Monday, June 18, 2012

அன்பே எங்கே நீ......பகுதி-5


ராகவி இப்போது எப்படி இருப்பாள் கல்யாணம் ஆகியிருக்குமா இல்லையா?
அவளை மீண்டும் பார்க்க வேண்டும் என்று என் மனம் தவித்தது.தீவிரமாக ராகவியை தேடத்தொடங்கினேன்.
இனி.......

கிளிநொச்சி யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 வீதியில் தெற்காக 68 கிலோமீட்டர் தூரத்திலும் வவுனியாவிலிருந்து வடக்காக 75 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. 

ஈழத்தில் முப்பது வருடங்களுக்கு மேலாக குருதி கறை படிந்த யுத்த பூமி.விடுதலைப் புலிகளின் நிர்வாக மையம்,வன்னியின் வளமான நகரம்,இப்படித்தான் கிளிநொச்சியை பலர் அறிந்திருப்பீர்கள்.ஆனால் கிளிநொச்சி மண்ணிற்கு இவைகளை தாண்டி அழகான பல முகங்கள் உண்டு.

கல்வி,விளையாட்டு,நாடகம் போன்ற பல்வேறு துறைகளில் அந்த யுத்த காலத்திலும் தேசிய மட்டம் வரை சென்ற பல திறமையானவர்களை உருவாக்கிய மண்,இந்த மண்ணில் இருந்து பல மருத்துவர்கள் உட்பட பல கல்விமான்கள் உருவாகியிருக்கின்றார்கள்,

அதைவிட கிளிநொச்சி மண் ஒரு விவசாய பூமி கிளிநொச்சி நகரத்தை தாண்டி சென்றால் பச்சை பசேல் என எங்கும் விவசாய நிலங்களைக் காணலாம்,இயற்கையான தென்றல் காற்று மேனி எங்கும் தவழும் போது.வயல் வெளிகளில் மரநிழலில் இளைப்பாருவதில் உள்ள சுகம் கோடி ரூபாய் காசு கொடுத்தாலும் கிடைக்காது.


பல ஆயிரம் விவசாயிகளின் துயர் துடைக்கும் பசுமையான மண்.இலங்கையில் புகழ் பெற்ற குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் அமைந்துள்ளது கிளிநொச்சியில் தான்.
இரணைமடுக் குளம்

கிளிநொச்சி நகரத்தில் A-9 வீதியில் அமைந்துள்ள கிளிநொச்சி கந்தசாமி கோவில் கிளிநொச்சி நகரத்தின் பாரம் பரியங்களில் ஒன்றாகும்.

கிளிநொச்சி கந்தசாமி கோயில்

அலுவலகத்தில் சரன் உங்களுக்கு வேலை மாற்றம் நீங்கள் கிளிநொச்சிக்கு போகவேண்டும் என சொன்னபோது எனக்கு எந்த விதமான கஸ்டமும் இருக்கவில்லை. காரணம் புதிதாக ஓரு ஊருக்கு போகும் போது அங்கே சிலவேளைகளில் ராகவியை காணலாம் என்ற ஒரு எண்ணம்தான்.அதைவிட கிளிநொச்சி என்றதும் எனக்கு இரட்டிப்பு சந்தோசம் காரணம் பத்துவருடங்களுக்கு முன்பு ராகவி மேல் காதல் அரும்பிய இடம் இந்த கிளிசொச்சி மண்தான். ஒருவேளை ராகவி மீண்டும் இங்கே இருப்பாளோ என்ற ஒரு தவிப்பில் பத்துவருடங்களுக்கு பிறகு தற்போது 2016 இல் என் கால்தடம் என் மண்ணில் பதிந்தது.


எவ்வளவோ மாற்றங்கள்? முற்றாக மாறியிருந்தது.
பாடசாலையில் படிக்கும் போது சைட் அடித்த நினைவுகள், பின் அலுவலகத்தில் வேலைசெய்யும் போது ராகவி மேல் வந்த காதல்,நண்பர்களுடன் கூடி கும்மி அடித்த நினைவுகள்.இப்படி பழய ஞாபகங்கள் மனதில் வந்து போனது.

ராகவி முன்பு இருந்த தெருவை கடக்கும் போது மனதில் ஏதோ ஒரு இனம்புரியாத இன்பம்.எத்தனை நாட்கள் ராகவியை பார்பதற்காக இந்த தெரு முனையில் நின்றிருப்பேன்.ராகவியின் தெருவுக்கு முன்பு ஒரு ஜஸ் கிறீம் கடை இருந்தது. ஒரே அலுவலகத்தில் வேலைசெய்தாலும் ராகவிக்கு முன்பு வேகமாக வந்து அந்தக் கடையில் ஒரு ஜஸ் சொக் வாங்கி சாப்பிட்டுக் கொண்டே ராகவி அவள் தெருவுக்குள் நுழையும் போது சைட் அடிப்பதில் உள்ள சந்தோசம் இருக்கே.ஸ்....ஸப்பா அது ஒரு அழகான காலங்கள்.
இப்போது அந்த ஜஸ் கிறீம் கடை இருந்த இடத்தில் வேறு ஏதோ ஒரு கடை இருக்கின்றது.


காலையில் வேகமாக எழுந்து அவசர அவரசமாக கிளம்பி ராகவிக்கு முன் அவள் என்னை பார்த்திடாதவாரு அவள் தெருவில் போய் நிற்பேன்.தூரத்தில் அவள் வரும் அழகை ரசிப்பது கண்கொள்ளாக் காட்சி.

”எப்படி பக்தர் கூட்டத்துக்கு நடுவே வரிசையில் காத்திருந்து மெது மெதுவாக மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்கும் போது மனதில் ஒரு ஆத்ம திருப்தி வருமோ”அதே போல என் மீனாட்சி அம்மனை தரிசிக்க நான் அவள் தெருவில் தவம் கிடப்பேன் மெது மெதுவாக அவள் அலுவலகம் கிளம்பி வரும் போது அவள் திருமுகம் பார்த்தே என் பொழுதுகள் விடியும்.அலுவலகத்தில் நாள் பூராகவும் அவளை பார்த்துக்கொண்டு இருக்கப் போகின்றேன் என்றாலும் காலையில் தெருவில் காத்திருந்து அவளை பார்த்துவிட்டு வருவதில் ஒரு ஆத்ம திருப்த்தி எனக்கு.


திரும்ப கிடைக்காது என்று தெரிந்தும் மீண்டும் வாழத்துடிக்கும் அழகான நாட்கள் அவை. 
(தொடரும்)


முஸ்கி-இந்தக் கதையை ஒரு பின்புலத்துடன் நகர்த்திச்சென்றால் மேலும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நண்பர்,வாசகர்,சகோதரன்,சக பதிவர்,தனிமரம் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக என் சொந்த ஊரான கிளிநொச்சியை கதையின் பின்புலமாக குறிப்பிட்டுள்ளேன்.மற்றும் படி இந்தக் கதைக்கும் கிளிநொச்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை முன்பு நான் சொல்லிய படி இது முழுவதும் கற்பனைக் கதையே.

முன்னைய பகுதிகளை படிக்க இங்கே கிளிக்-
*********************************************************************************

முன்பு என் தளத்தில் வெளிவந்து பல வாசகர்களை என் தளத்திற்கு அள்ளித்தந்த, பதிவுலகில் என் பதிவுகளுக்கும் ஒரு அங்கிகாரம் தந்த,வெறும் கிரிக்கெட் பதிவராக மட்டுமே பதிவுலகில் அறியப் பட்ட என்னை பல்சுவைப் பதிவராக அடையாளம் காட்டிய ,விகடனில் முதன் முதலாக என் தளம் குட் ப்ளாக்காக தெரிவாக காரணமாக அமைந்த ”மறக்க முடியாத பாடசாலை நாட்கள்”தொடர் பல வாசகர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக மீண்டும் புதுப் பொழிவுடன் மீள் பதிவாக விரைவில் வெளியாக இருக்கின்றது.அத்துடன் நண்பர் ஒருவரின் உதவியுடன் அதை ஒரு புத்தகமாக வெளியிடுவதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது என்பதனை அன்புடன் அறியத்தருகின்றேன்.
*********************************************************************************
தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை எங்கே காணவில்லை எனக்கு மட்டுமா ஏனைய பதிவர்களுக்குமா நண்பர்களே

Post Comment

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

புத்தகமாக விரைவில் வெளிவர வாழ்த்துக்கள் !

தமிழ்மணம் ஒட்டுப்பட்டை யார் தளத்திலும் நேற்று முதல் இப்போது வரை காணவில்லை நண்பரே ! நன்றி !

Unknown said...

நண்பா இந்த பாகத்தில் கதையின் அளவு மிக குறைவு ஏமாந்திட்டன் . அடுத்த பாகத்தில் கொஞ்சம் சேர்த்து எழுதுங்கள்.

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ajatheer said...
நண்பா இந்த பாகத்தில் கதையின் அளவு மிக குறைவு ஏமாந்திட்டன் . அடுத்த பாகத்தில் கொஞ்சம் சேர்த்து எழுதுங்கள்////


நிச்சயமாக நன்றி பாஸ்

தனிமரம் said...

கிளிநொச்சியில் வேலைக்குப் போகும் சரன் மாற்றம் நல்லாத்தான் இருக்கும் போல !ம்ம் அப்ப ராகவி கானுவானா ஆவலோடு தொடர்கின்றேன்!

தனிமரம் said...

தம்பிக்கு ஐஸ்மேல்!ஹீ வேற நம்மவர் படம் இல்லையோ!

தனிமரம் said...

அழகான குளப்படம் மீண்டும் பார்க்கும் கிளி/ கந்தசாமிகோவில் படம்!ம்ம் இயற்கையின் சுகம் கோடி கிடைத்தாலும் கிட்ட வராது!தொடர்கின்றேன்.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails