Wednesday, June 20, 2012

பிரபல பதிவர்கள் எலக்கிய பதிவு எழுதவேண்டும்-பதிவுலக அரசியல்

பதிவுலக அரசியல் என்னும் இந்த தொடரை நான் முன்பே எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன் சில பல காரணங்களால் எழுதமுடியவில்லை பதிவுலகம் என்பது எம் எழுத்துக்களை பலரிடம் கொண்டு சேர்க்கும் எம் எழுத்துகளுக்கு உடனுக்கு உடன் விமர்சனங்களை பெற்றுக்கொண்டு எம் எழுத்துக்களை மேம்படுத்த எமக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.ஆனால் ஒரு புதியவர் பதுவுலகில் நுழையும் போது அவர் இலகுவாக பிரபலம் அடைவது கடினம் அதுக்கு பதிவுலம் பற்றிய பூரண தெளிவு இருக்கவேண்டும்.அப்போதுதான் பதிவுலகில் பிரகாசிக்கமுடியும்.உள்குத்து வெளிக்குத்து போன்ற பல மேட்டர்களை புதியபதிவர்கள் நிச்சயம் அறிந்து கொள்ளவேண்டும்.


நான் பதிவுலகில் சந்தித்த பல விடயங்களை பதிவுலக அரசியல் என்னும் இந்த தொடரின் மூலம் புதிய பதிவர்களுக்கு பயன் படும் வகையில் எழுதலாம் என்று இருக்கின்றேன்.இந்த தொடர் யாருக்கும் உள்குத்து கிடையாது.இதுவரை நான் யாருக்கும் உள்குத்து பதிவுகள் போட்டது கிடையாது. எனவே இந்த தொடரில் யாரையும் குறிப்பிட்டு சொல்லப் படமாட்டாது பொதுவாக பதிவுலக அரசியல் பற்றி இந்த தொடர் இருக்கும்
யார் மனதையும் புண்படுத்துவது இந்த தொடரின் நோக்கம் இல்லை அப்படி யார் மனமும் புண்படுமாயின் அவர்களிடம் மன்னிக்கவேண்டுகின்றேன்.


பிரபல பதிவர்கள் எலக்கிய பதிவு எழுதவேண்டும் -பதிவுலக அரசியல்
தலைப்பு என்ன வெவகாரமா இருக்கேனு பாக்கிறீங்களா மேட்டர் இருக்கு
பதிவுலகில் நான் சந்தித்த பிரச்சனை இது கொஞ்சம் பிரபலமான பல்சுவைப் பதிவர்கள் அனைவரும் இந்த பிரச்சனையை சந்தித்து இருப்பீர்கள்.(நீ பிரபலமான பல்சுவைப் பதிவரானு யார்லே கேட்கிறது அம்புட்டு பிரபலம் இல்லைனாலும் நானும் ரவுடிதான்)

அதாவது என்னை போல பல மேட்டர்களை கலந்துகட்டி எழுதும் பதிவர்களுக்கு என்னா பிரச்சனைனா ஏன் நீங்க சமூக அக்கறையுடன் கூடிய காத்திரமான பதிவுகளை எழுதுவதில்லை? இந்தக் கேள்வியை என்னிடம் பல பேர் நேரடியாகவும் கமண்ட் வாயிலாகவும் பலமுறை கேட்டு இருக்கின்றார்கள்.ஒரு பிரபல பதிவர் ஒரு படி மேலே போய் நீ காத்திரமான பதிவுகள் எழுதினால் தான் உன் வலைப்பக்கமே வருவேன்னு அடம்புடிச்சாரு

நானு சரி நம்மளையும் ஒரு பதிவரா மதிச்சு சொல்றாறேனு வரதட்சனை ஒழியவேண்டும் என்று ஒருபதிவை எழுதினேன் அவரும் வந்து சூப்பர்,அருமைனு பாராட்டிவுட்டு போனாரு.நானும் அட நம்ம காத்திரமான பதிவுகள் எழுதினாலும் ரசிக்கிறாங்களேனு உள்ளம் குளிர்ந்து போனேன். அப்பறம் தான் அடுத்த பிரச்சனை வந்துச்சு நம்ம ப்ளாக்குக்கு ரெகுலரா வரும் ஒரு பதிவர் சொன்னாரு ஏன் ராஜ் கிரிக்கெட்,சினிமா,காதல் அப்படினு கலகலப்பாதானே பல பதிவுகள் எழுதின இப்ப ஏன் திடீருனு சீரியஸான பதிவுகள் பக்கம் போயிட்ட அப்படி சீரியஸான பதிவுகள் எழுத பல பதிவர்கள் இருக்காங்க நீ உன் ஸ்டைலில் தொடர்ந்து எழுதுனு சொன்னாரு.


யோவ் என்னய்யா இது வம்பா போச்சு ஒரு மனுசன் எப்படிதான் பதிவுகள் எழுதுவதுனு அஞ்சலியை நெனைச்சுகிட்டே கழிப்பறையில் அமர்ந்திருந்த போது கனப்பொழுதில் ஒரு ஜடியா தோனுச்சு(ஆமா அங்க ஏன் அஞ்சலியை நெனைச்சனு யாரும் கேட்கப் படாது நாங்ககெள்ளாம் கிரியேட்டர் மாமு எப்பவும் எதையாவது நெனைச்சுகிட்டே இருப்போம் ஹி.ஹி.ஹி.ஹி....)


என்னா ஜடியானா... அந்த சமயத்தில் நண்பன் படமும் பார்த்திருந்ததால் அதுல டாகுத்தரு ஒரு ஒலக மகா தத்துவம் சொல்வாருதானே ”சச்சின் டெண்டுல்கருட்ட போயி நீ மியூசிக் டைரக்டரா வரனுமுனோ இல்லை ரஹ்மான் கிட்ட போயி நீ பெரிய பேட்ஸ்மேனா வரனுமுனோ சொல்லியிருந்தா என்ன ஆகியிருக்கும்”

சரி இதை உல்ட்டா பண்ணி பதிவுலகத்துக்கு சொல்லுவோம் சி.பி பாஸ்கிட்ட போயி நீங்க சினிமா பத்தி எழுதக் கூடாதுனோ இல்லை வந்தேமாதரம் சசி பாஸ்கிட்ட போயி நீங்க தொழில் நுட்பபதிவு எழுதக்கூடாதுனோ சொல்லியிருந்தா என்ன ஆகும்.

அதைவிட இதுல இன்னும் ஒரு மேட்டரு ஒரு சீரியஸான பதிவோ இல்லை ஒரு தொடரோ எழுதினால் வெரும் 100,150 பேர்தான் பதிவை படிக்கிறாங்க.இதுவே சினிமா,கிரிக்கெட்,நகைச்சுவை போன்ற பதிவுகளுக்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கை நான் இதுல சொல்லமுடியாதுங்கண்ணா?தலை சுத்தும் இதுல இருந்து என்ன புரியுது வாசகர்கள் எந்த மாதிரி பதிவுகளுக்கு அதிகம் வருகின்றார்கள் என்று அவர்களின் மனநிலை அறிந்து பதிவு எழுதுவது தப்பா? எம்மிடம் வாசகர்கள் எதை எதிர்பாக்கின்றார்களோ அதை கொடுப்பது தப்பா? இப்ப சொல்லுங்கப்பா நாங்க கமர்சியலாக பதிவுகள் எழுதுவது தவறா இல்லையே இதுல இன்னும் ஒரு குற்றசாட்டு முன்வைக்கலாம் அப்ப நீங்க ஹிட்ஸ்க்காகதான் எழுதுறீங்களானு(என்னிடம் முன்வைக்கப் பட்டது)ஆமா அதுல என்ன தப்பு யாருமே இல்லாத கடையில் டீ ஆத்த எந்தப் பதிவருக்குத்தான் விருப்பம் இருக்கும் 

ஆனால் எது தவறுனா ஹிட்ஸ்க்காக கண்டதையும் எழுதி பலருக்கு உள்குத்து வெளிக்குத்து போட்டு குறிப்பிட்டவர்களை தாக்குவது நிச்சயம் சரியானது இல்லை.ஆனால் ரசனையுடன் சினிமா சம்மந்தமாக ஒரு பதிவு எழுதும் போது அதை அதிகளவான வாசகர்கள் படிக்கும் போது இவன் ஹிட்ஸ்க்காக எழுதுகின்றான் என்ற கருத்து தவறானது.

நல்ல பதிவுகள் என்றும் வரவேற்கப் படவேண்டியவை. தரமான எழுத்துக்கள் அங்கிகாரம் பெறவேண்டியவை. ஆனால் கமர்சியலாக எழுதும் பதிவர்களால் நல்ல பதிவுகள் பலரிடம் சென்று சேருவதில்லை என்ற கருத்து தவறு. பதிவுலகில் ஒரு தளம் பிரபலம் அடைவேண்டும் என்றால் வெறுமனே பதிவுகளை எழுதினால் மட்டும் போதாது அதில் அந்த பதிவரின் ஆர்வம் மற்றும் கடின உழைப்பு வேண்டும். இப்போது பதிவுலகில் ஓரளவு அறியப் பட்ட பதிவர்களாக இருக்கும் அனைவரின் தளத்தின் பிரபலத்துக்கு பின்னால் அவர்களின் கடினமான உழைப்பு இருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

சீரியஸான பதிவுகள் எழுதும் பதிவர்கள் பலர் பதிவுலகில் பிரபலமான பதிவர்களாக இருக்கின்றார்கள். என்ன கமர்சியல் பதிவர்களைவிட கொஞம் அவர்களின் தளத்திற்கு வாசகர் வருகை குறைவு அவ்வளவுதான். மற்றும் படி அவர்கள் பதிவுகள் பலரால் படிக்கப் படுவதில்லை என்ற கருத்து எல்லாம் தவறானது.

அதுக்காக கமர்சியல் பதிவுகள் எழுதுபவர்கள் சீரியஸான பதிவுகள் எழுதுவதில்லை என்று குற்றம் சாட்ட கூடாது. காரணம் அவர்களும் பல சீரியஸான பதிவுகள் எழுதியிருக்கின்றார்கள். ஆனால் அவர்களின் கமர்சியல் பதிவுகள் அதிகளவு எழுதியுள்ளதால் அவர்களுக்கான அடையாளத்தை கமர்சியல் பதிவராக கொடுக்கின்றது அவ்வளவுதான்.



சீரியஸான பதிவுகளையும் பலரிடம் கொண்டு சேர்கலாம்.அந்தப் பதிவுகளையும் பிரபலப் படுத்தாலாம் அதுக்கு பல வழிகள் இருக்கு அது எப்படினு இனி வரும் பகுதிகளில் பார்ப்போம்.
*********************************************************************************
அடுத்த பகுதியில் பிரபலமான பதிவுலக உள்குத்து அரசியல் பற்றி பார்ப்போம்

ஒவ்வொறு புதன் கிழமைகளிலும்(இந்திய,இலங்கை நேரப்படி)இந்த பதிவுலக அரசியல் தொடர் உங்கள் நண்பர்கள் தளத்தில் வெளிவரும்.


அன்பே எங்கே நீ.... தொடரின் அடுத்த பகுதி-6 நாளை வெளிவரும் நண்பர்களே


நேற்று வெள்ளைத்தக்காளி கஜால் அகர்வாலின் பிறந்த நாள் பதிவுடன் என் தளம் ஒருலட்சம் பார்வையாளர்களை எட்டியுள்ளது இந்த சிறியவனின் தளமும் இந்த இலக்கை அடைந்தது மகிழ்ச்சியாக உள்ளது அனைத்து வாசகர்களுக்கும் நன்றிகள்
*********************************************************************************

நான் ஆச்சரியமுடன் பார்க்கும் ஒரு மனிதன் என் சிறுவயது முதல் இன்றுவரை இவர் மீதான அபிமானம் மட்டும் குறையவே இல்லை. அது இவர் சறுக்கிய போதும் சரி ஒரு துளிகூட இவர்மேலான மதிப்பு குறையவில்லை.எனக்கு மட்டும் இல்லை அனைத்து தாதா ரசிகர்களுக்கும் தாதா மீதான அபிமான என்றும் ஒரு துளியேனும் குறையாது. 


விரைவில் உங்கள் நண்பர்கள் தளத்தில் ”வரலாற்றை மாற்றிய தாதா”கங்குலி பற்றிய தொடர் இது என் கனவுத்தொடராகும் நான் வலைப்பதிவு எழுதவந்ததே இவர் பற்றிய ஒரு தொடர் எழுதத்தான் ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இப்போதுதான் அமைகின்றது.கங்குலி ரசிகர்கள் இல்லாத கிரிக்கெட்டை ரசிக்கும் ஒவ்வொறுவரையும் இந்த தொடர் நிச்சயம் கவரும் விரைவில் எதிர்பாருங்கள்
*********************************************************************************

Post Comment

30 comments:

Unknown said...

இப்ப பதிவு எழுத ஆளே குறைஞ்சிட்டாங்க......இதுல உள்குத்து அரசியல் எதுக்கு இருக்கிற நாம ஏதோ ஜாலியா எழுதுவோம்..மக்கா..! அப்படித்தானே சொல்ல வர்றிங்க....

சி.பி.செந்தில்குமார் said...

hi hi hi

K.s.s.Rajh said...

@வீடு சுரேஸ்குமார்

வாங்க பாஸ்
ஆமா அப்படியும் எடுத்துக்கலாம்

இது பதிவுலகில் நான் சந்தித்த சில மேட்டர்கள் பத்தின பொதுவான தொடர் அவ்வளவுதான்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

சி.பி.செந்தில்குமார் said...
hi hi hi
////

நன்றி பாஸ்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உங்க விரும்பம்போல செய்யுங்க...

திண்டுக்கல் தனபாலன் said...

தொடரை விரைவில் தொடருங்கள் ! அதற்கு முன் நம்ம தாதா பற்றிய தொடர் முதலில் வரட்டும். நன்றி நண்பா !

Unknown said...

கைவசம் சரக்கிருந்தா நீங்கபாட்டுக்கு எழுதிக்கிட்டே இருங்க. நாங்க பாட்டுக்கு வாசிச்சிட்டுப் போறோம். பதிவு நல்லாயிருந்தா ஹிட்ஸ் தானா வரும்.

அப்புறம் 100,000 ஹிட்ஸுக்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

கிஸ் ராஜா... என்ன இது?
பதிவெழுதுறவன் பதட்டப்படக் கூடாது!!!! - சும்மா ஜாலிக்கு!

நீங்க சொல்றதெல்லாம் சரிதான் பாஸ்! ஆனாப் பாருங்க சீரியசான பதிவுக்கு (யாருக்கு சரியா புரியுமோ, யார்கிட்ட சேர்க்கணும்னு நினைக்கிறமோ அவங்களே) பதிவையே வாசிக்காம கமென்ட் போட்டு நம்மள மென்டலாக்கிடுவாய்ங்க - எனக்கு நடந்திருக்கு! ஆனா பிரபல பதிவரா இருந்த இப்பிடி எல்லாம் நடக்காது
இதெல்லாம் சகஜமப்பா! :-)

பால கணேஷ் said...

நல்லவேளை... என்னை சீரியஸா பதிவு எழுதச் சொல்லி யாரும் கேக்கலப்பா... ஹி... ஹி...

K.s.s.Rajh said...

@கவிதை வீதி... // சௌந்தர் //

வாங்க பாஸ் நீண்டநாளைக்கு அப்பறம் சந்திப்பதில் மகிழ்ச்சி

மிக்க நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
திண்டுக்கல் தனபாலன் said...
தொடரை விரைவில் தொடருங்கள் ! அதற்கு முன் நம்ம தாதா பற்றிய தொடர் முதலில் வரட்டும். நன்றி நண்பா !
////

நிச்சயமாக தாதா பற்றிய தொடர் விரைவில் வரும்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
ஹாலிவுட்ரசிகன் said...
கைவசம் சரக்கிருந்தா நீங்கபாட்டுக்கு எழுதிக்கிட்டே இருங்க. நாங்க பாட்டுக்கு வாசிச்சிட்டுப் போறோம். பதிவு நல்லாயிருந்தா ஹிட்ஸ் தானா வரும்.

அப்புறம் 100,000 ஹிட்ஸுக்கு வாழ்த்துக்கள்/////

வாங்க பாஸ் நீண்டநாளைக்கு அப்பறம்

ரொம்ப நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@0, 2012 2:52:00 PM
ஜீ... said...
கிஸ் ராஜா... என்ன இது?
பதிவெழுதுறவன் பதட்டப்படக் கூடாது!!!! - சும்மா ஜாலிக்கு!

நீங்க சொல்றதெல்லாம் சரிதான் பாஸ்! ஆனாப் பாருங்க சீரியசான பதிவுக்கு (யாருக்கு சரியா புரியுமோ, யார்கிட்ட சேர்க்கணும்னு நினைக்கிறமோ அவங்களே) பதிவையே வாசிக்காம கமென்ட் போட்டு நம்மள மென்டலாக்கிடுவாய்ங்க - எனக்கு நடந்திருக்கு! ஆனா பிரபல பதிவரா இருந்த இப்பிடி எல்லாம் நடக்காது
இதெல்லாம் சகஜமப்பா! :-)/////

ஹா.ஹா.ஹா.ஹா..........நன்றி தல

K.s.s.Rajh said...

@
பா.கணேஷ் said...
நல்லவேளை... என்னை சீரியஸா பதிவு எழுதச் சொல்லி யாரும் கேக்கலப்பா... ஹி... ஹி.//////

ஹா.ஹா.ஹா.ஹா.....நன்றி பாஸ்

சென்னை பித்தன் said...

தொடருங்கள்!என்ன வருதென்று பார்ப்போம்!

தனிமரம் said...

வணக்கம் ராச்! வேலைநேரம் மாற்றம் என்பதால் இரவில்தான் வரமுடியும் என்றாலும் பால்க்கோப்பி கிடைக்கும் தானே!ஹீ ! பதிவுலகம் !ம்ம் ஜோசிக்கின்றேன் பூரண தெளிவு எனக்கில்லை !படிக்காதவன் என்ன சொல்ல வருவதை எழுதுவோம் விரும்பினோர் வாசிக்க்ட்டும்!

தனிமரம் said...

ஆள் இல்லாத கடையிலும் அருமையான சாமான் இருக்கும் விற்காட்டியும் விலைமதிக்க முடியாத அசையாச் சொத்து!ஹீ

தனிமரம் said...

அடுத்த வாரம் வாரன் உள்குத்து போட்டு வாந்தி எடுத்தோருக்கு தனிமரமும் மறுசீர் செய்யத்தானே வேண்டும்!ஹீ

தனிமரம் said...

அதிகமான பார்வையாளர்கள் இன்னும் வர வாழ்த்துக்கள் பாஸ்!

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

வணக்கமுங்கோ, ரொம்ப நாளைக்கு அப்புறமா ஒரு ப்ளாக் போஸ்டுக்கு கமெண்ட் போடுறேன். சீரியசோ, மொக்கையோ பதிவுகள் தரமா இருந்தா சரிதான். ஒரு லட்சத்துக்கு வாழ்த்துக்கள்.

K.s.s.Rajh said...

@சென்னை பித்தன்

வாங்க பாஸ் நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் said...
வணக்கம் ராச்! வேலைநேரம் மாற்றம் என்பதால் இரவில்தான் வரமுடியும் என்றாலும் பால்க்கோப்பி கிடைக்கும் தானே!ஹீ ! பதிவுலகம் !ம்ம் ஜோசிக்கின்றேன் பூரண தெளிவு எனக்கில்லை !படிக்காதவன் என்ன சொல்ல வருவதை எழுதுவோம் விரும்பினோர் வாசிக்க்ட்டும்////

நேரம் கிடைக்கும் போது வாங்க பாஸ்

K.s.s.Rajh said...

@ தனிமரம் said...
ஆள் இல்லாத கடையிலும் அருமையான சாமான் இருக்கும் விற்காட்டியும் விலைமதிக்க முடியாத அசையாச் சொத்து!ஹீ
/////

நிச்சயமாக பாஸ்

K.s.s.Rajh said...

@ தனிமரம் said...
அடுத்த வாரம் வாரன் உள்குத்து போட்டு வாந்தி எடுத்தோருக்கு தனிமரமும் மறுசீர் செய்யத்தானே வேண்டும்!ஹீ
////

ஹி.ஹி.ஹி.ஹி...........வாங்க வாங்க..........

K.s.s.Rajh said...

@
தனிமரம் said...
அதிகமான பார்வையாளர்கள் இன்னும் வர வாழ்த்துக்கள் பாஸ்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ Dr. Butti Paul said...
வணக்கமுங்கோ, ரொம்ப நாளைக்கு அப்புறமா ஒரு ப்ளாக் போஸ்டுக்கு கமெண்ட் போடுறேன். சீரியசோ, மொக்கையோ பதிவுகள் தரமா இருந்தா சரிதான். ஒரு லட்சத்துக்கு வாழ்த்துக்கள்.
/////

வாங்க பாஸ் மிக்க நன்றி பாஸ்

Unknown said...

அவரவர் வலையில் அவரவர் எண்ணப்படிதான் எழுத வேண்டும்
அதுதானே முறையானது! உங்கள்
எண்ணப்படி எழுதுங்கள்.

புலவர் சா இராமாநுசம்

”தளிர் சுரேஷ்” said...

அருமையா சொன்னீங்க ராஜ்! ஆளில்லா டீக்கடையில் யார் டீ ஆத்தறது! சூப்பர்! உங்களின் அருமையான நடையில் தாதா கங்குலியை எதிர்பார்க்கிறேன்! வாழ்த்துக்கள்!

K.s.s.Rajh said...

@s suresh
நன்றி பாஸ்

Athisaya said...

தொடருங்கள்.வாழ்தத்துக்கள்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails