”எப்படி பக்தர் கூட்டத்துக்கு நடுவே வரிசையில் காத்திருந்து மெது மெதுவாக மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்கும் போது மனதில் ஒரு ஆத்ம திருப்தி வருமோ”அதே போல என் மீனாட்சி அம்மனை தரிசிக்க நான் அவள் தெருவில் தவம் கிடப்பேன் மெது மெதுவாக அவள் அலுவலகம் கிளம்பி வரும் போது அவள் திருமுகம் பார்த்தே என் பொழுதுகள் விடியும்.அலுவலகத்தில் நாள் பூராகவும் அவளை பார்த்துக்கொண்டு இருக்கப் போகின்றேன் என்றாலும் காலையில் தெருவில் காத்திருந்து அவளை பார்த்துவிட்டு வருவதில் ஒரு ஆத்ம திருப்த்தி எனக்கு.திரும்ப கிடைக்காது என்று தெரிந்தும் மீண்டும் வாழத்துடிக்கும் அழகான நாட்கள் அவை.
இனி.........
பழய இடம் பழகிய ஊர் என்றாலும் என்றாலும் முற்றாக மாறியிருந்த என் ஊரில் முதல் நாள் வேலைக்கு சென்றேன் புதிய அலுவலகம் புதிய நண்பர்கள்
உருவானார்கள். இப்படித்தானே பத்து வருடங்களுக்கு முன் ஒர் நாள் புதிதாக வேலைக்கு சென்ற போது ராகவியை முதன் முதலில் சந்தித்தேன்.
|
|
