Saturday, June 23, 2012

தேவதையின்(தேவயாணி) பிறந்தநாள்

இந்தப் பதிவு நேற்று வெளிவந்திருக்கவேண்டிய பதிவு ஆனால் என் இணைய இணைப்பு சதிசெய்ததால் வெளியிட முடியவில்லை இருக்கட்டும் ஒரு நாள் லேட்டா சொன்னால் என்ன?நேற்று(22-6-2012) தேவதை தேவயாணியின் பிறந்தநாள்


5 வயதில் இருந்து இன்றுவரை இவர் மேலானா ரசனை இன்னும் மாறவில்லை.நான் முதன் முதலாக இவரின் எந்தப் படம் பார்த்தேன் என்று ஞாபகம் இல்லை காரணம் முதல் படத்தில் பார்த்த அந்த நொடியில் என்னை மறந்துவிட்டேன்.

சினிமாவில் பிரபலமாக இருந்த போதே திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கி பின் சில படங்கள் நடித்தாலும் என்றும் அவரின் ரசிகர்கள் மனதில் நீங்காதா இடத்தில் இருக்கும் தேவயாணியின் எண்ணிலடங்காத ரசிகர்களில் நானும் ஒருவன்.


தேவயாணியின் கடந்த பிறந்தநாளின் போது பதிவர் துஷி தேவயாணி பற்றி ஒரு பதிவு போட்டு இருந்தார்.அதை படித்துவிட்டுதான் அவரின் தளத்தின் வாசகனானேன் அதன் பின் அவருக்கும் எனக்கும் இடையில் ஒரு அழகான நட்பு உருவானது.அந்த அழகிய நட்பின் ஆரம்பம் தேவயாணி பற்றிய அந்தப் பதிவுதான்.

தேவயாணிக்கு கல்யாணம் ஆனப்போ அப்போது நான் சின்னப் பையனாக இருந்தாலும் ரொம்ப பீலிங்க ரூம்போட்டு அழுத ரசிகர்களில் நானும் ஒருவன்.


எனக்கும் சரி,துஷிக்கும் சரி ஓரே ஒரு ஆசைதான் தேவயாணியை ரசித்த கண்களில் அவரது மகள்கள் சினிமாவுக்கு வந்தால் அவர்களின் ரசிகர்களாகவும் இருக்கனும் அம்புட்டுதான்.



தேவதையோ நீ தேவயாணி
என் ரசனைகளின் ராணி நீ
அழகு என்ற சொல்லின் 
அர்த்தம் நான் அறிந்தது
தேவதை உன்னிடம் தான்.


என் கிறுக்களில் முதலில்
கவிதையானது உன் பெயர்தான்
பதினைந்து வருட ரசனை
பதினைந்து ஜென்மம் ஆனாலும் மாறாது


இன்னும் ஒரு ஜென்மத்திலும்
நீ தேவயானியாக பிறக்கவேண்டும்
அப்போதும் ரசிகனாக நான்
உலகில் எங்கோ ஒரு மூலையில்...........
(குறிப்பு-நீ என்ற இடத்தில் நீங்கள் என்று வரவேண்டும் மேடம் மன்னிச்சூ...)

தேவயாணிக்கு இனிய பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

முஸ்கி-நேற்றுத்தான் டாகுதர் விஜய்க்கும் பொறந்தநாள் 

Post Comment

18 comments:

தனிமரம் said...

அப்புறம் தேவயாணிக்கு வாழ்த்துச் சொல்லும் பதிவாளர் என்று சொல்லுங்கோ:))))

தனிமரம் said...

கவிதை வடிக்கும் அழகுக்கு அதில் ஒரு காணமும் சேர்த்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன் ஒரு தேவதை வந்துவிட்டாள் என்று தேவயாணிக்கு வாழ்த்துச் சொல்லியிருப்பம் இல்லையா அண்ணச்சிசீஈஈஈஈஈஈஈ!

தனிமரம் said...

ரூம் போட்டு அழுதீங்களா இல்லை ரம்மில்  ரூமில் இருந்து ஹீ 

தனிமரம் said...

ரசனையான பதிவு ராச் உங்களோடு நானும் சேர்ந்து பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்களை பிரபலயமான நடிகை நடிகருக்கு சொல்லுகின்றேன் .

சுதா SJ said...

ஹாய் மச்சி -:)

என்னடா நம்ம ஆளுக்கு நாம தான் ஓவர் பிஸியால வாழ்த்து பதிவு போடல்ல என்றா யாருமே போடல்லய்யே என்று ஒரே பீலா இருந்தோம், மச்சி நீ போட்டு என்னை ஹப்பி ஆக்கிட்ட... ஹீ ஹீ.... 

அழகு திறமை அதிஷ்டம் எல்லாம் ஒன்றாக அமைய பெற்ற ஒரு சில நடிகைகளில் ஒருவர் தேவயானி.

ரேவதி ஒதுங்க அந்த இடத்தை தேவயானி பிடித்தார்.. தேவயானி ஒதுங்க சினேகா வந்தார் இப்போ அஞ்சலி -:)

அஞ்சலிக்கும் தேவயானிக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.. இருவரும் ஹீரோக்களை கணக்கெடுப்பது இல்லை.

தேவயானி நடிக்கும் போது பிரகாஷ்ராஜ் லிவிங்ஸ்டன் என்று மூத்த நடிகர்களுடன் நடித்துக்கொண்டே அஜித் விஜய் பிரஷாந்த்  என்றும் கலக்கீட்டு இருந்தார்-:) இப்போ  அது போல் தான் அஞ்சலியும்.

எல்லா காலத்திலும் ரம்பா ஹன்ஷி என்று கவர்ச்சி நடிகைகள் ஆதிக்கம் இருந்தாலும்    பீல்டிலும் சரி ரசிகன் மனசிலும் சரி அதிகம் நிலைத்து நிப்பது  தேவயானி அஞ்சலி போன்ற ஹேம்லி நடிகைகளே.. ^_^

Unknown said...

தம்பி! நீங்க யாருக்குத்தான் ரசிகன் இல்லை!
சரண்யா
அஞ்சலி
காஜல்
தேவயானி
இன்னும் யார்..யார் எல்லாம் வருவாங்களோ!

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!(பாஸ்?)////எக்கேடு கெட்டும் போங்கடா,ஹ!ஹ!ஹா!!!!

திண்டுக்கல் தனபாலன் said...

என்னுடைய வாழ்த்தையும் சொல்லீடுங்க நண்பரே !

Unknown said...

மொக்க பீஸ்,

K.s.s.Rajh said...

@தனிமரம்

ஹி.ஹி.ஹி.ஹி..........

K.s.s.Rajh said...

@ தனிமரம் said...
கவிதை வடிக்கும் அழகுக்கு அதில் ஒரு காணமும் சேர்த்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன் ஒரு தேவதை வந்துவிட்டாள் என்று தேவயாணிக்கு வாழ்த்துச் சொல்லியிருப்பம் இல்லையா அண்ணச்சிசீஈஈஈஈஈஈஈ!
////

சாரி பாஸ் இனைய இணைப்பு மக்கர் பண்ணியதால் அவசரத்தில் எழுதிய பதிவு என்பதால் மறந்துவிட்டேன்

K.s.s.Rajh said...

@
தனிமரம் said...
ரூம் போட்டு அழுதீங்களா இல்லை ரம்மில் ரூமில் இருந்து ஹீ////

ரம் என்றால் என்ன பாஸ்?

K.s.s.Rajh said...

@ தனிமரம் said...
ரசனையான பதிவு ராச் உங்களோடு நானும் சேர்ந்து பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்களை பிரபலயமான நடிகை நடிகருக்கு சொல்லுகின்றேன் .
////

பிரபலமான நடிகை சரி அது என்ன பாஸ் பிரபலமான நடிகர்...ஹே.ஹே.ஹே.ஹே...............ஆகா மறுபடியுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் said...
ஹாய் மச்சி -:)

என்னடா நம்ம ஆளுக்கு நாம தான் ஓவர் பிஸியால வாழ்த்து பதிவு போடல்ல என்றா யாருமே போடல்லய்யே என்று ஒரே பீலா இருந்தோம், மச்சி நீ போட்டு என்னை ஹப்பி ஆக்கிட்ட... ஹீ ஹீ....

அழகு திறமை அதிஷ்டம் எல்லாம் ஒன்றாக அமைய பெற்ற ஒரு சில நடிகைகளில் ஒருவர் தேவயானி.

ரேவதி ஒதுங்க அந்த இடத்தை தேவயானி பிடித்தார்.. தேவயானி ஒதுங்க சினேகா வந்தார் இப்போ அஞ்சலி -:)

அஞ்சலிக்கும் தேவயானிக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.. இருவரும் ஹீரோக்களை கணக்கெடுப்பது இல்லை.

தேவயானி நடிக்கும் போது பிரகாஷ்ராஜ் லிவிங்ஸ்டன் என்று மூத்த நடிகர்களுடன் நடித்துக்கொண்டே அஜித் விஜய் பிரஷாந்த் என்றும் கலக்கீட்டு இருந்தார்-:) இப்போ அது போல் தான் அஞ்சலியும்.

எல்லா காலத்திலும் ரம்பா ஹன்ஷி என்று கவர்ச்சி நடிகைகள் ஆதிக்கம் இருந்தாலும் பீல்டிலும் சரி ரசிகன் மனசிலும் சரி அதிகம் நிலைத்து நிப்பது தேவயானி அஞ்சலி போன்ற ஹேம்லி நடிகைகளே.. ////

வா மச்சி நீண்ட நாளைக்கு அப்பறம்
மறப்போமா நம்ம தலைவிய
நேத்து இணைய இணைப்பு சதி பண்ணியதால் பதிவு போடமுடியவில்லை

K.s.s.Rajh said...

@ வீடு சுரேஸ்குமார் said...
தம்பி! நீங்க யாருக்குத்தான் ரசிகன் இல்லை!
சரண்யா
அஞ்சலி
காஜல்
தேவயானி
இன்னும் யார்..யார் எல்லாம் வருவாங்களோ!
////
அழகான நடிகைகள் எல்லோறுக்கும் நான் ரசிகன் பாஸ்

K.s.s.Rajh said...

@
Yoga.S. said...
வணக்கம் ராஜ்!(பாஸ்?)////எக்கேடு கெட்டும் போங்கடா,ஹ!ஹ!ஹா!!/////

ஹா.ஹா.ஹா.ஹா..............

K.s.s.Rajh said...

@ திண்டுக்கல் தனபாலன் said...
என்னுடைய வாழ்த்தையும் சொல்லீடுங்க நண்பரே !
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
ajatheer said...
மொக்க பீஸ்,
/////
என்னாது................
நன்றி பாஸ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails