Thursday, June 07, 2012

அன்பே எங்கே நீ......பகுதி-3


சரி நீ படுத்துக்கொள் என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியால் வந்தேன். என் மனம் எங்கும் தொலைந்து போயிறுந்த ராகவி பற்றிய நினைவுகள். நான் இன்றுவரை தேடிக்கொண்டு இருக்கும் ராகவியை பற்றி என் மனைவியிடம் எதுவும் சொன்னதில்லை என் மகளுக்கு ராகவி என்று பெயரைதான் வைக்கவேண்டும் என்று அடம்பிடித்து வைத்தேன்.
ஆனால் மெல்ல மெல்ல ராகவியை நான் மறந்து போயிருந்தேன்.ஆனால் இப்போது கனவில் வந்து அவள் மீதான நினைப்பை மீள் ஞாபகம் செய்துவிட்டாள்.


இனி

இப்போது 2016 இல் இருக்கின்ற சரன் வேறு இன்றைக்கு பத்து வருடங்களுக்கு  முன் இருந்த சரன் வேறு 

அப்போது வாழ்க்கையில் சாதாரன நிலையில் இருக்கின்ற .நிறைய கனவுகளுடனும் நிறைய கற்பனைகளுடன் வாழுகின்ற சாமனிய இளைஞன்.
என் வாழ்க்கையில் தான் எத்தனை போராட்டங்கள், எத்தனை கஸ்டங்கள் ஆனாலும் நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றேன். கிடைப்பதை கொண்டு சந்தோசமாக வாழும் வாழ்க்கையின் ரகசியத்தை எனக்கு அருளியதற்காக மட்டுமே கல்லாய் இருக்கும் கடவுளை வணங்குவேன்.

நான் ஒன்றும் பெண்களால் ஆசீர்வதிக்கப் பட்டவன் இல்லை. பெண்களுக்கும் எனக்கும் வெகு தூரம் அதுவும் காதலுக்கும் எனக்கு மிக மிக தூரம்.என்னதான் நான் விலகி சென்றாலும் காதல் என்னை விட்டுவைக்கவில்லை.

பத்து வருடங்களுக்கு முன் ஒரு ஜனவரி மாதத்தில் ஒரு நாள்.....
அந்த அலுவலகத்தில் புதிதாக அன்றுதான் வேலைக்கு சேர்ந்திருந்தேன்.அன்றுதான் முதன் முதலாக அவளை பார்த்தேன்.வெள்ளை நிற சுடிதாரில் ஒரு தேவதையாக என் முன்னே தோன்றினாள்.நான் பார்த்த நொடியில் அவள் மேல் காதல் கொள்ளவில்லை.அவளை பார்த்த அந்த நிமிடம் என்னுள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை வைரமுத்துவின் வரிகள் போல வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாத உருண்டை உருளவில்லை.


என் அலுவலகத்தில் வேலை செய்யும் சக ஊழியர் என்பதை தவிர வேறு எதுவும் தோணவில்லை.

அதுவரை காதல் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது.பப்பி லவ் என்பார்களே அதாவது மிகச்சிறிய வயதில் மனதில் எழும் காதல்தான் பப்பி லவ். இந்த பப்பி லவ் பெரும்பாலும் எம்மைவிட வயது கூடிய பெண்கள் மேல்தான் உருவாகுமாம்.
அதுவரை எனக்கு யார்மேலும் பப்பி லவ்கூட வந்தது இல்லை.

நான் அலுவலகத்தில் சேர்ந்த இரண்டு வருடங்களில் அவளுடன் பெரிதாக பேசியது இல்லை. இரண்டு ஒரு வார்த்தைகள் பேசுவேன் அதுவும் பணி நிமித்தமாக மட்டும். மற்றும் படி கண்டால் ஒரு சின்ன சிரிப்பு அவ்வளவுதான் எனக்கும் அவளுக்குமான இந்த இரண்டு வருட உறவு.

ஆனாலும் என்னை அறியாமல் அவள் என்னுள் ஓரு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாள். இதை நான் அறிந்து கொள்ள கிட்ட தட்ட இரண்டு வருடம் எடுத்தது.

அவள் மேல் இனம்புரியாத ஒரு ஈர்பு வந்தது.அலுவலகத்தில் எத்தனை பெண்கள் வேலை செய்தாலும்.அவளை மட்டுமே பார்த்து கொண்டு இருக்கனும் போல இருக்கும்,இரவிலும் பகலிலும் அவள் விம்பம் என்னுள் அலைந்து திரியும்.காலையில் நேரத்துக்கு அலுவலகத்துக்கு போகத்தோணும் இரவுகள் பொழுதுகளை வெறுக்கத் தொடங்கினேன்.

அலுவலகத்தில் அவள் செய்யும் குறும்புகளை ரசிக்கத்தொடங்கினேன்.அவளது பேச்சு,சிரிப்பு,அவள் ஒவ்வொரு அசைவையும் வைத்த கண்வாங்காமல் ரசித்தேன்.என்னுள் ஏன் திடீர் என இவ்வளவு மாற்றங்கள் ஒரு நொடியேனும் அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை 
வைரமுத்துவுன் வரிகள் நிஜமாகின வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாத ஒரு உருண்டை உருண்டது.

ஓ........... இதுதான் காதலா........என்னுள் தென்றலாய் புகுந்து காதல் புயலை ஏற்படுத்திய அந்த தேவதைதான் ராகவி


உடலில் ஏற்படும் ஹோர்மோன்களின் மாற்றம் என்று காதலை சொல்லமுடியாது அது ஒரு அற்புதமான உணர்வு.அது ஒரு கொடை எல்லோறும் காதல் தேவதையால் ஆசிர்வதிக்கப் பட்டவர்களாக இருக்கமுடியாது.ஆனால் எனக்கு காதல் தேவதையே காதலியாக என் கண்முன்னே தெரிந்தாள் ராகவி உருவத்தில்.

வர்ணிப்பதற்கு வார்த்தைகள் அற்ற பேரழகி அவள்.
ஏழை காதலன் நான் அவளை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.என்னை ஆட்கொண்ட ராகவியிடம் என்காதலை சொல்ல சமயம் பார்த்து இருந்தேன்


இரண்டு வருடங்களாக ராகவியை தெரிந்திருந்தும் அவளுடன் நெருங்கி பழகியது இல்லை ஒரே அலுவலகத்தில் வேலை செய்தாலும் அவளுடன் ஏனைய நண்பர்கள் நெருங்கி பழகும் போதும் அலுவலகத்தில் எல்லோறும் சந்தோசமாக பேசிக்கொண்டு இருக்கும் போதும் நான் அமைதியாகவே இருப்பேன் என் அமைதியை பலர் கிண்டல் செய்த போது அது என் இயல்பு என்பதால் நான் பெரிதாக அலட்டிக்கொள்வது இல்லை இப்போது ராகவி மீது என் மனம் காதல் கொண்டது எப்படி என்று என்னிடம் நானே பல முறை கேட்டுக்கொண்டேன்.

இப்போது அவளை ஏதோ புதிதாக பார்பது போல தோன்றியது ஓவ்வொறு நாளும் அவளின் ஓவ்வொறு அசைவையும் நான் ரசிக்கத்தொடங்கியதை அவள் அறியாமல் இல்லை ஆனால் பெண்களுக்கே உரிய குணமான ஆண்கள் தங்களை ரசிக்கின்றார்கள் என்று தெரிந்தாலும் தெரியாதது மாதிரி காட்டிக்கொள்ளும் செயலுக்கும் ராகவி மட்டும் விதிவிலக்கா என்ன?

அவளுடன் பேசவேண்டும் அவளுடன் பழகவேண்டும் என்று என் மனம் வாடியது ஒரு நாள் அவளுடன் போய் பேசினேன் ஹாய் ராகவி ஹாய் சரன்
என்று ஆரம்பித்த எங்கள் பேச்சு பல விடயங்களை அலசி கடைசியில் பலகாலம் பழகும் நண்பர்களை போல முடிந்தது.எனக்கே ஆச்சரியமாக இருந்தது நானா இப்படி பேசினேன்.ராகவியும் என்னிடம் சொன்னாள் தான் இதுவரை யாரிடமும் இப்படி மனம் விட்டு பேசியது இல்லை உங்களிடம் தான் முதல் தடவையாக பேசினேன் என்று.எங்கள் இருவருக்கும் பலவிடயங்கள் ஒத்துப் போவதை நாங்கள் இருவரும் அறியமுன் எங்கள் மனங்கள் அறிந்துகொண்டன.

என் மனதில் வீழ்ந்த காதல் விதை விருட்சமாகி நின்றது. தினம் தினம்  ராகவியின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கிக்கிடந்தேன் அவள் மடியில் தலைவைத்து தூங்கும் நாளிற்காக வாடியிருந்தேன்.என் கிறுக்கல்கள் எல்லாம் கவிதையாகின.என் காலம் எல்லாம் அவள் காலடியில் கிடக்க தவம் கிடந்தேன்.பசி தூக்கம் மறந்து பைத்தியம் ஆனேன்.அவளை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் புதிதாக பிறந்தேன்.

இந்த காதல் செய்யும் மாயம்தான் என்ன? காதல் வரும் வரை தொல்லை இல்லை வந்தபின் தொல்லை ஆனந்த தொல்லை.

ஒரு நாள் அலுவலகத்துக்கு வந்த ராகவியின் முகத்தில் அந்த சிரிப்பு இல்லை பார்த்த உடன் பத்திக்கொள்ளும் அந்த மின்னல் பார்வை இல்லை சோர்த்து போயிருந்த அவள் விழிகள் எதையோ சொல்லியது ஆனால் விழிகளின் வழியே பெண்களின் மனதை படிக்கமுடியுமா என்ன? எனவே என்ன ராகவி
எனி ப்ராப்ளம் என்று அவளிடமே கேட்டேன்.


ஒன்றும் இல்லை சரன் சும்மா வீட்டில் கொஞ்சம் ப்ராப்ளம் என்றாள் என்ன என்னிடம் சொல்லக்கூடாதா சொல்லவேண்டாம் என்றால் ஓக்கே நோ ப்ராப்ளம் என்றேன்.

இல்லை சரன் வீட்டில் எனக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க எனக்கு துளியும் அதில விருப்பம் இல்லை.அதுதான் வீட்டில் ஒரே சண்டை

ஏன் ராகவி உங்களுக்கு மேரேஜ் பண்ண விருப்பம் இல்லையா?இல்லை உங்கள் வீட்டில் பார்த்த மாப்பிளை பிடிக்கலையா?

மேரேஜ் விருப்பம் தான் ஆனால் எனக்கும் மனசு என்று ஒன்று இருக்குத்தானே அதில் என்ன விருப்பம் இருக்கு என்று வீட்டில் கேட்கவேயில்லை அதுதான் கவலையா இருக்கு


அப்ப நீங்க யாரையாவது லவ் பண்ணுறீங்களா ராகவி

இல்லை சரன்
(தொடரும்)

முஸ்கி-இந்த கதையின் முதல் பந்தியில் 2016 ஆம் ஆண்டு என்று தவறுதலாக குறிப்பிடவில்லை இந்தக் கதையின் நிகழ்காலம் 2016 இல் நடப்பதாகவே சித்தரித்துள்ளேன்.


முன்னைய பகுதிகளை படிக்க-
பகுதி-1
பகுதி-2


********************************************************************************
*********************************************************************************


Post Comment

9 comments:

Athisaya said...

வணக்கம் நண்பா...!உங்க ராகவிக்கு என்னதா பிரச்சனையாம்???சீக்கிரம் கேட்டு சொல்லுங்க..விறுவிறுகப்பும் ரசனையும்,,,!தொடருங்கள்.சந்திப்போம் சொந்தமே..!

Yoga.S. said...

வணக்க,ராஜ்!!!நல்லாப் போகுது,கதை!நல்லாவே விமர்சிக்கிறீங்க,காதலை,ஹி!ஹி!ஹி!!!////2016-ன்னு தவறுதலா குறிப்பிடேல்லையாம்!!!!விளங்குது அண்ணே!

தனிமரம் said...

அட இப்படி ஒரு திருப்பமோ ராகவி மேல் ம்ம் தொடருங்கள்§

தனிமரம் said...

என்ன பப்பி லவ்வர் ஓ ஐஸ்வரியா ம்ம் புரியுது லொல்லு!

K.s.s.Rajh said...

@Athisaya

நன்றி அக்கா

K.s.s.Rajh said...

@
Yoga.S. said...
வணக்க,ராஜ்!!!நல்லாப் போகுது,கதை!நல்லாவே விமர்சிக்கிறீங்க,காதலை,ஹி!ஹி!ஹி!!!////2016-ன்னு தவறுதலா குறிப்பிடேல்லையாம்!!!!விளங்குது அண்ணே/////

ஹி.ஹி.ஹி.ஹி........நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ தனிமரம் said...
அட இப்படி ஒரு திருப்பமோ ராகவி மேல் ம்ம் தொடருங்கள்§
/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் said...
என்ன பப்பி லவ்வர் ஓ ஐஸ்வரியா ம்ம் புரியுது லொல்லு/////

ஹி.ஹி.ஹி.ஹி...........

Mahesh said...

வணக்கம் அண்ணே


கதை ஸ்வாரஸ்யமா போயிகிட்டு இருக்கு!





ராகவிக்கு என்ன பிரச்சனை தெரியல சீக்கிரம் போடுங்அ அடுத்தபகுதிய!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails