேரத்தில் காதலை சொல்ல முடியாமல் தவிர்ப்பவர்களுக்கும் இரவுகள் நரகம் தான்.புதுமண தம்பதிகளுக்கு இரவுப்பொழுது தித்திக்கும் இனிய வேளை . இளைஞனுக்கோ எதிர்காலத்தை பற்றிய சிந்தனையில் கழியும் இப்படி மனிதனுக்கு மனிதன் இரவின் பரிமாணம் வேறுபடுகின்றது.எது எப்படி இருந்தாலும் இரவில் நிம்மதியான உறக்கத்தை தேடுவது மனிதனின் இயல்பு.

இரவில் தூக்கம் இழந்து தவிப்பதை போல கொடியது வேறு எதுவும் இல்லை
என் இரவுகளில் இப்போது எல்லாம் பயத்திலே நகர்கின்றன.அதற்கு காரணமான உருவத்தின் மர்மத்தை அறிய எனக்கு ஆவலாக இருக்கின்றது இன்றைய இரவு பயத்திலே சென்றுவிட்டது அதுவும் இன்று அந்த உருவத்தின் முகத்தை பார்த்துவிட்டேன்.நாளை வரட்டும் எப்படியாவது அதை பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்று எண்ணிக்கொண்டே தூங்கிப்போய்விட்டேன்
(தொடரும்)









Post Comment

22 comments:

Athisaya said...

சீக்கிரம் வரச்சொல்லுங்க நண்பா...! மீ வெயிட்டிங்...!பொதுவாவே இரவில 2 மணி ஆகுது தூங்க.இனிமே இப்பிடி யாராச்சும் வந்தா என் விலாசத்தையும் கொடுத்துடுங்க.பதிவு விறுவிறுப்பு..வாழ்த்துக்கள்.சந்திப்போம். சொந்தமே..!

K.s.s.Rajh said...

@Athisaya

அதுக்கென்ன இனி யாராச்சும் வந்தால் உங்களிடம் அனுப்பிவைக்கின்றேன்

மிக்க நன்றி சகோ

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஆரம்பமே டிக்...டிக்...டிக்... இல்லை இல்லை, திக்... திக்... திக்...

Unknown said...

துவக்கம் நன்கு அமைந்துள்ளது
தொடருங்கள், வருவேன்!

புலவர் சா இராமாநுசம்

சசிகலா said...

இரவின் பரிணாமத்தில் இனிய அறிமுகமாக அவள் முகம் சுவாரஸ்யமாக இருந்தது . தொடருங்கள் ...

தனிமரம் said...

அட இப்படி தூக்கம் கொட்டுத் தவிக்கும் இரவுகள் எதிர்காலம் தெரியாத நரக வேதனை ம்ம்ம்ம் தொடர் சொல்லும் அந்த பெண் முகம் யாரோ நானும் தேடுகின்றேன் சொல்லி விடுங்கோ கனவில் என் முகவரியையும்!:)))))

தனிமரம் said...

படங்கள் எல்லாம் ரசிக்கக் கூடியவாறு இருக்கு ராச்.தொடருங்கள்!

தனிமரம் said...

அது எப்படி சரண்யாவின் இடுப்பை விட்டு எலியானவிடம் போவது இரு மச்சி போட்டுக்குடுக்கின்றேன்  சரண்யாவிடம் :)))))

Mahesh said...

வணக்கம் அண்ணா


உங்கலோட அண்பை தேடும் இதயம் தொடர் கதையோட தீவிர ரசிகன் நா எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு அதுபோலவே எழுத வாழ்த்துகல் அண்ணா!


இந்த கதையோட ஆரம்பமே ஒரு சஸ்பென்ஸ்ஸா இருக்கே!ம்ம்ம் அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்!

Yoga.S. said...

வணக்கம்,ராஜ்!கொஞ்சம் பிந்தி விட்டது,வந்து பார்த்தால்................சரி விடுங்கள்.கதை ஆரம்பம் அருமை. இப்படி தூக்கம் கெட்டுத் தவிக்கும் இரவுகள் எதிர்காலம் தெரியாத நரக வேதனை தொடர் சொல்லும் அந்த பெண் முகம் யாரோ நானும் தேடுகின்றேன் என்று சொல்லி விடாதீர்கள் கனவில் என் முகவரியை,பிளீஸ்!!!!!!!!!!!!!

K.s.s.Rajh said...

@தமிழ்வாசி பிரகாஷ்

பாஸ் ரொம்ப பயப்புடாதீங்க நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ புலவர் சா இராமாநுசம் said...
துவக்கம் நன்கு அமைந்துள்ளது
தொடருங்கள், வருவேன்!

புலவர் சா இராமாநுசம்
////
நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@ Sasi Kala said...
இரவின் பரிணாமத்தில் இனிய அறிமுகமாக அவள் முகம் சுவாரஸ்யமாக இருந்தது . தொடருங்கள் ...
////

நன்றி சகோதரி

K.s.s.Rajh said...

@ தனிமரம் said...
அட இப்படி தூக்கம் கொட்டுத் தவிக்கும் இரவுகள் எதிர்காலம் தெரியாத நரக வேதனை ம்ம்ம்ம் தொடர் சொல்லும் அந்த பெண் முகம் யாரோ நானும் தேடுகின்றேன் சொல்லி விடுங்கோ கனவில் என் முகவரியையும்!:))////

அதுக்கு என்ன அண்ணே சொல்லிட்டா போச்சு

K.s.s.Rajh said...

@ தனிமரம் said...
படங்கள் எல்லாம் ரசிக்கக் கூடியவாறு இருக்கு ராச்.தொடருங்கள்!
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் said...
அது எப்படி சரண்யாவின் இடுப்பை விட்டு எலியானவிடம் போவது இரு மச்சி போட்டுக்குடுக்கின்றேன் சரண்யாவிடம் :))////
போங்க அண்ணே இருப்பதை பற்றிதானே பேசலாம்...............ஹி.ஹி.ஹி.ஹி......

K.s.s.Rajh said...

@ mahesh said...
வணக்கம் அண்ணா


உங்கலோட அண்பை தேடும் இதயம் தொடர் கதையோட தீவிர ரசிகன் நா எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு அதுபோலவே எழுத வாழ்த்துகல் அண்ணா!


இந்த கதையோட ஆரம்பமே ஒரு சஸ்பென்ஸ்ஸா இருக்கே!ம்ம்ம் அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்!
////

நன்றி சகோதரா

K.s.s.Rajh said...

@
Yoga.S. said...
வணக்கம்,ராஜ்!கொஞ்சம் பிந்தி விட்டது,வந்து பார்த்தால்................சரி விடுங்கள்.கதை ஆரம்பம் அருமை. இப்படி தூக்கம் கெட்டுத் தவிக்கும் இரவுகள் எதிர்காலம் தெரியாத நரக வேதனை தொடர் சொல்லும் அந்த பெண் முகம் யாரோ நானும் தேடுகின்றேன் என்று சொல்லி விடாதீர்கள் கனவில் என் முகவரியை,பிளீஸ்!!!!////

ஹி.ஹி.ஹி.ஹி.....நன்றி பாஸ்

Mathuran said...

ஆரம்பம் படக் படக்

Unknown said...

ஆரம்பமே ஆச்சரியக்குறிகளுடன் ஆரம்பித்திருக்கிறது, இருந்தாலும் தங்கள் உண்மைக்கதைகள் போன்ற ஆரம்பகாலங்களை போல் சுவாரஸ்யத்தை தரவில்லை

K.s.s.Rajh said...

@ மதுரன் said...
ஆரம்பம் படக் படக்
////என்ன படக் படக் ஹி.ஹி.ஹி.ஹி.....

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ Shanmugan Murugavel said...
ஆரம்பமே ஆச்சரியக்குறிகளுடன் ஆரம்பித்திருக்கிறது, இருந்தாலும் தங்கள் உண்மைக்கதைகள் போன்ற ஆரம்பகாலங்களை போல் சுவாரஸ்யத்தை தரவில்லை
////

நிச்சயமாக இனிவரும் அத்தியாயங்களில் முயற்சி செய்கின்றேன் பாஸ்

நன்றி பாஸ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails