Thursday, June 21, 2012

அன்பே எங்கே......நீ- பகுதி-6(இறுதிப் பகுதி)


”எப்படி பக்தர் கூட்டத்துக்கு நடுவே வரிசையில் காத்திருந்து மெது மெதுவாக மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்கும் போது மனதில் ஒரு ஆத்ம திருப்தி வருமோ”அதே போல என் மீனாட்சி அம்மனை தரிசிக்க நான் அவள் தெருவில் தவம் கிடப்பேன் மெது மெதுவாக அவள் அலுவலகம் கிளம்பி வரும் போது அவள் திருமுகம் பார்த்தே என் பொழுதுகள் விடியும்.அலுவலகத்தில் நாள் பூராகவும் அவளை பார்த்துக்கொண்டு இருக்கப் போகின்றேன் என்றாலும் காலையில் தெருவில் காத்திருந்து அவளை பார்த்துவிட்டு வருவதில் ஒரு ஆத்ம திருப்த்தி எனக்கு.திரும்ப கிடைக்காது என்று தெரிந்தும் மீண்டும் வாழத்துடிக்கும் அழகான நாட்கள் அவை. 

இனி.........
பழய இடம் பழகிய ஊர் என்றாலும் என்றாலும் முற்றாக மாறியிருந்த என் ஊரில் முதல் நாள் வேலைக்கு சென்றேன் புதிய அலுவலகம் புதிய நண்பர்கள்
உருவானார்கள். இப்படித்தானே பத்து வருடங்களுக்கு முன் ஒர் நாள் புதிதாக வேலைக்கு சென்ற போது ராகவியை முதன் முதலில் சந்தித்தேன்.

வீட்டில் என் மனைவிடம் எதுவுமே சொல்லவில்லை இரவில் மெளனமாக அழும் என் இதயத்தின் வலியை அவள் அறிந்திருக்கவில்லை.கடவுள் ஒரு விசித்திரமான படைப்பாளி அவன் படைப்பில்தான் எத்தனை திருப்பங்கள்
நாம் அளவுக்கு அதிகமாக அன்பு வைக்கும் ஓவ்வொறுவரிடமும் அருகில் இருக்க முடியாவிட்டால் நாம் ஓவ்வொறுவரும் அனாதைகள் தான்.என் கண்ணுக்கு என் மனைவி அனாதையாக தெரிந்தாள் ஆம் என்னில் அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் ஒருத்தியிடம் முழுமனதோடு என்னால் இருக்க முடியவில்லை ராகவியின் நினைவுகளை அழிக்கவும் முடியவில்லை இவ்வளவு காலமும் அவளை நான் மறந்திந்தாலும் இதயத்திலிருந்து அவள் முழுவதுமாக அழிக்கப் படவில்லை அதுதான் மீண்டும் அவள் நினைவுகள் என்னுள் உயிர்ப்பெற்றன.


”காதல் ஒரு அழகான உணர்வு அதை நேசிப்பவர்களால் மட்டுமே சுவாசிக்க முடியும் காதலை சுவாசிப்பவர்களால் மட்டுமே நேசிக்க முடியும்”

நான் ராகவியை நேசித்ததால் காதலை சுவாசிக்கின்றேன் ராகவியின் நினைவுகளை சுவாசிப்பதால் காதலை நேசிக்கின்றேன்.

ஒரு நாள் என் மனைவியின் சித்தி முறையான பெண் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். இருவரும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தனர்.

அவர்கள் பேச்சுக்கிடையில் நேசன் என்ற பெயர் அடிபட்டது நேசன் என்ற பெயரைக் கேட்டதும் என் மனைவியின் முகம் மாறியதை கவனித்தேன் யார் நேசன் என்று அறிந்து கொள்ள ஆவல் பிறந்தது.

ஆனால் அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை.காலப் போக்கில் நானும் இதை மறந்துவிட்டேன் ஒரு வருடத்தின் பின் என் மகன் பிறந்த போது என் மனைவி நேசன் என்ற பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று சொன்ன போது. எனக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது யார் நேசன்? அன்றைக்கு நீயும் உன் சித்தியும் பேசிக்கொண்டு இருந்தீர்கள். இப்போது குழந்தைக்கு நேசன் என்று பெயரை வைக்க வேண்டும் என்கின்றாய் யார் நேசன் என்று கேட்டேவிட்டேன்.

என் மனைவி அவசியம் தெரியவேண்டுமா? என்று கேட்டாள் நானும் ஆம் என்று சொன்னேன் அதற்கு மனைவியின் சித்தி சொன்னார் நான் சொல்கின்றேன் தம்பி நேசன் யார் என்று?
எனக்கு பயங்கர கோபம் ஓ குடும்பத்துக்கே தெரியுமா? சொல்லுங்க கேட்போம் என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டேன்.

மனைவியின் சித்தி சொல்வதை கேட்க எனக்கு தலை சுற்றியது
சின்ன வயதில் ஊரைவிட்டு ஓடிப்போன கால ஓட்டத்தில் மறந்து போன அவளது சித்திபையன் தான் நேசன்...வன்னியில் இடம் பெற்ற யுத்ததின் போது அவன் இறந்துவிட்டதாகவும் சின்ன வயதில் என் மனைவியிடம் அன்பாக இருப்பான் என்றும் சொன்னார்.

என் மனம் கூனிக் குறுகியது எவ்வளவு கெட்ட சிந்தனை எனக்கு ராகவி மேல் இருந்த காதலினால் என் குழந்தைக்கு ராகவி என்று பெயர் வைத்தது போல என் மனைவியும் நேசன் என்ற பெயரை மகனுக்கு வைக்கவேண்டும் என்று சொன்ன போது என் மனதில் எழுந்த சந்தேகத்துக்கு என்னை நானே திட்டிக்கொண்டேன்.


அப்போதுதான் கவனித்தேன் என் மனைவிக்கு அடுத்து இருந்த கட்டிலின் அருகே ஒருவர் தனக்கு புதிதாக பிறந்த குழந்தையை கொஞ்சிக் கொண்டு இருந்தார்.அவரின் மனைவி அந்தப் பக்கம் திரும்பி படுத்திருந்தமையால் அவரின் முகத்தை பார்க்க முடியவில்லை.


அப்போது அவர் சரன் இங்க வா என்று கூப்பிட்டார்?

சரன் என்றதும் நான் திரும்பி என்ன சார் என்றேன்? அவர் சாரி சார் நான் உங்களை கூப்பிடவில்லை என் பையனைக்கூப்பிட்டேன் என்றார்.வாசலில் ஒரு ஜந்து வயது மதிக்கதக்க பையன் ஓடி வந்து என்ன டாடி என்று அவரின் கழுத்தை கட்டிக்கொண்டான்.

உங்க பையன் பெயரும் சரனா சார் என் பெயரும் சரன் என்றேன்.சரன் என்ற பெயர் கேட்டதும் அந்தப் பக்கம் திரும்பி படுத்திருந்த அவரின் மனைவி எங்கள் பக்கம் திரும்பினாள்.


என் கண்களை என்னால் நம்ம முடியவில்லை பத்து வருடங்களாக நான் தேடிக்கொண்டு இருக்கும் என் தேவதை ராகவிதான் அவரின் மனைவி.
பத்து வருடங்களுக்கு முன் அவள் மொழிகள் என்னிடம் சொல்லத்தயங்கிய விழிகளின் வழியே நான் அறிந்து கொள்ளத் தவறிய காதலை அவள் பையனின் பெயர் சரன் என்பதன் மூலம் நான் இன்று அறிந்து கொண்டேன்.

பதிலுக்கு நான் என் குழந்தையை சத்தமாக ராகவி என்று அழைத்தேன் என் மகள் ஓடிவந்து என் கழுத்தை கட்டிக்கொண்டாள்.நான் என் தேவதையிடம் சொல்லத் தயங்கிய காதலை இப்போது சொன்னது போல ஒரு திருப்த்தி....


(முற்றும்/யாவும் கற்பனை)



முன்னைய பகுதிகளை படிக்க இங்கே கிளிக்-
பகுதி-1
பகுதி-2
பகுதி-3
பகுதி-4
பகுதி-5

*********************************************************************************

நான் ஆச்சரியமுடன் பார்க்கும் ஒரு மனிதன் என் சிறுவயது முதல் இன்றுவரை இவர் மீதான அபிமானம் மட்டும் குறையவே இல்லை. அது இவர் சறுக்கிய போதும் சரி ஒரு துளிகூட இவர்மேலான மதிப்பு குறையவில்லை.எனக்கு மட்டும் இல்லை அனைத்து தாதா ரசிகர்களுக்கும் தாதா மீதான அபிமான என்றும் ஒரு துளியேனும் குறையாது. 



விரைவில் உங்கள் நண்பர்கள் தளத்தில் ”வரலாற்றை மாற்றிய தாதா”கங்குலி பற்றிய தொடர் இது என் கனவுத்தொடராகும் நான் வலைப்பதிவு எழுதவந்ததே இவர் பற்றிய ஒரு தொடர் எழுதத்தான் ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இப்போதுதான் அமைகின்றது.கங்குலி ரசிகர்கள் இல்லாத கிரிக்கெட்டை ரசிக்கும் ஒவ்வொறுவரையும் இந்த தொடர் நிச்சயம் கவரும் விரைவில் எதிர்பாருங்கள்

*********************************************************************************

Post Comment

7 comments:

தனிமரம் said...

வணக்கம் பாஸ்!
ராகவி,சரன் ம்ம் இருவரும் இருபட்ட யதார்த்த வாழ்வில் இல்லறம் கண்டார்கள் இந்த முடிவும் நல்லாகத்தான் இருக்கு!

தனிமரம் said...

சில நேரங்களில் எங்கேயோ எல்லாம் தேடுவோம் அருகில் இருப்பவரை மறந்துவிட்டு மனம் ஒரு விசித்திரம் தான்!

தனிமரம் said...

வாசிச்சுக் கொண்டு வந்த போது என் பெயரும் வர நானும் பயந்துவிட்டேன் ஹீ ஓடிப்போனவர்களையும் /தொலைந்து /காணமல் போனவர்களையும் நேசிக்கும் அன்பு பலருக்கு இருக்கும் தானே  ஈழத்து பல இடங்களில் பலருக்கு!ம்ம்ம்ம் அவர்கள் அன்புமீது சந்தேகம் வேண்டாம் என்பதைச் சொல்லிச் செல்லும் தொடருக்கு  வாழ்த்துக்கள் ராச்!

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவில் சுபம் ! நன்றி !

Yoga.S. said...

வணக்கம்,ராஜ்!!!சட்டென்று முடித்து விட்டீர்கள்.இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கனவு கண்டிருக்கலாம்.///இடையில் எங்கள் கணணியும் ஓய்வு கேட்டது,விடுவோமா?தமிழர்கள் ஆச்சே?ஒரு வழியாக கிண்டிக் கிளறி...........ஹும்!///ராகவி/சரண் ம்..ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்!....!!!

Athisaya said...

வணக்கம்...அதுக்குடன முடிஞ்சே???ஃஅருமையான கங்பனை..அழகு

K.s.s.Rajh said...

அனைவருக்கும் நன்றி நண்பர்களே

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails